இலங்கை பிரச்சனை...வேறு பார்வையில...

Filed under , by Prabhu on 6/20/2009 06:02:00 PM

0

இந்தியா வெளியுறவு கொள்கை பொதுவா எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா? இங்க எல்லாரும் என்ன விட பெரிய ஆட்கள்(வயசுல) தான். அதானால உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் என்னன்னு.அதாவது இந்தியா மத்த நாடோட எப்படி பழகுறாங்க, யாரோட வாய்க்கா தகறாரு, எவன் வாங்க பழகலாம்னு சொல்றான், அவன கூப்பிட்டு கிடா வெட்டலாமானெல்லாம் முடிவெடுக்குறது நம்ம வெளியுறவுக் கொள்கைகள்தான்.


சரி இது வரைக்கும் எந்த மாதிரியான கொள்கை நம்மளோடதா இருந்தது. நேரு பத்தி சொல்லும் போது சின்ன வயசு சிவிக்ஸ்ல சொல்லிருப்பாங்களே! அதான். எவன் வம்புதும்புக்கும் போக கூடாது. எல்லாருக்கும் ஒரே மரியாத குடுக்கணும். ரெண்டு பேத்துக்கு சண்டன்னு வந்தா கூட போய் குத்துடா, வெட்டுடான்னு சவுண்ட கொடுக்காம கூட்டத்துல நின்னு விசில் அடிக்கிறத விட்டுட்டு, அடுத்தவனுக்கு நாட்டாம பண்ணாம, நான் யாரு பக்கமும் இல்ல, ஆனா தம்பி நீ செய்யுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல அப்படின்னு தப்பு பண்றவன்ட சொல்றதுதான் நம்ம வெளியுறவு கொள்கை.

புரியுதோன்னோ? இந்திய வெளியுறவுக் கொள்கையோட அச்சாரமே இந்தியாவோட இறையாண்மைய பாதிக்க கூடாதுங்குறதுதான்.ஆமா, டிவில கூட பாத்திருப்பீங்க இறையாண்மைனு அடிக்கடி சொல்வாங்க. அது என்ன ஆண்மைன்னு கேட்டீங்கன்னா, உங்கள கனவுல காந்தி குச்சியோட துரத்துவாரு. இறையாண்மைனா இந்தியாவுக்குன்னு ஒரு இது இருக்கும்ல. இதுன்னா எதுனு கேக்காதீங்க. இதுன்னா இதுதான், இது! ஒரு கெத்துன்னு வச்சுக்கலாமா? லாம்னு நினைக்கிறேன். அது டேமேஜ் ஆகிற கூடாதுங்கிறதுதான் நம்ம கொள்கை(இத இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கடா சூனா.பானா... இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோ?). Non-alignment, disarmament என பல நல்ல பாலிசிகள கொண்டது Lic இல்லைங்க, இந்தியாவின் வெளியுறவு பாலிசி.

இப்ப ஒரு கேள்வி வரும், இதெல்லாம் இப்ப ஏன் பேசுறீங்கோன்னு கேக்குறீங்களா. இலங்கை பிரச்சனைதான். எல்லாருமே அந்த பிரச்சனய சாக்கடைய நோண்டுற மாதிரி நோண்டிக்கிட்டிருக்காங்க நீயுமா? என்னங்க செய்யுறது, இவனுங்க தொல்லைதாங்க முடியல, அதான். அவங்க தமிழனுங்கதான், அதனால நாம அவங்களுக்காக் குரல் கொடுத்தே ஆகணும். ஆனா அது என்னவோ நம்ம நாட்டு பிரச்சனை மாதிரியும் நம்ம கைல தான் முடிவு இருக்கிற மாதிரியும் பேசுறது, அதக் காண்பிச்சு ஓட்டு கேக்க முயற்சி பண்ணும்போதும் கடுப்பா வருது. உன் பிரச்சனையவே தீர்க்க முடியல உன்னால, நீ அடுத்த நாட்டுல இருக்குற பிரச்சனைய தீர்க்க போறயா? உன்னால பக்கத்து மாநிலத்துல இருந்து தண்ணி வாங்க முடியல, பக்கத்து நாட்டுல இருந்து நீதி வாங்கப் போறயா, பலே!

ஏதோ அது நம்ம தேசிய பிரச்சனை மாதிரி அவங்க மத்தியில ஆட்சிக்கு வந்தா எல்லா தீந்திரும்னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. இவ்ளோ நாளா என்ன புடுங்கினானுங்க? இனியும் என்ன செஞ்சிர போறாங்க? இங்கயும் பதிவுலகத்தில சில பேரு இந்த தமிழீனத் தலைவர் என்னவோ வேரோட புடுங்கிட்டதா சொல்லிக்கிடிருக்காங்க. எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல.அதுவும் அவங்க ரத்தம் கொதிக்க கொதிக்க உருப்படியில்லாம பேசுறதுக்கு, டீயாவது கொதிச்சா குடிக்கலாம். கேட்டால் தமிழனாம், தமிழ் ரத்தம் ஓடுதாம் அவன் உடம்புல. எங்களுக்கு என்ன இங்கிலீஷ் ரத்தமா ஓடுது? எல்லாம் சிகப்பு கலர்தான். ஜாதி அரசியல பண்றவனெல்லாம் தமிழ் இனத்தப் பத்தி பேசுறான். இங்க இருக்கிற தமிழன முதல்ல முன்னேத்துற வழிய காணம். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் எறி வைகுந்தம் போறானாம்.

இதுல இந்த வைகோ வேற பிரபாகரன் இறந்ததா செய்தி வந்தா, ரத்த ஆறு ஓடுமாம். என்ன ஒரு provocative பேச்சு. ஏன் இது. எந்த உத்தமனுக்காக இந்த போராட்டம்? தமிழர்களோட ஒரே பிரதிநிதி விடுதலை புலிகள்தான்னு சொல்றதுக்காக, தன்னை தவிர மற்ற நான்கைந்து தமிழர்க்கான அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அழிச்ச அந்த புண்ணிய ஆத்மாவுக்காகவா? ராம்தாஸ் ஜாதி அரசியல் பண்ணும் போது வராத தமிழர் நலன் தேர்தல் வரும் போது கண் முன்னாடி ஆடுது. மற்ற கட்சிகளும் சும்மா சொல்றதுக்கு இல்ல. அவங்களும் சினாரியோ புரிஞ்சிக்கிட்டு நல்லா தட்டுறாங்க..சங்...சங்...னு...

இந்த உலகத்துல எத்தனையோ போர்கள் நடக்குது,அதையும் இத மாதிரிதான பாக்கனும். பக்கத்துல ஒரே எல்லைய பகிர்ந்துக்குற மியான்மர்ல மிலிட்டரி ஆட்சி. அமைதிக்கான நோபல் வாங்கின சூ கி, வீடுக் காவல்ல இருக்காங்க வருஷக் கணக்கா. அதுக்கு யாராவது குரல் கொடுத்தமா? அதுல ஓட்டு இல்லையே, அப்புறம் எப்படி குரல் கொடுப்பானுங்க? இந்தியாவோட இறையாண்மைய கெடுக்குற மாதிரி இவனுங்க பேசுவானுங்க, நாம் வேடிக்கை பாக்கனும்? ஆயுதம் ஏந்துவாராம் வைகோ. இந்த நாட்டுல இருந்துக்கிட்டு என்ன சொன்னாலும் அது இந்த நாட்டத்தான் பிரதிபலிக்கும்ங்கிற நிலைமைல இப்படி பேசுனா?

அப்ப இலங்கை தமிழர்கள விட்டுற சொல்றயான்னா, அப்படி இல்லை. ஆனா, உங்க பார்வைய மாத்திக்குங்க. இந்த அரசிய வாதிங்க சொல்ற வழியில யோசிக்காதிங்க. நீங்களா யோசிங்க. ரொம்ப அரசிய்ல தேவையில்ல, லாஜிக்கலா சிந்திச்சாலே போதும்.

இப்படியெல்லாம் பேசும்போது நான் இலங்கை பிரச்சனைல ஆதரவு தரலன்னு நினைச்சிராதிங்க. நான் வேறு பார்வையில சில விஷயங்கள பேச விரும்புறேன், அவ்வளவே!

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!