நகைச்சுவை (அட, மெய்யாலுமே தான்)

Filed under , by Prabhu on 6/02/2009 10:16:00 PM

0

நகைச்சுவை சொல்றதா சொல்லி போன இடுகையில மொக்கய பத்தி மொக்கய போட்டுடதா நினைக்கலாம். ஆனா என்ன செய்றது, i got carried away (எங்க தூக்கிட்டு போனாங்கன்னு மொக்க மொழிபெயர்ப்பு கூடாது). NO, இனிமேல் இந்த இடுகையில மொக்கன்ற வார்த்தை வரக்கூடாது. ச்ச்ச.... இப்போ வந்துருச்சு, இனிமேல..... வரா....துனு சொல்ல வந்தேன். மேற்கொண்டு மொ...(பார்றா!) இது சரிப்படாது, ஒன்றிரண்டு நகைச்சுவை சொல்லிட்டு போயிடறேன்.

புகழ்பெற்ற துப்பறியும் ஓநாய் (உலகத்தில நிறைய சிங்கம் இருந்தா நல்லாவா இருக்கும்) ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றி கேள்வி பட்டிருப்பீங்க. அவருடைய அஸிஸ்டண்ட், டாக்டர் வாட்ஸன். இவர் சொல்ற மாதிரிதான் (narration) கதை எப்பொழுதும் நம் முன் விரியும். இப்போ அவர் வாயிலயே கேட்போமே........

ஒருநாள் நானும் ஷெர்லாக்கும் மொட்டை மாடில தூங்கிட்டிருந்த போது யாரோ என்னை உலுக்கியது போன்ற உணர்வு, விழித்தேன். ஷெர்லாக் தான்!
"என்ன இந்த வேளையில் ஷெர்லாக்?"
"வாட்ஸன், மேலே பாருங்க. என்ன தெரியுது உங்களுக்கு?"
"இரவாயிடுச்சுன்னு தெரியுது. போய் படுங்க. வர வர உங்க ஆராய்ச்சிக்கு அளவில்லாம போய்ட்டு இருக்கு"
"இல்லை, கோவப்படாதீங்க. இதுல விஷயமிருக்கு. நல்லா பாத்து சொல்லுங்க"
நான் நன்றாக பார்த்துவிட்டு, " இந்த நட்சத்திரத்தையெல்லாம் பார்க்கும் போது இறைவனின் படைப்பு அழகானதுன்னு தெரியுது"
"இன்னும் நல்லா பாரு"
"நிலவ பார்க்கும் போது மணி மூணாகுதுன்னு தெரியுது"
"வேற?"
"வேற....ம்.... ஒன்னும் தெரியலையே"
"முட்டாளே! நம்ம கூரைய எவனோ தூக்கிட்டு போய்ட்டான். அது எப்படா உன் கண்ணுக்கு தெரியும்?"
இது பிரிட்டன் நாட்டு நகைச்சுவை.

அடுத்தது ஆஸ்திரேலியா.....
ரெண்டு பேர் கோல்ப் விளையாடிட்டு இருந்தாங்க. பேசி சிரிச்சிக்கிட்டு விளையாடிட்டே இருந்ததுல அரை நாள் ஒடிடுச்சு. அப்போ அந்தப் பக்கமா ஒரு இறுதி ஊர்வலம். உடனே அதிலொருவன் தொப்பியை கழற்றி கண்கள் மூடி மரியாதை செய்தான். இதை கண்ட மற்றவன் ஊர்வலம் போனபின் தொப்பியை மாட்டிக்கொண்டிருந்தவனிடம், "நீ இவ்ளோ தூரம் ஒரு இறுதி ஊர்வலத்துக்கு மரியாதை குடுக்கறத பார்க்கும் போது பெருமையா இருக்கு". அதுக்கு அவன், "இதுல என்ன இருக்கு. முப்பது வருஷமா என்னோடகுடும்பம் நடத்துனவளுக்கு இது கூட செய்யலேனா எப்படி?" னு சொன்னானாம்.

இதெல்லாம் தூக்கி சாப்டுடும் நம்ம ஊர் ஜோக்.
வெங்கடேஷ்,அஜய் இருவருமே இளம் இஸ்ரோ விஞ்ஞானிகள். ரெண்டு பேரும் தண்ணி அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டானுக. இஸ்ரோல இருந்து பப் ரொம்ப தூரம். போகவும் நேரமில்ல. உடனே விமான எரிபொருள் வொயிட் பெட்ரோல அடிச்சிரலாம்னு முடிவும் பண்ணிட்டாங்க. அடிச்ச போதையில தட்டுத் தடுமாறி அவனவன் ரூம்க்கு போய் மட்டை ஆயிட்டானுக. காலையில வெங்கடேஷுக்கு போன், எதிர்முனையில அஜய். "டேய் அஜய், இந்நேரத்துல என்னடா போன்?"
"சும்மா தான், நீ காலையில போறதெல்லாம் போயாச்சா?"
"இல்லடா, இனிமேதான்."
எதிரில் பதறிய குரலில் அவன், "போயிடாதடா, நான் இப்போ அமெரிக்காவில இருந்து பேசுறேன்.?

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!