பெயரிலி

Filed under , by Prabhu on 12/26/2009 01:16:00 AM

20

புயலுக்கு முந்தைய ஒரு வெயில் நாளில் அவள் சந்திப்பு. எத்தனையோ பெண்களைப் பார்த்து இருந்தாலும், இவள் உலகத்தை மிஞ்சியவள் இல்லை என்றாலும் நான் அவளை நினைவில் வைத்திருந்த காரணத்தை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். வேலை விட்டாலும் சுரப்பிகள் அவளை விடமாட்டாமல் மூளையின் ஏதோ ஒரு மூலையில் மடித்து வைத்துக் கொண்டது. பிறகு சுழல்களில் சிக்கிவிட்ட வாழ்க்கையில் எதிர்பாரா ஒரு வெயில் நாளில் அவளைக் கண்ட பொழுது  ஏதோ துளிர்விட்டது. வயதின் சுரப்பிகளிற்கு வேலையில்லை. முகத்தின் வெடிப்புகள் வர வைத்து அவற்றை உடைக்கவும் யோசிக்கும். கண்ணாடியின் முன் காலங்கள் கழிந்தன. பார்ப்பதிலென்ன என்ற சின்ன ஆர்வமேற, அவளுக்கு இரு கண்கள் குத்தியிருப்பது தெரிந்தேயிருக்கவேண்டும். சில நாட்களில் நான் அவள் அட்டவணைப்படி என் வகுப்புகளுக்குச் சென்றேன். வெட்டியான வேளைகளில் பின்தொடர்வது ஒரு தொடர்ந்த அனுபவமாகிப் போனது. பிடித்திருந்தால் பேச வேண்டிய அவசியமின்மையை விவாதித்து மூளையுள்ளுள்ளவர்கள் மாநாடாகிக் கொண்டிருந்தார்கள். முடிவின் அருகாமை உந்த இலையும் கலையுமிழந்த அந்த மரத்தின் அடியில் அவளிடம் பேசிய போது பரிட்சை. அருகில் பார்க்க சிரித்து, ’நான் ..... நீ *** தானே.’ அவளைப் பற்றி கூறிய போது ஆச்சரியித்து, அவள் கேமரா இல்லாமல் புகைப்படக் கலை கற்கும் கதையை பேசிப் பிரியும் போது பிறகு சந்திப்போமெனக் கூறிய நான் அடுத்து பேசிய போது அவள் வயது 3 மாதம் அதிகம் ஆகியிருந்தது. அருகிலிருந்து சிரித்த அவள்’ஹாய்’க்கு பின்னாக எழுவாயை மறந்தே போயிருந்தாள். தன்னம்பிக்கை தெறிக்கும் சிரிப்பினூடே ஆச்சரியக் குரலில் மறு அறிமுகம் செய்து கொள்ள, மீண்டும் நான் அண்டார்டிகாவில் கிடைத்தால் படிக்கத் தயாராக இருக்கும் விவரத்தை உதட்டில் பூண்ட நகையுடன் கேட்டவளை நினைவிருக்கிறது.  சில நிமிடங்களுள்ளான இந்த கிளர்ச்சியை நோக்கி நாட்கள் மிதந்தன.  அடுத்து அந்தக் கார் கம்பெனிக்காரன் மருமகளுடன் பிரின்ஸ்பல் அலுவலகம் அருகில் அவள் படித்துக் கொண்டிருந்த போது அருகில் சென்ற பொழுது தோழி இடிக்க இவள் திரும்பிய பொழுது விழிகளின் மேல் வில்லாக இரு கேள்விக் குறிகள். சிரிக்காமல் கேட்டாள், ‘நீ யார்’ என்று. சிரித்த நான் மறு அறிமுகம் செய்ய தேடிய பொழுது பெயர் சிக்கவில்லை. பெயரிலியாகிவிட்டிருந்தேன்.

தனிமை (அ) விடியலின் வெளுப்பு

Filed under , by Prabhu on 12/23/2009 11:03:00 AM

20

விழிகளைச் சிறையிட்ட வளையங்கள்
புத்தக வெள்ளையில் உதிர்ந்த முடிகள்
உலர்ந்த தோலின் வறட்சி
தனிமையின் காய்ந்த உதடுகள்

பென்சில் சிகரட்டில் இழுத்த
காற்று நிகோடின்
குளிர் காலத்தில் புகையாய் பரவ

தட்டில் வைத்த சோறு
வயிற்றிடம்  செலவு கணக்கு கேட்டு
வெளியேறும்

புவியீர்ப்பில்லா பொழுதுகளில்
அவள் முகத்தில் முன்பு தோன்றிய
புன்னகையின் எச்சம்
என் உதடுகளில்

விரக்தியில், விட்டத்தின்
சிலந்தி வலை
வழித்துப் போட வலுவில்லை


வாழ்க்கையின் நகலெடுக் கருவி
நாளைய பிரதிக்காக
சூடாகிறது

நாளைய விடியலின்
வெளுப்பின் சந்தேகத்தின் நிழலில்
இன்றைய பொழுது.

 -புலவர் பிரபுகுமார் (ராகமா இருக்குல்ல.. ஹி.. ஹி..)

பி.கு- காதல் கவிதை இல்லை. எனக்கு அந்த ரசனை இல்லைன்னு நினைக்குறேன். அப்படி எழுதப்போனா, ஏற்கனவே எழுதின இந்த ரகத்தில் தான் வரும். யாருக்காவது புரியலைன்னா எனக்கு வெற்றி. புரியாத கவிதை எழுதுறவங்க பெரிய ஆளாமே. புரியாத மாதிரி என்பதை விட எதையும் விளக்க முற்படாமை என சூரத் பல்கலைகழகத்தின் ஆங்கிலத் துறையில் வேலை பார்க்கும் கவிஞர் E.V.Ramakrishnan  சொல்லிக் குடுத்தார். அது போல, இதனால போன்ற விஷயங்கள் கவிதைக்கு தேவையில்லை என்பதை ஆங்கிலத்தில் வழியுறுத்தினார்.

வெட்டியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்குக் கவிதை என்னவாகத் தோன்றியது என கூசாமல் எழுதுங்கள். நான் வருத்தபட மாட்டேன். :)

மைக்ரோ ப்ளாக்கிங் 3

Filed under , , , by Prabhu on 12/20/2009 09:39:00 PM

23

சமீபத்தில் எத்தனையோவாவது தடவையாக அன்பே சிவம் பார்க்க நேர்ந்தது. It gets better every time. ஒவ்வொரு தடவையும் ஏதோ இன்னும் மெருகேருவது போல, யாரோ  மேலும் மேலும் ‘டச் அப்’ செய்வது போல இருக்கிறது. முதல் தடவை நல்ல கதை மட்டுமே தோன்றியது. போகப் போக technical perfectionம் இருப்பதாக புரிகிறது. சுந்தர்.சி யின் திரை வாழ்க்கையில் சொல்லக் கூடிய படம். எத்தனை தடவை பார்த்தாலும் கடைசி காட்சியில் கடிதம் படிக்கப்படும் காட்சியும், கமல் கேமராவிலிருந்து தொலைவில் சென்று மறையும் காட்சியும் சில நிமிடங்கள் என்னை அப்படியே சீட்டில் உட்கார வைத்துவிடும்.எல்லோருக்கும் பிடித்த இந்தப் படம் சரியாக ஓடாதது இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

‘ஹேராம்’ - நான் ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன் தான் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. நன்றாக இருந்ததாகத் தோன்றியது. Chronicles என சொல்லக் கூடிய வகையில் ஒருத்தனின் கடந்த வாழ்க்கையின் ஒரு தொகுப்பாக எடுக்கபட்ட படம்(எ.கா-Forrest gump, வாரணம் ஆயிரம்). ஷாரூக் கமலை எதிர்கொள்ளும் சமயங்களில் வரும்வசனம் செம ஷார்ப். ஷாரூக்கை (முஸ்லிம் என்பதால்) பார்த்து கமல், ‘கைபர் கணவாய் வழியா வந்தவந்தான?” எனக் கேட்கும் போது ஷாரூக், ‘உங்க ராமசாமியே கைபர் வழியா வந்தவரு தான்னு சொல்றாங்க?’ எனக் கேட்பார். இந்த சந்தேகம் உண்மையில் சரித்திர ஆராய்ச்சியாளர்களில் உண்டு என எதிலோ படித்த ஞாபகம்.
எனக்கு ’மாறு’ கண் இல்லாததால் என் ’பார்வையில்’ எசகு பிசகான அர்த்தங்கள் தோன்றவில்லை.

ஒரு வேளை இப்பொழுது வெளியாயிருந்தால் நன்றாக ஓடியிருக்குமொ என்னவோ?

BTW, இந்த ப்ளாகில் இது 51வது பதிவு. 50 வந்தப்ப நான் கவனிக்கல. வேறு யாரும் கவனிச்சு சொல்லாததால் நான் இன்னும் ’பெரிய ஆள்’ ஆகலைன்னு தெரிகிறது. இன்னும் ஐநூறு பேரைக் கொன்றாவது அரை ப்ளாக்கன் ஆக முயற்சிக்கிறேன்.

மார்ஸில் !@#$%^&

Filed under , , by Prabhu on 12/17/2009 08:23:00 PM

12

எப்பவுமே மனுஷனுக்கு தன் வீட்டை விட பக்கத்து வீட்டு மேல கவனம் அதிகம். அறிவியலிலும் கூட நம்ம பூமியை பாதுகாக்க துப்பில்லாத நாம் அடுத்த கிரகங்களை நோக்குகிறோம். இப்பொழுதைக்கு செவ்வாய் மேல நமக்கு கண். செவ்வாயில் உயிராதாரங்களுக்கான தடயங்கள் இருக்கு என சொல்லும் நாம் விரைவில் அங்கு ஆராய்ச்சிக்கு ஆளனுப்பலாம். வழக்கம் போல ரஷ்யாவும் அமெரிக்காவும் முதலில் சென்று புது குடியிருப்பு அமைக்க முயலலாம். அங்கே..ஆச்சரியக் கேள்வி - கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கிறதா சொல்லுறாங்க. என்னோட கேள்வி என்னன்னா, அவர் என்ன மலையாளியா?

இதை வினோத், ஆதவன் மற்ற எல்லா அமீரக ’தமிழ்’ நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன். ஹி.. ஹி...இன்சைட் ஜோக்குங்கோ!

எல்லாருக்கும் தெரிஞ்ச ஜோக்தான் என்றாலும் முதல் காமிக் முயற்சி என்பதால் சிம்பிளாக கான்செப்ட் எடுத்தேன். பெயிண்டில் தான் வரைந்தேன். வரைவதற்கு வேறு ஏதாவது தரமான மென்பொருள் இருந்தால் தெரியப் படுத்தவும். மேற்கொண்டு இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வசதியாக இருக்கும். (என் வரையும் திறமையப் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. அமீபா வரையறதுக்குள்ளயே ஆறு தடவை அழிச்சும் வரையும் அருமையான படைப்பாளி).

டாப்பு அடிக்கலாம் - 6

Filed under , , by Prabhu on 12/15/2009 01:36:00 PM

20

இப்ப Copenhagen தான் ரொம்ப சூடா ஆயிருச்சு. என்ன முடிவு எடுத்தானுங்கன்னு தெரியலை. எல்லாத்துக்கு அப்புறமும் ஒண்ணும் மாறியிருக்காதுன்னு தான் நினைக்குறேன். இதுக்கு நடுவில் Climategate விவகாரம் வெளிய வந்து பிரச்சனை ஆயிடுச்சு. மெயில்களை திருடி வெளியிட்டவன் ஜிபி கணக்குல விட்டுருக்கான். இண்டர்நெட் கண்டுபிடிச்ச காலத்துல, ‘ஐ, நானும் மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டேன்’, என்ற மெயிலைக் கூட ரிலீஸ் பண்ணியிருப்பான் போல. இப்ப எதுக்கு இதப் பத்தி பேசுறோம்னு கேட்டீங்கன்னா, சந்தேகமே இல்லாம குத்தம் சொல்லத்தான்.  Copenhagen மீட்டிங்குக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உயரதிகாரிகளுக்காக 140 விமானங்கள், 2400 Limosine Cars(Air conditioned, of course) இயக்குறதா வெளியிட்டிருந்தாங்க அறிக்கையில். 

Eco-friendly, indeed. :)

---------------------------------------------------------------------------------------------------------------


Osloவில் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். சமீபத்தில் ஒரு கேலிச் சித்திரம் பார்த்தேன- நோபல் கமிட்டி சொல்லுகிறது, "Obama, We give you the Nobel peace Prize just for not being Bush" என்று. Funny!  கொஞசம் நிஜமாக கூட இருக்கலாம். காந்தி, கிங் ஆகியோரின் வழி இப்ப உலகத்துக்கு உதவாது. போரின் மூலம் அதே அமைதி உலகத்துக்கு போராடுவேன்னு சொல்லியிருக்கிறார். இது தேர்தல் பிரச்சாரத்தப்ப தெரியலையா? சமீபத்தில் 30000 வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய இந்த அமைதியின் சொரூபத்திற்கு உலகின் எல்லா அமைதி விருதும் கொடுங்க. இவரு அமெரிக்க அதிபரா இருக்குற ஒரு தகுதி போதாதா அதுக்கு. ஆனா, I think Obama is an overhyped president. அவருக்கு கிடைச்ச அட்டகாசமான ஆதரவு, கவரேஜ் எல்லாத்துக்கும் காரணம், அவர் கருப்பு. ஒரு கருப்பனும் அமெரிக்காவில் அதிபராகிறான் எனக் கூறும் போது அந்தக் ‘கருப்பனும்’ உங்களுக்கு இடிக்கல? எப்ப சம  உரிமை பத்தி தனியா குறிப்பிடறோமோ அப்ப அங்க ஏற்றத்தாழ்வு ஊர்ஜிதமாகுது. இதுக்குமேல பேசுனா எசகு பிசகாயிடும் அப்பீட்டாயிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------

பட அறிமுகம்

ஒரு படம் இன்று காலையில் கே டிவியில் பார்த்தேன். ‘மௌனம் சம்மதம்.  இப்படி ஒரு அருமையான துப்பறியும் ரகக் கதை பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. நல்ல subtle ஆன நிதானமான வேகத்தில் போகக் கூடிய கதை. மம்மூட்டியின் நடிப்பில் உள்ள க்ளாஸ்... சான்ஸே இல்லை. மனுஷன் இன்னைக்கு வரைக்கும் நிக்குறதுக்கு அர்த்தம் இருக்கு. தமிழ், மலையாள நடிகர்கள் கலந்து இருப்பது போல தெரிந்தது. நாகேஷ் நகைச்சுவையோடு கெட்ட கதாபாத்திரமாகவும் பின்னுகிறார். சரத் குமாருக்கு சின்ன ரோல். ஆள் அழகாக ஆஜானுபாகுவாக இருக்கிறார். ஹீரோ(சீரோ என தவறாக டைப் செய்தேன், முதலில்) ஆன பின் ஏன் இப்படி மொக்கை கதைகளை பண்ணி கொல்லுகிறார். இப்ப  முக்கியமான விஷயம், அமலா. அடடா, என்ன அழகு! சின்ன வயசிலயெ நான் அமலாவின் ஏசி(ஃபேனவிட காஸ்ட்லி!). கடைசி காட்சியில் சிரிப்பாங்க பாருங்க... அய்யோ, வாய்ப்பே இல்ல. ஹ்ம்ம்..
நல்ல படம். கே டிவியில் பாருங்கள். மாதமொருமுறையாவது பரப்புகிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------


ஓ, மறந்துட்டேன். லிட்டில் ஜான் பத்தி சொல்லாம டாப்பா?

லிட்டில் ஜான் : அம்மா, உன் வயசு என்ன?

அம்மா                :  பொம்பளைங்க கிட்ட இதெல்லாம் கேட்க கூடாதுடா.
லி.ஜான்             :  உன் எடை என்ன?
அம்மா                :   பொம்பளைங்க கிட்ட இதெல்லாம் கேட்க கூடாதுடா.
லி.ஜான்             :   உன்னை ஏம்மா அப்பா விட்டுட்டு போனாரு?
அம்மா                :   அம்மகிட்ட இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது
அம்மா லைசன்ஸ எடுத்து பாத்துட்டு ஓடி வந்த ஜான், “அம்மா,  எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. உன் வயசு  36, எடை 65 கிலோ. அப்புறம் ஏன் அப்பா உன்ன விட்டுட்டு போனருன்னா, நீ Sex ல ‘F' வாங்கிருக்க.


---------------------------------------------------------------------------------------------------------------


ஆதி கவிதை எழுத சொல்லிக் குடுத்தாரா... நானும் ஒரே நிமிஷத்துக்குள்ள  ஒரு கவிதை எழுதினேன். யாரும் மதிக்க மாட்டேங்குறாங்க. நானே விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இதோ....

டாவென அழைத்த அவள்
க்ளோரோஃபார்ம் குரலில்
மயங்கிய
என்னை,
எட்டிப் பார்க்கத் திமிரும்
லோகட் முலைகளைப்
போல சிறிதாக எட்டிச்
சிதறும் அவள் தோழியின்
சிரிப்பின் வெக்கம்
சிறிதாக கொல்ல...
இருவரின் ஒற்றுமை
திருமணத்திலும் தொடருமா எனக் கேட்க
சடுதியில் சென்றேன்.


:)

பைரவன் கோவிலுக்கு வழி

Filed under , , by Prabhu on 12/13/2009 02:32:00 PM

13

மாலை ஆகி இருள் கவியத் தொடங்கியது. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு வீட்டிலும் மனைவிக்கு சமைக்க வேண்டிய கவலையுடன் செல்லும் கண்வனைப் போல கலையிழந்த சூரியன் மேற்க்கில போய் பொத்தென விழுந்தான். இருள் நேரம். திருடர்களுக்கும் கருப்பு உலக ஆசாமிகளுக்கான நேரம். அவர்கள் எல்லாத்துக்கும் இப்பொழுதுதான் பொழுது விடிந்திருக்கும். இதுதான் எங்களின் நேரம். இரவு வந்ததும் நானும் ராஜுவும்னும் கெளம்பிடுவோம். நாங்க இருக்கிற ஏரியா ரொம்ப முன்னேறிய இடமில்லைன்னாலும் ஒரு நகரத்தோட எல்லையில இருக்கிற இடம்ங்கிறதால கொஞ்சம் கட்டுப்பாடு அதிகம்தான். இரவானால் ரோந்துக்கு வரும் வாட்சுமேனில் இருந்து இரவுநேர வேலைக்கு செல்பவன் வரையிலும்  எங்களைக் கண்டால் சிறிது பயப்படுவதுதான் எங்களுக்கு சவுகரியம். ஆனால் டாஸ்மாக்கில் இருந்து வெளியில் வருபவன் கடவுளுக்கு என்ன, பொண்டாட்டிக்கு கூட பயப்பட மாட்டான் என்பதால் அவனிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்வதில்லை.

எங்களுக்கு தொழில் முறை போட்டியாளர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் எதிரிகள் உண்டு. ஒரே ஏரியாவுல பல பேரு  இருந்துக்கலாம். ஆனா ஒருத்தன் ஒரு ஏரியாவில் இருந்து அடுத்த ஏரியாக்கு போக கூடாது. அப்படி போயிட்டா கேங் வார் தவிர்க்க முடியாததா ஆகிடும். இல்ல ரெண்டு குரூப்பும் ஒரு கூட்டம் போட்டு முடிவெடுக்கிறேன்னு சொல்லிட்டு நடு ரோட்டில காட்டு கத்து கத்திட்டு ஓரமா ஒண்ணுக்கு அடிச்சிட்டு போயிருவானுங்க.

போன மாசம் தான் ஒரு சின்ன தகராறு ஆயிடுச்சு. பக்கத்து தெரு மணி கசாப்பு கடைக்காரர் கிட்ட சின்னதகராறில அந்தாள கீறிட்டான். அதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு அந்தாளு மருத்துவமனைல படுத்துக்க, அவ பொண்டாட்டி ஊரெல்லாம் ஒப்பாரி வச்சிட்டாள். உடனே அந்த ஏரியாகாரனுங்க எல்லாம் ஒண்ணு கூடி போய் புகார் கொடுத்துட்டானுங்க. ராஜா மாதிரி இருந்த எங்க நிலைமை இப்ப பரிதாபகரமா போச்சு. எப்ப வருவானுங்கன்னே தெரியல. திடீர்னு காக்கிக்காரனுங்க ரெய்டு வந்திடறானுங்க. பக்கத்து ஏரியாவுல இருந்த கரிவாயனோட கேங்க மொத்தமா ரவுண்டு கட்டித் தூக்கிட்டு போயிட்டாங்க.

கசாப்பு கடைக்காரன், தெருமுக்கு அம்பிகா ஹோட்டல்காரன், இன்னும் சில கடைக்காரன்களால தான் பொழப்பு ஓடிகிட்டு இருந்துச்சு. இந்த மணியால அது கெட்டுப் போனதுதான் எனக்கு ஆத்திரம். ஓட்டு வீட்டுல தனியா குடியிருக்கிற ராமு தாத்தா தான் இன்னமுமம் ‘நான் பாத்து வளந்ததுக’ என அடைக்கலம் குடுக்கிறார். அதுவும் ஏரியாக்காரர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை என்பதால் ரகசியமாக நடக்கிறது.

 
வழக்கம் போல தூக்கிட்டு போயிட்டு எல்லாம் முடிஞ்சதும் வெளிய விட்டுருவானுங்கன்னு நினைச்சிட்டிருந்த என் பொழப்புல மண் விழுந்தது. இந்த தடவை எல்லாமே எண்கவுண்டர்தான் எனக் கேள்விப் பட்டேன். மூணாவது தெருவில இருக்கிற ஜான்சிய வேற பாக்க முடியல. என் பழக்கத்தால அவளயும் தூக்கிட்டு போயிருந்தா? சேசச்சே... நம்மள மாதிரி அநாதையா அவ? குடும்பம் இருக்கு. ராஜுகிட்டயும் சொல்லிவச்சேன். எப்பவும் தயாரா இரு, வாய்ப்பு கெடைச்சா ஓடிரலாம்னு. அவன், அப்ப ஜான்சி எனக் கேட்கிறான். அவளையும் கூட்டிட்டுதான்.

இதெல்லாம் நடக்கும் போதுதான் அன்னைக்கு எங்க தெருவுக்கு காக்கி சட்டைக் காரனுங்க வந்திருப்பது தெரிந்தது. போதாக்குறைக்கு தெருக்காரனுங்க லஞ்சம் குடுத்திருக்கானுங்க. சிக்கினா சோலி முடிஞ்சது. நான் வேகமா வந்து சந்துல பதுங்கிக் கிட்டேன். பின்னால் திரும்பினால் ராஜுவைக் காணோம். கொஞ்ச நேரம் கழித்து காலி ரத்தத்துடன் ஓடி வந்தான். அடிச்சிருக்காங்க. மறைவிடத்துக்கு வரும் முன்ன சொத்தென ஒரு அடி அவன் முதுகில் விழுந்தது. அவன் துள்ளித் துடித்தான். திமிறினான். அவனைப் பிடித்தவன் ராமு தாத்தாவைப் பார்த்து கேட்டான், ‘என்ன சார், உங்களுக்கு பழக்கம்னு சொன்னாங்க. நீங்க சொன்னீங்கன்னா விட்டுடறேன். ஃபார்மாலிட்டீஸ் வேணாம்”. ராமு தாத்தா, ‘பழக்கம் தான். அதுக்காக என்ன செய்வது. தூக்கி வச்சு கொஞ்சவா முடியும். தெரு நாய்தானே?’ என்றார். என் கண் முன்னே அவனைத் தூக்கிச் சென்றார்கள். தெரு நாய் தானாமே? இனி இங்க இருக்க முடியாது. ஜான்சி? இருக்கிற பிரச்சனைல அவ வேறயா? போற எடத்துல பொட்ட நாய் கிடைக்கிறதா கஷ்டம். போதாததுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. பக்கத்துல இருக்கிற கிராமத்துல பைரவர் கோயில்  கட்டி நாயிக்கெல்லாம் கறி வைக்கிறாய்ங்களாமே? அந்த ஊருக்கு வழி சொல்லுங்களேன்.

பின் குறிப்பு : இதை என்ன கேட்டகரில வகைப்படுத்தன்னே தெரியல. என்னவோ எழுத ஆரம்பிச்சு ஆறு ஏழு மாற்றங்கள் அடைஞ்சு, சில மாதங்கள் கிடப்பில் கிடந்து, உள்ளயே ஏன் வைத்திருப்பானேன், படிக்கறவங்க கஷடம் என வெளியிட்டுட்டேன்.

12 Angry Men (1957)

Filed under , by Prabhu on 12/12/2009 01:19:00 PM

12

16x24 அறையில் பன்னிரண்டே பேர் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள், படம் முழுக்க. சுவாரஸ்யமாக இருக்க முடியமா எனக் கேட்டால், இருக்க முடியும் என்று கூறுகிறது இந்தப் படம். சில வழக்குகளில் அவன் தவறுதான் செய்தான் என்றாலும் அதற்கு மனிதாபிமானக் காரணங்களை நோக்காமல் சட்டப்படி தண்டனை குடுக்கப் படுகிறது. ஆனால் இது போன்ற மனிதாபமான் நோக்கில் சில வழக்குகளை சிந்திக்கவே ஜூரிக்கள்(Jury) நியமிக்கப் படுகிறார்கள் என நினைக்கிறேன். இப்படி நியமிக்கப்படுகிற 12 ஜூரிக்கள் ஒரு வழக்கின் தீர்ப்பைத் தீர்மானிக்க விவாதம் செய்ய முற்படுவதே இந்தப் படம். இது முதலில் டிவியில் வந்த மேடை நாடகம் போன்ற ஒன்றின் திரைவடிவம்.


 
ஒரு சேரி பையன் மீது அவன் தந்தையைக் கொன்ற குற்றம் சுமத்தப் படுகிறது. அதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பு மரணம் அல்லது விடுதலை என்பதில் ஒன்றாகவே இருக்க வேண்டும், ஜூரிக்களை எந்த முடிவு எடுத்தாலும் பன்னிருவரும் ஒத்த முடிவெடுக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு ஒரு தனி அறைக்குள் அனைவரையும் அனுப்புவதுடன் இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. அத்தனை பேரும் அவன் குற்றவாளி என முடிவு செய்யும் போது Henry Fonda மட்டும் குற்றவாளி அல்ல என ஓட்டளிக்கிறார். ஏன் எனக் கேட்ட்கும் பொழுது,  ‘எனக்கு தெரியல. ஆனா வாங்க பேசுவோம்’ என்கிறார். எல்லோரும் கோபமாக  இவனை எதிர்கொள்ளும் போது, ‘ஒரு மனிதனின் உயிரை அவ்வளவு எளிதாக பறிக்க முடிவு செய்துவிடுதல் எனக்கு சரியாகப் படவில்லை. வாங்க பேசுவோம்’ என சாலமான் பாப்பையா ரேஞ்சுக்கு அழைக்கிறார்.
 
 மெல்ல விவாதம் வழக்கின் ஆதாரங்கள், சாட்சிகள், அதன்
நம்பகத்தன்மையை பற்றி திரும்புகிறது. 11-1 என்று குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது, இவருடைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற வாதம் நியாயமாகப் பட ஒருவர் மாரல் சப்போர்டுக்காக மட்டுமே ஓட்டளிக்க 10-2 என மாற சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக 10-2, 9-3, 8-4 என சரியத் தொடங்குகிறது.  அவர்கள் ஒவ்வொருவரும் பேசப் பேச ஒரு குற்றச் சம்பவத்தையே நம் கண் முன்னே நிகழ்வது போல கொண்டு வந்து நிறுத்துகிறது.  ஆரம்பத்தில் ஒன்றும் சொல்லாமல் ஆரம்பித்த அந்தக் கேஸ், படம் போக போக மெல்ல நம் கண் முன்னே consrtuct ஆகிறது.  இறுதியில் Henry Fonda  யாரென்றே தெரியாத அந்த சிறுவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரா? அந்த சிறுவன் நிஜமாலுமே கொலைகாரனாக இருந்து விடுதலை கொடுத்துவிட்டால்? என்பது போன்ற விஷயங்களுக்கு rational ஆக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கொலையை காட்டாமலே க்ரைம் த்ரில்லர் பார்த்த மாதிரியான உணர்வு. கடைசி வரைக்கும் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கும் காட்சியமைப்புகள்.

 பன்னிரண்டு பேரும் பன்னிரண்டு விதமான பாத்திரப் படைப்புகள்.
ஒருவனுக்கு நியாயத்தினாலான தார்மீகக் கோபம், ஒருவனுக்கு prejudiceனால் வந்தக் கோபம்,
 ஒருவனுக்கு சொந்த அனுபவங்களின் வெறுப்பினால் வந்த கோபம், ஒருத்தனுக்கு தானும் சேரிப் பிண்ணனி என விமர்சிக்கப்படும் போது கோபம், தான் பேஸ்பால் விளையாட்டுக்கு போவது கெட்டது என ஒருவனுக்குக் கோபம் என வெவ்வேறு வகையில் கோபம் பிரதிபலிக்கிறது. அசட்டை, prejudice, பயம், சந்தேகம், விரக்தி, தன்னம்பிக்கை, இரக்கம், எரிச்சல், பொறுமை  என பன்னிரெண்டு குணநலன்கள்.

சில சமயங்களில் நம்மை அசரவைக்கும் விவாதங்கள் உண்டு. சில மாதங்கள் முன்பு இரவு ஒன்றரை மணிக்கு ஒரு காட்சி பார்க்கலாம்  என ஆரம்பித்து மூட முடியாமல் பார்த்தேவிட்ட பிறகுதான் தூக்கம் வந்தது. நான் பழைய ஆங்கில படங்கள் பார்த்தது ஒன்றிரண்டே. ஒரு கருப்பு வெள்ளை படம் இவ்வளவு intense ஆக இருக்குமென கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

சட்டென்று ஒரு பாயிண்ட்டால் மற்றவரை மடக்கும் போது அந்தக் கதாபாத்திரம் திணறுவது வேடிக்கை. சில சமயங்களில் அது பின்னிரவு என்று கூட யோசிக்காமல் சிரித்திருக்கிறேன், தனியே. கத்திக் கூர்மை வசனங்கள். . பேப்பரில் எழுதும் போது திரைக்கதையாளர் என்ன நினைத்து எழுதினாரோ அதை நேரில் காட்டுகிறார்கள். வாரக் கணக்கில் நொங்கெடுத்ததால் மிக நேர்த்தியான் நடிப்பு. அளவான பட்ஜெட்டும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

படத்தில் ஆரம்பத்தில் வைட் ஆங்கிளில் ஆரம்பித்து முடியும் போது நெருக்கமாக வைத்து எடுத்திருப்பது டென்ஷனை அதிகரிக்க உதவியிருக்கிறது.  ஆரம்பத்தில் வெப்பாமாக இருப்பதால் வெந்து வழிகிறார்கள், போகப் போக பெருமழை அடித்து படம் முடியும் போது ஓய்கிறது. அந்த காலத்தில் சன்னலுக்கு வெளியே கட்டடங்களாக செட் போடும் போது, மட்டமா இருக்கு என Fonda குறைபட்டுக் கொண்ட போது இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாத்துக்குவார் என பதில் கூறியது சால நிஜம். நம்மை அவை கன்வைன்ஸ் செய்கிறது. எடிட்டிங் கத்தி சுத்தம். ஓட்டையே இல்லையான்னு கேட்டா உண்டு, சின்ன லாஜிக். அட, அது கூட இல்லைன்னா எதுக்கு படம். டாகுமெண்ட்ரிதான் எடுக்கனும்.

 96 நிமிடப் படத்தில் 93 நிமிடங்கள் ஒரே அறையில் நடக்கிறது. படம் அந்தக் காலத்திலிருந்து இப்பொழுது வரை சிறந்த நீதிமன்றம் சார்ந்த படமாகக் கருதப் படுகிறது. இப்பொழுது ஒரு வாக்கெடுப்பில் அந்தப் பிரிவில் இரண்டாவது ரேங்க். கண்டிப்பாக Rotten tomatoesல் 100 தேறும். ஆனாலும் இந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. இந்தப் படத்தை தானே தயாரித்த Fonda இத்துடன் தயாரிப்பை விட்டுவிட்டார். (Fondaவைப் பற்றி சிறு குறிப்பு வரைய பாலாவை அழைக்கிறேன். எனக்குத் தெரியாததால்.. இந்தப் படம் பாத்திருக்கீங்களா?).

மொத்ததில் ஒரு புத்துணர்வான, க்ளாஸிக் அனுபவத்திற்கு உத்தரவாதம். 

12 Angry Men - See if you are a smart 1.

சில படங்களின் அறிமுகம் ( F- Special) 18+

Filed under , , , by Prabhu on 12/11/2009 01:51:00 PM

14

இந்தப் பதிவு கண்டிப்பா 18+ தான். அதுவும் profanity தாங்காதவங்க ஓடிப் போயிருங்க. கலாச்சாராத்தை காலையில் கழிவறையில் கண்டதாக கூவும் கலாச்சாரக் காவலர்களுக்குத் தடை.

South Park - Bigger, Longer & Uncut (1999)


எப்படியெல்லாம் கெட்ட வார்த்தையை சொல்லி திட்டலாம்னு சொல்லிக் குடுக்கவே எடுத்த படம். அமெரிக்காவின் சின்ன டவுன்ல நாலு பசங்க கனடா நாட்டு படம் ஒன்றை பார்ப்பதில் ஆரம்பிக்கிறது காமெடி.  படம் political satire வகை. Anti-candianism, anti-semitism, racism, stereotyping எல்லாத்தையும் செமயா ஓட்டிருப்பாங்க. அவனுங்க கலர் கலரா பேசுறதப் பார்த்து சிரிக்க முடியறவங்க மட்டும் பார்க்க வேண்டிய படம். Musical என்பதால் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் அதிலும் profanity மலிந்து கிடக்கிறது. Stan க்ளிட்டோரிஸ்னா என்ன என படம் முழுக்கத் தேடித் திரிவது, கனடாவை தாக்குறது, ‘என்னடா இது விண்டோஸு98, வேகமும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. விக்கும் போது என்னடா சொன்ன?’ என பில் கேட்ஸை துப்பாக்கியால் போட்டுத்தள்ளுவது, நரகத்தில் இருந்து சதாமும், சாத்தானும் கூட்டாளிகளாக வருவது, MPAA எனும் அமெரிக்க சென்ஸார் போர்டை ஓட்டுவது என பின்னுகிறார்கள். இது விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற படம். Rotten Tomatoesல் 80% இருக்குன்னா பாத்துக்கோங்களேன்.

132 ’f’கள், 77 ‘s'கள், 66 மற்றவைகள் எனப் போகிறது. படம் முழுக்க ஆறு செகண்டுக்கு ஒரு கெட்ட வார்த்தையாவது இருக்கும்ங்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தப் படம் பல காலமாக டிவியில் ஒளிபரபாகும் South Park அனிமேஷன் சீரிஸில் இருந்து எடுக்கப் பெற்ற அனிமேஷன் படம். Parody, Sarcasm, satire வகைகளை ரசிக்கத் தெரிந்தவர்கள் பார்க்க வேண்டிய படம்.

F*ck (2005)
இது ஒரு டாகுமெண்ட்ரி. இதைப் பற்றி ஹாலிவுட் பாலா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். ரொம்ப காலமா பார்க்க நினைத்து பார்த்த படம். ஆனால் எதிர்பார்ப்புக்கு புஸ்ஸு. ஒண்ணு ரெண்டு நிஜ சம்பவங்களின் சுவாரஸ்யம் தவிர மற்ற படி ஒன்றும் இல்லை. அட, அந்த வார்த்தையின் ஆரம்பம் எதுவெனக் கூடத் தெரியவில்லை எவருக்கும். ‘Fornication Under the Consent of King' என பார்வர்ட் மெஸேஜில் வருவதை நம்பாதீர்கள் போன்ற அரிதான் தகவல்கள் உண்டு. மற்றபடி எனக்கு விசேஷமாக எதுவும் படவில்லை.

Young People F**king(2007)
கனடா நாட்டுப் படமான இதன் பெயரை பார்த்தால் என்ன தோணும் என புரிகிறது. அதனால் இதைப் பற்றிய எதிலோ படித்த விமர்சனத்தில் இருந்து ஒரு வரி, “இந்தப் படப் பெயரை பார்த்து உள்ளே வருகிறாவர்கள் இந்தப் படம் ரசிக்கும் படியாக இருக்காது. ரசிப்பவர்கள், இந்தப் பெயரைப் பார்த்து உள்ளே வர மாட்டார்கள்’. இது போதும் இந்தப் படத்தினைப் பற்றிக் கூற. ஐந்து வெவ்வேறு ஜோடிகள். கணவன்-மனைவி, நண்பர்கள், விவாகரத்தானவர்கள், முதல் டேட் முடிந்தவர்கள், நண்பனும் தனது காதலியும் செய்வதை வேடிக்கை பார்க்கும் நண்பன். Quentin படங்களை போன்று Prelude, Foreplay, sex, Orgasm என பாகங்களாக இருக்கிறது. ஆனால் கதை நேராகத் தான் ஓடுகிறது. ஐந்து ஜோடிகளையும் மாற்றி மாற்றி காட்டுவதில் எடிட்டிங் நன்றாக இருக்கிறது. ஒவ்வொருஜோடியும் ஈடுபடுவது ஒரே வேலை,sex. ஆனால் வெவ்வேறான நோக்கங்கள், எண்ண ஓட்டங்களுடன் என்பதைக் காட்டுவதான படம். சுமாரான அளவு பொறூமை தேவைபடுகிறது. ஆகச் சிறந்த படைப்பு இல்லையானாலும் பார்க்கத் தகுதியானதே.
(’மேற்படி’ விஷயங்களை பற்றி கேட்பவர்களுக்கு, இதுவரை இல்லாத ஒன்றை எதுவும் இவர்கள் காட்டிவிட வில்லை)

Team America: World Police ஒரு படம் இருக்கு. அதுவும் எதுக்கும் குறைஞ்சதில்லை. அமெரிக்காவின் உலக போலீஸ் அடாவடியை கிண்டல் செய்து எடுத்த Satire. அதைப் பற்றி சொல்ல நேரமின்மையால் விட்டு விடுகிறேன். நேரமும் ஆர்வமும் இருப்பின்* பாலா அவர்கள் சொல்லுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

South Park விமர்சனம் எழுத முயற்சி செய்து முடியாத காரணத்தால் இப்படி ஒரு கலப்பட அறிமுகம்.

ஹாரி பாட்டரும் மாயாபஜாரும்

Filed under , , , by Prabhu on 12/06/2009 12:33:00 AM

24
ஒரு தடவ சென்னை வந்திருந்தாங்க J.KRowling. அப்போ அவங்களுக்கு ஒரு கதை எழுதுற ஐடியா வந்திருந்ததே தவிர பேரு கூட முடிவு செய்யல. பொழுது போகாமல் ஹோட்டல் டிவி ரிமோட்டுக்கு உடல் நோவோ என்னவோ அந்த அமுக்கு அமுக்கி விட்டு கொண்டியிருந்தார்.  அந்த யோசனையுடன் சும்மா சானல் விட்டு சானல் ரிமோட் குரங்கு தாவும் பொழுது ஒரு காட்சி கவர்ந்துவிட்டது அவரை. அதன் கிராஃபிக்ஸால் பிரமித்து போன அவர் அதைத் தழுவி ஒரு கதை எழுதுனாங்க. அதில் அந்தப் படத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை சுட்டு  வச்சுகிட்டாங்க. கண்ணாடி ஒன்று Harry Potter ல்  'The Mirror of Erised' (desire பின்னாலிருந்து erised)  என்று ஒரு முக்கியமான, சுவாரஸ்யமான விஷயமாக கதையில் (முதல் பாகம்) காட்டப்பட்டிருக்கும். நாம் ஆசைபட்டதைக் காட்டும். இந்த கண்ணாடியை 60 வருடங்களுக்கு முன்னால் நம்ம ஊரு படத்தில் காட்டியிருக்கிறார்கள்.‘மாயா பஜார்’ என்ற படமொன்று 1957ல் கருப்பு வெள்ளையில் வந்தது. தெலுங்கர்கள் எடுத்த இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப் பட்டு அடுத்த மாதம் தமிழ் நாட்டில் வெளிவந்து சக்கை போடு போட்டது வரலாறு.  அதுவே ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டராக’ உரு பெற்றிருக்கிறது. அந்தப் படத்தில் இந்த கண்ணாடி போன்ற ஒரு விஷயத்தை பயன்படுத்தியிருப்பார்கள்.

அப்புறம் அந்த கடோத்கஜன் சாப்பிடும் காட்சியெல்லாம் நாம் மறக்க கூடிய விஷயமா? எல்லாம் அந்த காலத்திலே அதிகப்படியான கிராஃபிக்ஸ் காட்சிகள், State of the art என்று சொல்வார்களே, அது போல. அந்த கண்ணாடி மேடர சுட்டது போதாதுன்னு ரங்காராவ் ‘கல்யாண சமையல் சாதம்’ சாப்பிடும் முறைய காப்பி அடிச்சு அவங்க மொழிக்கு மாற்றும் போது அடையாளம் தெரியாமல் இருக்க லத்தின் மொழியில் 'Wingardium Leviosa', 'Liberocorpus' எனக் கூறி பொருட்களைப் பறக்கவிட்ட போது லவட்டினது நம்ம கோவணத்த தான் என்பது கூட தெரியாமல் வாயில் ஈ முட்டை போட இடம் கொடுத்து உட்கார்ந்துகிட்டு கை தட்டிகிட்டு இருக்கோம்.

(தெலுங்குப் பதிப்பே கிடைத்தது. தமிழில் கிடைக்கவில்லை. கிடைத்தால் சொல்லுங்க. எனக்கு பிடித்த பாட்டு. ஃபுல் மீல்ஸ் எஃபக்ட்.)


நம்ம கதையில் கிருஷ்ணர்தான் எல்லாமே தெரிந்தவர். என்னவெல்லாம் நடக்கும்னு  தெரிஞ்சுகிட்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களை இயங்க வைப்பார். ஒரு சில சமயங்களில் ஏன் இப்படி பண்றாருன்னு கூட இருக்கவங்களே வெறுத்தாலும் நம்பிக்கைக்குரியவர். கிருஷ்ணருக்கு இன்னொரு பேரு தாமோதர்னு தெரிஞ்சா ’Albus Dumbledore’ பத்தி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.

கம்ஸன் பொதுவா நல்லவன்தான். ஆனால் தங்கையோட மகனால சாவு என அசரீரியால் தெரிந்த பிறகு அதை தடுக்கிற முயற்சியில் கெட்டவனாகிப் போய் அவர் கையால் சாகிறான். மூடிகிட்டு அவன் பாட்டுக்கு இருந்திருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அரைகுறையாக கேட்ட தீர்க்கதரிசனத்த வச்சு தனக்கு சாவு ஹாரி கையால எனக் குருட்டுத்தனமாக முடிவு செஞ்சு செத்தத படிச்சவங்க மறந்திருக்க முடியாது. இப்படியெல்லாம் இங்கிருந்து கொண்டு போன சரக்கை மறைக்க அவங்க கலாச்சாரத்த கொண்டு மழுங்கடிச்சது மட்டுமில்லாமல் இந்திய கதாபாத்திரங்கள் இரண்டை கேவலமாகப் படைத்திருக்கிறார்.

இதற்கு மேலும் என்னால் பல விஷயங்கள் கூற இயலும். ஆனால் அதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன்  விரைவில் சுப்பிரமணிய சுவாமியை சந்திக்க உள்ளேன்.

பின்குறிப்பு - அடுத்து நமது குழந்தைகள் படமான ‘கந்தசாமி’யை உல்டா செய்து அவர்கள் ஊர் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல வெளியிட்டு நம்மையும் ஏமாற்றிட உள்ளதாக நாம் அறிகிறோம். இது போன்ற காரியங்களை இதற்கு மேலும் நடக்காமல் தடுக்க தாக்கரே, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., ராமதாஸ் போன்ற நம் கலாச்சாரத்தை கழிவறையில் சுருட்டி வைத்து காப்பாற்றும் (பயன்படுத்தும்) காவலர்களை அழைக்கிறேன். இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறைகூவல்!

Ninja Assassin - Movie

Filed under , , by Prabhu on 12/02/2009 12:54:00 AM

10

சென்னையில் இருந்த போது உடம்பு(ம்) சரியில்லாமல் போனதால் பாலா சொன்ன 'Ninja Assassin' பார்ப்பது இயலாம போனது. எஸ்.எம்.எஸ் அனுப்பின கார்த்திக்  உடன் கொஞ்ச அதிக நேரம் பேச கூட முடியவில்லை. ரெண்டு நாள் ஆகியும் அலுப்புடைய hang over தீராமல் போக, இனிமேல் வீட்டில் ஓய்வெடுத்தால் வேலைக்காகாது என அஜய்க்கு டிக்கெட் எடுக்கும் படி குறுந்தகவல் அனுப்பி விட்டு கிளம்பிவிட்டேன் பிக் சினிமாசின் கணேஷ் திரையரங்கிற்கு.

------------------------------------------------------------------------------------------------------------------


படத்தின் பெயரே ரத்தத்தில் தெறித்த எழுத்துக்களாகத்தான் திரையில் விழுந்தன. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இந்தப் படம் என்ன வகையென்று.

படத்தின் ஹீரோ Rainன் வேகத்தை 'Speed Racer'ல் முன்னோட்டமாக பார்த்த  Wachowski Brothers, இந்தப் பையன வச்சு ஒரு கதை பண்ணலாமே என யோசித்து ஒரு கதை பண்ணி சரியாக வராமல் சொதப்ப, இந்தப் படத்தின் திரைகதையாளரை(J.Michael Straczynski) போனில் கூப்பிட்டு சொல்ல, அவரும் நண்பர்களுக்காக 60 மணியில்(தூங்கிய 7 மணி நேரமும் சேர்த்து) திரைக்கதையை எழுதி முடித்தாராம். அதனால் தானோ என்னவோ பெரியதாய் கதை எதுவும் இல்லை.

தியேட்டர் நல்ல வகையில் ஏசி செய்யப்பட்டிருந்தது. அதுவும் போதாதென்பவர்களுக்கு ஜில்லிட வைக்கும் சண்டை காட்சிகள் படத்தில் இருந்தது. படம் அங்கே  R rating கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படிபட்ட படத்திற்கு 4 வயது பையனுடன் வந்த தமபதியினரை நினைத்து ஆச்சரியப் பட்டதை விட, இந்த வயதில் இப்படி படங்களை சாதாரணமாக பார்ப்பவன் பின்னால் என்னென்ன அடுழியம் செய்வானோ? அப்புறம் கார்த்திக் சொன்னா மாதிரி இப்படி விஷயங்கள் நடக்காமல் என்ன செய்யும்.

ஆயிரம் வருடங்களாக 50 பவுண்ட் தங்கத்துக்காகக் கொல்லும் ஒரு கொலைகாரக் 'குடும்பம்' தான் Ozunu. சிறுவர்களைக் கடத்தி கொண்டு போய் மகனென்ற ஸ்தானம் அளித்து அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து கொலை கருவிகளாக மாற்றுவதுதான் அந்த குழுவின் வேலை. வழக்கம் போல் குருவிற்கு அடுத்ததாக வரும்ளவு சிறந்து வருகின்ற நாயகன், வழக்கம் போல காதலியின் சாவினால் மனம் மாறி அந்த கூட்டத்தை வேரறுத்த பின் தான் விடும் மூச்சுதான் முதல் மூச்சு என உறுதி பூணுகிறான். மீதியெல்லாம் சண்டை, சண்டை, சண்டை. இந்த ரக்சிய குழுவைப் பற்றி விசாரணை செய்பவராக வரும் Naomie Harris அழகாக இருப்பதாக தோன்றியது. பாலா, தங்கள் கருத்து? அந்தப் பெண் தடயவியல் ஆராய்ச்சியாளர் என்ற பொழுது , 'அப்போ தடவிட்டே இருப்பீங்களா?' என்று குரல் கேட்டது.

பாலா சொன்னாரே என்று அனல் பறக்கும் சண்டைகாட்சிகளை எதிர் பார்த்து போனால்  இருளில் புதைந்த சண்டை காட்சிகள் க்ளைமாக்ஸைத் தவிர(நிஜமாகவே அனல் அவர்களைச் சுற்றி பறக்கிறது). இருளிலேயே சண்டை போடும் கும்பல்தான் கதையே. இருளில் இவர்களைத் தடுக்க சக்தி கிடையாது. படம் ஓடும் போது ஒருவன் கதவைத் திறந்து உள்ளே வந்தபின் வெளிச்சம் வந்து அடங்கியதைப் பார்த்த ஒருவன், 'யாருடா அவன் நிஞ்சா மாதிரி வர்றான்' என்றான்.

மூன்றே வகை ஆயுதங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி கொல்ல முடியுமோ, மனித உடலில் எங்கெல்லாம் கத்தி பாய முடியுமோ அதெல்லாம் சாத்தியப் பட்டிருக்கிறது. தீபாவளி ராக்கெட் போல 360 டிகிரியிலும் ரத்தத்தை சிதற விட்டு வேடிக்கை காண்பித்திருக்கிறார்கள். சளக் சளகென்ற கத்தி பாய்ச்சல்கள் Gore! Gore! Gore! [Not enough for me personally :) ]

சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் அதிகபட்ச உழைப்பின் அடையாளம். நாயகனின் திறமை அவன் தனியாக பயிற்சி செய்யும் காட்சியில் அந்த சங்கிலியை சுற்றுவதில் தெரிந்தது. ஒரு துண்டை சுற்றும் போதே எனக்கு கண்ட இடங்களில் பட்டு வலிக்கிறது. அவர் சங்கிலியை வைத்து விளையாடியிருக்கிறார். Norman Harris  டார்ச் அடிக்கும் வெளிச்சத்தில் நாயகனும் இன்னொருவனும் போடும் சண்டை, யப்பா... சான்ஸே இல்ல. படத்திலே சிறந்த சண்டை காட்சியாகப் பட்டது எனக்கு. சண்டைக் காட்சிகளுக்கு முட்டு கொடுக்கும் விதமாக மிக அருமையான பிண்ணனி இசை. கடைசியில் வில்லனைக் கொல்லும் அரை நிமிடம் மட்டும் தெலுங்கு படம் க்ளைமாக்ஸ் போன்று ஸ்லோமோஷனில் 'ஜங் சக்கு சக்கு' என ஒரு ம்யூஸிக் கொடுத்த மாதிரி ஃபீலிங் :). ஹி.. ஹி... உங்களுக்கு என்ன தோணியது எனக் கூறுங்கள், பார்த்துவிட்டு.

ஆங்... சொல்ல மறந்துவிட்டேனே! இந்தப் படத்தில் தமிழாக்கம் நன்றாக இருந்தது. நல்ல தமிழில் பேசினார்கள். படத்தில் ஆங்கில உவமைகளையும் தமிழில் நன்றாகவே கையாண்டிருந்தார்கள்.

இந்த படம் பார்ப்பதன் முக்கிய காரணமே Gore  என்பதால் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அடுத்தக் காட்சியை சொல்லும் அளவுக்கு உலகலாவிய பழைய கதை. திரைக்கதை கொஞ்சம் கூட நோகாமல் எழுதியிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் அதிக நேரம் அதில் செலவழித்திருக்கலாம். சண்டைக் காட்சிகளை மட்டுமே நம்பி வந்த படம் கதை இல்லாத திரைகதையால் தொய்வாக இருக்கிறது. அஜய் கொட்டாவி விட்டுகிட்டு இருந்தான்.  நகராத கதையால் சிலர் புலம்பினார்கள். இருட்டிலே தொடர்ந்த சண்டை காட்சிகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதுவும் நொடிக்கு ஆயிரம் ஆக்ஷன் காட்டும் ஹீரோ, கேமராவுடன் இருளில் தொடர்ச்சியான நிகழ்வுகள் கண்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமென்று கூற இயலாது. பார்க்கலாம்.


இதையும் மீறி  இந்தப் படம் பார்க்கலாம்னா அது ஹீரோவுக்காகத் தான். மனுஷன் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார். இவர் ப்ரூஸ் லியின்
படமான 'Enter the Dragon'  ரீமேக்கில நடிக்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இவர் ஒரு பாப் ஸ்டாரும் கூட. இந்தப் படத்திற்காக இவரின் சிக்ஸ் பேக் உடல்.


Ninja Assassin - Bloody....
நிஞ்சா இங்கே... கதை எங்கே?

சும்மா பறந்து பறந்து சண்டை போடுகிறார் நிஞ்சா. ஆனால் இங்கே 2012 காட்டுத்தனமாக ஓடிக் கொண்டிருப்பதால் சீண்ட ஆள் இல்லை. 2012க்கு என்னய்யா இன்னும் இப்படி திருவிழாக் கூட்டமாவே இருக்குது.

Behind the scenes