மொக்கை (அ) பின் நவீனத்துவம்

Filed under , , , by Prabhu on 6/02/2009 10:14:00 PM

0

இதுக்கு முந்தின பதிவ பாத்துட்டு என்னடா சுத்த தமிழ்ல எழுதி கொல்றானேனு நினைக்கத் தேவையில்லை. அதெல்லாம் முதல் பதிவு, அதுவும் தமிழ் பற்றின பதிவுனு அப்படி எழுதினேன். இப்போ கொஞ்சம் கேஷுவலா பேசிக்கலாம். பதிவர் பரிசில்காரன் ஒரு பதிவு சில நாட்கள் முன்பு எழுதி இருந்தார், 'பின்நவீனத்துவ பித்தனானேன்.' என்ற தலைப்பில். அது வரை அப்படினா என்னவொ ஏதோனு இருந்தேன். "எதுக்கும் அடங்காத, இப்படித்தான் இருக்கும்னு சொல்லமுடியாத எழுத்துதான் பின்நவீனத்துவம்"-அப்படினு சொல்லிருந்தாரு. வடிவேலு சொன்ன மாதிரி ஒரு கட்டுக்கடங்காத காட்டெருமையா எழுதனுமோனு நினைத்த போது
"நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்ய மாட்டான். அப்போ அது பின்நவீனத்துவப் படமாகுது" னு சொன்னப்ப தான் பல விஷயங்கள் தோணுச்சு.

முதல் விஷயம், இப்படி சீரியசா பேசும் போது திடீர்னு ஒருத்தன் எதிர்பாராதத சொல்லும் போது அது பின்நவீனத்துவமோ என்னவோ, என் அறிவுக்கு எட்டின வரை அது சுத்தமான, கலப்படம் இல்லாத அக்மார்க் மொக்கைனு சொல்வேன். உதாரண்த்திற்கு, "டேய் மச்சான், உன் கிட்ட ஒன்னு சொல்லணும்டா சொன்னான். சொல்றா மாப்ளனு சொன்னேன். காத குடுடா, ரகசியம்னு சொன்னான்" (காத குடுத்துட்டு நீ என்ன பண்ணுவனு எனக்கே மொக்க போடகூடாது). நானும் கேனைப் பய மாதிரி காத தீட்டிகிட்டு உக்காந்தா "நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வச்சிருக்காந்டோஓஓஓஒய்ய்ய்" எனப் பெருசா கூவுறான். எனக்கு வெறி ஏறிக்கிட்டு இருந்த போதே பக்கத்தில இருக்கிறவன் அவன் கன்னத்தில பளீர்னு ஒண்ணு விட்டான், "ஏண்டா மொன்ன நாயே, முன்னாடி பாடம் நடத்துறேன்னு அவன் போடுற மொக்கை போதாதுனு நீ வேறயா?". இவனோட முழுமுதல் கொள்கை அடுத்தவன வெறுப்பேத்தி, கொலைவெறியனா ஆக்குறது. இத சொல்லிட்டு இந்த காதில இருந்து அந்த காது வரை 'ஈஈஈ'னு சிரிப்பு வேற.இது ஒரு வகை மொக்கை.

அட, இது பரவாயில்ல, இன்னொரு டைப் இருக்கு. முதல் டைப் ஆள அடிச்சு ஆறுதல் அடைஞ்சிடலாம். இரண்டாவது ஆசாமி மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, போன வார அல்வா மாதிரி சவ,சவன்னு சாவடிப்பானுக. சென்னை போனப்போ, தியேட்டர் கவுண்டரில் நின்னுகிட்டு ஆந்திர சாப்பாட்டோட காரத்தை பத்தி கஸினோட பேசிட்டிருந்தேன் (அப்ப ஆந்திர பொண்ண சைட் கூட அடிச்சதில்ல, என் நேரம் பேசித்தொலஞ்சிடேன்.) அப்போ பக்கதில இருந்த ஒரு "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாம்ணி" பிடிச்சுகிட்டாரு. "ஆந்திரா புட் பாதிங்கனா...." அப்படி ஆரம்பிச்சவந்தான்.. .. "ம்ஹூம்....இவன் நிறுத்த மாட்டான். டேய், கவுண்டர திறங்கடானு" என் கஸின் கத்துறான். "பொறுங்க தம்பி திறப்பாங்க, நிதானமா இருக்கனும்" இது அந்த சிகாமணி. "டேய், மப்பில மொக்க போடுறவனெல்லாம் என்ன நிதானமா இருக்க சொல்றான்னா, அதுக்கு நீயும் உன் ஆந்திர சாப்பாடும் தாண்டா காரணம்னு" இந்தப்பக்கம் இவன் முறைக்கிறான். அந்த மொக்கயோ, நீ பொழப்புக்கு மொக்க, நா பொற்ந்ததிலிருந்தே மொக்கன்ற ரேஞ்சுக்கு போய்டிருக்கான். கடவுளோட அருளால கவுண்டர் திறந்து டிக்கட் வாங்கிட்டு உள்ள ஒடினா, அந்த இருட்லயும் எங்கள கண்டுபிடிச்சு, 'தம்பி இதோ வரேன்னு' சொன்னவனுக்கு கடுக்காய் குடுத்து எஸ்கேப் ஆவுறதுக்குல்ல, யம்மா....... அதுக்கப்புறம் இடைவேளை வரை என்னிடம் பேசவே இல்லை, என்னோட கஸின்.

இவ்வாறு மொக்கை மாணவ(காமெடி) மொக்கை, ஆசிரிய(சீரியஸ்) மொக்கை என இரு கூறுகளாக வகைப்படுத்த்ப்படுகிறது.


அந்தப் படம் என்னனு சொல்லலையே, ரன்.

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!