நாட்குறிப்பில் ஒரு நாள்.......

Filed under , , by Prabhu on 6/23/2009 10:33:00 AM

10


“ச்சே.... வர வர தூக்கம் ரொம்பதான் அழுத்துது. தலவலிடா. அம்மாஆஆ... மணி என்ன?
“ஏழு மணியாச்சுடா.
“என்னம்மா, உன்ன அஞ்சு மணிக்கே எழுப்பிவிடச் சொன்னேன்ல? ஏழு மணி வரைக்கும் தூங்க விட்டிருக்க? (இன்னைக்கு பதிவ வேற பப்ளிஷ் பண்ணனுமே!)
“சனியனே, உன்ன அஞ்சு மணியில இருந்து எத்தன தடவ எழுப்புறது?
“ஓ, எழுப்பினயா? சரி விடும்மா. (ராத்திரி ப்ளாக் பக்கம் போறத நிறுத்தனும்)
பதிவ வெளியிட்டுட்டு, பழைய பதிவுக்கு வந்த கமெண்ட்டுகளுக்கு எதிர் மொக்கைகள போட்டுட்டு, நிமிர்ந்து பாத்தா மணி ஏழு. டிரஸ் எடுக்க ஓடினேன்.
“டேய், குளிடா!
“அம்மா, அதுக்கெல்லாம் நேரமில்லமா. காலேஜ்க்கு லேட் ஆயிடுச்சு.
“சாப்பிடலயா?
“ம்ம்ம்.... மூணு சப்பாத்தி எடுத்து வை.
“அதான பாத்தேன். லேட்டா போனாலும் கொட்டிக்காம போக மாட்டியே!
எடுத்து வச்சிருக்கேன். காலேஜ்க்கு ஆறு எடுத்து வச்சிருக்கேன்.
“ஃபிரண்ட்ஸ்க்கு ஒன்னு ரெண்டு சேத்து வை. நாய்ங்க கேக்காம டப்பாக்குள்ள கை விடுவானுக. “
“போய்டு வரேன்மா!
“நேரம் நல்லாதான் இருக்கு, போய்டுவா!
பைக்க எடுத்துக்கிட்டு விரட்டினா, மனசுக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வந்து 1,2,3,4...என்றென்றும் புன்னகைனு பாட, பக்கத்தில ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய? இன்னைக்கும் லேட்தான்.

அங்க லேட்டா போய் பைக் ஸ்டாண்டில பைக்க போட்டுட்டு, ஹேர் ஸ்டைல சரி பார்த்துட்டு வேகமா க்ளாஸுக்கு ஓடினா, பாதி வழியில ஒருத்தன் ஆமை வேகத்தில போய்க்கிட்டிருப்பான். என்னடா இன்னைக்கும் லேட்டா, வாடா சீக்கிரம் போயிடுவோம்னு சொன்னா, லேட் ஆகிப் போச்சு இனிமே அவசரமாப் போனா டயத்துக்கு போனதா ஆகிடாது, லேட்டா போனா புதுசாத் தப்பாயிடாதுன்னு விசு மாதிரி குழப்பி மெதுவா கூட்டிட்டு போனா, அங்க சிரிச்சு சிரிச்சே கழுத்தறுக்குற white openஓட க்ளாஸ். யூ ஆஸ்க் மி வாட் இஸ் வொயிட் ஓபன். வொயிட் மீன்ஸ் வெள்ளை, அண்ட் ஓபன் மீன்ஸ் தொர, டோடலி இட்ஸ் வெள்ளைதுரை,எங்க Plant Biotech professor. Why late? குழந்தை எந்த நாடாயிருந்தாலும் முதல்ல ம்மா...ன்னு சொல்லுற மாதிரி ஸ்டூடண்ட்களுக்கான default பதில், “லேட்டாயிருச்சுன்னு சொன்னதும், மூஞ்சில்லாத துப்பாத குறையா, கேவலமாப் பார்த்துட்டு, Come inside”. உள்ள போனதும் (சுண்டு)சுந்தர பாத்து சிரிச்சுக்கிட்டே பக்கத்தில போய் உக்காந்தா, “மச்சான் மொக்க போடுறான் டா என அவன் கம்ப்ளைன் பண்றான். “விடுறா பாத்துக்கலாம்டாஆஆஆஆஆஅஹ்ஹ் என சொல்லி முடிக்கும் முன்னே கொட்டாவி வந்து விடுகிறது. அப்புறம் ஆபத்தில வந்த ஆபத்பாந்தவனாய் வைப்ரேட்டில் போட்ட மொபைலில் மெசேஜ் வந்து என் பேண்ட் பாக்கெட்டில் துடிக்க, திறந்து பாத்தா, ஒரு மொக்க! L? அப்புறம் அவன திட்டினேன். அவன் எதுக்குடா திட்டுனன்னு கேக்க, நான் பதிலுக்கு திட்டன்னு அந்த கேம் ரெண்டு பீரியட் தாங்குச்சு.

லன்ச் சாப்பிடற டயம் வந்த்தும் கேண்டீனுக்கு போய் அவன் கிட்ட சாப்பாடு வாங்காம, அவன் முன்னாடியே டிஃபன் பாக்ஸ திறந்திட்டு உக்கார்றது. அவன் பாத்தா ஒரு சிரிப்ப்ப் போட்டு, “அண்ணே, பிஸினஸ் எப்படி போகுதுன்னு கேட்டு கரெக்ட் பண்ணிக்குவோம். அங்க வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் வர்றதுக்குள்ள சாப்பிடறதுதான் முதல் வேலை. அதென்ன வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் எனக் கேட்டீங்கன்னா, as the name indicates, டிபன் பாக்ஸ் திறந்தா மானக் கண்ட சிங்கம் மாதிரி பாயுவானுங்க, அவனுங்க சாப்பிட்டுட்டு போனபின் அந்த டேபிள் சிங்கம் குதறின மான் மாதிரி இருக்கும், அன்னைக்கு அந்த மேஜையில எவனும் சாப்பிட முடியாது. அப்படி நாறடிப்பானுங்க.

உண்ட களைப்பு தீர ரெண்டு மணி நேரம் க்ளாஸில தூங்கினப் பிறகு, வெளிய டாப்பு. ஆனா, எங்க கேங்குக்கு ஒரு வித்தியாசமான ஒரு பழக்கம் உண்டு. க்ளாஸ் முடிந்தாலும், கட் அடிச்சாலும் வீட்டுக்கு போகிற வரை kaaleeகாலேஜ் விட்டு வெளியே போக மாட்டோம். அப்புறம் வழக்கம் போல ராஜாபார்லி பேக்கரி போய்டு உள்ள வரும் போது, “ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே....... எனப் பாடிட்டே வந்தா, பக்கத்திலிருந்த சுண்டு என்னப் பார்த்து சிரித்தான்., எதற்கு என நிமிர்ந்து பார்த்தா..........எதிரில அனு. குட்டியா, க்யூட்டா.......அழகான அனு.... ம்ம்ம்ம்.... அவளப் பாத்தா மூச்ச இழுத்து விடும் போது பல தடுப்புகளை சந்திக்குது. அந்த மூச்சுத் திணறல் அவஸ்தை இல்ல, இன்பம் தான் என நானும் சொன்னா அது monotonica இருக்காது? ரோலர் கோஸ்டர்ல விர்ர்ர்ர்னு போகும் போது ஒரு திகில் இருக்கும், அதே நேரத்தில் ஒரு போதையும், its intoxicating. இது கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில இருக்குல்ல? வெரி குட்.(பதிவரானதோட சைட் எஃபெக்ட்!). அப்போதான் அவகிட்ட ஒரு வித்தியாசம் இருக்குறத கவனிச்சேன். அட, அவ முடி..... அதுக்குள்ள சுண்டு- “டேய், அவ ஹேர் ஸ்டைல் மாத்திட்டாடா. நல்லாதான் இருக்குஇதேதான் நானும் சொல்ல வந்தேன். அவ ஹேர் கொஞ்சம் கட் பண்ணி pony tail போட்டிருந்தா, சான்ஸே இல்ல... ஹைய்ய்ய்ய்யோ, தேவதையேதான்! “இப்படி சைட் அடிச்சே பொழப்பு ஓடுதே, என்னக்கிடா பேசப் போற?. “பேசுவோம் டா. “என்னக்கி........

வீட்டிலிருந்து “என்னடா காலேஜ் முடிஞ்சு இவ்ளோ நேரம் ஆச்சு, என ஃபோன் வர, வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாப் போச்சு. வந்த பிறகு கொஞ்ச நேரம் பதிவுலகத்த மேய்ஞ்சுகிட்டு இருந்தப்போ, ஜிங்குன்னு சவுண்டு கொடுத்திட்டு ஜிமெயிலில் எட்டிப் பார்த்தார், நம்ம கிஷோர்.
hi
hi
அப்புறம் ஆறாவது தடவையா நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு அவர காண்டாக்கினேன். இது பரவாயில்ல, ஒரே நாளில் ஒருத்தன பஸ்ல, க்ளாஸ்ரூம்ல, காரிடார்ல, டாய்லெட்லனு எல்லா இட்த்திலயும் பேரக் கேட்டு அவன் கடிக்க வந்த கதை அவருக்கு தெரியாது.

அப்புறம் அஜய் சிக்கினான், அவன்ட்ட mental masturbationஓட(ச்சீன்னு சொல்லாதீங்க......... அதப் பத்தி வேற ஒரு பதிவுல!) சைக்காலஜி பத்தி பேசும்போது, சரண்யா smsல வசமா மாட்டினா.
“சரண்யா, wat doing?
summa iruken.
i lov you, kuty
“டேய், ஆரம்பிச்சுட்டயா?
“நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு.
“பப்பு, உனக்கு வேற யாரும் சிக்கலயா, என்கிட்ட ஆரம்பிசுட்ட.
“உன் ஒருத்திய பாத்தாதான் லவ்வெல்லாம் வருது
“டேய், உன் மொக்கய நிறுத்துடா
“அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
“அய்யோ, நீ ஸ்டார்ட் பண்ணா நிறுத்த மாட்டியே
“நீ என்னய லவ் பண்றதா சொன்னா விட்டுடறேன்.
“டேய், போய் அனுகிட்ட மொக்க போடுடா, என்னய விடுடா!
“உன்னய அவ்ளோ ஈசியா விட முடியாதே
“திடீரென எதுக்குடா என்னய ஓட்ட ஆரம்பிச்சிட்ட? எப்ப இருந்து இப்படி?
“உன்ன பாத்திலிருந்தே இப்படிதான்.
“......
“ஹலோ
“....
ம்ஹூம்.... இன்னும் ரெண்டு நாளைக்கு மெசேஜ் ஓபென் பண்ணவே பயப்படுவா. சரி, அடுத்து யாரு? சுண்டு!
“டேய் சுண்டு, wat doing.....”
அப்படியே சாப்பிடுற நேரம் ஆயிட்டதால சூப்பர் சிங்கர்ல வர்ற ரேணுவ சைட் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிச்சா, நாளைக்கு இண்டர்னல்ஸ்னு மெசேஜ் வந்தது. நாளை என்பது கடவுளுக்கு, இன்று என்பது மனிதருக்குன்னு மொக்கத்துவம் சொல்லி அவன துரத்திவிட்டுட்டு, லேட்டாயிடுச்சு தூங்கடான்னு சொன்ன அம்மாவ சமாளிச்சிட்டு, கம்ப்யூட்டரில வந்து உக்காந்து வேர்ட் ப்ராச்சர திறந்து அடிக்க ஆரம்பிச்சேன், “நாட்குறிப்பில் ஒரு நாள்.......

கூகுளின் கூட்டு சதி

Filed under , , by Prabhu on 6/22/2009 06:29:00 AM

8

பதிவுலகத்துக்கு நான் வந்து இப்பொழுது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆயிருக்கும். இங்க வந்து நான் பெருசா சாதிச்சிட்டதா சொல்ல மாட்டேன். ஆனா, சில appreciable பதிவுகள வெளியிட்டிருக்கேன். கிஷோர், கேபிள் சங்கர், பொன்னியின் செல்வன், வினோத் கௌதம், வால் பையன், ஹாலிவுட் பாலா, 'எனது பயணங்கள்' பிரபு, 'my thoughts da machi' காயத்ரி, 'குப்பைத்தொட்டி' நான் ஆதவன் என பல நபர்கள சந்திச்சதும், அவங்கள்லாம் என்னோட பாலோயர்ஸா இருந்ததும் தான் எனது ஒரே achievement பதிவுலகத்தில. அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. நான் வேற எங்க ஊரு அழகிரியப் பத்தி பதிவிட்டிருதேனா, அதனால தான் உன்னோட பளாக்க(Blog) ப்லாக்(block) பண்ணிட்டாங்க. அடுத்து அண்ணன் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாருன்னு வேற கெளப்பி விடுறானுங்க.

நான் இந்த பதிவுலகிற்கும், இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கும் சேவை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பொறுக்காத சில தமிழ் விரோத சக்திகள் தான் இதை செய்திருக்கனும். இது எனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட புல்லுருவிகள் தான் செய்திருக்கவேண்டும். இது எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதி. இதற்கு ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. விரைவில அந்த சிடி ரிலீஸ் செய்யப்படும். இப்ப தான் தலைவர்களோட தில்லுமுல்லு எல்லாம் பிட்டு படம் மாதிரி சிடி ரிலீஸ் பண்ணி பரபரனு போகுதே. கலைஞர் கூட அவரு காமெடிக்கு சிடிதான் யூஸ் பண்றார். சிடிய பாத்து கண் கலங்குறாராம், இலங்கைதமிழர்களுக்கு. அட, இங்க எதுக்கு அரசியல்? வரவர மேட்டர விட்டு அடிக்கடி விலகி போயிட்டிருக்கேன். ப்ரொபசர் ஆகுறதுக்கான தகுதி எதுவும் வளருதோ?

சரி, மேட்டருக்கு வருவோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவ போட்டுட்டு என் ப்ளாக்குக்கு போனா அங்க ஒரு மால்வேர் வார்னிங் வந்தது. அப்புறம் தெரியாத கோடிங்கெல்லாம் வச்சு மணிகணக்கா முட்டி, கூகுள கொஞ்சி மேடர கண்டு பிடிச்சா ntamilங்கிற social bookmarking siteதான் என்னோட பிரச்ச்னைக்கு காரணம். ntamilனு பேரு வச்சுக்கிட்டு என்னயவே போட்டுப் பாக்குறீங்களான்னு அத ரிமூவ் பண்ணிய பிறகும் கூகுள் என்னய போட்டுப் பாத்துட்டான்.

கடந்த ஒரு மாசமா பல நல்ல விஷயங்கள் தோன்றும் போதெல்லாம் ப்ளாக் இல்லாத வெறுமைய புரிஞ்சுக்க முடிந்தது. செமஸ்டர், கேரியர்னு வேற பல தடங்கல்கள். இதில சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு பதிவுலக விட்டு வெளியேறிடலாம்னு கூட நினைச்சிருக்கேன். நான் போனா யாரும் மிஸ் பண்ண போறதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு ரொம்ப ஆக்டிவிட்டியோட இருந்த நான், இந்த ஒரு மாத்ததில தடம் தெரியாமல் போய்விடவில்லையா? இதுதான் பதிவுலகம். Easy comes, easy goes. இப்பவும் பழைய அளவு ஆக்டிவிட்டியோட இருக்குறது முடியுமான்னு தெரியல. பார்க்கலாம்.

என்னுடைய பழைய ப்ளாக்கிலிருந்து பல பதிவுகள திரும்ப பதிவிட்டிருக்கேன். அந்த ப்ளாக் போனது கூட ஒரு indicationa இருக்கலாம். அத விட நல்ல பதிவுகள குடுக்க முயற்சி செய்வோம்.

18 வயசுல ப்ண்ண வேண்டியத 10 வயசுக்குள்ளயே முடிச்சவனுங்க..

Filed under , by Prabhu on 6/20/2009 06:07:00 PM

3
முதன்முதல்ல ஸ்கூல் போக அழுதது இன்னமும் நினைவிருக்கு. அழுக அழுக சமாதானப் படுத்தி எங்க அம்மா என்னய ஆயா கையில விட்டிருவாங்க. வீடு கொஞ்சம் கிட்டங்கிறதால அப்படி ஆயா கூட்டிட்டு போயிருவாங்க. என்னதான் அழுதாலும் க்ளாசுக்கு போய் அழுததில்ல. அங்க போய் ஏ,பி,சி,டி எழுதிட்டு, 'மிஸ் இங்க பாருங்க'(வயசான மிஸ்ஸுங்க, எனக்கும் 4 வயசுதான்), அப்புறம் அந்த பக்க ஸ்லேட்டு நிரம்பினதும் தண்ணி தொட்டு அழிக்கிறதும், ஒண்ணுக்கு போக மிஸ் கிட்ட ஆள்காட்டி விரல மடக்கி 'மிஸ், ஒன் பாத்துரூம்னு' கேக்குறதும், அதுக்கு ஆயாவுடைய தயவ நம்பி நிக்கிறதும் இப்ப நினைச்சு பாத்தா ஏதோ படத்துல நடந்த மாதிரியா நினைவில இருக்கு.

அப்புறம் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது வீடு கொஞ்சம் தள்ளிப் போச்சு; ரிக்ஷா அமர்த்தினாங்க. அந்த ஆளோட முகத்த பாத்தது அடி வயித்துல ஒரு கவ்வ்வ்...... உடனே அழ ஆரம்பிச்சிட்டேன்........அவ்வ்வ்வ்வ்வ்....நான் போகல, அந்த ஆள பாத்தா பயமாயிருக்கு. அம்மா, நீ சோறு ஊட்டும்போது சொல்ற பூச்சாண்டி மாதிரி இருக்கான்மா. விட்டிரும்மா, நீ போய் விடும்மா. கதற கதற அள்ளி போட்டு அனுப்பி விட்டாங்க. அது ப்ரைமரி ஸ்கூல், அஞ்சாப்பு தான் சீனியர். அங்க அஞ்சு படிக்கிற ஒரு அஞ்சுவும், அதுக்கு ஒரு நாலாப்பு குரங்கு அஸிஸ்டண்ட். ரெண்டு சீட் உண்டு; நார்மல் குஷன், சின்ன கட்டை சீட். குஷன்ல சீனியர், கட்டைல நான் (கட்டையில போறவன்னு சொல்லிடாதீங்கோ). சும்மா இருந்தவள இந்த நாலு கிளப்பிவிட (பயபுள்ள கோர்த்து விடுது பாரு). அஞ்சு என்னய ரேக் பண்ண ஆரம்பிச்சிருச்சு.

மொத கேள்வி சுற்று
உன் பேரு என்ன?
பிரபு... பிரபு குமார் (இண்டியன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரிதான் பேரு சொல்வேன்)
என்ன படிக்கிற?
ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்
வயசு?
ஆறு (ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு வயசுன்னு தெரியாதவளெல்லாம் அஞ்சாப்பு படிச்சு என்ன பண்ண போறாளோ?)
சத்தமா பேசுடா?.
ம்ம்.....(மவளே சிக்குவேல)
நாங்க செய்றதெல்லாம் வெளிய சொல்லுவயா?
ம்ஹூம்.... (என்ன செய்வாய்ங்க... ஒரு வேள ரே...ரே.....ரே.... ரேக் பண்ணுவாங்களோன்னு சொன்னேன். கொஞ்சம் கேப் விட்டா புத்தி போறதப் பாரு.)

அப்புறம் அடுத்து தீவிர அடுத்தக் கட்ட நடவடிக்கை.
'சப்'
ம்ம்....
'சப்'....
ம்ம்/...
'சப்'
ம்ம்....
முத்தம் குடுக்குறான்னு நினைச்சா, அத ஆசிட் ஊத்தி அழிச்சிருங்க. அறை விட்டாங்க அவ. அப்ப கூட அழலயே நான். சின்ன வயசிலயே வீரம் இஸ் சீக்ரட் ஆஃப் மை எனெர்ஜி.

அப்புறம் கிள்ளினா. செம வலிப்பா. இப்ப நினைச்சா கூட வலிக்குது. சனியனுக்கு என்ன போட்டு வளத்தாங்களோ, மாடு மாதிரி வேற இருந்துச்சு. அப்புறம் தொடையில கிள்ளினா. ஏனோ அழ மாட்டேன்னு பிடிவாதம்.
வலிக்குதா? (அடிப்பாவி, ஏதோ கொஞ்சுற மாதிரி கேக்குறயே)
ம்ஹூம்....
இன்னும் அழுத்தி"இப்ப?"
முழிச்சேன் (லைட்டா....)
விரல்களிடையே சதைய வச்சு நசுக்க ஆரம்பிச்சா....அவ்வ்வ்வ்......
"இப்ப?"
வலிக்கலையே...
அடுத்து அந்த நாலு உள்ள வந்து "அக்கா நானு?"(டேய், இது என்ன ரோலர் கோஸ்டரா, சான்ஸ் கேக்க")
அந்தப் பக்கி இத்துனூண்டா இருந்துட்டு என்ன டார்ச்சர் பண்ணுது.
அப்பயும் நானொத்துக்களையே!
"இப்ப?"
இல்லக்கா.....(வேணாம் விட்டுரு, அப்புறம் அழுதுருவேன்)

கண்ல நீர் முட்டிட்டு வருது. இப்படியே தொடர்ந்தும் நான் ஒத்துக்கல. எப்படி எனக்கு அவ்ளோ தைரியம்னு தெரியல. இது பல நாள் தொடர்ந்தது. அப்படியும் நான் வலிக்குதுன்னு சொல்லாத்தால கேம் போரடிச்சு விட்டுட்டாளுக ரெண்டு பேரும்.

For a few, they get 'it' up just when somebody is screamingஇப்படியே மெல்ல மெல்ல எனது போராட்டங்கள் குறைந்து நெரிசல் மிகுந்த சாலையில் எனது பயணங்கள் ஆர்ப்பரிக்கும் அலைகடலின் நடுவே விவேகானந்தரின் தியான மண்டபம் போல ஆனது. எதுவும் கேட்கப் படுவதில்லை. எதுவும் கூறப்படுவதில்லை.

அப்படியே 2 வருஷம் ஓடிருச்சு. நான் இப்ப மூணாம் வகுப்பு. திரும்ப அதே மாதிரியான குரல். குஷன் சீட்டுல இருக்கற ஆள் ஜூனியர ஆள ரேக். ஏன் நடக்குது இந்த மாதிரி. இவ்ளோ நாளாச்சு. நீ சீனியர் ஆயிட்ட, இன்னமுமா பயப்படுற நீங்க கேப்பீங்க...

இஹ....ஹா.....ஹா(சூப்பர் ஸ்டார் மாதிரி)

இப்ப குஷன் சீட்டுல நான்.

டிஸ்கி:- என்னவோ இப்ப ரேக்கிங் பண்ணிட்டாங்கன்னு பஞ்சாயத்து பண்றாய்ங்க. நாங்களாம் பிரைமரி ஸ்கூல்லயே ரேக் ஆகி, நாலு பேத்த ரேக் பண்ணவனுங்க. பி கேர் ஃபுல்(நான் என்னய சொன்னேன்.). ஆனா ஒரு விஷயம் என்ன காலேஜ்ல கூட ரேக் பண்ணல, ஆனா ஸ்கூல்ல பண்ணிருக்கானுக.

பின்குறிப்பு- பி.எஸ்.ஜில படிக்கிற பையன ரேக் பண்ணிட்டாங்களாம். ஆனா, ரெடினாவுல ஒன்பது ஓட்டை விழற அளவு என்ன ரேக் பண்ணானுங்கன்னு புரியல. காதுல வேற குறைபாடு வந்திருச்சாம். இதுக்கப்புறம் நடவடிக்கையில ஈடுபடாம, காலேஜ் பேர் கெடக் கூடாதுன்னு சமரசம் பேச ட்ரை பண்ணிருக்காங்க பிரின்ஸ்பால். அந்தப் பையனின் அப்பா போலீஸ்ல போட்டு விட்டாரு. ரேக்கிங் பண்றது ஒரு நட்புறவுக்காக. அத தாக்கவும், கேலி பண்றதுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது.

பின் பின்குறிப்பு - இது ரொம்ப லேட் ரியாக்ஷன்னு சொல்லாதீங்க. ஏற்கனவே நான் இத பப்ளிஷ் பண்ணின ப்ளாக் சீனானது உங்களுக்கு தெரியும்.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே! - என்ன கொடும சார்!

Filed under , by Prabhu on 6/20/2009 06:06:00 PM

1

நான் இன்னைக்கு காலேஜ் போறப்போ இன்னைக்கு தேர்தல் முடிவு வருதே, நம்மஓட்டு போட்டிருக்கோமே, என்னாகுதுன்னு பாக்கனுமே அப்படிங்கிறபரபரப்பெல்லாம் அடையல. எட்டு மணி காலேஜுக்கு ஏழரைக்கு எந்திருச்சு, எட்டுபத்துக்கு நிதானமா போய், க்ளாசுக்கு பக்கத்துல போனதும் ஒடுற மாதிரி சீன்குடுத்து, அங்க மூச்சிரைக்கறமாதிரி போய் நின்னுஎக்ஸ்க்யூஸ் மி சார்னுசொன்னா அந்த ஆளு நம்மல கேவலமா பார்க்க, அதையெல்லாம் கண்டுக்காமகண்ணுல இருக்கிற டெரர மறைச்சுக்கிட்டு மரியாதைய கொண்டு வரும் போது, “பக்கத்தில வந்த்தும் ஓடி வர்ற மாதிரி சீன் கொடுக்கறயா? ஏன் லேட்?”கேட்ககாரணம் தான் கேக்குறாருன்னு தெரிஞ்சும், “லேட் ஆயிருச்சு சார்என சொல்ல, “அது தெரியுது. காரணத்த கேட்டேன். சரி, உள்ள போய் தொலைஎன சொல்ல, ஒரு கேனச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டே நம்ம நண்பன் கிட்ட போய் உக்காந்தா 8.30க்குமெல்ல கண்ணு சொருகும் போது கை கைபேசியின் உதவியை நாடும் போதுதான்தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தது. வீட்டுல வெட்டியா இருக்கிற அஜய் கிட்டசப்ஸ்கிரிப்ஷன் போட்டு விட்டேன். 5 மணி வரைக்கு ஒரே after polling discussion தான்.

மொத்த்துல இந்த தேர்தல்ல காங்கிரஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நான் இவ்ளோதூரம் எதிர்பார்க்கல. எதனாலன்னு தெரியல,ஆனா செமத்தியா ஜெயிச்சிருக்கு. பா...விட நல்ல மார்ஜின்ல செயிச்சிருக்கு. இதுல ஒரு நல்ல விஷயம்என்னவென்றால் பெரிய அளவிலான குதிரை பேரமும், என்னை மாதிரி முதல்முறை ஓட்டளித்த இளைய தலைமுறையினருக்கும் அரசியலிலநம்பிக்கையின்மை உண்டாகுறதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மக்களோட முடிவுபழைய ஆட்சி மேல இருந்த நம்பிக்கைய குறிக்குதா, இல்ல பா... மேல இருக்கவெறுப்பா, இல்ல குழப்பமான கூட்டணிகளின் பலனா என முடிவு செய்வதுஎனக்கு கடினமாகத்தான் இருக்கிறது. அவங்க தனியாவே 200 அடிச்சிட்டாங்க. இது போக கூட்டணியின் இதர கட்சிகள் சேர்த்தா 258 வருது. செம வலுவாஇருக்காங்க. பா...வோட தெசிய ஜனநாயக கூட்டணி 168 தான் தேறுது. கஷ்டம்தான்.

இந்த வலுவான கூட்டணிய விட்டு வெளிய வந்து தேவையில்லாம தனியாபோட்டியிட்டுட்டொமேன்னு லாலு வருத்தப்படுறாரு. அவருக்கு 5தான் வெற்றி. வெளிய வந்த்துதான் தப்புன்னு அவரோட நாலாவது அணி உருவாக்கினபஸ்வான், முலாயம் சிங் யாதவ் எல்லாரும் உணர்ந்திட்டாங்க. இதுல கொடுமஎன்ன்ன்னா இதுவரைக்கும் இந்தியாவுல் அதிகமான ஓட்டுவித்தியாசத்தில(5லட்சத்தி சொச்சம்) ஜெயிச்சவருங்கிற பெருமையகொண்டிருந்த பஸ்வானுக்கும் புட்டுக்கிச்சு. இப்ப திரும்ப தாய் கூட்டணிக்கேதிரும்பலாம் என முடிவு எடுக்கறதா தெரியுது. என்ன கொடும சார் இது!

ஆந்திராவுலயும் சொளையா 34 தொகுதிய அள்ளிருச்சு காங்கிரஸ். நம்மசீருவோட பிரஜா ராஜ்யம் ஒன்னு எடுத்திருக்காங்க. விஜயகாந்த் நிலைமைக்குஎவ்வளவோ தேவலை. சட்டசபை தேர்தல்ல அவரு திருப்பதில ஜெயிச்சாலும், தன்னோட சொந்த ஊரிலயும் போட்டி போட்டு அங்க தோத்துட்டாரு. சும்மாசொல்லக் கூடாது, சட்டசபை தேர்தல்ல 20 தொகுதி அவருக்கு வெற்றிகொடுத்திருக்காரு. இதுவும் விஜயகாந்த ஒப்பிடும் போது பெருசுதான். ஆனா, சீருஅங்க சூப்பர் ஸாருங்கோ! இங்க விஜயகாந்த்........?! என்ன கொடும் சார்!

வருண்காந்திய விட முடியுமா? அந்த பையனும் தேர்தல்ல நின்னு, பிரசாரத்திலவன்முறையத் தூண்டுற அளவுக்கு அதிகமா பேசி ஜெயிலுக்கும் போயிட்டுவந்துட்டாரு. ஆனாலும் அவர்தான் இப்போ இந்தியாவிலயே அதிக வோட்டுவித்தியாசத்தில வெற்றி அடைஞ்சிருக்கார். கிட்ட்தட்ட 2.5 லட்சம். அம்ம்மாடியோவ்..... நம்ம மாநிலத்துல ஜாதிப் பற்று மாதிரி வடமாநிலத்துல மதப்பற்று கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. மோடியவே ஜெயிக்க வச்சாங்களே. அதஇன்னொரு பதிவுல பேசுவோமே. என்ன கொடும சார்!

இதுக்கிடையில நம்ம மன்மோகன் சிங் ராகுல் காந்திய கேபினட்ல சேரனும்னுசொல்லி கேக்குறாரு. எனக்கு காங்., வந்தது கூட பிரச்சனையா தெரியல. ஆனா, இந்த மன்மோகன் சிங் தான் பிடிக்கவே இல்ல. பிரதமரானதுல இருந்து இவருசூச்சூ னாலுமே ஒரு அம்மா கிட்ட சொல்லிட்டுதான் போவாங்களாம்குழந்தைக்கு இருட்ட கண்டா பயம்). இதையும் யாரு சொல்லச்சொல்லிருப்பானுங்கன்னு நமக்கே தெரியும். அந்தப் பையனுக்கு மக்கள்மத்தியிலயும் கட்சியிலயும் வெயிட்டான மாஸ். அடுத்த தேர்தலுக்கு ஒருபிரதமரத் தயார்ப்ண்றாங்க. என்னதான் சொன்னாலும் இந்த தேர்தலுக்கு, SINGH IS KINNG.

கம்யூனிஸ்ட்ட விட்டுட்டோமே. அவங்க தங்களோட கோட்டைகளான கேரளா, மே.வங்கம் ஆகிய மாநிலங்களிலயே கவுத்துன பிறகு மற்ற ஊருகளிலசொல்லவா வேணும், டவுசர்தான். வர வர கம்யூனிஸ்டோட போக்கே சரியில்ல. அவங்க அரசாங்கத்துக்குள்ளயே இருந்துக்கிட்டு அவங்களுக்கே எதிர்ப்புதெரிவிக்குறாங்களாம். அஞ்சாவது வருஷம் வந்த்தும் ரோஷம் வந்து பதவி, கூட்டணி ரெண்டையும் விட்டு விலகுறாங்களாம். நல்ல கதையா இருக்கே. இதேமானங்கெட்ட வேலைய பார்த்த ராமதாஸுக்கும் பெரு ஆப்பு. ஒன்னு கூட தேறல.

தமிழக காங்., நிலைமை அந்தோ பரிதாபம்தான். பின்ன தேர்தல் நேரத்துல கூடஒண்ணும் பிரசாரம் பன்ணாம, ஒரு முயற்சியும் எடுக்காம இருந்த்துக்கு சிதம்பரம்முட்டிமோதி 3000சொச்சம் ஓட்டுல ஜெயிச்சதே பெருசு. அவரும் காசுகொடுத்தாராம். அதுக்கே இந்த நிலைமையா? இளங்கோவன், பாலு, மணிசங்கர்ஐயர் எல்லாத்துக்கும் சோலி முடிஞ்சிருச்சு. தி.மு..வும் இலங்கை பிரச்சனை தன்பக்கம் திரும்பக் கூடாதுன்னு காங்.,க்கு சரியா பிரசாரம் பண்ணல. பின்ன எப்படி? காங்கில ஒருத்தன் வேட்புமனு தாக்கல் செஞ்சா அவரு கட்சியிலயேஇன்னொருத்தன் அதிருப்தி காரணமா இன்னொரு வேட்பும்னு தாக்கல்செய்வான். இந்தக் கட்சி எப்படி முன்னேறப் போகுது.

திமுக 18 தொகுதில ஜெயிச்சிருக்கு. வெற்றிக்கு காரணம் ஹாஸ்பிடல்ல இருந்தஐயாவா இல்ல நோட்டுல இருக்குற ஐயாவான்னு ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். தான் ஒரு வலுவுள்ள எதிர்கட்சிதான்னு சொல்றவிதமா .திமுக 9 ஜெயிச்சிருச்சு. பரவாயில்ல. மதிமுக வைகோவிற்கே வெற்றி கிடைக்கலயே. அங்க பதிவானஓட்ட விட எண்ணிக்கையில வந்த ஓட்டுகள் அதிகமா இருக்குன்னு ஒருபிரச்சனைய கிளப்பிருக்காரு. என்ன்ன்னு பொறுத்திருந்து பார்போம்.

இங்க மதுரையில நான் சொன்னது நடந்திருச்சு பாத்தீங்களா? நான் சொன்னதுமாதிரியே அழகிரிக்குதான் வெற்றி, மாபெரும் வெற்றி. ஆனால், அவருசொன்னமாதிரி 3லட்சம் ஓட்டு வித்தியாசம் இல்லை. 1,43,945 ஓட்டுக்கள்வித்தியாசம். மொத்த ஓட்டுக்கள் மதுரை தொகுதியில 10லட்சம். அதுலபதிவானது 7லட்சத்து சொச்சம். ஆமாங்க, 75சதவித வாக்குப் பதிவாயிருக்கு. பின்ன, காந்தியே வீடு வீடா போயி வாக்கு கேட்டிருக்காரே, அழகிரிக்காக. அந்தபதிவான வாக்குகளில் 4லட்சத்து சொச்சம் அழகிரிக்கு. இப்ப சொல்லுங்க அவருசொன்ன அளவு வித்தியாசத்துல ஜெயிக்கறதுக்கு இடமில்ல, விஞ்ஞானப்படி. நாங்கதான் அப்பவே சொன்னமுல!

இதுலயும் ஒரு நல்ல மறுபக்கம் இருக்கத்தான் செய்யுது. இப்ப அமைச்சரானதாலகண்டிப்பா நல்லது செய்வாரு. பெரிய ஆளுங்க என்னைக்குமே தன்னோடதொகுதிய நல்ல வச்சுக்குவாங்க, அம்மாவோட ஆண்டிபட்டி, ஐயாவோடசேப்பாக்கம் இதற்கு உதாரணங்கள். அதனால ஊருக்கு ஏதாவது செய்வாங்க. பி.மோகன் நல்லவருன்னு ஊருக்குள்ள பேரு இருந்தாலும், அவருக்குபடிச்சவங்க வாக்குகள் விழுந்தாலும் அவரோட திட்டங்களுக்கு தடைகள் வரும். சிக்ஸுக்கு அப்புறம் செவன் டா, அண்ணனத் தாண்டி எவன் டா? அதனால்அஞ்சாநெஞ்சன் தவறாம தன் கடமைகளை செய்வாருன்னு நம்புறேன். இப்போமுதல் முறையா நேரடி அரசியல்ல இறக்குறதாலயும், அமைசாராகிறாதாலும்(ஆக்கிருவாங்க, பாருங்களேன்) கண்டிப்பா தன்னோடஇன்னபிற மர்ம நடவடிக்கைகள கொறச்சிருக்காரு. ரயில்வே அமைச்சர் லாலுஇதற்கு நல்ல உதாரணம். மதுரையோட தலையெழுத்தப் பார்போம்.

இனி இவங்க ஆட்டம் தாங்க முடியாது. அழகிரி பிறந்த நாள் எனதான் மதுரையிலபல பேருக்கு தெரியுதே தவிர, மற்றபடி அது காந்தி இறந்த நாள் (என்னபொருத்தம்!) என பல பேருக்கு மறந்திருச்சு. ஊரு முழுக்க தோரணம் கட்டி, ஒட்டிஒட்டியே கட்டக் கூடிய அளவுக்கு ஆயிரக்கணக்கான ஃப்ளக்ஸ் போர்டுகல வச்சு, ஊரு முழுக்க லைட்டு போட்டு, ஸ்பீக்கர் வச்சு அழகிரி புகழ் பாடல்கள் போட்டுஊரையே அசிங்கமாக்கி, கிராமத்து திருவிழா மாதிரி ஆக்குறத இனிமே தைரியமாபண்ணுவாங்க. எங்க காலெஜுக்கு பின்னாடிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்குறமருத்துவக் கல்லூரி. காலையில க்ளாஸ் நடக்கும் போதே வெடி வெடிச்சு தெரியவச்சுட்டாங்க. காலேஜ் முடிஞ்சு வரும் போது சிக்னல்ல வச்சு எல்லாருக்குசாக்லே குடுத்துருக்காங்க. என்னைய கேக்குறீங்களா? நான் வாங்கலீங்க... கொள்கையெல்லாம் இல்ல, எதிர்பக்கத்தில கொடுத்தாங்க, மிஸ் ஆகிடுச்சு. அதத்தாண்டி பாலத்துல இறங்குற இட்த்துல அந்தரத்துல டிராபிக் ஜாம். என்னடான்னுபாத்தா கீழக்கூட்டம். மெல்ல நழுவி வலதுப் பக்கம் திரும்பி வந்தேன். சுத்திஇருக்கறங்க எல்லாம் பைக்க உருட்டிட்டிருக்கானுங்க. உத்துப் பாத்தாஅவய்ங்கெல்லாம் கட்சிக்காரனுங்க. டிராபிக்க இட்து பக்கம் திருப்பிவிட்டிருந்துருக்காங்க. கட்சிக் கார்னுங்களுக்கு நடுவில கட்சிக்காரன் மாதிரிஇருந்த்து எனக்கு ஒரு மாதிரி இருந்த்து. எல்லாம் ரவுடி மாதிரி மாடுமாடாஇருந்தானுங்க ஐய்யோ சிக்கிட்டோமேன்னு நைசா நழுவி வந்துட்டேன்.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே!

Lucky Number slevin

Filed under , by Prabhu on 6/20/2009 06:05:00 PM

0

படம் திடீரென புருவம் சுழிய வைக்கும் இரு புக்கிகளின் கொலையுடன் ஆரம்பிக்கிறது. காலியான ஏர்போர்ட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் கதை சொல்லிக் கொண்டே அவன் கதையை முடிக்கிறார், Good Kat (Bruce wllies). Kansas city shuffle என்கிறான். ஒரு காலத்தில ஒரு குதிரை ரேஸ் நடக்கும் போது ஒரு குதிரைக்கு மருந்து குடுத்து ஜெயிக்க வைக்கிற விஷயம், அந்த டாக்டர் வழியாக, ஒரு விலைமாது, ஒரு பணக்காரன், அவன் நண்பன், ஒரு பார் வெய்டர் என கேயாஸ் தியரி மாதிரியாக MaX கைக்கு வந்து சேருகிறது. அவன் அதில் பெட் கட்ட, மருந்துக்கு திட்டம் போட்ட கும்பல் அது லீக்கானது தெரிஞ்சதும் அது சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கொன்னுடறாங்க குடும்பத்தோட. இதுதான் Kansas city shuffle ஆ என தூங்குமூஞ்சி கேட்ட பொழுது, இல்லை அது ஆரம்பம்தான், உன்ன கொல்லுறதுதான் Kansas city shuffle ன்னு சொல்லிக்கிட்டே அவன் கழுத்த கோழி மாதிரி திருகிடறான். ஒரு பிணம் இல்லாமல் Kansas city shuffle நடக்காதுன்னு சொல்லிக்கிட்டே அவன எடுத்திட்டு போறான்.


இதுக்கப்புறம் ஹீரோவோட அறிமுகம் Slevin kelevra (Josh Harnett ). பேசிப் பேசியே மூக்குல குத்து வாங்கிற கேரக்டர்ல நல்லா நடிச்சிருக்கார். அவரோட பாத்திரப் படைப்பே எந்நேரமும் பேசுறதுதான். அவன் ஃபிரண்டு வீட்டில தங்கியிருக்கும்போது அவன் ஃபிரண்டு நிக் என நினைத்து இவனத் தூக்கிட்டு போயிடறாங்க துண்டோட. அங்க The Boss (Morgan Freeman) என் கடன திருப்பிக் கொடுக்கறயா இல்ல அதுக்கு பதிலா என் மகனக் கொன்ன Rabbi(Ben Kingsley) யோட பையன போட்டுத் தள்ளினா விட்டுடறேன் என சொல்லுகிறான்.

இப்ப வில்லன்களோடபேக்ரவுண்ட். ரெண்டு எதிரெதிர் வானுயரக் கட்ட்டங்கள்ல கடைசி மாடி பெண்ட் ஹவுஸ்ல மூணு இன்ச் குண்டு துளைக்கா கண்ணாடியின் பின்னாடி கடந்த 20 வருடமா வாழ்க்கை நடத்திட்டு வர்ற எதிரிங்கதான், The Boss ம், Rabbi ம். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயந்து அந்த ஒரு மாடிலயே இருபது வருஷமா வாழ்ந்திட்டு வர்றாங்க. இந்த சமயத்துலதான் பாஸோட மகன் செத்துப் போக, ராபியோட மகன கொல்லுறதுக்காக Good katஅ கூப்பிடுறார் பாஸ். இவனோட டீல் வச்சுக்கிற அதே நேரத்தில அதே நேரத்தில ராபிக்கிட்ட பாஸ கொல்லுறேன்னு ஒரு டீல் வச்சுக்கிறான் அவன்.

இப்ப ரெண்டு பேருக்கிட்டயும் ஹீரோவ மாட்டி விடறான் Good Kat, ஸ்லெவின் ஃப்ரண்டு Nick Fisherஒட பேர வச்சு. ஒரு பக்கம் பாஸ் ராபியோட ஹோமோ செக்ஷுவல் மகன, அவன் வீக்னஸ வச்சே முடிக்க சொல்ல, மறுபக்கம் என்னோட 33,000 டாலர கொண்டுவான்னு ராபி படுத்த ஸ்லெவின் நடுவில சிக்கி சீப்ப்டுறான்.


எதிர்வீட்டு லொட லொட பொண்ணா கதாநாயகி (Lucy Liu சார்லீஸ் ஏஞ்சல்ஸ்ல பாத்திருப்பீங்களே!). இவன் ஏன் இந்த வட்ட்த்துக்குள்ள சிக்கினான் என துப்பறியறேன்னு லொட லொடத்துக்கிட்டேஏஏஏஏஏ... இருக்காங்க. இடையில Good kat அ படமெடுத்திடறாங்க, ஒரு சந்தேகத்தில. ஆனா, அது யாருன்னு ரெண்டு பேருக்கும் புரியல. இதற்கிடையில் ஒரு போலிஸ் அதிகாரி Marty இவன துரத்த ஆரம்பிச்சிடறான்.


கடைசியா, ராபியோட பையன் The fairy கிட்ட பழகி, ஹோமோ செக்ஷுவல் மாதிரி காட்டி, அவன் வீட்டுல வச்சுப் போட்ரலாம்னு ப்ளான் போட, அங்கயே வச்சு ஸெல்வின போட்டுட்டு கூட்டுத் தற்கொலையா ஆக்கிடலாம்னு Good kat திட்டம் போட, ராபியோட பையன இவன் கொன்னானா, குட் கேட் கிட்ட இருந்து ஸெல்வின் தப்பிச்சானா, ராபி கிட்ட ஒத்துகிட்ட மாதிரி பாஸ காலி பண்ணினா குட் கேட், போலீஸ்கிட்ட இருந்து ஸெல்வின் எப்படி தப்பிப்பான், குட் கேட்ட ஃபோட்டோ எடுத்த லிண்ட்சே பிழைச்சாளா, kansas city shuffle னா என்ன, அந்த முதல் கொலைகள் ஏன் நடந்தன, கடைசியில இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன, இந்தப் படத்தின் பெயருக்கு அர்த்தம் என்ன என விளக்குவதுதான் கதை.

படம் கடைசி 40 நிமிஷம் முழுக்க கிட்ட்தட்ட க்ளைமாக்ஸ் தான். The Fairyய கொன்ன பிறகு கதையோட போக்கே தடாலடியா மாறிடுது, படத்துல கதாநாயகி சில சமயங்களில் அதிகமாக பேசுவது போலத் தெரியலாம். வில்லன்கள் இருவரும் அருமை. பள்ளிக் கூடப் பையனைப் போல படிய வாரிய தலையுடன் புரூஸ் வில்லிஸ் இளமையாகத் தெரிகிறார். ஹீரோ தனது வேலையை திறமையாகத்தான் செய்திருக்கிறார்.

படத்தின் எடிட்டிங் இந்த மாதிரியான படங்களுக்கு ஏற்றவாறு நல்லா க்ரிஸ்பாதான் இருக்கு. படத்தில எடிட்டிங்ல அங்க அங்க பிசிறு விட்டு பின்னாடி காட்சிகளை கோர்த்து பார்க்கும் வகையில பண்ணிருக்காங்க. கடைசில என்ன தான் நடக்குது இங்கனு சீட் நுனிக்கு தள்ளிடுவாங்க.

ஆமா.... இந்தக் கதைய எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, நம்ம கேபிள் சங்கர் ‘லாடம்ங்கிற படத்துக்கு எழுதினது மாதிரியே இருக்கலாம்னு ஞாபகப்படுத்துகிறேன். வித விதமா சுடுறாய்ங்க!

--------------------------------------------------------------------------------------------------

சில வசனங்கள், இந்தப் படத்திலிருந்து

ஸ்லெவின் லிண்ட்சேவிடம், “ கெட்ட்து நடந்தா எப்பவும் மூணு மூணாவே நடக்கும்

தனது காதலி இன்னொருத்தியிடம் செக்ஸ் வச்சுக்கிட்டிருக்கறத பாத்தப்போ அவ இது ஆக்ஸிடண்ட்னு சொல்லுவா.அதுக்கு. “அது எப்படி? அவன் தடுக்கி நீ விழுந்திட்டயா?”

லிண்ட்சே திடீரென வந்தப்ப அவன் துண்டில்லாம பாத்திருவா. போன பிறகு திரும்பவும் திடீரென எட்டிப் பார்த்து, “இன்னொரு ஷோ கிடைக்குமான்னு பார்த்தேன்?

லிண்ட்சே - “ஒரு கப் சக்கரை (சக்கரை சுரேஷ் இல்லீங்க!)வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்

ஸ்லெவின் – “கப் எங்கே?”

லிண்ட்சே - “கப் இருந்தா நான் சக்கரை மட்டும்தான வாங்க வந்திருப்பேன். நான் ஒரு கப் சக்கரை வாங்க வந்திருக்கேன்

இவன் மூக்க உடைச்ச பிறகும் வாய் குறையாம பேசிட்டிருப்பான். அப்ப Morgan Freeman- Ill bet it was that mouth that got you that nose

The Boss ஸ்லிம்மோட பிணத்தை வச்சு கேள்வி கேட்டுட்டு ஸெல்வினப் பார்த்து, “அவ யாரோ சுட்ட்துல இருந்து அவன் செவிடாயிட்டான்.

--------------------------------------------------------------------------------------------------

Lucky Number Slevin Luckily Good

என்னிடம் ஓட்டு கேக்க வந்த அழகிரி - என்ன கொடும சார்

Filed under , , by Prabhu on 6/20/2009 06:05:00 PM

1

மதுரை தேர்தல் முடிவுன்னு சொன்னதுமே எல்லாத்துக்கும் அது என்னவா இருக்கப் போகுதுன்னு. இன்னைக்கு காலையில்தான் ஓட்டு போடப் போறேன். ஆனால், அதுக்குள்ள தேர்தல் முடிவு சொல்லக் கூடிய நிலைமை இருக்கு இங்க. மதுரையப் பொறுத்த வரைக்கும் தேர்தல் முடிவு என்பது வேட்புமனுத் தாக்கல் அன்றே எல்லாருக்கும் தெரிந்தது தான். இதை தனியே வேறு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போ நான் பேச வந்த விஷயமும் அது அல்லவே.

மதுரையோட தேர்தல் நிலைமை மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது சற்று வேறு்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் நாம் அனைவரும் அறிந்த படி மதுரையின் முடிசூடா மன்னன், தமிழகத்து இளவரசன் மாண்புமிகு அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரிதான்னு சொல்லவா வேணும். அட, பேருக்கே ஒரு பதிவு ஒதுக்கலாம் போலயே. என்னதான் மக்களுக்கு அழகிரியப் பத்தி ஒரு உயர்வான எண்ணம் இல்லைன்னாலும் இவர்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு.


அழகிரியோட அரசியல் வாழ்க்கை என்னைக்குமே நேர்முக அரசியலா இருந்ததில்ல. எப்பவுமே அவரு பிண்ணனி வேலைகள்தான். அதாவது தேர்தலில நிக்க மாட்டாரு. ஆனா கட்சி பணியில இருப்பாரு. சாமில வில்லன் பண்ணுவான் பாத்துருக்கீங்களா? அது மாதிரி. இந்த அஞ்சாநெஞ்சன், அண்ணன் போன்ற பட்டங்கள் எல்லாம் இப்ப ரெண்டு வருஷமாதான். இதுக்கு முன்னடியே அழகிரியோட அதிகாரம் மதிரையில இருந்திருந்தாலும் தா..கிருட்டிணன் கொலை வழக்குல சிக்கி கொஞ்சம் பெயரிழந்திருந்தாரு. ஆனா, இந்த தி.மு.க. ஆட்சி தொடங்கினதில இருந்து அழகிரியோட அதிகார மையமாவே ஆயிருச்சு. அண்ணே ஆ...ன்னு கொட்டாவி விட்டா அடிக்கிறதுக்கும், ச்சூ.......ன்னு சொன்னா சூச்சூ போறதுக்கும் ஆளுங்க வந்திட்டாங்க. மதுரையில சித்திரைத் திருவிழாதான் பெரிய திருவிழான்னு சொல்லுவோம். ஆனா, இத விட பெரிய திருவிழாவா கடந்த ரெண்டு வருஷமா அழகிரியோட பிறந்த நாள் நடக்குது. இந்த தடவ ஒரு படி மேல போய் ஐம்பத்தி எட்டாவது பிறந்த நாள ஐம்பத்தி எட்டு நாள் நடத்தியிருக்காங்க. ரெண்டு ஊரு முழுக்க லைட் போட்டுதிருவிழாவா கொண்டாடிருக்காங்க, இந்த கரண்ட் பஞ்சத்தில. இதுக்கு மட்டும் எங்க இருந்துதான் க்ரண்ட் கிடைக்குதோ? படத்தில வர்ற வில்லன் கணக்கா மதுரையில ராஜா மாதிரி , அந்தாளுக்கு ஏழரையா எம்.பி சீட்டு வந்து சேர்ந்துச்சு.

இதுவரைக்கும் அடுத்தவனுக்காக வேலை பார்த்தது வேற, இப்ப தனக்கே பிரச்சாரம்ங்கிறப்போ பல்வேறு பிரச்சனைகள். இந்த லட்சணத்தில அவரு சும்மா இல்லாம எங்க ஊருக்காரய்ங்கள போய் நம்பி மூணு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில ஜெயிக்கிறேன்னு சொல்லி சவால் விட்டிருக்காரு. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த கதையா அவங்கதான் முதல்ல மதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 1000மும், அப்புறம் திருமங்கலம் இடைத்தேர்தல்ல ஐயாயிரமும் குடுத்தானுங்க. அதனால இப்ப மக்கள் பணம் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. படிப்பறிவில்லாதவங்க காசு கொடுத்தா அவங்களுக்கே ஓட்டு போட்டுருவாங்க. எங்கள மாதிரி படிச்சவங்க காச வாங்கிட்டு பிடிச்சதுக்கு குத்திக்குவோம், முடிஞ்சவரைக்கும் காசு குடுத்தவனுக்கு குத்தாம பாத்துக்குவோம். எங்கள இன்னுமா நம்புறாய்ங்க. ஆனா, ஒரு அநியாயம் நடந்து போச்சு. நாட்டுல ஜனநாயகம் செத்துக்கிட்டிருக்கு. பின்ன? முதல் முறையா ஓட்டு போட வர்ற என்ன மாதிரி இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையா குடுக்க வேண்டிய சன்மானத்த கொடுக்கனுமா இல்லையா? எனக்கு மட்டும் வரவே இல்லைங்க. என்ன கொடும சார் இது?

இப்ப இந்த டீடெயில எதுக்கு சொல்றேன்னா, இதனால தான் இப்போ பிரச்சன. இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, இப்ப நாடாளுமன்றத் தொகுதிகள் பெருசு. அதனால எல்லாத்துக்கும் அளவாத்தான் கொடுக்க முடியும் எல்லாத்துக்கும் ஐநூறு ரூபாய் கவர்கள்தான். ஆனா மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா, அவரு கொடுக்கறத இவனுங்கதான் ஆட்டய போடுறாங்கனுங்கன்னு. இத்தனைக்கு அந்த கவர் அவரோட நிர்வாகிகள்க கிட்ட இருந்து வர்றப்பவே சீல் பண்ணிதான் வருது. அப்படியும் ஆட்டய போட்டுற கூடாதுன்னு ஒரு நிர்வாகிய கவர் விநியோகத்தப்போ அனுப்பி வைக்கிறாங்களாம். இதுக்கப்புறமும் அங்க நிலவுற அதிருப்திய தடுக்க முடியல. என்ன செய்யவென்று புரியாமல் அவர்கள் சில இட்ங்களில் மறுவிநியோகம் வேற பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆனா ஆசை யார விட்டது? ஒருத்தரு அவருகிட்ட போய், "ஐயா, திருமங்கலத்தில இருக்குற என் உறவுக்காரங்கள் எல்லா குடிசையில இருந்து ஓட்டு வீட்டு மாறிட்டாங்க.நான் மட்டும் குடிசையில எப்படி இருக்க்கறது? வழி பண்ணுங்க", எனவே கேட்டிருக்கான். என்ன கொடும சார்?

அழகிரி நேத்துதான் எங்க வீட்டு பக்கம் வந்தாரு, ஓட்டு கேக்க. எங்க வீட்டுப்பக்கம்தான் அவர் வீடு. அதாவது, பெரியார் நிலையத்து வழியா வந்தீங்கன்னா, அடுத்து சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம்(இங்க நான்), ஜீவா நகர், டி.வி.எஸ. நகர்(இங்க அண்ணன்). அட, பாத்தீங்களா எவ்வளவு பக்கமுன்னு.
அதனாலதான் கடைசி நாளா இங்க வந்திருக்காரு. மத்தியான நேரம், கடும்ம வெயில். அளவான மக்கள் வீடு வாசல்ல இருந்தே பாக்குற அளவு கிட்ட வந்தாரு. ஒவ்வொரு முகமா நிதானமா பாத்து கை கூப்பி ஓட்டு கேட்டுக்கிட்டே போனாரு. ஆளு அக்கினி வெயில்ல நல்லா கருத்திட்டாரு. இவ்வளவு காலம் ஏ.சியிலயே இருந்திட்டு இப்ப வெளிய வந்தா? உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு. எங்கள நம்பி இவ்வளவு பெரிய மேட்டர கையில எடுத்திருக்கீங்க. நம்மள இன்னுமா நம்புறாய்ங்க! என்ன கொடும சார் இது!


ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்த கருணாநிதிய. பெரிய தில்லாலங்கடிதான். தன் கடைசி காலத்தில எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி செஞ்சிட்டாரே. ஸ்டாலினுக்கு சட்டமன்றம், அழகிரிக்கு நாடாளுமன்றம், கனிமொழிக்கு ராஜ்ய சபான்னு ஏதோ இந்த தமிழ் நாடே தன்னோட சொத்து போலவும், தான் இந்தநாட்டின் ராஜா போலவும் பிரித்துக் கொடுத்து விட்டாரே, இந்த தமிழீனத் தலைவர். என்ன ஒரு வில்லத்தனம்!

அழகிரிக்கு வெற்றி பெரிசில்லைன்னாலும் அந்த மூணு லட்சம் ஓட்டு மேட்டர் ஒரு தன்மானப் பிரச்சனையாவும், ஓட்டுக்கு லஞ்சம் மேட்டர் அவர் பதவி ஆசைக்கே உலை வைக்கிற பிரச்சனையாவும் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிற்றுக் கிழமை, ஆறு மணி

Filed under , by Prabhu on 6/20/2009 06:04:00 PM

0

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை. சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அங்க்கிருப்பவர்களை வைத்து நாம் எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்று முடிவு செய்துவிட இயலாது. அந்த கூட்டத்தில் சோலங்கிகளும், ராவ்களும், ஜெயின்களும், செட்டிகளும், ஷெட்டிகளுமாக ஒரு குழப்பமான மொழிகளின் கலவைகளாக இருந்தது. சென்னை சென்ட்ரலில் எப்பொழுதுமே இப்படித்தான், பேபல்(Babel) கட்டக் கூடிய பாபிலோனியகள் பல மொழிகளின் கூச்சல்களாக இருக்கிறது. அதுவும் மும்பை ரயில் வரும் நேரமானால் சொல்லவே தேவையில்லை.


நேரம் 17.50. உள்ளே நுழையும் பாதையில் மெடல் டிடெக்டர் காரணமாகவும் என் கையில் எந்தவித பயணச் சுமையும் இல்லாத காரணத்தாலும் வெளியேறும் வழியில் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். அதுவும் நல்லதுதான், இது தெரிந்துதான் வந்தேன். நான் ரயில் நிலையத்தினுள் நுழையும் போது அந்தப் பெண்ணின் குரல் ஒலி பெருக்கியில் பயணிகள் கவனத்தை கடன் கேட்டுக் கொண்டிருந்தது. மும்பை ரயில் கிளம்ப இன்னும் 10 நிமிடங்கள் இருப்பதையும் அது உணர்த்தியது.

எனது சிவந்த கண்களும், கலைந்த கோலமும் எதையும் காட்டிக் கொடுத்தவிடக் கூடாதென்பதில் கவனமாக இருந்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. அங்கிருந்த கூட்டத்தின் மேல் என் கண்களை ஓட்டினேன். இதுவே எனக்கு கடைசியாக கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருக்கலாம். எனது கணக்குப் படி எல்லாம் தவறாமல் நடக்கனும்.

எனது கால் சராயின் பையில் புடைப்பு வெளிப்படையாக தெரிந்தது. எனது கையை பையில் நுழைத்து துப்பாக்கியை கைகளால் வாஞ்சையுடன் தடவினேன். நேராக சென்று அவனது நெஞ்சில் எல்லா தோட்டாக்களையும் காலியாக்க கைகள் துடித்தது. எனது கைகளை வெளியெடுத்துக் கொண்டேன். காவலர்கள் யாரும் சந்தேகப்படும் படியாக நடந்து கொள்ளக் கூடாது. தவறான நேரத்தில் செய்த செயல் எப்பேர்பட்டவனையும் கடைசியில் சிறையில் கொண்டு நிறுத்தியதை நானே கண்டிருக்கிறேன்.

நேரம் 17.55. அவனெங்கே? அவன் இங்குதான் எங்கோ இருக்க வேண்டும். அப்பொழுது தற்செயலாக நினைவிற்கு வந்தது. அவன் எப்பொழுதுமே முதல் வகுப்பிலேயே பயணம் செய்வான். கூட்டத்தில நீந்திக் கொண்டு சென்று பயணிகள் பட்டியலைக் கண்டேன். அதில் அவன் பெ...ய்ய..ர்ர்........ஆங்.. இதோ! சிக்கட்டான். தீபக் ஜெயின் 48 இருக்கை எண்.57. இருக்கை பெட்டியின் நடுவில் இருக்கிறது. உள்ளே இடித்துக் கொண்டு சென்றேன். அங்கே அவன் குனிந்து பெட்டியில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டி, "“தீபக் இது உனக்குதான்”". அவன் திரும்பினான். என்னை திடீரென்று பார்த்ததால் ஒரு நொடி திகைத்தான். திகைப்பை கலைத்துவிட்டு உற்றுப் பார்த்தான்.

"“நீ அஜய் தான?”" , கழற்றிய கண்ணாடியால் என்னை சுட்டியவாறே.

"ஆமா”"

எனது கையில் இருந்து வெடுக்கென துப்பாகியை நான் எதிர்பாராத சமயத்தில் பிடுங்கினான். இப்படி ஒரு வேகத்தை நான் அவனிடம் எதிர்பார்க்கவில்லை.
துப்பாக்கியை புரட்டிப் பார்த்த அவன், "”சொல்லு?”"

முச்சைக் கொஞ்சம் இழுத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

"“இது ஒரு சாதாரண சுழல் துப்பாக்கிதான்(ரிவால்வர்). எந்த விசேஷ பாதுகாப்புககும் இல்லை. ஆறு தோட்டாக்கள். மறுபடி நிரப்ப, பழக்கமில்லாத கைகளுக்கு, நேரம் பிடிக்கும். சுட எளிது, ஆனால் துல்லியம் இருக்காது. சிறிது தூரத்திற்கு மட்டுமே ஒத்து வரும். சைலன்சர் பொருத்த இயலாது. கண்டிப்பாக உங்கள் தரத்தவற்கு ஏற்றது அல்ல”."

“"இது எனக்கில்ல. நம்ம பசங்களுக்கு தான்”."

“"அப்போ.......என்ன சொல்றீங்க?”"

"எடுத்துக்குறேன். விலை என்ன?”"

“"ஏற்கனவே சொன்னதுதான். குறைக்க முடியாது. ஏற்கனவே குறைச்சு கொடுத்திருக்கேன்”."

“"இந்த செக்கை எடுத்துக்கோ”."

"செக்கை எடுத்துக் கொண்டு வெளி செல்லும் முன் தயங்கியதைப் பார்த்து,”என்ன ஆச்சு?”"

“"இல்ல......... செக்கா குடுத்திருக்கீங்களேன்னு பாத்தேன்”."

“"உஷாரான் ஆளுய்யா நீ"”, எனக் கூறிக்கொண்டே “பணத்தை எடுத்துக் கொடுத்தான்”.

அதன் பிறகும் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் கேட்டு விடுவது என்று, “"எங்க அப்பா வெங்கடேஷை தெரியுமா உங்களுக்கு?”", எனக் கேட்டேவிட்டேன்.

“"வெங்கடேஷ்........ம்ம்ம......யாரு?”"

"“உங்க சக்கரை ஆலையில்........”"

“"போன வருஷம் சக்கரை கழிவுகளுக்குள் இறந்துகிடந்தது, உன் அப்பாவா?”"

"“ம்”"

"எனக்கும் ரொம்ப வருத்தம்தான். உனக்கு ஏதாவது காவல் துறையால் தொல்லையா? கேஸ் இன்னும் முடியலைல? எல்லா உதவியும் பண்றேன். என்னவானாலும் தயங்காமல் கேள்”."

“"சரி. போகும் நேரம் வந்துவிட்டது."

வெளியே வந்தப் பிறகும் என் மனத்தில் சூடு அடங்கவில்லை. கைகளும் உதடுகளும் துடித்தன. என்ன அப்பா சாவுக்கு காரணம் அவன் தான் என தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை என்னை தின்றுக் கொண்டிருந்தது. என்ன செய்வது? அவன் அரசியல் செல்வாக்கும் பணமும் அப்படி. அவனை எதிர்த்து ஒரு வழக்கு பதிவு செய்தால் கூட நிற்காது. இதில் தண்டனைக்கு எங்கே போவது. எனக்கு வேறு வழி இல்லை. இது இப்படித்தான் முடிய வேண்டுமென்று இருக்கிறது.

உள்ளே தீபக் தனது இருக்கையின் அடியில் திடீரென்று ஒரு வெள்ளை பொட்டலம் இருப்பதைக் கண்டு, அதை எடுத்துக் கையால் எடை பார்த்து என்னவென்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தான்.

நேரம் 18.00. நான் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். அதோ, கண்டுபிடித்துவிட்டேன். நேராக உள்ளே சென்று கதவை நன்றாக அடைத்துக் கொண்டேன். எண்ணை அழுத்தி காத்திருந்தேன். “"ஹலோ, காவல்துறை கட்டுப்பாட்டு அறையா?.......... ஒரு தகவல் சொல்லனும் ........ஆமா........... நான் யாரென்பது முக்கியமல்ல.........எப்படி கிடைச்சதுன்னு சொல்ல முடியாது......... ஒரு பாம் இருக்கு........ ஆமா மும்பை எக்ஸ்பிரஸ்ல ஒரு......”"

கிழவனும் நமீதாவும்........

Filed under , by Prabhu on 6/20/2009 06:02:00 PM

0

Old men, Rocking chair

It rocks
In the cottage
To and fro
Like a boat roped to the abandoned shore
Gentle and silent
A wavering mind
Dithering like pendulum
Over two different ideas

A time warper to an old man
Who becomes reminiscent of his past

Laid near a fire place
He rocks on that chair
With a hot coffee cupped in his hands
Sipping slowly
Nostalgic of callous and fertile past

Laid in a corner
In darkness
Another old man sits,
Numb with cold, with a nippy coffee
Untouched over the table nearby
Reminiscences of a blundered past

As a clever man learns from his past,
An intelligent man learns from others’

- B.பிரபுகுமார்

இது என்னோட கன்னி முயற்சி, ஒரு கவிதை எழுதனும்னு. இது கொடைக்கானலில் ஒரு எழுத்தாளர் பட்டறைக்கு சென்ற பொழுது எழுதியது. சூரத்திலிருந்து ஒரு பேராசிரியர், கவிதையாளர் ஈ.வி.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவர் மேற்பார்வையில் எழுதியது இது. நான் அங்கே சென்று அழகான பெண்களை ரசித்ததும், ஒரு அருமையான கதை(நீயே சொல்லிக்க கூடாது) எழுதியதும் இன்னொரு பதிவில் சொல்றேன்.

நமீதாவ ஏன் இழுத்தேன்னா, கிழவன் தன் பழச நினைச்சு பாக்குறான். நல்லா இருந்தா நமீதாவ பாக்கலாம். நாசமா போயிருந்தான்னா ஒட்டைக் குடிசை மூலையில சரோஜா தேவி கனவோட அவ்ளோதான்! இதத்தான் தலைப்பு உணர்த்துது.

இலங்கை பிரச்சனை...வேறு பார்வையில...

Filed under , by Prabhu on 6/20/2009 06:02:00 PM

0

இந்தியா வெளியுறவு கொள்கை பொதுவா எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா? இங்க எல்லாரும் என்ன விட பெரிய ஆட்கள்(வயசுல) தான். அதானால உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் என்னன்னு.அதாவது இந்தியா மத்த நாடோட எப்படி பழகுறாங்க, யாரோட வாய்க்கா தகறாரு, எவன் வாங்க பழகலாம்னு சொல்றான், அவன கூப்பிட்டு கிடா வெட்டலாமானெல்லாம் முடிவெடுக்குறது நம்ம வெளியுறவுக் கொள்கைகள்தான்.


சரி இது வரைக்கும் எந்த மாதிரியான கொள்கை நம்மளோடதா இருந்தது. நேரு பத்தி சொல்லும் போது சின்ன வயசு சிவிக்ஸ்ல சொல்லிருப்பாங்களே! அதான். எவன் வம்புதும்புக்கும் போக கூடாது. எல்லாருக்கும் ஒரே மரியாத குடுக்கணும். ரெண்டு பேத்துக்கு சண்டன்னு வந்தா கூட போய் குத்துடா, வெட்டுடான்னு சவுண்ட கொடுக்காம கூட்டத்துல நின்னு விசில் அடிக்கிறத விட்டுட்டு, அடுத்தவனுக்கு நாட்டாம பண்ணாம, நான் யாரு பக்கமும் இல்ல, ஆனா தம்பி நீ செய்யுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல அப்படின்னு தப்பு பண்றவன்ட சொல்றதுதான் நம்ம வெளியுறவு கொள்கை.

புரியுதோன்னோ? இந்திய வெளியுறவுக் கொள்கையோட அச்சாரமே இந்தியாவோட இறையாண்மைய பாதிக்க கூடாதுங்குறதுதான்.ஆமா, டிவில கூட பாத்திருப்பீங்க இறையாண்மைனு அடிக்கடி சொல்வாங்க. அது என்ன ஆண்மைன்னு கேட்டீங்கன்னா, உங்கள கனவுல காந்தி குச்சியோட துரத்துவாரு. இறையாண்மைனா இந்தியாவுக்குன்னு ஒரு இது இருக்கும்ல. இதுன்னா எதுனு கேக்காதீங்க. இதுன்னா இதுதான், இது! ஒரு கெத்துன்னு வச்சுக்கலாமா? லாம்னு நினைக்கிறேன். அது டேமேஜ் ஆகிற கூடாதுங்கிறதுதான் நம்ம கொள்கை(இத இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கடா சூனா.பானா... இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோ?). Non-alignment, disarmament என பல நல்ல பாலிசிகள கொண்டது Lic இல்லைங்க, இந்தியாவின் வெளியுறவு பாலிசி.

இப்ப ஒரு கேள்வி வரும், இதெல்லாம் இப்ப ஏன் பேசுறீங்கோன்னு கேக்குறீங்களா. இலங்கை பிரச்சனைதான். எல்லாருமே அந்த பிரச்சனய சாக்கடைய நோண்டுற மாதிரி நோண்டிக்கிட்டிருக்காங்க நீயுமா? என்னங்க செய்யுறது, இவனுங்க தொல்லைதாங்க முடியல, அதான். அவங்க தமிழனுங்கதான், அதனால நாம அவங்களுக்காக் குரல் கொடுத்தே ஆகணும். ஆனா அது என்னவோ நம்ம நாட்டு பிரச்சனை மாதிரியும் நம்ம கைல தான் முடிவு இருக்கிற மாதிரியும் பேசுறது, அதக் காண்பிச்சு ஓட்டு கேக்க முயற்சி பண்ணும்போதும் கடுப்பா வருது. உன் பிரச்சனையவே தீர்க்க முடியல உன்னால, நீ அடுத்த நாட்டுல இருக்குற பிரச்சனைய தீர்க்க போறயா? உன்னால பக்கத்து மாநிலத்துல இருந்து தண்ணி வாங்க முடியல, பக்கத்து நாட்டுல இருந்து நீதி வாங்கப் போறயா, பலே!

ஏதோ அது நம்ம தேசிய பிரச்சனை மாதிரி அவங்க மத்தியில ஆட்சிக்கு வந்தா எல்லா தீந்திரும்னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. இவ்ளோ நாளா என்ன புடுங்கினானுங்க? இனியும் என்ன செஞ்சிர போறாங்க? இங்கயும் பதிவுலகத்தில சில பேரு இந்த தமிழீனத் தலைவர் என்னவோ வேரோட புடுங்கிட்டதா சொல்லிக்கிடிருக்காங்க. எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல.அதுவும் அவங்க ரத்தம் கொதிக்க கொதிக்க உருப்படியில்லாம பேசுறதுக்கு, டீயாவது கொதிச்சா குடிக்கலாம். கேட்டால் தமிழனாம், தமிழ் ரத்தம் ஓடுதாம் அவன் உடம்புல. எங்களுக்கு என்ன இங்கிலீஷ் ரத்தமா ஓடுது? எல்லாம் சிகப்பு கலர்தான். ஜாதி அரசியல பண்றவனெல்லாம் தமிழ் இனத்தப் பத்தி பேசுறான். இங்க இருக்கிற தமிழன முதல்ல முன்னேத்துற வழிய காணம். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் எறி வைகுந்தம் போறானாம்.

இதுல இந்த வைகோ வேற பிரபாகரன் இறந்ததா செய்தி வந்தா, ரத்த ஆறு ஓடுமாம். என்ன ஒரு provocative பேச்சு. ஏன் இது. எந்த உத்தமனுக்காக இந்த போராட்டம்? தமிழர்களோட ஒரே பிரதிநிதி விடுதலை புலிகள்தான்னு சொல்றதுக்காக, தன்னை தவிர மற்ற நான்கைந்து தமிழர்க்கான அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அழிச்ச அந்த புண்ணிய ஆத்மாவுக்காகவா? ராம்தாஸ் ஜாதி அரசியல் பண்ணும் போது வராத தமிழர் நலன் தேர்தல் வரும் போது கண் முன்னாடி ஆடுது. மற்ற கட்சிகளும் சும்மா சொல்றதுக்கு இல்ல. அவங்களும் சினாரியோ புரிஞ்சிக்கிட்டு நல்லா தட்டுறாங்க..சங்...சங்...னு...

இந்த உலகத்துல எத்தனையோ போர்கள் நடக்குது,அதையும் இத மாதிரிதான பாக்கனும். பக்கத்துல ஒரே எல்லைய பகிர்ந்துக்குற மியான்மர்ல மிலிட்டரி ஆட்சி. அமைதிக்கான நோபல் வாங்கின சூ கி, வீடுக் காவல்ல இருக்காங்க வருஷக் கணக்கா. அதுக்கு யாராவது குரல் கொடுத்தமா? அதுல ஓட்டு இல்லையே, அப்புறம் எப்படி குரல் கொடுப்பானுங்க? இந்தியாவோட இறையாண்மைய கெடுக்குற மாதிரி இவனுங்க பேசுவானுங்க, நாம் வேடிக்கை பாக்கனும்? ஆயுதம் ஏந்துவாராம் வைகோ. இந்த நாட்டுல இருந்துக்கிட்டு என்ன சொன்னாலும் அது இந்த நாட்டத்தான் பிரதிபலிக்கும்ங்கிற நிலைமைல இப்படி பேசுனா?

அப்ப இலங்கை தமிழர்கள விட்டுற சொல்றயான்னா, அப்படி இல்லை. ஆனா, உங்க பார்வைய மாத்திக்குங்க. இந்த அரசிய வாதிங்க சொல்ற வழியில யோசிக்காதிங்க. நீங்களா யோசிங்க. ரொம்ப அரசிய்ல தேவையில்ல, லாஜிக்கலா சிந்திச்சாலே போதும்.

இப்படியெல்லாம் பேசும்போது நான் இலங்கை பிரச்சனைல ஆதரவு தரலன்னு நினைச்சிராதிங்க. நான் வேறு பார்வையில சில விஷயங்கள பேச விரும்புறேன், அவ்வளவே!

ரூட்டு....ஐட்டம்....அவளா.....அவனா?

Filed under , by Prabhu on 6/20/2009 05:56:00 PM

0


பெண்கள தெய்வம் மாதிரி வணங்க சொல்வாங்க. அதெல்லாம் செய்ய சொல்லல, எனக்கு அதில நம்பிக்கையும் இல்ல. ஆனா குறைந்த படசம் மனிதனுக்கு நார்மலா கொடுக்குற மரியாதைய கொடுக்கனும்னு நினைக்குறேன். பெரிய சலுகைகள் வேணாம், ஆனால் நம்மல பாக்குறா மாதிரியே அவங்களயும் பாக்கலாம்ங்கறது, என் எண்ணம்.

ஃபிகர், அட்டு என்கிற பிரயோகங்கள கூட பொறுத்துக்கலாம். ஆனா இந்த ரூட்டு, ஐட்டம், ஜாரி மாதிரி வார்த்தைகள மட்டும் சரின்னு ஏத்துக்க முடியல. ஏண்டா அவள் அப்படி சொல்றன்னு கேட்டுப் பாருங்க. அவ எப்படி பாக்குறான்னு பாத்துருக்கயா? ஓவரா சைட் அடிப்பா. பேசிப் பாரு வழியுவா. எவன்னாலும் போகலாம், அப்படின்னு ஏகப் பட்ட விமர்சனங்கள். ஆனா,இந்த நாய் சாயந்திரம் ஆனா பஸ்ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டா சுத்துறது எனக்குதான் தெரியும்.

அவன் கேஷுவலா இருக்கும் போது, லாப்ல வச்சு சொல்வேன்,"ஒரு பொண்ன ரூட்டுன்னு சொல்றதுல எனக்கு ஒப்புதல் இல்ல. ஒருத்தி சைட் அடிக்கிறா, அட, அவனுக சொல்ற மாதிரி ரூட்டு விடுறான்னே வச்சுக்குவமே. அப்படி செஞ்சா அவ ரூட்டு, ஜாரி, தே... போன்ற பெயர்கள பெறுகிறாள். அப்ப இதெல்லாம் செய்ற ஆம்பள..... அவனுக்கு என்ன சொல்லுது, இந்த சமூகம். அந்த பையன் சரியில்ல, கல்யாணம் பண்ணி வச்சா சரி ஆயிடும்பா. அப்ப அவன் ரூட்டு விட்டாலோ, சிகனல் கொடுத்தா ரூட்டு இல்லையா? அவனுக்கு வயசு கோளாறு,. நடத்தை சரியில்ல, ரூட்டு. அட்றா சக்க! ஏன் அப்படி? இவன் ஆணா பிறந்ததாலயா? ஒருத்திய இம்சிக்கிறது ஆணோட பிறப்புரிமை. ஆனா, ஒரு பையன ஒரு பொண்ணு அப்ரோச் பண்ணாலே அவ ரூட்டு. எப்படி உருவாது இந்த மாதிரி சட்டங்கள். எந்த அம்பேத்கார் இதுக்கு அரசியலமைப்புகளயும் அதன் சட்டப் பிரிவுகளையும் உண்டாக்கினாரோ? சரி இப்ப ஒரு பையனந்த மாதிரி ரொம்ப அநாகரிகமா பண்ணினா அவன என்ன சொல்றோம், ரூட்டுனா? இல்ல தே...? ம்ஹூம்.... அப்ப கூட அவன திட்டும் போது அவனுக்குன்னு ஒரு வார்தை இல்ல... மிஞ்சி போனா ஒரு தே.மகன் சொல்ற மேல் ஷாவனிஸத்த என்னன்னு சொல்றது..... அதுவும் அம்மாவத் தான் திட்டுது. இந்த தறுதலய பண்ணதுக்கு அவ என்ன செய்வா பாவம்? இவன் உத்தமன்னு அவ நினைச்சிட்டிருப்பா?" இதெல்லாம் சொல்லும்போது அமைதியா கேட்டுட்டு தலையாட்டுவான், ஏதோ இன்னொருத்தனுக்கு சொல்றா மாதிரி. பொதுவா பேசுறேன்னு அவன் நினைச்சிட்டிருக்கான். ஆனா நானோ அவனத்தான் சைடு வாக்கா குத்திட்டிருப்பேன் (நேரா சொல்லி அடிச்சு புட்டான்னா. நானும் ரவுடிதான். பத்து பேர அடிக்கறவன் ரவிடி இல்ல. ப்த்து பேர்ட்ட வாங்குவாறந்தான் ரவுடி.)

அப்புறம் இன்னொரு க்ரூப் இருக்கு, தன்னோட லீலைகள சொல்ல. "பஸ்ல போயிட்டிருந்தேன் டா, அப்ப ஒரு செம ஃபிகர் (நாம பாக்கலைல, என்ன வேணாலும் சொல்வானுக). சில சமயம் சூப்பர் இல்லன்னாலும் நல்ல ஃபிகர்தான்னு சொல்வானுக ( நாம நம்பனுமாம், அதான் இப்படி உண்மைய ஒத்துக்குற மாதிரி ஆக்ட்) அவள பாத்தேன். அவளும் சிக்னல் விட்டா. லைட்டா சிரிச்சா. அதுக்குள்ள அவ ஸ்டாப் வந்திருச்சு. இல்லன்னா அவ நம்பர் வாங்கிருப்பேன், ஏதாவது பண்ணிருப்பேன்னு சொல்வானுக. அது எப்படிடா உனக்கு தெரியும்னு ஒரு இளிச்சவாயன்(அது யாருன்னு தெரிஞ்சா வெளிய சொல்லாதீங்க. ரகசியங்கள் காக்கப் படட்டும்.) கேட்டா, நக்கலா சிரிச்சுட்டு அதெல்லாம் பாத்தாலே தெரியும், இவ ஜாரின்னு. இவன் பெரிய ஜேம்ஸ் பாண்ட் பாத்தவுட்னே கண்டுபிடிக்கிறாராம், போடா!(இதுக்கெல்லாம் ஜேம்ஸ் தாங்க வரணும். ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இல்லன்னு கேக்காதீங்க). இவனப் பத்தின் திட்டி, இப்படி பாக்குற முழியத் தோண்டனும்னு என்கிட்ட சொன்ன பொண்ணு இருக்கு. அது வேற கதை.


ஒருத்திய இவன் ஃபாலோ பண்ணா லவ். அவ பண்ணா அவள ஏதோ ஹூக்கர் ரேஞ்சுக்கு பேசுறாய்ங்கப்பா! என்ன கொடும சார் இது. சரி, அத விடுங்க. இவன் சொல்ற மாதிரி பஸ்ஸுக்கே வருவோம். அதுனால தான் இந்த கொடும நிறைய நடக்குது. ஒரு பொண்ண பாத்து பிடிச்சு போகலாம். அதனால அவள அடிக்கடி பாக்கலாம். சிரிக்கலாம். சிக்னல் பண்ணலாம், அவ சம்மதம் தெரிஞ்சா. அத விட்டுட்டு அவள தொந்தரவு ஏன் பண்ணனும். சரி அவ சம்மதம் தெரிஞ்சா ஏன் தூத்தனும் அவள. இல்லன்னா விடு. ஆமான்னா, அந்தப் பெண்ணோட கம்பெனிய அந்த ட்ராவல்ல அனுபவி. அப்புறம் அத அங்கயே விட்டுட்டு போய்டு. அத விட்டுட்டு அவள ஏன் ரூட்டு, ஐட்டம்ங்கிற? அவ உனக்கு ஒத்துழைக்கனுங்கறயா, வேணாம்ன்கிறயா? நான் மேற்படி சொன்னதெல்லாம் நட்புறவில் மட்டுமே. அத செக்ஷுவலா நினைக்க கூடாது. உன் சிரிப்புக்கு பதில் தந்தவ ரூட்டுன்னா, அவள அழைச்ச நீ ஹூக்கரா? இப்படியே போனா சென்சார்ல கட் ஆயிடும் போலயே, என் கட்டுரை.

பொதுவாவே எல்லா ஆண்களுக்குமே தன் வீட்டு பொண்ணுகளெல்லாம் கண்ணகிக்குகொள்ளுப் பேத்தியாவும், மத்தவளுக தனக்கு மறுப்பு சொல்லாதவளா இருக்கனும்ன்கிற எண்ணம் கொஞ்சம் இருக்கு. நான் ரெண்டுமே வேணாம்னு நினைக்கிறேன். எல்லாரையும் ஒண்ணா பாருங்க. ஒரு பையனப் பாக்கிற மாதிரியே பாருங்க. நான் சொல்றது சைட் அடிக்காத, லவ் பண்ணாதன்னு இல்ல. நான் சொல்ல நினைக்கிறது அவளுக்கு ஒரு சில தனி விதிகள வச்சு அந்த வட்டத்துக்குள்ள நிக்க வச்சு பாக்காத. உனக்கு அவ என்ன கொடுக்கனும்னு நினைக்கிற? மரியாதை. அத அவளுக்கு கொடுத்து பாரு. தானா உனக்கும் வரும், அவகிட்ட இருந்து. உன்னைப் போல பிறரையும் நினை.

இப்படியெல்லாம் பேசுறானே, பெண்ணியத்த சேந்தவனோன்னு நினைக்கலாம். ஆனா, மூணாவது ருஉட்டு பார்வையில நினைக்கிறதத் தான் சொல்றேன். அவங்க பண்ற தொல்லையும் கொஞ்சம் இல்ல. அதப் பத்தி இன்னொரு தடவ எழுதுறேன்.

இந்த படம் சும்மா தமாஷுக்கு

ஹேய், இருந்தாக்கா அள்ளி கொடு, இல்லேன்னா சொல்லி கொடு

Filed under , by Prabhu on 6/17/2009 09:29:00 PM

1

என்ன தலைப்ப பாத்ததுமே புரிஞ்சிருக்குமே.... எதப் பத்தின்னு தெரிஞ்சிருக்கும். ஹேய் எவன்டா அது சிரிக்கிறது...மவனே டாராயிருவ... அண்ணன் எவ்ளோ நல்லவருன்னு தெரியுமா.... கொடை வள்ளல்கள் ஏழு இல்லடா...எட்டு....


ஒ.கே. கட்...
பப்பு, நீங்க எவ்ளோ பெரிய பிரபலம்! ஏன் திடீர்னு ரித்தீஷோட பிரசார ஷூட்டுக்கு வர்றீங்க?

அதுக்கு காரணம் அவரோட கொடைத்தன்மையும்(வெரி இம்பார்டண்ட்!), தமிழ்மக்கள் மேல் அவருக்கு இருக்குற அக்கறையும் தான்(அதெல்லாம் அப்புறம்தான்). அவரு செஞ்ச விஷயங்கலெல்லாம் கேட்டீங்கன்னா அசந்து போய்டுவீங்க! அவரு படம் போடுற அன்னைக்கு எவ்ளோ பிரியாணி கடைகள் பிழைக்குது தெரியுமா? வாழ்நாளில தியேட்டரே பாக்காத பிச்சைக்காரங்களுக்கு கூட தியேட்டர பாக்க வச்ச ஏழைகளின் பங்காளன். ரஜினியோட குசேலன் ரிலீஸ் பண்ணி நொடிச்சவனுங்க கூட இருக்காங்க, ஆனா எங்க அண்ணன நம்பிக் கெட்டவன் எவனும் கிடையாது.

உங்களுக்கு சொன்னாப் புரியாது, எங்க அண்ணன் கிட்ட வந்து ஏதாவது உதவி கேட்டு பாருங்க. என்ன உதவி? எதுனாலும். ஏரியா ஃபங்ஷனா ரூ.5000, கல்யாணமா ரூ.50000, அட இவ்ளோ என்னங்க, வளைகாப்புக்கு கூட ரூ15000 குடுக்குறாருங்க! அட இதுக்கெல்லாம் அவரு பிரதிபலன் எதிர்பார்க்கிறதில்ல. அவருக்கு கட் அவுட் வச்சா மட்டும் போதும். அட், அதையும் அவரே சொந்த செலவுலயே வச்சிருவாருங்க. எந்த அரசியல்வாதிங்க இதெல்லாம் பண்ணுவா? அட, நீங்க ஒரு பிச்சக்கார.......(அட, முடிக்க விடுங்கப்பா!)னுக்கு ஒரு ரூபா போடுறதுக்கு முன்னாடி அமெரிக்காவோட அணு ஆயுத ஒப்பந்தம் பண்ற மாதிரி ரியாக்ஷன் குடுப்பீங்க. ஆனா, எங்க அண்ணன் யோசிக்காம செய்வாரு.ஆனா ஃபோட்டோ எடுத்துக்குவாரு(வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!).
அவரு படத்துக்கு எல்லாத்துக்கும் டிக்கட். பில் கேட்ஸே படம் எடுத்தாலும், கொள்ளையா காசு வச்சி வித்துருவான். ஆனா, எங்க அண்ணனோ பணம் குறிக்கோளா இல்லாம, படத்துக்கு செலவு பண்றதோட நிக்காம எல்லாத்துக்கும் இலவசமா காட்டி, தமிழ் மக்களுக்கும் தியேட்டர் ஓனர்களூக்குமான செலவுகளையும் தாங்கிக்கிற சுமைதாங்கி!

முதல்முதல்ல இவர பத்தி எப்படி தெரிய வந்தது?
காலேஜ்ல கலாட்டவா ஆயி ஸ்ட்ரைக் ஆயிடுச்சு. அதனால நிறைய லீவு கிடைச்சது. அதனால என் நண்பர்கள் சிலர் ஊர் சுத்தனும்னு முடிவு பண்ணாங்க. கன்யாகுமரில இருந்து சென்னை வரை சைக்கிள்ல சுற்றுப் பயணம். கேட்டா உலக அமைதி வேண்டியாம். அடப் பாவி, உன்னாலதானடா காலேஜ்ல சண்டை ஆகி லீவு விட்டுருக்காங்க! இதோட முடிவுல அமைச்சர் ஸ்டாலின பாத்துட்டு வர்றதா ஒரு முடிவு. அந்த இடத்துல வந்தாரு நம்ம தலைவர் ரித்தீஸ். அப்போ அவரோட ஷூ லேஸ் எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதியால அவுந்திருச்சு! கட்ட முடியாம கஷ்டப் பட்டிருக்காரு தலைவர். ஷூ லேஸ் கட்டத் தெரியாம இல்லீங்க. கடவுளே வந்து நின்னாலும் குனிஞ்சு நிக்க மாட்டாரு. நீங்க கட்டத் த்ரியாதுன்னு நினைச்சிட்டீங்களா?ச்சே....ச்சே.... அங்க காத்திருந்த என் நண்பன் ஹெல்ப் பண்ணிருக்கான். உடனே பாக்கெட்ல இருந்து 500ரூ எடுத்து கொடுத்தாரே எங்க தானைய தலைவர்! இப்போ சொல்லுங்க எங்க தலைய அடிச்சுக்க ஆளிருக்கா?

இவ்வளவு பண்ணினவருக்கு ஒரு அங்கீகாரம் வேணாமா? அதத்தான் சொல்ல வரேன். இப்போ அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கிருக்காங்க. இப்பவும் எதுக்காக தேர்தல்ல நிக்குறாருன்னு நினைக்குறீங்க. மக்களுக்காகதான். எத்தன அரசியல்வாதிய பாத்துருக்கீங்க. எல்லாரும் காச அடிப்பாங்க. ஆனா, எங்க கலியக கர்ணன் தனக்கு மிஞ்சியது போக தானமும் பண்றார். அந்த நல்ல மனசு யாருக்கு வரும்?

"ஹேய், இருந்தாக்கா அள்ளி கொடு, இல்லேன்னா சொல்லி கொடு; நம்ம வழி நல்ல வழிடா!"

டிஸ்கி: எனக்கு ஒரு கவர அண்ணன் அனுப்புவாருன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி2: ஓட்டு போடாதவர்களுக்கு அண்ணன் சார்பில் ஆட்டோ அனுப்பி வைக்கப்படும்.

ஆத்தா....எனக்கு வேல கிடைச்சிருச்சு

Filed under , by Prabhu on 6/17/2009 09:26:00 PM

0

பிடுங்கறதுக்கு ஆணி இல்லன்னு நான் பதிவிட்டிருந்தேன் பாத்திருக்கீங்களா? அதுல ரிசஷனால வேல ஒருத்தனுக்கு இல்லங்கறதப் பத்தி சொல்லியிருந்தேன். அதுலயும் சும்மா இல்லாம அமிதாப், பாக்யராஜ் இவங்கள எல்லாம் இழுத்து பேசிருப்பேன். அப்போ இதெல்லாம் ஏன் இவன் இவ்ளோ அக்கறையா யாரும் யோசிச்சிருக்க மாட்டீங்க! எனக்கு புடிச்ச ஸ்டையிலில சொல்லனும்னா,

'உனக்கேன் அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை?"
"நானே பாதிக்கப் பட்டேன் நேரடியாக பாதிக்கப் பட்டேன்"
"சுய நலம் என்பீர்கள். ஆனால் இந்த சுயநலத்திலும் ஒரு பொது நலம் இருக்கத்தான் செய்கிறது"(அதானப் பார்த்தேன்)

இப்படி பேசிக்கிட்டே போகலாம். ஆனா, சொல்ல வந்த மேடர் என்னன்னு சொல்லனும்ல. எனக்கு வேல கிடைச்சத விட்டுட்டு வேற எதப் பத்தியோ பேசிக்கிட்டிருக்கேன். என்ன்ன்னனனது... உனக்கு வேல கிடைச்சதா? உனக்கெல்லாம் யாருடா வேல குடுத்தாருன்னல்லாம் கேட்டு, ஏற்கனவே ஏமாந்த அந்த சோணகிரிய மேற்கொண்டு நோகடிக்காதிங்க.பாவம்ல, என் படியளக்குற எசமான். ஒய் பர்னிங் ஸ்மெல்யா? ஏற்கனவே பல பேர் வயித்தெரிச்சல கிளப்பியாச்சு போல. இன்னும் கேளுங்க எனக்கும் எங்க அண்ணன் போல பெங்களூர்ல வேல கிடைச்சிருக்கு. இப்போ புரிஞ்சிருக்குமே! ஆமாங்க, ஐ.டி. ஜாப்தான். ஊருக்குள்ள பல பேருக்கு வேல இல்லாதப்போ உனக்கு எப்படி வேல கிடைச்சதுன்னு கேக்குறீங்களா? கேம்பஸ் இன்டர்வியு.அது பெரிய ஸ்டோரிங்க"காமெடி ச்டோரியா" ஆமாங்க, ஊரே சிரிக்கும். இங்க பாருங்க, என்ன கடுப்புனாலும் அடக்கிக்கோங்க, புகை ஜாஸ்தி ஆயிட்டு இருக்கு. யப்பா, பு(ப)கை தாங்கல, ஃபயர் இன்ஜினுக்கு போன் போடுங்கப்பா! அவங்க வர வரைக்கும் கீழ இருக்குற 'வேல' சோக்கெல்லாம் பாத்து ரசிங்க!

cartoon archive at funnytimes.com


எப்படிங்க சோக்கெல்லாம்? நல்லாருந்ததா? ஆமா, உங்கட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். நீங்க அம்புட்டு நல்லவரா? சொல்றதெல்லாம் நம்பிருக்கீங்க! ஏங்க இந்த ரிசஷன்ல ஒருத்தன் வேல கிடைச்சிருக்குன்னு சொன்னா நம்பிருவீங்களா? அதுவும் ஐ.டில கேம்பஸ் இண்டர்வியுவிலன்னு. ஹா.. ஹா... அய்யோ...அய்யோஒ....ஹோ...ஹோ...
(போதும்டா அடக்கு!)...எப்டிங்க இதெல்லாம்? ஏப்ரல் ஒண்ணும் அதுவும வந்து காமெடி பண்ணிட்டு இருக்கீங்க! மேனேஜ்மென்ட் படிச்சவனுக்கே வேல இல்லதப்ப, அண்டர் கிராஜுவேட்டுக்கு எவன் வேல குடுக்குறான்!

கேக்குறவன் கேனைப் பயனா இருந்தா எலி ஏரோப்ளேன் ஓட்டும்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க!

திரைஅரங்குகளும்... நமீதாவும்

Filed under , , by Prabhu on 6/17/2009 09:11:00 PM

0

இந்தப் பதிவுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்பந்தம்? கடைசில! ஏய்...ஏய்...ஏய் மிஸ்டர், கடைசிக்கு போகாம முதல இருந்து படிச்சிட்டு போங்க!

நான் பார்த்த முதல் படம் என்ன என யோசிக்கும் போது என்னவென ஞாபகம் வர மாட்டேங்குது. ஹாலிவுட்னு பாத்தா Jurassic parkஆ இருக்கலாம்னு தோணுது. அப்போ மாப்பிள்ளை விநாயகர்ல பாத்தேன். ரொம்ப காலமா ஆங்கில மற்றும் ஹிந்தி படங்கள மட்டுமே போட்டுட்டு வந்ததால தியேட்டர் நல்லா இருக்கும். இப்போ தமிழ் போட்ட பிறகு அங்க தியேட்டர் சரியில்ல. அதுவும் ஏகனுக்கு பிறகு அந்த தியேட்டர் இருக்கும் நிலைமை பரிதாபத்திற்குரியது( 50 ரூ. டிக்கட் சீட்ல உக்காந்தா தரை டிக்கட் மாதிரி இருக்கு). ஒரு தியேட்டரோட நிலைமைய வச்சே என்ன படம் ஓடிருக்கு, எப்படி ஓடிருக்கு என எல்லாத்தையும் சொல்ல முடியும்.

படத்துக்கு முதல் காட்சி போற ஆள் இல்ல நான். மதுரையில் இருக்கிற எல்லா மாணவர்கள் போலயும் நானும் 9th ல இருந்தே நல்லா படத்துக்குப் போவேன், மாசம் ஒண்ணாவது. இப்போ அப்படி இல்ல. நல்லா இருக்குன்னு தெரிஞ்சா தான். சும்மா படம் பாக்குறது என் பழக்கம் இல்ல. பாத்த படத்த சில நாட்களாவது அசை போட்டுட்டிருக்கறது என் வழக்கம் . (மைண்ட்ல நமீதாவ திரும்பத் திரும்ப நிச்சலுடையோட குளத்தில் குதிக்க ....க்கதிகு....குதிக்க....க்கதிகு... குதிக்கவிட்டு வேடிக்கை பாத்துருக்க!) இப்போ கேமரா, திரைக்கதை, இயக்கம் போன்ற சில விஷயங்களையும் கவனிக்க தொடங்கிருக்கேன். எப்பவுமே தியேட்டர் சூழ்நிலையும் நல்லா கவனிப்பேன்.

எந்த எந்த தியேட்டர் எப்படி இருக்குதுன்னு கவனிக்கறது ஒரு காலத்துல என் ஹாபி. தியேட்டரெல்லாம் எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஓட்டுறாங்கனு புரிஞ்சங்களுக்கு தியேட்டர்ல கூட ரசிக்க விஷயங்கள் இருக்கு.
என் சின்ன வயசுல போன தியேட்ர்கள் நினைவிருக்கு.

தங்க ரீகல்- நான் இங்க பாத்த படம், Who am I? நான் பாத்த முதல் ஜாக்கி சான் படம். ஜாக்கி ஃபேன். ஆனா அடுத்து அந்த தியேட்டர்ல படம் பாக்கப் போல. போக முடியல, போயிருந்தாலும் வீட்டுக்கு எவனாவது போட்டு விட்டிருந்தா செருப்படிதான்! ஏன்னா ரொம்ப 'நல்ல' படங்கள் போடுற தியேட்டராயிடுச்சு. அவங்க என்ன பண்ணுவாங்க. நஷ்டமில்லாம ஓடக் கூடிய படம் இதுதான. ஆனா அப்பயும் அவங்க தரம் குறையலயே. எப்பவும் இங்கிலீஷ், ஹிந்தி பிட்டு படம்தான் போடுவாங்க. ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் எவனயாவது ஓட்டணும்னா, அவன் ஏன் நேத்து வரலன்னு கேக்கும் போது ""தங்க ரீகல் கிட்ட சுத்திட்டிருந்தான், சார்"னு கூட்டத்தில இருந்து கத்துவோம். இப்போ தியேட்டர் திரும்ப "வாரணம் ஆயிரம்", "sms"னு நல்லா ஏசியோட டெவலப் ஆயிட்டாலும் அந்த பேரக் கேக்கும் போது இருக்குற கிளுகிளுப்பு போகல. ஒரு காலத்தில எட்வர்ட் டவுன் ஹால்னு(எல்லா டவுன்லயும் கட்டுவாங்க) சொல்லப் படுற பிரிட்டிஷ் காலத்து கட்டிடத்தின் ஒரு பகுதி தான் அது.

சிந்தாமணி - இதுவும் ஒரு அறுபது வருச வரலாறு கொண்ட தியேட்டர் தான். கீழ, பால்கனின்னு வகைப்பாடு கொண்ட பழைய தியேட்டர். இங்க ஒரு வித்தியாசமான அமைப்பு என்னன்னா, பால்கனி கொஞ்சம் கீழ் வரிசைக்கு நேராகவும் நீண்டிருக்கும். அதைத் தாங்க சில தூண்கள் இருக்கும். இங்கதான் பிரச்சனையே. கடைசி நாலு வரிசையில் இருக்கறவனுக்கு சென்சார் கட் பண்ணாம்லே அங்க அங்க விட்டுத்தான் தெரியும். ஹீரோயின் நமீதா மாதிரி இருந்தா பரவாயில்ல! தூண் மறைக்கிற உருவமா அது! அப்படி இப்படின்னு பாத்துரலாம். ஆனா படம் கட் ஆவுமே. என் ஃபிரண்ட் சூர்யா முகத்தயே பாக்காம 'உன்னை நினைத்து' பாத்துட்டு வந்தான். ஆனா அவங்க DTS அடிச்சிக்க முடியாது. இப்போ இந்த தியேட்டர ஒரு ஜவுளி கடைக்கு வித்து மூடியாச்சு.

நியூ சினிமா - இந்த தியேட்டர் நான் சின்ன வயசுல இருந்தப்ப ஒரே ஒரு ரஜினி படம் போனது. அதுவும் பழைய படம். அதையும் புதுப் படம்னு நினைச்சு என் அண்ணனை படுத்தி போனேன். அது பழைய படம்னு பல வருஷங்களுக்கு பின்னாடிதான் தெரியும். அந்த படத்துக்கெல்லாம் போனத அவன் எப்படி தன் காலேஜ் பிரண்டு கிட்டலாம் மறைச்சானோ! இந்த தியேட்டரும் மூடப்பட்டது. நான் அதுக்குப் பக்கத்தில இருக்கற ஒரு இடத்துல ஹிந்தி படிச்சப்போ பாத்தேன் முழுக் காடாய் மாறிடுச்சு. இதே மாதிரி சிட்டி சினிமான்னு ஒண்ணு இருந்துச்சு. அதுவும் இப்போ கார் பார்க்கா ஆயிடுச்சு. இதுமாதிரி பல தியேட்டர்கள் மூடியாச்சு

மாப்பிள்ளை விநாயகர், ப்ரியா காம்ளக்ஸ்னு staantard தியேட்டர்களுக்கும் ஒரு லிஸ்டேயிருக்கு. என்னதான் சொன்னாலும் இன்னும் மதுரை தியேட்டர்களில ஒரு ஸ்டாண்டர்ட் வரல. இப்போ வந்திருக்கிற Relianceன் Big cinemas, புதுப்பிக்கப்பட்ட தங்கரீகல் எல்லாம்தான் தரம் உயர்தலுக்கான வித்து...............அப்படின்னு நினைச்சா இதெல்லாம் காண்பிச்சு விலை உயர்ந்தல்தான் ஹிட்டு(ரைமிங்... ஹி...ஹி..). இப்படி ரேட் கூடுறது, தரம் போன்ற பிரச்சனைகளுக்கு நடுவில தியேட்டர்கள் மூடுறது வேற நிறைய நடந்திருச்சு.

தமிழ்நாட்டுல ஒரு படத்தோட நிலைமைய முடிவு செய்யுறதே மதுரை நிலைமைய வச்சுதான். மதுரையில ஒரு படம் ஓடலைன, அது எங்கயும் உருப்படியா ஒடாது(தல ரித்தீஸ்க்கு மாட்டும் விதி விலக்கு 'நாயகன் சென்னையில 120 நாளுக்கு மேல ஓட்டுனீயளாமே?), இல்லன்னா ஆட்டைக்கே சேத்துக்கப் படாது.(அது எப்படி நாங்க நல்லா இல்லன்னு சொன்ன பிறகு நீ ஓட்டுறது. மதுரையில இருக்குற டெரர்லாம் தெரியும்ல!).
மதுரை சிட்டில(திரும்பவும் சொல்றேன், மதுரை சிட்டிதான். படத்த நம்பாதீங்க!) மற்றும் அதோட சுற்றுப் புறத்துல இருக்குற தியேட்டர்களும் சேத்து ஒரு காலத்துல 700 கிட்டத் தொட்டுச்சு. இப்போ எல்லாம் ஒழியுது. தமிழ்நாட்டுல தியேட்டரா இருக்கு? தியேட்டர்ல தரம் உயர்த்தனும்.

தியேட்டர்ல படம் பாக்குறதையே ஒரு அனுபவமா ஆக்கிட்டா எல்லாரும் வருவாங்க. ஒரு வகையில தியேட்டர்ல பாத்தா தான் நல்லா இருக்கு, டிவிடி இந்த அளவுக்கு நல்லா இருக்காதுங்கற அளவுக்கு தியேட்டர் வரணும்... முதல்ல அந்த அளவுக்கு படம் எடுக்கனும். இங்க டிவிடில பாக்குறதே தண்டம்னு சொல்ற மாதிரில இருக்கு! வில்லு மாதிரி வந்தா என்னங்க பண்றது, அதெல்லாம் டாப் டென் மூவிஸ்ல காட்டுற ஒரு சீனக் கூட பாக்க முடியல!


அது சரி இதுக்கு எதுக்கு நமீதாவுடைய பொய் விளம்பரம்? இதோ இப்படி கேள்வி கேக்கனும்னுதான். நமீதான்னா என்ன ஆர்வமா படிக்கறீங்க, அதுக்குதான். சும்மா ஒரு சோதனை முயற்சி!(அதுக்காக ஓட்டுல கை வச்சிராதீங்க, கடவுளே!) ஆனா ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னா, நமீதாவ நம்பியே சில நடிகர்களுக்கும், பல தியேட்டர்களுக்கும் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது. நல்லா யோசிச்சு சொல்லுங்க, இந்த மாதிரி எத்தன படம் இப்பொழுதைக்குள்ள நமீதாவ நம்பி ஓடிருக்கு!

கழிப்பறை இலக்கியம்

Filed under , , by Prabhu on 6/17/2009 09:07:00 PM

2

இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு(நீயெல்லாம் இலக்கியத்தைப் பத்தி பேசுற? உன் லாங்க்வேஜ் மார்க்க சொல்லவா?). இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,

"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.... (ஆமா, இவன் பெரிய விவேகானந்தர்... போடா....) "

"WIFE- wonderful Instrument For Enjoyment"

"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"

"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.

Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"


காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.

"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"


அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.

"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "

இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.

இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)

"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"

(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!


பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!

இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.

அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .

பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.


ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!

இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."

இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!