Thor (2011) - No Spoilers

Filed under , by Prabhu on 5/03/2011 02:56:00 PM

4

So, I am Back with Bang. No, Not just a bang, But a BIG BANG.

தோர் - மார்வெல் காமிக் கதையிலிருந்து மார்வெல் ஸ்டூடியோஸ் எடுத்த இன்னுமொரு சூப்பர் ஹீரோ அவதாரம். அவதாரம்னா நிஜமாலுமே அவதாரம் போலே. கடவுள் பூமிக்கு வந்து இறங்குறத அவதாரம்னு கம்பர் சொல்றது உண்மைன்னா Thor : The God of Thunder அவதாரம் தான்.




வைக்கிங் புராணத்தில காணப்படுகிற அஸ்கார்டியாவில் வாழும் கடவுள்களாக சொல்லப்படுபவர்கள் இன்னொரு realmல் இருக்கும் ஒரு முன்னேறிய நாகரிகம். அதில் ராஜா/கடவுள் Odinக்கு ரெண்டு பசங்க, Thor, loki. தோர் பட்டாபிஷேகத்தின் போது சரியாக பரம்பரை எதிரிகள் Frost Giants உள்ளே புகுந்து குட்டையை குழப்பிவிட, நிகழ்ச்சி நின்றுவிடுகிறது. அதன் பின் நடக்கும் பிரச்சனைகளில் கோபமாகி நீ என் புள்ளயும் இல்ல இந்த வீட்டில உனக்கு இடமும் இல்ல உன் சக்தியான சுத்தி(Mjolhnir)யும் உனக்கு இல்லை. பிடி சாபம், பூமிக்கு போ’ என அனுப்பிடுறார். ஆனாலும் பையன் திரிசங்கு போல அங்க இங்க நிக்காம நல்ல பையனா உஸ்ஸ்ஸ்னு வந்து பாம்னு விழுகிறான் பூமில இல்ல, கதாநாயகி கார்ல. ஊட்ல சொல்லிட்டு வந்திட்டயான்னு கதாநாயகி கேட்காவிட்டாலும் வூட்ல சொன்னதால தான் அவர் வந்திருக்கார்னு நமக்கு தெரிகிறது.

இதுக்கு பின்ன தோர் தன் தவறை உணர்ந்தா’ரா’(கடவுள் பாஸ்!),அவருக்கு சுத்தியல் கிடைத்ததா? அந்தப் பொண்ணுக்கு எல்லா கதாநாயகி போலயும் அவர் மேல காதல் வந்ததா? கரெக்டா கடைசி சண்டைக் காட்சியின் முந்தைய காட்சியில் அழுந்த முத்தம் கொடுக்கிறாரா? உனக்காக மீண்டும் வருவேன்னு சொல்லிட்டு கிளம்பிப் போகும் கதாநாயகன் முதுகை நாயகி வாயைப் பிளந்து பார்ப்பாளா என்ற கேள்விகளுக்கு விடைத் தெரிந்தாலும் போய் தியேட்டரில் காசு கொடுத்து பார்க்கலாம்.

ராஜாவின் இரண்டு பையன்கள், அரசுரிமைத் தகராறை, ஷேக்ஸ்பியர் காலக் கதையை அகண்ட பிரபஞ்சத்தில் வைத்து எடுத்திருக்கிறார் Kenneth Branagh.

Chris Hemsworth - He is the Man! உருவம். அட்டகாசமான உடல். ஆண்மையான தோற்றம். லேடீஸ், செக் அவுட்!

Natalie Portman - பசங்களுக்காக!


என்னதான் சொன்னலும் என் தமிழ் மசாலா ரத்தம் சும்மா இருப்பதில்லை. சுத்தியல் கையில் வந்து டுமீல் இடி இடிக்கும் போது I'm Thor. The God of Thunder என பல்லைக் கடித்துக் கூவுவார்னு புத்தி நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. நடக்கவில்லை!


தோர் பூமிக்கு வந்த பிறகு நடக்கும் காட்சிகள் லேசாக நகைக்க வைக்கிற காட்சிகளை தெளித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் - எப்பா! அட்டகாசம். எப்படி இவ்வளவு அருமையான கிராபிக்ஸ் செய்ய முடிகிறது? இப்படியெல்லாம் கிராபிக்ஸ் எடுக்கத்தான் எவ்வளவு செலவாகிருக்கும் டாலரில்!


பிரமாதமான படமல்ல. ஆனால் பிரம்மாண்டமான படம். Enjoyable movie.

இந்த படம், அடுத்து வருகிற Green Lantern, Captain America, எல்லாம் பார்த்து வைத்துக்கொள்ளுங்க. அடுத்த வருஷம் Avengers என்ற எல்லாரும் ஒண்ணு கூடுற படம் பார்க்க வசதியாய் இருக்கும்.

அஷ்டே!