மைக்ரோ ப்ளாக்கிங் 2

Filed under , , by Prabhu on 11/28/2009 10:00:00 AM

11

நேரமின்மையால் நிறைய விஷயங்கள் எழுத முடியாமல் போகிறது. ஆனால் எழுத வேண்டாம் என முடிவு செய்த பிறகுதான் ஏதாவது உருப்படியாக தோன்றும். அல்லது ஏதாவது சின்ன விஷயமாக பேசலாம் எனத் தோன்றும். அதற்காகத்தான் இந்த மைக்ரோ ப்ளாக்கிங்.

ஏதோ மைக்ரோ ப்ளாக்கிங்கை கண்டுபிடித்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறேன். பொதுவா 'ட்விட்டரில்' நாம் பதிவு செய்யும் 'ட்வீட்'டுகளையும் மைக்ரோ ப்ளாக்கிங் என்றுதான் சொல்வார்கள். நானும் ட்விட்டரில் இருக்கிறேன் இப்ப. காலையில பல் விளக்குறதக் கூட அதுல போடுறாங்க. நாமளும் ஏன் போடக் கூடாது என முடிவு எடுத்து சேர்ந்துட்டேன். எல்லாரையும் அதுக்கு கூப்பிடறேன். வாங்க. ஏற்கனவே இருந்தா வலது பக்கத்தில் என் ட்விட்டர்  பக்கத்துக்கு வழி கொடுத்திருக்கேன். வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.

ஒரு எசகுபிசகான ஜோக்
ஒரு நாள் வகுப்பை முடித்துக் கிளம்பும்போது ஆசிரியர், "நாளைக்கு ஒழுங்கா பரிட்சை எழுத வந்துறனும். வீட்டுல யாராவது இறந்தாலோ, இல்ல உன் உடம்புக்கு வர முடியாத அளவு ஏதாவது  ஆனாலோ ஒழிய எந்த விதமாக சாக்கும் ஏத்துக்க மாட்டேன்". ஒரு குறும்புக்கார பையன், "செக்ஸால் எழுத முடியாத அளவு ரொம்ப டயர்டா ஆயிருந்தா?" அப்படின்னு கேட்டான். க்ளாசே குபீர்னு சிரித்தது. சிரிப்பலை அடங்கிய பிறகு ஆசிரியர், "அதெல்லாம் செல்லாது, செல்லாது. இன்னொரு கை வச்சு எழுது'ன்னு சொன்னாங்களாம்.

இந்த பதிவை சனிக்கிழமை 10 மணிக்கு செட் செய்திருந்தேன், ஒரு சோதனை முயற்சியாக. சரியாக என் பரிட்சை ஆரம்பமாகும் நேரம். இதுவும் போஸ்ட் ஆகல. பரீட்சையும் நடக்கல. அவனுங்க தொழில்நுட்ப சிக்கலில் எனக்கு இப்ப தடைபட்டு போய் என்ன செய்யவெனத் தெரியாமல் முழிக்கிறேன். சென்னை போய் வந்ததில் மன உளைச்சலும் அலுப்பும் தான் மிச்சம். எழுதி முட்டை வாங்கியிருந்தால், இந்த மதிப்பெண் என் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படாமல் போயிருந்தால் வருத்தப் படாமல் மற்ற பரீட்சையை கவனிக்கப் போயிருப்பேன். ஒரு வருடம் படிப்பை விட்டதில் முக்கியமான பரீட்சை எழுதக் கூட முடியாததுதான் வருத்தம். பரீட்சை வைத்த புண்ணியவான்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு அடுத்த பரீட்சைக்கு தயாராகிறேன். யாரும் வருத்தப்பட்டு இரங்கல் தெரிவிக்க வேண்டாம். நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன்.  :)

மைக்ரோ ப்ளாக்கிங் 1

Filed under , , by Prabhu on 11/26/2009 12:35:00 AM

9

'Paa' பாடல்கள் இளையராஜாவின் இசையில் அருமையாக வந்திருக்கு. தன்னுடைய பழைய பாடல்களை ரிப்பீட்டியிருக்கிறார் என்றாலும் அவரது ஆர்கெஸ்ட்ரேஷனும் துல்லியமும் வாய்பே இல்ல. அவ்வளவு அழகா வந்திருக்கு 'Gumsum' எந்தப் பாடலின் ட்யூன் என்று தெரியவில்லை. ஆனால் 'Halke se bole' , 'புத்தம் புது காலை' எனத் தொடங்கும் தமிழ் பாட்டு போன்று  இருக்கிறது. 'Udhi udhi' எல்லா வெர்ஷனும் நல்லாருக்கு. அமிதாப் ஒரு பாட்டு சின்னப் பையன் மாதிரி பாடியிருக்கார். நல்லா இருக்குன்னுதான் நினைக்கிறேன், சரியா கேட்கவில்லை. தீம் ட்ரைலரில் கேட்டிருக்கலாம்.
மொத்தத்தில் Paa - soothing. தமிழில், இதமாக இருக்கிறது என்று சொல்லலாமோ?

'பையா' படப் பாடல்களும் வந்துவிட்டது. அப்பாகிட்ட ஐடியா கேட்பாரோ? இவரும் தன்னுடைய பழைய பாடல்களில் இருந்து இசையை மறுபதிப்பு செய்த மாதிரி இருக்கு. ஆனால் இந்தப் படப் பாடல்கள் வெற்றிக்கான அடையாளங்கள் தெரியுது.   'என் காதல் சொல்ல நேரமில்லை' என்ற பாடலில் யுவன் தன் குரலில் கிளப்பியிருக்கிறார். அவர் ரசிகர்களை பித்து பிடிக்க வைக்க இது போதும். பையா - அப்பாவுக்கு பையன்.

ஒரு நாள் சென்னையில எங்க சுத்தலாம்?  ஐடியா தேவைப் படுகிறது. பதிவுலக ஐடியா மணிக்கள் வரவேற்க்கப் படுகிறார்கள்.

என்ன கொடும சரவணன் இது! அதுக்குள்ள CAT வந்துருச்சே. ரெண்டு நாளில் நான் பதிவு செய்த ஸ்லாட் வருவதால் CAT எழுத செல்கிறேன். எல்லாரும் கடவுளை வேண்டிக்க வேண்டுகிறேன். பாலா, தருமி, வால்ஸ் மாதிரி ஆட்கள் கடவுளை இல்லைனாலும் 'இந்தப் பையன் தேறனும்' என்று மனதுக்குள் ஒரு செகண்ட் நெனச்சுக்கோங்க.

டாப்பு அடிக்கலாம் - 5

Filed under , by Prabhu on 11/19/2009 05:00:00 PM

23

சமீபத்தில் ( 16.11.09) செய்தி கேட்டுக் கொணடிருந்தேன். இந்திய மீனவர்களை இலங்கை வீரர்கள் தாக்கிய சம்பவம் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். வழக்கமா அவனுங்க பண்ணுற அநியாயம் தான என கேட்டா ஒரு விந்தையான விஷயம் சிக்கியது. அவர்களை அடித்ததவர்களில் சீனர்களும் இருந்திருக்கிறார்கள். சீனக்காரர்களுக்கு இங்கு என்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் புரியவில்லை. ஏற்கனவே இலங்கையில் ரேடார் வைக்க முயற்சிகள் நடந்தன. இதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கிறேன். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் விமானங்கள் கொடுத்ததுடன் பயிற்சியும் கொடுத்துள்ளது. மியான்மரில் விமானதளம் வைத்துள்ளது. 1982லபாக்.,கிற்கு  ந்யூக் கொடுத்ததா கேள்வி. என்ன பண்ணுறாய்ங்கன்னு தெரியல. விரைவில் உலக போலீஸ்-2 ஆகலாம். ஏன்னா நம்மளப் பற்றி பல வகையில புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க (அமெரிக்கா பிடிக்காதவங்களப் பத்தி புலம்புற மாதிரி).
---------------------------------------------------------------------------------------------------------------
விஜய் 'மதுர', அஜித் 'ரெட்', விஷால் 'திமிரு' என பல தேறாத படங்கள் மதுரையை மையமாக வைத்து எடுத்த போது கூட நான் கவலைப் படவில்லை. ஆனால் இப்போ 'மதுரை சம்பவம்' என ஒரு படம் வந்தது பாருங்க, அதுமாதிரி ஒரு அவமானம் கிடையவே கிடையாது இந்த ஊருக்கு. கொஞ்ச நாள் முன்ன வரை அப்பப்ப விளம்பரம் வேற டிவியில் போட்டு கொன்னுட்டாங்க. எல்லாருக்கும் ஒரு படம் பிடிக்க வில்லை என்றால் வெறுப்பு வரலாம். ஏன் கோபம் கூட வரலாம். உ.ம்.சன் திரைப்படங்கள். ஆனால் இந்த படத்தின் டிரைலர் பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி கூசுது, அவமானம் எனக் கூட சொல்லலாம். எனக்குதான் என நினைத்தால் எனக்கு தெரிஞ்சு நண்பர்கள் பற்பல மக்கள் இதைத்தான் சொல்றாங்க. எங்கம்மாவுக்கே எரிச்சலா இருக்கு.  இந்த அவமானம் தேவையா? அதுவும் அந்த ஹீரோ பேசுற தமிழ் இருக்கே... யப்பா.... மதுரைத் தமிழாம். இந்த ஒத்த வார்த்தைக்கே தூக்கு போட்டுக்கலாம் போல. ஹாலில் தனியாக டிவி பார்க்கும் பொழுது இந்த டிரைலர் போட்டால் ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொள்வேன், யாரும் நம்மள பாக்கலையே!

மதுரை சிட்டி. நான் சிட்டி யூத். எங்க ஊரில யாரும்  தாவணியில் கல்லூரிக்கு போவதில்லை(கார்த்திக் நோட் பண்ணிக்கோ!). எல்லோரும் ஜீன்ஸ் அணிகிறோம். காஃபி ஷாப் போகிறோம். பீஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஒவ்வாதவைகளை உள்ளே தள்ளுகிறோம். அதனால நாங்களும் சிட்டிதான்! இனிமே எவனாவது வந்து தாவணி, பட்டிகாடு, அரிவாள், ரவுடி, கிராமத்து காதல் கதைனு வந்தீங்க..... நடக்குறதே வேற.

 --------------------------------------------------------------------------------------------------------------
 அப்பா நல்லெண்ணெய் பாக்கெட்டை வெட்டி ஊற்ற வேண்டிய வேலை இருந்தது. நான் பாக்கெட்டை பிடித்துக் கொள்ள அப்ப வெட்ட தயாரானார். நான் சரியாக பிடிக்கவில்லை என நினைக்கிறேன். "ஏய், வெட்டுறதுக்கு எசவாப் பிடிடா", என்றார். பொதுவாக பயன்படுத்தும் வார்த்தை என்றாலும் அந்த 'எசவா' என்ற வார்த்தை பொறி தட்டியது. நல்ல தமிழில் 'இசைதல்' எனற வினைச்சொல் இருக்கிறது. ஆமோதித்தல், வளைந்து கொடுத்தல் போன்ற சமயங்களில் பயன்படுத்துவோம். 'இசைவாக' என்பதைத்தான் நாம் கொச்சையாகப் பயன்படுத்துகிறோம் என நினைக்கிறேன். இந்த வார்த்தைப் பிரயோகம் எல்லோர் வட்டார மொழியிலும் இருக்கிறதா? இங்க கொஞ்சம் தனித்துவமா இருக்குமோ என்ற நினைப்பில் எழுதினேன்.

இப்ப சொன்னேன் பாத்தீங்களா? இது மதுரைத் தமிழ். நல்ல தமிழ்.
---------------------------------------------------------------------------------------------------------------

லிட்டில் ஜான்
நம்ம ஜானுக்கு ஒரு  குட்டி சைக்கிள் வாங்கனும் என ரொம்ப நாள் ஆசை. அம்மாகிட்ட கேட்டான். அதற்கு அவன் அம்மா, ஜீசஸிற்கு கடிதம் எழுது, அவர் நிறைவேற்றி வைப்பார் என சொல்கிறாள். அவனும் எழுத அமர்கிறான். "அன்புள்ள ஏசுவே, நான் ரொம்ப நல்ல பையனா இருந்துகிட்டிருக்கேன். எனக்கு ஒரு சைக்கிள் வேணும். இப்படிக்கு ஜான்" என எழுதுகிறான். பிறகு யோசனையுடன் அதைக் கிழித்துவிட்டு, "அன்புள்ள ஏசுவிற்கு, நான் சில சமயங்களில் நல்ல பையனாக இருந்திருக்கிறேன். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஜான்", என எழுதி அதையும் கிழித்துவிட்டு புதிதாக எழுதத் தொடங்கினான். "அன்புள்ள ஏசுவே, நான் நல்ல பையனாக இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். எனக்கு நீங்கள் ஒரு குட்டி சைக்கிள் தர வேணும். இப்படிக்கு ஜான்", என எழுதினான். இதுவும் பிடிக்காம கிழித்துவிட்டு வெளியே சென்றான். செல்லும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாதா சிலையை பார்த்ததும் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விடுவிடுவென ஓடி வந்தவன், அதை படுக்கையின் அடியில் வைத்து விட்டு கடிதம் எழுதினான். "அன்புள்ள ஏசுவிற்கு, நீங்க உங்க அம்மாவ மறுபடி பார்க்கனும்னு நினைச்சீங்கன்னா மரியாதையா எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைங்க. இப்படிக்கு ஜான்".
---------------------------------------------------------------------------------------------------------------

நம்ம ஊருகாரன் அமெரிக்காவுல இருக்கான். அவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளன். ஒருநாள் சோகமாக 'Gay பாரில் மார்டினி(ஸ்ட்ராங். டயர்டா/சோகமா இருந்தா அடிப்பாங்க போல) ஆர்டர் செய்கிறான். ரெண்டு, மூணு ரவுண்டு கப் கப்புனு அடிக்கிறத பாத்த பார்மேன், "என்னப்பா ஏதாவது கஷடமா?" எனக் கேட்டான். அதற்கு அவன், "எங்க அண்ணனும் 'gay'யாம். எனக்கு இன்னைக்கு தெரிஞ்சப்போ எவ்வளவு அதிர்ச்சி தெரியுமா?" என்றான். பார்டெண்டர், இந்தாப்பா இன்னொன்னு போட்டுக்கோ எனக் கொடுக்கிறான். அடுத்த நாள் அவன் வருகிறான். மீண்டும் தாறுமாறாக தண்ணி அடிக்கிறான். என்னவென்று கேட்டதற்கு, "என்னோட ரெண்டாவது அண்ணனும் gayயாம் இன்னைக்கு தெரிஞ்சது. இவ்வளவு காலமாக இந்த உண்மை எனக்கு தெரியவே தெரியாது" என்றான். பரிதாபப்பட்ட பார்டெண்டர் இன்னும் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தான். மறு நாளும் அவன் வந்தான். இன்னைக்கு என்ன என்று பார்டெண்டர் கேட்டதற்கு, "என் தம்பியும்..." எனக் கூறக் கடுப்பான பார்டெண்டர், "ஏன்யா, உங்க குடும்பத்துல யாருமே பொம்பளைய லவ் பண்றவங்களே இல்லயா?" எனக் கேட்க அவன் அப்பாவியாய், "ஏன் இல்ல? என் தங்கச்சி இருக்காளே".
--------------------------------------------------------------------------------------------------------------
கவிதையெல்லாம் எழுதுவாங்க எல்லாரும். நான் ஒண்ணு இங்கிலிபீசுல எழுதினேன். பிரமாதமான வார்த்தைகள் எல்லாம். இல்லை; உரைநடை வார்த்தைகள் போன்று எளிமையாக எழுதினேன். ஆனால் ஒரு வலுவான மையக் கரு வைத்திருந்தேன். ஆனா அதெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. சப்பயா நாலு டயலாக் சொல்லிட்டு கடைசி வரியில ஒரு இங்கிலீசு கெட்ட வார்த்தையோட முடிச்சிருக்கேன். யாராவது அதையும் மீறி ஆப்பு வேணும்கிறவங்க எ-கடிதம் மூலம் என்ன தொடர்புங்கோ!

கடவுள்?

Filed under , , by Prabhu on 11/15/2009 03:05:00 AM

21

கடவுள் என்ற வார்த்தையை எடுத்தாலே பிரச்சனை ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் இருக்கிறாரா என்ற தத்துவ விசாரணையை பேசுவதென்றால் எல்லாரும் அவரவர் கருத்தைக் கிட்டதட்ட திணிக்கும் தொனியில் பேச ஆரம்பிக்கின்றார்கள். கடவுள், மதம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் பெரும் பிரச்சனை என்னவென்று யோசித்தால், நாம் எப்பொழுது அதைப் பற்றி கூறினாலும் நமது தொனி நமது கருத்தை அடுத்தவர் மீது திணிப்பதாகவே தோன்றுகிறது. அடுத்தவரிடம் இருந்து நமது கருத்துக்கான பிரதியை எதிர்பார்க்கும் வகையில் நாம் அவர்கள் நம்பிக்கையில் கை வைப்பதாகத் தெரிகிறது. அதிலும் அதற்கு பதில் சொல்பவர்களைப் படிக்கும் போது அவர்கள் சிறிது சண்டை செய்வது போலவே 'தோன்றும்'. ஏனென்றால் அவரவருக்கு அவரவர் நம்பிக்கையில் பெரும் நம்பிக்கை.

கடவுளை நம்புவர்கள்தான் நல்லா சண்டை போடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நிகராக சண்டை போடுகிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அதுவும் தமிழ் நாட்டு கடவுள் மறுப்பாளர்களின் 'கொள்கை பிடிப்பு' புல்லரிக்கிறது. நம்ம ஊரில் கடவுள் மறுப்பிற்கு பெயர் போனவர்கள் திராவிடக் கட்சியினர். அவர்களில் புகழ் பெற்ற தலைவரை எடுத்துக் கொள்வோம். அவர் கடவுளை மறுக்கிறார். மிக நல்லது. இந்து மதத்தையும் அதன் மூட  நம்பிக்கைகளையும் சாடுகிறார். சரிதான். ஆனால் எனக்கு குழப்பம் நேருவது எவ்விடத்தில் என்றால், அவர் ரம்ஜானுக்கு கஞ்சி குடிப்பதும், கிருஸ்துமஸுக்கு கிருஸ்துவப் பாடல்கள் கேட்பதும் எவ்வகையில் சேத்தி எனத் தெரியவில்லை. அதற்கு அவருக்கு உரிமை இருந்தாலும், கடவுள் மறுப்பு இங்கே எங்கு வெளிப்படுகிறது என புரிபடவில்லை. ஒருவேளை இந்து மதம் பல மதங்களின் கலவை என்பதால் அதற்கு மத நம்பிக்கை அற்றவனைப் பற்றி பேச நேரமில்லாமல் போனதும், மைனாரிட்டி ஓட்டென்று வந்தால் கடவுள் என்ன, சாத்தானென்ன, வா, 60:40 வைத்துக் கொள்ளலாம் என்பதோ காரணமாக இருக்கலாம்.

கடவுள் எனப் பேசும் போது மதம் என்ற ஒன்று உள்ளே வந்து விழுகிறது. இது என்ன சொல்லுகிறது? ஆணுறை பயன்படுத்தாதே, மின்விசிறி பயன்படுத்து, புற்று நோயை குணப்படுத்து, ஆனால் விஞ்ஞானத்தை நம்பாதே. 2000 வருடங்கள் முன்னாலே அவர் இதைக் கூறினார், நடந்தது என்பதை நம்புகிறீர்களா? என்னைக் கேட்டால் நம்பும் போது நம்புகிறேன். யோசித்து பார்த்தால், கஷ்டம். அதிலும் இப்பொழுது வரும் விஞ்ஞான விஷயங்களை பைபிளில்அப்பொழுதே கூறியிருக்கிறார்கள் எனும் பொழுது, அடடா, அவங்கள விட்டுட்டு தேவையில்லாம கலிலியோவையும், கோபர்நிகஸையுமல்லவா கொன்னுட்டோம் எனத் தோன்றுகிறது.

மத அடிப்படைவாதத்தின் அர்த்தமும் என் சிறுவயது மூளைக்கு விளங்க மாட்டேங்கிறது. கருத்தடை, உயிர்தொழில் நுட்பவியல், காண்டோம், மிக்கி மவுஸ் இதெல்லாம் ஏன் மதங்களிடம் இந்தப் பாடுபடுகிறது எனத் தெரியவில்லை.  கேட்டால், கடவுள் மீது அநியாயமாக பழி போடுகிறார்கள். ஒரு சின்ன குட்டி கதை. ஒரு பாதிரியார் புதிதாக சர்ச்சில் சேருகிறார். பின்னால் அவருக்கு கல்யாணமும் நடக்கிறது. சம்பள கூட்டப்படுகிறது. குழந்தை பிறக்கிறது, கூடுதல் சம்பளம். இரண்டாவது பிறக்கிறது, மீண்டும் கூட்டப் படுகிறது. இப்படியே குடும்ப உறூப்பினர் எண்ணிக்கையும் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சர்ச் ஒன்று கூடி ஒரு கூட்டம் நடத்தி அவரை எதிர்கொள்ளுகிறது. அதற்கு அவர், "குழந்தை மழையைப் போல கடவுள் கொடுத்த பரிசு. அதை மறுக்க நாம் யார்?" என்கிறார். கூட்டத்திலிருந்த ஒருவன் எழுந்து, "சாமி, கடவுள் கொடுத்த மழைதான். ஆனால் செருப்பும், குடையும் பயன்படுத்தறதில்ல? அதுமாதிரிதான். பாத்து இருந்துகங்க சாமி." என்றான்.

இன்னும் நான் கடவுளைப் பற்றி நான் பேசவில்லை என்று நினைக்கிறேன். இதுவரைப் பேசியது கடவுள் என நாம் பின்பற்றும் மதங்களின் நம்பிக்கைகள்.
இவ்வளவு பேச ஆரம்பித்த பிறகு நான் எதை நம்புகிறேன். கடவுளை நம்புவதா, கடவுளை நம்புவதை மறுப்பதை நம்புவதா என யோசிக்கும் பொழுது, இரண்டும் விவகாரமான விஷயம், இரண்டுமே வேண்டாமென நினைக்கிறேன். நம்புவதற்கென்ன? நம்புகிறேன். ஆனால் என் கேள்விகளுக்கு கடவுளிடம் இடமிருக்கிறதென்றாலும் மதங்களிடம் இடமில்லை. தமிழில் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சொல்கிறேன். Im an Agnostic. Agnostic? அடுத்த பதிவுல.

-தொடரும்

பின்குறிப்பு - ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை. நான் என்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். இதை நான் யாரையும் ஏற்கச் சொல்லவில்லை. உங்களுக்கு சுவையாகப் பட்டால் படிக்கலாம் என்கிறேன். இது ஓடும் எண்ண ஓட்டங்களும், சில சேகரித்த விஷயங்களுமே. அதப் படிச்சியா, இதப் படிச்சயான்னு கேக்கும் முன்னே அடுத்த பாகத்த பாத்து என்ன சொல்ல வருகிறேன்னு தெரிஞ்சுக்கோங்க.