ஏதாவது செய்யனுங்க!

Filed under , , by Prabhu on 6/05/2009 08:43:00 AM

0

டிவில பாத்தா எந்நேரமும் தேர்தல் செய்திதான். எப்ப பாரு, ஐந்து கட்ட வாக்குப் பதிவு, துணை ராணுவ உதவி, அது இதுனு ஒரே சீனுப்பா? இந்த டயத்துல எல்லா மாநில தேர்தல் ஆணையரும் மூஞ்சிய டிவில காண்பிச்சுப்பாங்க! அட, எல்லா வருஷமும் இந்தியாவுல எங்கயாவது தேர்தல் நடந்துட்டேதான் இருக்கு, ஆனாலும் ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும் ஏதாவது குளறுபடிதான். உலகத்திலயே ரெண்டாவது பெரிய அரசியலமைப்பாம் (ம்ஹும்..இதுக்கு குறைச்சலில்ல.. போட்டிருக்கறது கோவணமா இருந்தாலும் ஓட்டை இல்லாம இருக்கணும்). ஏனோ தேவையில்லாத்துல எல்லாம் இந்தியா முண்டிகிட்டு போயி முதலாவதாவோ ரெண்டாவதாவோ வந்து, ஐ! நாந்தான் பர்ஸ்ட்னு சொல்லி பெருமைபட்டுக்குது. உ.ம். அரசியலமைப்பு, லஞ்சம், எய்ட்ஸ்.

இப்போ என்னடா சொல்லவரன்னு நீங்க கேக்கலாம். இது இவ்ளோ பெருசா வச்சுகிட்டு என்ன சாதிச்சுட்டோம். ஒண்ணும் இல்ல. அதுல இருக்றதுல என்னத்தை பாலோ பண்றாங்க! ஒண்ணுமே இல்ல! இதுல தைரியமா அந்த அரசியலமைப்பு வச்சுகிட்டு இந்தியா, இறையாண்மை அப்படின்னு அரசியல் பண்ண சொன்ன செய்வானுக(அப்படின்னா என்னன்னு கேட்டா முழிப்பான் அவன்). வேணும்னே ஒண்ணும் இல்லாத பிரச்சனய பெருசாக்குவாங்க. காவிரி தண்ணி பிரச்சனையிலயே அரசியல்தான் தண்ணி விடலைனு சொல்வேன். அட, தண்ணிய விடற வரைக்கும் தான போராட்டம் பண்ற மாதிரி சீன் குடுக்கலாம். அது தங்க முட்ட போடுற வாத்து, ரெண்டு மாநில அரசியல்வாதியுமே அறுக்க மாட்டானுக. அது கன்னித் தீவு மாதிரி, சிந்துபாத்(தமிழ் அரசியல்வாதிக) எப்பவுமே மந்திரவாதி(கர்நாடக அரசியல்வாதிக) அனுப்ற கஷ்டத்தில இருந்து லைலாவ(காவிரி, அது பாவம் அது பாட்டுக்கு போறது, அத வச்சு நம்ம மண்டைய உடைக்கிறாங்க) காப்பாதிட்டே இருப்பான். இவனுக ரவுசு தெரிஞ்சா காவிரியே கண்ணீர் விடுங்க!(ச்ச்சீ... கொசுவர்த்தி சுருளை அணைச்சுட்டு பேசு, எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்? அப்படிங்கறிங்களா?)

இப்படிப்பட்ட பிரச்சனைக்கெல்லாம் தீர்வு கொடுக்காத சட்டமோ, அரசியலமைப்போ, அதப் பத்தி பெருமைப்பட என்ன இருக்கு? நமக்கு அடிப்படை உரிமைகள்ன்ற விஷயமே கிடைக்கல, பின்ன இந்தியன் வேற எந்த உரிமைக்கு போராடுவான். அந்த மாதிரி உரிமைகள மீறும் போது அரசு பாதுகாப்பு. அரசே அத பண்ணா? அப்படி நடந்து கோர்ட்டில 'கப்பம்' கட்டின அரசுதான் தமிழக அரசு.நடந்தது இப்போ இல்ல, பல காலம் ஆச்சு.(அது என்னடா மீறல் சொல்லிட்டு பேசு,எதுக்குடா சஸ்பென்ஸ்னு கேப்பீங்க!). அது என்னன்னா, விருதுநகர்ல கல்லூரி மாணவர்கள போராட்டத்தப்போ புடிச்ச போலீஸ் கணவான்கள்(?!) அவங்கள சட்டையில்லாம குத்த வச்சு போட்டோ எடுத்து பத்திரிக்கைல பப்ளிஷ் பண்ணிட்டாங்க. அதுக்கு கோர்ட்டில கட்டுன கப்பம் கட்டின பிறகு நிறுத்திருக்கணும் (நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!). ஆனா நடக்கிறது என்னன்னு உங்களுக்கே என்னன்னு தெரிஞ்சிருக்கும்னு நினைகிறேன். இப்போ என்ன சொல்றீங்க? (நாங்க உன்னைய கேட்டா,நீ எங்கள கேக்குறயானு கேக்குறது என் காதில விழுது)

இப்போ தேர்தல்க்கு என்ன காமெடி பண்றாங்கனு தெரியல! தேர்தல் நடக்கும் போது IPLனு நிறைய நாட்டுக்காரங்க வந்தா பாதுக்காப்புக்கு கஷ்டம்னு இப்போ சிதம்பரம்(உள்துறை அமைச்சராம்!) BCCI கிட்ட கேக்குறாரு. வாஸ்தவம் தான். ஆனா இந்த அறிவுப்புயல்(Brain stormங்க!) இதுக்கு முன்னாடி அவருக்கு ஏன் தோணாம போச்சு! எல்லாம் பண்ண பிறகு. இப்போ BCCI முணுமுணுக்கிறான். இப்படி கோர்ட் பேச்ச கேக்காத அரசு, அரசு பேச்ச கேக்காத அரசு நிறுவனம்னு இந்தியாவே களேபரமா இருக்கு. இதுல குடியரசு தினம் மட்டும் 'கோலாஅஅஅஅகலமா' நடக்குது, வருஷாவருஷம். ஆற்காடு இருள்சாமி வேற கோர்ட்ட எதிர்த்து தப்பா பேசுறாரு. இப்படி இவங்களே பேசுனா படிக்காதவன் எப்படி மதிப்பான் கோர்ட்ட! தலைமை நீதிபதி "எங்க பேச்ச கேக்கலன்னா நாங்க எதுக்கு? பேசாம நீதித்துறைய கலச்சிருங்க"ன்னு சொல்ற அளவுக்கு ரப்ச்சற கொடுத்துருக்கானுங்க!

இந்த நாட்டில எதை எதிர்பார்த்து தேர்தல் நடத்தி ஓட்டு போட்டுறது. பேசாம ஒருத்தரு உச்ச நீதிமன்றத்தில கேசு போட்ட மாதிரி, ஓட்டு போட விருப்பமில்லன்னு ஒரு அமுக்கி(பட்டனுங்கோ!) வைக்கணும். அப்புறம் அதையே நிறைய பேர் அமுக்கினா, அந்த தேர்தல் செல்லாது. வேட்பாளர மாத்தி தேர்தல் நடத்தனும். அதுவரைக்கும் ஜனாதிபதிதான் அங்க. அப்பத்தான் நல்ல வேட்ப்பாளர உருப்படியா தேர்ந்தெடுக்க ஒரு வழியிருக்கும். நாம எல்லாத்துக்கும் ஒரு தகுதி எதிர்பார்க்கிறோம். ஆனா ஒரு அரசியல்வாதிய தேர்ந்தெடுக்க ஒரு தகுதி வரைமுறையே இல்ல. கேட்டா அது அடிப்படை உரிமைகளை மீறுவதா ஆயிடும்னு சொல்வாங்க. ஆமா, கொடுக்க வேண்டிய வாழத் தேவையான உரிமைகள பறிச்சுக்கிட்டு, கண்ட கிரிமினலுக்கும் உரிமைய கொடுத்து நாட்ட காப்பாத்துறாய்ங்களாம். போங்கடா, நீங்களும் உங்க ஜனநாயகமும்.

இப்படி எல்லாத்தையும் மீறி இங்க சந்தோசமா வாழ்ந்துக்கிட்டிருக்கோம் பாத்தீங்களா? அதாங்க இந்தியன், அதுக்கு பெருமைப்படுறதா இல்ல வருத்தப்படுறதானு தெரியல.
எங்க கல்லூரில படிச்சவரு எடுத்த ஒரு படத்தில சொன்ன மாதிரி,


"ஏதாவது செய்யனுங்க!"

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!