திரைஅரங்குகளும்... நமீதாவும்

Filed under , , by Prabhu on 6/17/2009 09:11:00 PM

0

இந்தப் பதிவுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்பந்தம்? கடைசில! ஏய்...ஏய்...ஏய் மிஸ்டர், கடைசிக்கு போகாம முதல இருந்து படிச்சிட்டு போங்க!

நான் பார்த்த முதல் படம் என்ன என யோசிக்கும் போது என்னவென ஞாபகம் வர மாட்டேங்குது. ஹாலிவுட்னு பாத்தா Jurassic parkஆ இருக்கலாம்னு தோணுது. அப்போ மாப்பிள்ளை விநாயகர்ல பாத்தேன். ரொம்ப காலமா ஆங்கில மற்றும் ஹிந்தி படங்கள மட்டுமே போட்டுட்டு வந்ததால தியேட்டர் நல்லா இருக்கும். இப்போ தமிழ் போட்ட பிறகு அங்க தியேட்டர் சரியில்ல. அதுவும் ஏகனுக்கு பிறகு அந்த தியேட்டர் இருக்கும் நிலைமை பரிதாபத்திற்குரியது( 50 ரூ. டிக்கட் சீட்ல உக்காந்தா தரை டிக்கட் மாதிரி இருக்கு). ஒரு தியேட்டரோட நிலைமைய வச்சே என்ன படம் ஓடிருக்கு, எப்படி ஓடிருக்கு என எல்லாத்தையும் சொல்ல முடியும்.

படத்துக்கு முதல் காட்சி போற ஆள் இல்ல நான். மதுரையில் இருக்கிற எல்லா மாணவர்கள் போலயும் நானும் 9th ல இருந்தே நல்லா படத்துக்குப் போவேன், மாசம் ஒண்ணாவது. இப்போ அப்படி இல்ல. நல்லா இருக்குன்னு தெரிஞ்சா தான். சும்மா படம் பாக்குறது என் பழக்கம் இல்ல. பாத்த படத்த சில நாட்களாவது அசை போட்டுட்டிருக்கறது என் வழக்கம் . (மைண்ட்ல நமீதாவ திரும்பத் திரும்ப நிச்சலுடையோட குளத்தில் குதிக்க ....க்கதிகு....குதிக்க....க்கதிகு... குதிக்கவிட்டு வேடிக்கை பாத்துருக்க!) இப்போ கேமரா, திரைக்கதை, இயக்கம் போன்ற சில விஷயங்களையும் கவனிக்க தொடங்கிருக்கேன். எப்பவுமே தியேட்டர் சூழ்நிலையும் நல்லா கவனிப்பேன்.

எந்த எந்த தியேட்டர் எப்படி இருக்குதுன்னு கவனிக்கறது ஒரு காலத்துல என் ஹாபி. தியேட்டரெல்லாம் எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஓட்டுறாங்கனு புரிஞ்சங்களுக்கு தியேட்டர்ல கூட ரசிக்க விஷயங்கள் இருக்கு.
என் சின்ன வயசுல போன தியேட்ர்கள் நினைவிருக்கு.

தங்க ரீகல்- நான் இங்க பாத்த படம், Who am I? நான் பாத்த முதல் ஜாக்கி சான் படம். ஜாக்கி ஃபேன். ஆனா அடுத்து அந்த தியேட்டர்ல படம் பாக்கப் போல. போக முடியல, போயிருந்தாலும் வீட்டுக்கு எவனாவது போட்டு விட்டிருந்தா செருப்படிதான்! ஏன்னா ரொம்ப 'நல்ல' படங்கள் போடுற தியேட்டராயிடுச்சு. அவங்க என்ன பண்ணுவாங்க. நஷ்டமில்லாம ஓடக் கூடிய படம் இதுதான. ஆனா அப்பயும் அவங்க தரம் குறையலயே. எப்பவும் இங்கிலீஷ், ஹிந்தி பிட்டு படம்தான் போடுவாங்க. ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் எவனயாவது ஓட்டணும்னா, அவன் ஏன் நேத்து வரலன்னு கேக்கும் போது ""தங்க ரீகல் கிட்ட சுத்திட்டிருந்தான், சார்"னு கூட்டத்தில இருந்து கத்துவோம். இப்போ தியேட்டர் திரும்ப "வாரணம் ஆயிரம்", "sms"னு நல்லா ஏசியோட டெவலப் ஆயிட்டாலும் அந்த பேரக் கேக்கும் போது இருக்குற கிளுகிளுப்பு போகல. ஒரு காலத்தில எட்வர்ட் டவுன் ஹால்னு(எல்லா டவுன்லயும் கட்டுவாங்க) சொல்லப் படுற பிரிட்டிஷ் காலத்து கட்டிடத்தின் ஒரு பகுதி தான் அது.

சிந்தாமணி - இதுவும் ஒரு அறுபது வருச வரலாறு கொண்ட தியேட்டர் தான். கீழ, பால்கனின்னு வகைப்பாடு கொண்ட பழைய தியேட்டர். இங்க ஒரு வித்தியாசமான அமைப்பு என்னன்னா, பால்கனி கொஞ்சம் கீழ் வரிசைக்கு நேராகவும் நீண்டிருக்கும். அதைத் தாங்க சில தூண்கள் இருக்கும். இங்கதான் பிரச்சனையே. கடைசி நாலு வரிசையில் இருக்கறவனுக்கு சென்சார் கட் பண்ணாம்லே அங்க அங்க விட்டுத்தான் தெரியும். ஹீரோயின் நமீதா மாதிரி இருந்தா பரவாயில்ல! தூண் மறைக்கிற உருவமா அது! அப்படி இப்படின்னு பாத்துரலாம். ஆனா படம் கட் ஆவுமே. என் ஃபிரண்ட் சூர்யா முகத்தயே பாக்காம 'உன்னை நினைத்து' பாத்துட்டு வந்தான். ஆனா அவங்க DTS அடிச்சிக்க முடியாது. இப்போ இந்த தியேட்டர ஒரு ஜவுளி கடைக்கு வித்து மூடியாச்சு.

நியூ சினிமா - இந்த தியேட்டர் நான் சின்ன வயசுல இருந்தப்ப ஒரே ஒரு ரஜினி படம் போனது. அதுவும் பழைய படம். அதையும் புதுப் படம்னு நினைச்சு என் அண்ணனை படுத்தி போனேன். அது பழைய படம்னு பல வருஷங்களுக்கு பின்னாடிதான் தெரியும். அந்த படத்துக்கெல்லாம் போனத அவன் எப்படி தன் காலேஜ் பிரண்டு கிட்டலாம் மறைச்சானோ! இந்த தியேட்டரும் மூடப்பட்டது. நான் அதுக்குப் பக்கத்தில இருக்கற ஒரு இடத்துல ஹிந்தி படிச்சப்போ பாத்தேன் முழுக் காடாய் மாறிடுச்சு. இதே மாதிரி சிட்டி சினிமான்னு ஒண்ணு இருந்துச்சு. அதுவும் இப்போ கார் பார்க்கா ஆயிடுச்சு. இதுமாதிரி பல தியேட்டர்கள் மூடியாச்சு

மாப்பிள்ளை விநாயகர், ப்ரியா காம்ளக்ஸ்னு staantard தியேட்டர்களுக்கும் ஒரு லிஸ்டேயிருக்கு. என்னதான் சொன்னாலும் இன்னும் மதுரை தியேட்டர்களில ஒரு ஸ்டாண்டர்ட் வரல. இப்போ வந்திருக்கிற Relianceன் Big cinemas, புதுப்பிக்கப்பட்ட தங்கரீகல் எல்லாம்தான் தரம் உயர்தலுக்கான வித்து...............அப்படின்னு நினைச்சா இதெல்லாம் காண்பிச்சு விலை உயர்ந்தல்தான் ஹிட்டு(ரைமிங்... ஹி...ஹி..). இப்படி ரேட் கூடுறது, தரம் போன்ற பிரச்சனைகளுக்கு நடுவில தியேட்டர்கள் மூடுறது வேற நிறைய நடந்திருச்சு.

தமிழ்நாட்டுல ஒரு படத்தோட நிலைமைய முடிவு செய்யுறதே மதுரை நிலைமைய வச்சுதான். மதுரையில ஒரு படம் ஓடலைன, அது எங்கயும் உருப்படியா ஒடாது(தல ரித்தீஸ்க்கு மாட்டும் விதி விலக்கு 'நாயகன் சென்னையில 120 நாளுக்கு மேல ஓட்டுனீயளாமே?), இல்லன்னா ஆட்டைக்கே சேத்துக்கப் படாது.(அது எப்படி நாங்க நல்லா இல்லன்னு சொன்ன பிறகு நீ ஓட்டுறது. மதுரையில இருக்குற டெரர்லாம் தெரியும்ல!).
மதுரை சிட்டில(திரும்பவும் சொல்றேன், மதுரை சிட்டிதான். படத்த நம்பாதீங்க!) மற்றும் அதோட சுற்றுப் புறத்துல இருக்குற தியேட்டர்களும் சேத்து ஒரு காலத்துல 700 கிட்டத் தொட்டுச்சு. இப்போ எல்லாம் ஒழியுது. தமிழ்நாட்டுல தியேட்டரா இருக்கு? தியேட்டர்ல தரம் உயர்த்தனும்.

தியேட்டர்ல படம் பாக்குறதையே ஒரு அனுபவமா ஆக்கிட்டா எல்லாரும் வருவாங்க. ஒரு வகையில தியேட்டர்ல பாத்தா தான் நல்லா இருக்கு, டிவிடி இந்த அளவுக்கு நல்லா இருக்காதுங்கற அளவுக்கு தியேட்டர் வரணும்... முதல்ல அந்த அளவுக்கு படம் எடுக்கனும். இங்க டிவிடில பாக்குறதே தண்டம்னு சொல்ற மாதிரில இருக்கு! வில்லு மாதிரி வந்தா என்னங்க பண்றது, அதெல்லாம் டாப் டென் மூவிஸ்ல காட்டுற ஒரு சீனக் கூட பாக்க முடியல!


அது சரி இதுக்கு எதுக்கு நமீதாவுடைய பொய் விளம்பரம்? இதோ இப்படி கேள்வி கேக்கனும்னுதான். நமீதான்னா என்ன ஆர்வமா படிக்கறீங்க, அதுக்குதான். சும்மா ஒரு சோதனை முயற்சி!(அதுக்காக ஓட்டுல கை வச்சிராதீங்க, கடவுளே!) ஆனா ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னா, நமீதாவ நம்பியே சில நடிகர்களுக்கும், பல தியேட்டர்களுக்கும் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது. நல்லா யோசிச்சு சொல்லுங்க, இந்த மாதிரி எத்தன படம் இப்பொழுதைக்குள்ள நமீதாவ நம்பி ஓடிருக்கு!

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!