நாட்குறிப்பில் ஒரு நாள்.......

Filed under , , by Prabhu on 6/23/2009 10:33:00 AM

10


“ச்சே.... வர வர தூக்கம் ரொம்பதான் அழுத்துது. தலவலிடா. அம்மாஆஆ... மணி என்ன?
“ஏழு மணியாச்சுடா.
“என்னம்மா, உன்ன அஞ்சு மணிக்கே எழுப்பிவிடச் சொன்னேன்ல? ஏழு மணி வரைக்கும் தூங்க விட்டிருக்க? (இன்னைக்கு பதிவ வேற பப்ளிஷ் பண்ணனுமே!)
“சனியனே, உன்ன அஞ்சு மணியில இருந்து எத்தன தடவ எழுப்புறது?
“ஓ, எழுப்பினயா? சரி விடும்மா. (ராத்திரி ப்ளாக் பக்கம் போறத நிறுத்தனும்)
பதிவ வெளியிட்டுட்டு, பழைய பதிவுக்கு வந்த கமெண்ட்டுகளுக்கு எதிர் மொக்கைகள போட்டுட்டு, நிமிர்ந்து பாத்தா மணி ஏழு. டிரஸ் எடுக்க ஓடினேன்.
“டேய், குளிடா!
“அம்மா, அதுக்கெல்லாம் நேரமில்லமா. காலேஜ்க்கு லேட் ஆயிடுச்சு.
“சாப்பிடலயா?
“ம்ம்ம்.... மூணு சப்பாத்தி எடுத்து வை.
“அதான பாத்தேன். லேட்டா போனாலும் கொட்டிக்காம போக மாட்டியே!
எடுத்து வச்சிருக்கேன். காலேஜ்க்கு ஆறு எடுத்து வச்சிருக்கேன்.
“ஃபிரண்ட்ஸ்க்கு ஒன்னு ரெண்டு சேத்து வை. நாய்ங்க கேக்காம டப்பாக்குள்ள கை விடுவானுக. “
“போய்டு வரேன்மா!
“நேரம் நல்லாதான் இருக்கு, போய்டுவா!
பைக்க எடுத்துக்கிட்டு விரட்டினா, மனசுக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வந்து 1,2,3,4...என்றென்றும் புன்னகைனு பாட, பக்கத்தில ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய? இன்னைக்கும் லேட்தான்.

அங்க லேட்டா போய் பைக் ஸ்டாண்டில பைக்க போட்டுட்டு, ஹேர் ஸ்டைல சரி பார்த்துட்டு வேகமா க்ளாஸுக்கு ஓடினா, பாதி வழியில ஒருத்தன் ஆமை வேகத்தில போய்க்கிட்டிருப்பான். என்னடா இன்னைக்கும் லேட்டா, வாடா சீக்கிரம் போயிடுவோம்னு சொன்னா, லேட் ஆகிப் போச்சு இனிமே அவசரமாப் போனா டயத்துக்கு போனதா ஆகிடாது, லேட்டா போனா புதுசாத் தப்பாயிடாதுன்னு விசு மாதிரி குழப்பி மெதுவா கூட்டிட்டு போனா, அங்க சிரிச்சு சிரிச்சே கழுத்தறுக்குற white openஓட க்ளாஸ். யூ ஆஸ்க் மி வாட் இஸ் வொயிட் ஓபன். வொயிட் மீன்ஸ் வெள்ளை, அண்ட் ஓபன் மீன்ஸ் தொர, டோடலி இட்ஸ் வெள்ளைதுரை,எங்க Plant Biotech professor. Why late? குழந்தை எந்த நாடாயிருந்தாலும் முதல்ல ம்மா...ன்னு சொல்லுற மாதிரி ஸ்டூடண்ட்களுக்கான default பதில், “லேட்டாயிருச்சுன்னு சொன்னதும், மூஞ்சில்லாத துப்பாத குறையா, கேவலமாப் பார்த்துட்டு, Come inside”. உள்ள போனதும் (சுண்டு)சுந்தர பாத்து சிரிச்சுக்கிட்டே பக்கத்தில போய் உக்காந்தா, “மச்சான் மொக்க போடுறான் டா என அவன் கம்ப்ளைன் பண்றான். “விடுறா பாத்துக்கலாம்டாஆஆஆஆஆஅஹ்ஹ் என சொல்லி முடிக்கும் முன்னே கொட்டாவி வந்து விடுகிறது. அப்புறம் ஆபத்தில வந்த ஆபத்பாந்தவனாய் வைப்ரேட்டில் போட்ட மொபைலில் மெசேஜ் வந்து என் பேண்ட் பாக்கெட்டில் துடிக்க, திறந்து பாத்தா, ஒரு மொக்க! L? அப்புறம் அவன திட்டினேன். அவன் எதுக்குடா திட்டுனன்னு கேக்க, நான் பதிலுக்கு திட்டன்னு அந்த கேம் ரெண்டு பீரியட் தாங்குச்சு.

லன்ச் சாப்பிடற டயம் வந்த்தும் கேண்டீனுக்கு போய் அவன் கிட்ட சாப்பாடு வாங்காம, அவன் முன்னாடியே டிஃபன் பாக்ஸ திறந்திட்டு உக்கார்றது. அவன் பாத்தா ஒரு சிரிப்ப்ப் போட்டு, “அண்ணே, பிஸினஸ் எப்படி போகுதுன்னு கேட்டு கரெக்ட் பண்ணிக்குவோம். அங்க வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் வர்றதுக்குள்ள சாப்பிடறதுதான் முதல் வேலை. அதென்ன வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் எனக் கேட்டீங்கன்னா, as the name indicates, டிபன் பாக்ஸ் திறந்தா மானக் கண்ட சிங்கம் மாதிரி பாயுவானுங்க, அவனுங்க சாப்பிட்டுட்டு போனபின் அந்த டேபிள் சிங்கம் குதறின மான் மாதிரி இருக்கும், அன்னைக்கு அந்த மேஜையில எவனும் சாப்பிட முடியாது. அப்படி நாறடிப்பானுங்க.

உண்ட களைப்பு தீர ரெண்டு மணி நேரம் க்ளாஸில தூங்கினப் பிறகு, வெளிய டாப்பு. ஆனா, எங்க கேங்குக்கு ஒரு வித்தியாசமான ஒரு பழக்கம் உண்டு. க்ளாஸ் முடிந்தாலும், கட் அடிச்சாலும் வீட்டுக்கு போகிற வரை kaaleeகாலேஜ் விட்டு வெளியே போக மாட்டோம். அப்புறம் வழக்கம் போல ராஜாபார்லி பேக்கரி போய்டு உள்ள வரும் போது, “ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே....... எனப் பாடிட்டே வந்தா, பக்கத்திலிருந்த சுண்டு என்னப் பார்த்து சிரித்தான்., எதற்கு என நிமிர்ந்து பார்த்தா..........எதிரில அனு. குட்டியா, க்யூட்டா.......அழகான அனு.... ம்ம்ம்ம்.... அவளப் பாத்தா மூச்ச இழுத்து விடும் போது பல தடுப்புகளை சந்திக்குது. அந்த மூச்சுத் திணறல் அவஸ்தை இல்ல, இன்பம் தான் என நானும் சொன்னா அது monotonica இருக்காது? ரோலர் கோஸ்டர்ல விர்ர்ர்ர்னு போகும் போது ஒரு திகில் இருக்கும், அதே நேரத்தில் ஒரு போதையும், its intoxicating. இது கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில இருக்குல்ல? வெரி குட்.(பதிவரானதோட சைட் எஃபெக்ட்!). அப்போதான் அவகிட்ட ஒரு வித்தியாசம் இருக்குறத கவனிச்சேன். அட, அவ முடி..... அதுக்குள்ள சுண்டு- “டேய், அவ ஹேர் ஸ்டைல் மாத்திட்டாடா. நல்லாதான் இருக்குஇதேதான் நானும் சொல்ல வந்தேன். அவ ஹேர் கொஞ்சம் கட் பண்ணி pony tail போட்டிருந்தா, சான்ஸே இல்ல... ஹைய்ய்ய்ய்யோ, தேவதையேதான்! “இப்படி சைட் அடிச்சே பொழப்பு ஓடுதே, என்னக்கிடா பேசப் போற?. “பேசுவோம் டா. “என்னக்கி........

வீட்டிலிருந்து “என்னடா காலேஜ் முடிஞ்சு இவ்ளோ நேரம் ஆச்சு, என ஃபோன் வர, வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாப் போச்சு. வந்த பிறகு கொஞ்ச நேரம் பதிவுலகத்த மேய்ஞ்சுகிட்டு இருந்தப்போ, ஜிங்குன்னு சவுண்டு கொடுத்திட்டு ஜிமெயிலில் எட்டிப் பார்த்தார், நம்ம கிஷோர்.
hi
hi
அப்புறம் ஆறாவது தடவையா நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு அவர காண்டாக்கினேன். இது பரவாயில்ல, ஒரே நாளில் ஒருத்தன பஸ்ல, க்ளாஸ்ரூம்ல, காரிடார்ல, டாய்லெட்லனு எல்லா இட்த்திலயும் பேரக் கேட்டு அவன் கடிக்க வந்த கதை அவருக்கு தெரியாது.

அப்புறம் அஜய் சிக்கினான், அவன்ட்ட mental masturbationஓட(ச்சீன்னு சொல்லாதீங்க......... அதப் பத்தி வேற ஒரு பதிவுல!) சைக்காலஜி பத்தி பேசும்போது, சரண்யா smsல வசமா மாட்டினா.
“சரண்யா, wat doing?
summa iruken.
i lov you, kuty
“டேய், ஆரம்பிச்சுட்டயா?
“நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு.
“பப்பு, உனக்கு வேற யாரும் சிக்கலயா, என்கிட்ட ஆரம்பிசுட்ட.
“உன் ஒருத்திய பாத்தாதான் லவ்வெல்லாம் வருது
“டேய், உன் மொக்கய நிறுத்துடா
“அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
“அய்யோ, நீ ஸ்டார்ட் பண்ணா நிறுத்த மாட்டியே
“நீ என்னய லவ் பண்றதா சொன்னா விட்டுடறேன்.
“டேய், போய் அனுகிட்ட மொக்க போடுடா, என்னய விடுடா!
“உன்னய அவ்ளோ ஈசியா விட முடியாதே
“திடீரென எதுக்குடா என்னய ஓட்ட ஆரம்பிச்சிட்ட? எப்ப இருந்து இப்படி?
“உன்ன பாத்திலிருந்தே இப்படிதான்.
“......
“ஹலோ
“....
ம்ஹூம்.... இன்னும் ரெண்டு நாளைக்கு மெசேஜ் ஓபென் பண்ணவே பயப்படுவா. சரி, அடுத்து யாரு? சுண்டு!
“டேய் சுண்டு, wat doing.....”
அப்படியே சாப்பிடுற நேரம் ஆயிட்டதால சூப்பர் சிங்கர்ல வர்ற ரேணுவ சைட் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிச்சா, நாளைக்கு இண்டர்னல்ஸ்னு மெசேஜ் வந்தது. நாளை என்பது கடவுளுக்கு, இன்று என்பது மனிதருக்குன்னு மொக்கத்துவம் சொல்லி அவன துரத்திவிட்டுட்டு, லேட்டாயிடுச்சு தூங்கடான்னு சொன்ன அம்மாவ சமாளிச்சிட்டு, கம்ப்யூட்டரில வந்து உக்காந்து வேர்ட் ப்ராச்சர திறந்து அடிக்க ஆரம்பிச்சேன், “நாட்குறிப்பில் ஒரு நாள்.......

Comments Posted (10)

பக்கத்தில ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய? //

ஒன்னும் செய்ய வேண்டாம். அப்படியே மெயின்டைன் பண்ணுங்க.

சிரிச்சு சிரிச்சே கழுத்தறுக்குற white openஓட க்ளாஸ். யூ ஆஸ்க் மி வாட் இஸ் வொயிட் ஓபன். வொயிட் மீன்ஸ் வெள்ளை, அண்ட் ஓபன் மீன்ஸ் தொர, டோடலி இட்ஸ் வெள்ளைதுரை //

என் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வருகின்றன.

அவன் எதுக்குடா திட்டுனன்னு கேக்க, நான் பதிலுக்கு திட்டன்னு அந்த கேம் ரெண்டு பீரியட் தாங்குச்சு //

இப்படிக் கூட விளையாடலாமா

ஒரே நாளில் ஒருத்தன பஸ்ல, க்ளாஸ்ரூம்ல, காரிடார்ல, டாய்லெட்லனு எல்லா இட்த்திலயும் பேரக் கேட்டு அவன் கடிக்க வந்த கதை அவருக்கு தெரியாது. //

ஹாஹாஹா....

நல்லா எழுதுறீங்க பப்பு. தொடருங்க.

நகைச்சுவை பட்டய கிளப்புது!

அதே வேகத்துல ஒரு சிறுகதை எழுதி போட்டியில கலந்துகோங்க பப்பு!

:))))

அடிச்சு ஆடுப்பா.. பழைய ப்ளாக் கிடைச்சுதா?

ஹேய் பப்பு..ரொம்ப நாள் கழிச்சு உன் ஸ்டைல்ல..பட்டைய கிளப்புது..
அப்புறம் அனு இப்ப தான் எனக்கு புரியுது நீ அன்னிக்கு ஒரு நாள் பண்ண கம்மென்ட் அர்த்தம்..
ரொம்ப நல்லா இருந்துச்சு..தொடர்ந்து கலக்கு..
அப்புறம் Font Size கொஞ்சம் சின்னதா இருந்த நல்லா இருக்குமோ..!!

ரகளையா இருக்கு பப்பு ... தொடர்ந்து கலக்கு... அட பதிவ சொன்னேன்டா.

//--டிபன் பாக்ஸ் திறந்தா மானக் கண்ட சிங்கம் மாதிரி பாயுவானுங்க, அவனுங்க சாப்பிட்டுட்டு போனபின் அந்த டேபிள் சிங்கம் குதறின மான் மாதிரி இருக்கும், அன்னைக்கு அந்த மேஜையில எவனும் சாப்பிட முடியாது.--//

இந்த உவமை நல்லா இருக்கு பப்பு...

ரொம்ப சூப்பரு :)

/*ஃபிரண்ட்ஸ்க்கு ஒன்னு ரெண்டு சேத்து வை. நாய்ங்க கேக்காம டப்பாக்குள்ள கை விடுவானுக.*/

LOL :)

/*ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய?*/

design அப்படி... நீங்க ஒண்ணும் பண்ண முடியாது :)

/*நாளை என்பது கடவுளுக்கு, இன்று என்பது மனிதருக்குன்னு மொக்கத்துவம் சொல்லி அவன துரத்திவிட்டுட்டு, லேட்டாயிடுச்சு தூங்கடான்னு சொன்ன அம்மாவ சமாளிச்சிட்டு, கம்ப்யூட்டரில வந்து உக்காந்து வேர்ட் ப்ராச்சர திறந்து அடிக்க ஆரம்பிச்சேன், “நாட்குறிப்பில் ஒரு நாள்.......”*/

சூப்பரு :)

நல்ல நகைசுவையாக எழுதுரிங்க

கலக்குறீங்க பப்பு!

Paavam Saranya!! K Saranya va R saranya va S Saranya va?? Paarthu naanum sight adikkiren!! :D

Pollavadhan maadhiri

Bro, ippa naan love sollidurene

Yov.. Adhu en figure ya

Sir.. naa 3 maasama love panren

Naa 3 varushama suthuren!!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!