Thor (2011) - No Spoilers

Filed under , by Prabhu on 5/03/2011 02:56:00 PM

5

So, I am Back with Bang. No, Not just a bang, But a BIG BANG.

தோர் - மார்வெல் காமிக் கதையிலிருந்து மார்வெல் ஸ்டூடியோஸ் எடுத்த இன்னுமொரு சூப்பர் ஹீரோ அவதாரம். அவதாரம்னா நிஜமாலுமே அவதாரம் போலே. கடவுள் பூமிக்கு வந்து இறங்குறத அவதாரம்னு கம்பர் சொல்றது உண்மைன்னா Thor : The God of Thunder அவதாரம் தான்.
வைக்கிங் புராணத்தில காணப்படுகிற அஸ்கார்டியாவில் வாழும் கடவுள்களாக சொல்லப்படுபவர்கள் இன்னொரு realmல் இருக்கும் ஒரு முன்னேறிய நாகரிகம். அதில் ராஜா/கடவுள் Odinக்கு ரெண்டு பசங்க, Thor, loki. தோர் பட்டாபிஷேகத்தின் போது சரியாக பரம்பரை எதிரிகள் Frost Giants உள்ளே புகுந்து குட்டையை குழப்பிவிட, நிகழ்ச்சி நின்றுவிடுகிறது. அதன் பின் நடக்கும் பிரச்சனைகளில் கோபமாகி நீ என் புள்ளயும் இல்ல இந்த வீட்டில உனக்கு இடமும் இல்ல உன் சக்தியான சுத்தி(Mjolhnir)யும் உனக்கு இல்லை. பிடி சாபம், பூமிக்கு போ’ என அனுப்பிடுறார். ஆனாலும் பையன் திரிசங்கு போல அங்க இங்க நிக்காம நல்ல பையனா உஸ்ஸ்ஸ்னு வந்து பாம்னு விழுகிறான் பூமில இல்ல, கதாநாயகி கார்ல. ஊட்ல சொல்லிட்டு வந்திட்டயான்னு கதாநாயகி கேட்காவிட்டாலும் வூட்ல சொன்னதால தான் அவர் வந்திருக்கார்னு நமக்கு தெரிகிறது.

இதுக்கு பின்ன தோர் தன் தவறை உணர்ந்தா’ரா’(கடவுள் பாஸ்!),அவருக்கு சுத்தியல் கிடைத்ததா? அந்தப் பொண்ணுக்கு எல்லா கதாநாயகி போலயும் அவர் மேல காதல் வந்ததா? கரெக்டா கடைசி சண்டைக் காட்சியின் முந்தைய காட்சியில் அழுந்த முத்தம் கொடுக்கிறாரா? உனக்காக மீண்டும் வருவேன்னு சொல்லிட்டு கிளம்பிப் போகும் கதாநாயகன் முதுகை நாயகி வாயைப் பிளந்து பார்ப்பாளா என்ற கேள்விகளுக்கு விடைத் தெரிந்தாலும் போய் தியேட்டரில் காசு கொடுத்து பார்க்கலாம்.

ராஜாவின் இரண்டு பையன்கள், அரசுரிமைத் தகராறை, ஷேக்ஸ்பியர் காலக் கதையை அகண்ட பிரபஞ்சத்தில் வைத்து எடுத்திருக்கிறார் Kenneth Branagh.

Chris Hemsworth - He is the Man! உருவம். அட்டகாசமான உடல். ஆண்மையான தோற்றம். லேடீஸ், செக் அவுட்!

Natalie Portman - பசங்களுக்காக!


என்னதான் சொன்னலும் என் தமிழ் மசாலா ரத்தம் சும்மா இருப்பதில்லை. சுத்தியல் கையில் வந்து டுமீல் இடி இடிக்கும் போது I'm Thor. The God of Thunder என பல்லைக் கடித்துக் கூவுவார்னு புத்தி நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. நடக்கவில்லை!


தோர் பூமிக்கு வந்த பிறகு நடக்கும் காட்சிகள் லேசாக நகைக்க வைக்கிற காட்சிகளை தெளித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் - எப்பா! அட்டகாசம். எப்படி இவ்வளவு அருமையான கிராபிக்ஸ் செய்ய முடிகிறது? இப்படியெல்லாம் கிராபிக்ஸ் எடுக்கத்தான் எவ்வளவு செலவாகிருக்கும் டாலரில்!


பிரமாதமான படமல்ல. ஆனால் பிரம்மாண்டமான படம். Enjoyable movie.

இந்த படம், அடுத்து வருகிற Green Lantern, Captain America, எல்லாம் பார்த்து வைத்துக்கொள்ளுங்க. அடுத்த வருஷம் Avengers என்ற எல்லாரும் ஒண்ணு கூடுற படம் பார்க்க வசதியாய் இருக்கும்.

அஷ்டே!

பெங்களூரூ வாழ்வின் கொலாஜ்

Filed under , by Prabhu on 3/10/2011 11:29:00 PM

2
இந்த சமயத்தில் நான் பெங்களூர் வீட்டில் ஐந்து பரீட்சைகளுக்கும் இரண்டு பரீட்சைகளுக்கும் நடுவிலான் இடைப்பட்ட திரிசங்கில் இருக்கிறேன். இந்த திரிசங்கு தெரியுமா? சொர்கமும் இல்லாமல் பூமியுமில்லாமல் நடுவில் தொங்கி கொண்டிருக்கிறானாம். நான் லீவு என்ற சொர்கத்துக்கும் ப்ரீட்சை என்ற ரியாலிட்டிக்கும் நடுவில்  MI Tom Cruise போல தலைகீழாக தொங்கி டைப்பிக் கொண்டிருக்கிறேன். (டைப்பி பல காலமாகிவிட்டது)

பெங்களூர் வாழ்க்கை ஒரு வகையா செட்டில் ஆச்சு. பெங்களூரென சொல்வதே ஒரு மாதிரியா இருக்கு. ஒரு மாதிரி கடை கோடியில இருக்கேன். சிட்டிக்கு வாரத்துக்கு ஒரு தடவை போகும் வகையில் இருக்கேன். என்ன செய்ய? கைப்பிடி மணல எண்ணுற அளவு வேலை இருக்கு. கேட்டா காலேஜில் மனோ பாலா மாதிரி ‘MBA MBA’ ங்கிறாங்க. ட்ரைமஸ்டர் சிஸ்டம் வேணாமென சொன்னா கேட்டாதான? இதோ ஒரு ட்ரைமஸ்டர் முடிந்தது.(இப்ப 2ம் ஆச்சு. 3வது ரன்னிங்) அதனால் பெங்களூர் லைஃப் என சொல்றத விட காலேஜ் லைஃப் என சொல்வதே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் முதல் ஒரு மாசம்கோரமங்களா’……… இருந்த்தால பேசவே நிறையா இருக்கு. இல்லைன்னாலுமே நான் நிறையவே பேசுவேன்னு மதுரைக்கே தெரியும்.

கோரமங்களா கிட்ட ஒரு கேப் விட்டிருக்கேன் பாத்தீங்களா? அந்த பேரு சிங்க் இன் ஆகத்தான். நல்ல ஏரியா. என்ன குட்டியூண்டு வீட்டுக்கு 6000 ரூபாய் கேட்கிறார்கள். 20 வருஷம் முன் கிராமம். பூனைக்கும் காலம் வருது. இப்ப Forum, PVR எல்லாம் இங்கேதான். Hot and Happening. என் அண்ணன் வீட்டு பக்கம் எல்லோருக்கும் தமிழ் தெரியுது. ‘பேண்ட்’ , ‘alter’ , ’எஷ்டு’?’ என பிளறி.. சாரி.. உளறிக் கொண்டிருக்கும் போது, ‘பேண்ட் alter பண்ண 40 ரூபா ஆகும் சார்என பல்பு கொடுத்து விட்டார் டெய்லர்.

ஓவ், இப்படி ஒரு ப்ளாக் எழுத ஆரம்பித்த்து எனக்கே நினைவில்லை. மடிக்கண்ணியை நோண்டும் போது கிடைத்த்து. அப்பொழுது என்ன மாதிரியான எண்ண அலைகள் ஓடிக் கொண்டிருந்த்து என நினைவில்லை. இப்பவும் கூட விட்ட இட்த்தில் இருந்து பெங்களூரைப் பற்றிப் பேச நிறைய சரக்கு இருக்கிறது. ரெண்டு நாள் முன் தான் ஊரிலிருந்து வந்த நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். ஆனால் நான் சுற்றிய இடங்களைப் பற்றி பேச மூட் இல்லை. போரடிக்கிறது. வேறு ஏதாவது பேசலாம். ஏன் முதல் பத்தியில் பேச ஆரம்பித்தகுவாட்டர் கட்டிங்கிலேயே தொடரலாம்.

பாட்டு ரிலீசின் பொழுது எழுத ஆரம்பித்த பதிவு படம் வெளியாகி ஒரு மாதம் ஆன பின்னும் முடியவில்லை. எங்கயோ தப்பு நடக்குதுங்க! சிவா கோவை பாஷையில் பேசியது அவ்வளவா சுவாரசியமா இல்லைன்னாலும், படத்தோட கன்செப்சுவலைசேஷன் பிடித்திருந்தது. நல்ல ப்ளாட் தான் என்றாலும் டைமிங் காமெடி இல்லாமல் தடுமாறியது. படம் முழுக்க அங்கங்கே ஆணியில் கட்டிய வெடித்த பலூன் போல தொய்ந்து தொங்கினாலும், மொத்த்தில் சுவாரசியமான படமாகத் தான் பட்ட்து. முழுவதும் த்ராபையென ஒதுக்க இயலாது. ஒவ்வொருவரும் வைத்திருக்கும் குட்டி கதைகள் தான் படத்தில் நன்றாக இருந்தது. அதுவும் அந்த தீக்குச்சியின் கதை அந்நியன் போன்ற படங்களைன் சரியான வாரல். ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

அதில் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து தரும் நாயரைப் பார்த்ததும் பல மல்லு ஜோக்குகள் தான் நினைவுக்கு வருகிறது. இங்கு என்னைச் சுற்றி பல மலையாளிகள். இந்த ஊரில் பேக்கரி என்றாலே மலையாளிகள் தான். எந்த ஏரியா பேக்கரி என்றாலும் பழைய பெங்களூரில் முன்னிருந்தே அய்யங்கார் பேக்கரிகள் தான். இப்பொழுது எங்கு புது பேக்கரி திறந்தாலும் உள்ள போய், ‘யாவு பேக்கு?’ என்ற கேள்விக்கு, ‘ஒரு பிரட் பேக்கெட் மதிஎன்லாம். என்னைப் போல் மீசையை மழிக்கும் மாநிற தமிழர்கள், ‘மலையாளியானோ?’, ‘Are you malayali?’, ’மல்லு ஹை க்யா?’ போன்ற விஷமப் பேச்சுகளுக்கு ஆளாகலாம். மீசை வைத்தாலும் என்னை பார்த்துதெலுகு?’ என்கிறார்கள். அவர்களுக்கு தம் ஆட்களுடன் யாரைப் பார்த்தாலும், ‘மணவாடா?’ என்பதில் சம்பாஷணை தொடங்குகிறது. அருமையான மனிதர்கள்.

இதற்கு நடுவில் வடக்கர்கள். அவர்கள் எல்லாவற்றையும் ‘basically’ என தொடங்குகிறார்கள். ‘மகாபிரபு’ படத்தில் வெள்ளை குர்தா ஓட்டுகிட்டு வந்து பேட்டி கொடுப்பார், ‘basicalla நான் ஒரு naarth Indian’ என சொல்வார். அதுமாதிரி தான் இருக்கு. அந்த காமெடியே வேணுமென்றே ஒருவாக்குனாப்புல இருக்கு சரியான stereotyping.

ஒரு பேச்சுக்கு ஒரு புள்ளி விவரத்தை உருவுவோம். பெங்களூரில் 47% கன்னடர்கள், அதன் பின் மெஜாரிட்டி தமிழர்கள் 25%, ஆமா, இந்த ஒரு ஊரில ஒரு விதிவிலக்கு. தரவாதா மணவாடு 14%, பின்னேமல்லுக்கள்(இப்படி அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். முன்னேஅந்தப் படங்களுக்கு தானே இந்தப் பெயர்?) – 10%. ஆச்சரியமா இங்கே மற்றவர்களைவிட அவர்கள் கம்மி. ஒரு தத்துவ கதையில் சொல்வது போல இந்த நிலையும் ஒரு நாள் மாறும். Beyond this, Foreigners – 8%. பக்காவான காஸ்மோபாலிடன். வெளியே வந்தால் அம்மா திருவாதிரைக்கு செய்யும் பொறியலில் எல்லா காய்களும் இருப்பது போல எல்லாவகையான ஆசாமிகளும் சகட்டு மேனிக்கு கண்ணில் படுகிறார்கள். கலர் கலராக இருக்கிறார்கள், மெய்யாகவே. சில சமயங்களில் நன்றாக இருக்கிறது.

இது எழுதியும் 3 மாசம் ஆச்சு. ஒண்ணுமில்லாத பதிவை வருசமாக எழுதுகிறேன். இதெல்லாம் பின்னவீனத்திற்கே அடுக்காது. மூணு மாதத்திற்கு ஒரு முறை  இந்தப் பதிவை எழுதுகிறேன். கஷ்டம். அரை வேக்காடா இதை பப்ளிஷ் பண்ணிரலாமான்னு யோசிக்க்க்க்…

ஹூம்.... புது வருடம்

Filed under , by Prabhu on 1/05/2011 06:15:00 PM

3

புது வருஷக் கொண்டாட்டம்ங்கிறதே ஒரு மொக்கையான விஷயமா படுது. ஆங், நான் RSSதனமா எதுவும் சொல்லல.புது வருடம்னா என்ன பெருசா நடந்திடப் போகுது. என்ன 2010ல் கடைசியில் இருக்கும் முட்டைக்கு பதிலா 1. இதுல போதாக்குறைக்கு வயசு வேறக் கூடித் தொலைஞ்சிரும். புது வருஷத்தை பொறுத்த வரை கிக்கான விஷயமே பல நாள் கழித்து நினைவிற்கு வரும், அந்த ‘சகலகலாவல்லவன்’ படப் பாடல் தான். இன்னும் அதற்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் இல்லை, பார்த்தீங்களா?

அடுத்த மொக்கை இடத்தில் இருப்பது, புது வருட பிரமாணங்கள். அது என்ன இன்னைக்கு மட்டும் புது முடிவுகள், மாற்றாங்கள். மாறணும் என முடிவு பண்ணிட்டா ஒண்ணாந் தேதி வரையுமா காத்திருக்கிறது. இது சுத்த பேத்தலா இருக்கே! ஒண்ணாந் தேதி வரை வெயிட் பண்ணி தொடங்கற ஆசாமிகள் தொடருவதாய் தெரியவில்லை.

இப்படி ஒரு நெகடிவ் நோட்டிலா நான் இந்த வருடத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும்? எனக்கு செண்டிமெண்டுகள் அற்றுப் போய்கொண்டிருகின்றன. இதோ இந்த வருடத்தில் பார்த்த முதல் படம் 'Paranormal Activity'. பின் ‘விருத்தகிரி’ பார்க்கவிருக்கிறேன். வருட ஆரம்பத்திலேயே இரண்டு horror படத்தோட ஆரம்பிச்சிருக்கிறேன்.

ம்ஹூம்... சரியில்லை. இப்படியெல்லாம் வருடத்தின் முதல் பதிவுலேயே உருப்படாத விஷயமா எழுத நான் ஒன்றும் ராகு காலம் பார்த்து தொடங்குவதில்லை. வருட ஆரம்பம் ஒண்ணும்  எல்லாம் ஒரு தினசரி வாழ்க்கைதான். இப்படியே மெல்ல பின்னால் திரும்பி பார்த்தால் தெருக் கோடியில் தெரியும் நாய் போல சிறிதாக நினைவிலிருக்கிறது போன வருட தொடக்கம்.

போன இந்த சமயத்தை ஒட்டியே ட்விட்டர், ஃபேஸ் புக்கை கட்டி அழ ஆரம்பித்தேன். பின் ஆறு மாதம் போனதே தெரியவில்லை. அந்த சமயம் போன வருடத்தின் உருப்படியான விஷயம்  Christ Universityல் எம்பிஏ சேர்ந்தது தான். அதன் பின்? அவ்வளவுதான்!

ஒரு மாதிரியாக போகுதில்ல? MBA MBA. After two months MBA stops being fun.  இன்னும் சில மாதங்களில் முகத்தில் சுருக்கங்கள் விழுந்துவிடும் போல. இப்படியெல்லாம் சொல்வதால் ரொம்ப கஷ்டப் படுவதாக் நினைக்க வேண்டாம். கொஞ்சம் வேலை ஜாஸ்தி. லூஸ்ல விடலாம்.  இதற்கு மேல் எழுதினால் சொந்த கதை சோக கதை எல்லாம் கொட்டிவிட நேரிடும் அபாயம் இருப்பதால் இப்படியே முடித்து விடுகிறேன். இந்தப் பதிவும் ஏன் எழுதின எனக் கேட்டால், இனிமேல் தொடர்ந்து எழுதவும், இன்னும் கொஞ்சம் எழுத்தை  சுவாரஸ்யமானதாக்கவும் முயற்சிக்க இருப்பதை நமக்காகவவாவது நம்பிக்கை ஏற்பட Tangibleஆன ஒரு செயல் வேண்டாமா, மலை உச்சியில் இருந்து விழும் நாயகனுக்கு கையில் ஏதோ வேர் சிக்குவதைப் போலான ஒரு சடங்குதான். Symbolic.