கூ.....கூ........ வடக்கே போகும் ரயில்

Filed under , by Prabhu on 8/27/2009 08:10:00 AM

5

எல்லாம் சரியா இருக்கா? வீட்ட பூட்டிட்டயா? இழுத்துப் பார்த்தயா? ப்ரஷ் எடுத்து வச்சயா? முதல்ல நாளைக்கு போட ஜட்டி எடுத்து வச்சயா? இப்படி பல ஆதாரக் கேள்விகள் கேட்கப்பட்டதென்றால் ஊருக்கு கிளம்புகிறேன் என்று அர்த்தம். ஆனா ஊருக்கு போவதற்குள் ஒவ்வொருத்தரும் பண்ணுகிற ஆயுத்தம் இருக்கிறதே! எனக்கு தெரிந்து ஒரு காம்பௌண்ட்டில் வாழும் நபர், தனது கழிவறையை மட்டும் பூட்டி விட்டு செல்வார், பூட்டு போட்டு! அங்க என்னங்க தங்கமலை ரகசியமா இருக்கு என கேட்கலாம்! ஆனால், பூட்டாமல் நாலு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் அவசரமாக கழிவறைக்கு செல்லும் போது, எவனோ திருட்டுத்தனமாக நாலு நாளைக்கு முன்னால் பண்ணிய அசிங்கம் காய்ந்து இருந்தால் அதன் அத்தியாவசியம் தெரியும்.

அப்புறம் மற்ற ஊரிலிருந்து சென்னைக்கு போறவங்க கனவு, அங்க போனதும் அதப் பாக்கனும், இதப் பாக்கனும், அப்படியே பீச் போகனும், சத்யம் சினிமாஸ் போகனும் என பல. ஆனால் அங்க இருக்குறவன், நான் கடைசியா பீச்சுக்கு போனது பன்னிரண்டாம் வகுப்பு லீவுல என்பான், சரி, சத்யம் கூட்டிட்டு போவான்னு பாத்தா சத்தியமா காசு இல்ல மாப்ள் என்பான். இவனுங்கள நம்பி பிரயோஜனம் இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு, நண்பனப் பாக்கப் போறேன்னு நம்மளே ஊரச் சுத்திட்டு வந்திடனும்.

இது பத்தாதுன்னு இன்னொரு குரூப் அலையுறானுங்க! கடலை போட கெளம்பிடுறானுங்க! ஆர்குட்ல மீட் பண்ணி ஸ்கராப் அனுப்பிக்குறாங்க, அப்புறம் மொபைலுக்கு தாவிடறாங்க! அடுத்து சென்னைக்கு நுழைவுத்தேர்வு எழுத அனுப்புனா, ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் கடலை போட்டுகிட்டு ஊரச் சுத்துறானுங்க! நமக்கு வயிறு எரியுது பாஸ்! அதுவும் நாம ஒரு பையனோட ஸ்பென்சர்ல சுத்திட்டு இருக்கும் போது, அங்கயும் அவனுங்க எதிர்பாராம வந்து கடுப்ப கெளப்புவானுங்க! போங்கடா, சென்னைல வேற இடமா இல்ல! நாங்க போற இடத்துக்கா வருவீங்க?

எங்க போனாலும் அங்க அத வாங்கிட்டு, இங்க இத வாங்கிட்டு வான்னு ஒரு குரூப் அலைவானுங்க! சின்னப் பையன் என்பதால் எனக்கு அந்தப் பிரச்சனை இல்ல. ஆனா, ஊருக்கு போய் வந்த பிறகு அந்த ஊர் பொண்ணுங்க எப்படின்னு சில குறுந்தகவல் விசாரிப்புகள் இருக்கும்!

எனக்கு பொதுவாகவே பஸ் பயணங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை. ரயில் பயணங்களையே விரும்புகிறேன். அந்த தடக் தட்க்குடன், சிறு குலுக்கல்களுடன், ஒரு சிப்ஸ் பாக்கெட்டோ, இல்ல கொண்டு செல்லும் உணவோ, காதில் இயர் போன்களுடன்... பயணமே தெரிவதில்லை. ரயில் அனுபவங்கள் பல. ஒரு நண்பன் கூட கிடைத்திருக்கிறான். இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என யோசிக்கலாம். நாளைய வைகை எக்ஸ்பிரஸில் சென்னை செல்கிறேன். ஞாயிறு வரை அங்கிருப்பேன்.ஞாயிறு மதியம் அங்கிருந்து கிளம்புகிறேன். My senseless, silly romantic non-poetic poem but with rhyme and hymn could be found here.

கந்தசாமி - வந்த கதை, போன கதை

Filed under , by Prabhu on 8/21/2009 11:53:00 PM

12

ஒரு கம்ஃபோர்ட் ஜீன்ஸ், டீ-ஷர்ட் எடுத்து போட்டுக்கிட்டு, கூலிங் கிலாஸ போட்டுக்கிட்டு காலேஜ்க்கு மத்தியானம் போல போயும் கண்ணுல ஒரு அழகான பொண்ணும் அகப்படாத போதே சகுனம் புரிஞ்சு முயற்சிய கை விட்டுருக்கனும்.விதி யாரவிட்டது? இல்ல ரிசர்வ் பண்ண கொடுத்த பணமாவது விடுமா? கொஞ்சமா மழை பெய்யும் போது பைக்க எடுத்துக்கிட்டு கோரிப்பாளையம், சினிப் பிரியா தியேட்டர் வழியாக அண்ணாநகர்(மதுரையிலயும் ஒண்ணு இருக்கு!) போய் ஃபிரண்டு வீட்டுல 'Quickgun Murugun'டிரைலரையும் அதோட க்ளாசிக் எபிசோட்ஸையும் பாத்தவன், அதையே மூணு மணிநேரம் பாத்துக்கிட்டே உக்காந்திருக்கனும். அப்பயும் புத்தி வரலை.

அங்க தியேட்டருக்கு போனா அவனோட நண்பர்கள் பத்து பேரு காத்துக்கிட்டு இருந்தானுங்க. மதுரையில முதல் நாள் படத்துக்கு போனா குட்டி பையனா நம்மளோட ஜட்டிகூட போடாம விளையாண்ட நண்பனக்கூட கண்டுபிடிச்சிடலாம் போல! என்கூட 10வரைக்கும் படிச்சவன், 12ம்வகுப்ப்கு படிச்சவன், காலேஜ்ல 1 மாசம் வந்துட்டு இன்ஜினியரிங் காலேஜ் போனவன்னு ஒரு கூட்டத்தையே பாத்தேன். அப்ப கூட ஒருத்தன் எழுபது ரூபா டிக்கட்ட நூறுக்கு கேட்டான். இந்த வருஷம் நான் பாக்குற இரண்டாவது தமிழ் படம் இதுதான்னு முடியவே முடியாது்ன்னுட்டேன். இது எல்லாம் படம் சுமார் என விமர்சனம் கேள்வியுற்றபின்! விதி.... வலியது!

பிக் சினிமாஸ் ஜாஸ் தியேட்டரின் சில்லென்ற அரங்கில் நுழைந்த பிறகுதான் படம் எப்படி இருக்குமோ என்ற எண்ணமே வந்தது. படம் ஆரம்பிக்கும்போது என் பக்கத்தில் என் பெயரையே உடைய இரு நண்பன் உட்கார்ந்தான். என் பேரு வச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பீக்கர் குரலும், காது வரைக்கும் வாயும் இருக்கும் போல. இதற்கு அவனும் விதி விலக்கல்ல. 'இளைய திலகம்'பிரபு பேருக்கு விசில் அடிக்கும் போதே அவன் ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. வசூல்ராஜாவில இருந்து இப்பவரைக்கும் ஹீரோவ விட்டுட்டு வம்புக்குன்னே பிரபுவுக்கு விசில் அடிக்கிறதுல அவனுக்கு அலாதி பிரியம். கோழி வேஷ விக்ரம் அவுட்லைனா கிராஃபிக்ஸ்ல ட்ட்ர்ர்ரும்ம்ம்ம்னு சத்தம் வரும்போதே வித்தியாசமா இருந்ததுன்னு சொன்னா அத படத்தோட சேத்து புரிஞ்சிக்க கூடாது.

எடுத்த உடனே திருப்போரூர் கந்தசாமி கோவில்ல ஒரு ஏழை வேண்டிக்கும் போது அய்யர் மரத்துல எழுதி கட்டிவச்சு வேண்டிக்க சொல்ல, அவங்க கட்டி வைக்க, அவங்க வீட்டு வாசல்ல திடீரென பணமிருக்க, அத இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகான் கிட்ட கொடுக்க, அவன் ஆட்டயப் போட, ராத்திரி தண்ணி போட, அப்புறம் குறட்டை போட(ரைமிங்குக்காக போடன்னு மாத்திருக்கேன், டைமிங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க!) போட, அப்போதான் கால்ல தேள் கொட்டுன மாதிரி ஹைபிட்சுல தேவிஸ்ரீபிரசாத்(DSP) கத்த .... உர்ர்ர்ட்ட்ர்ர்ரூம்(டிரம்ஸ் உருமல்!) கந்தசாமீஈஈஈஈஈ..என்ற சத்ததோட அப்படியே கைய விரிச்சுக்கிட்டே குதிக்கும்போது, தப்பா சொல்லிட்டாங்களா? படம் நல்லாருக்குமோன்னு நினைக்கும் போதே சொதப்பிட்டாங்க! தேவையில்லாம ஸ்லோ மோஷன ஃபைட்டுல காட்டுறது. உண்மையிலயே ஃபாஸ்ட்டா காட்டுனா செம ஃபைட்டா வர வேண்டியது. தேவையில்லாம இழுக்குது. அதுக்கப்புறம் கந்தசாமி(you know, tamil god)தான் எல்லாம் செய்யுறாருன்னு பணத்த திருப்பி கொடுத்துறாரு மன்சூர். இப்படி கடவுள் தான் நிறைய செய்யுறாருன்னு நம்ப வச்சுடறாரு விக்ரம். இந்த பாராவ குறிச்சுக்கோங்க. சொல்லும் போதெல்லாம் திரும்ப படிச்சுக்கோங்க. ஏன்னா இதைதான் படம் முழுக்க செய்யுறாரு.

அப்புறம் சி.பி.ஐ. கந்தசாமி விக்ரம். இவரு ரெய்டுல ஆசிஷ் வித்யார்த்திய பிடிச்சிடுறாரு. அவரு வலிப்பு வந்த மாதிரியா பெத்த பொண்ணு ஸ்ரேயா முதற்கொண்டு எல்லாரிடமும் நாடகம் ஆட, ஸ்ரேயா காதல் வழியாக பழிவாங்க துடிக்கிறார். இதுக்கு நடுவுல இன்னொரு வில்லன் வேற. அப்புறம் திரும்பவும் மேற்சொன்ன பாராவில இருந்து சில சாகச பிட்டுகள திரும்ப சேத்துக்கோங்க. அது மூலமாக வழக்கமான ராபின்ஹூட் வேலைய கந்தசாமி(கடவுள்) பேரில கந்தசாமி(சி.பி.ஐ) பண்ணிக்கிட்டு இருக்காரு. மெக்சிகோ போயும் செய்யுறாரு(அங்கயுமா?). கடைசில மக்கள முன்னாடி வில்லன தோலுரிக்கிறார்.
சரி... ராபின் ஹூட் ஆவதற்கான காரணம் - may be lamest reason of the century. ஆனால் chaos தியரி வச்சு சரிகட்டிடலாம் என தோணுது.
ஏன்யா கடைசி காட்சியில மக்கள் திடீரென தெரியாத ஒருத்தருக்காக போராடுறது, அப்புறம் ஒவ்வொரு விஷயம் நடக்கும் போது இதுக்ல்லாம் ஒருத்தன் வருவான்டான்னு சொல்லுறது, அப்புறம் ஹீரோ மறைமுகமா என்னமாவது செய்யும் போது டிவி, பேப்பர் பாத்துட்டு வச்சுட்டாண்டா ஆப்பு, இனிமே அவ்வளவுதாம் லஞ்சம் பஞ்சம் எல்லாம் குடும்பத்தோட இந்தியாவ விட்டுப் போய் பசிபிக் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கும்ங்கிற ரேஞ்சுல பேசுறது, இதை எல்லாம் பாக்கும்போது கடுப்பா இருக்கு. சுசி நீங்களுமா?

முதல் கேள்வி எனக்கு தோன்றியது என்னவென்றால், இதையா ரெண்டு வருஷமா எடுத்தாங்க, இந்த கோமனத் துணி கதையத் தான் பெருசா இருக்குற மாதிரி சொல்லிருக்கேன். இண்டர்வெல்லில் படம் சுமார் என சொன்னதற்கு அப்படியெல்லாம் சொல்லி மனச ஆத்திக்க வேண்டியதான்னு சொல்லிட்டான் பக்கதுல இருந்தவன். சென்சார் போர்ட் சர்டிபிகேட்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் கதை நகரவே மாட்டேங்குது. குச்சி வச்சு குத்தினாலும் நுரை தள்ளின மாடு மாதிரி நிக்குது.கதையில லாஜிக் ஓட்டைங்கிறது உளுந்த வடையில ஓட்டை மாதிரி இருக்கனும். ஆனா, படமோ கண்ணாடி வளையல் அளவு ஓட்டைதான் பெருசா இருக்கு. சுத்தி கதை ஒண்ணும் இல்ல.

விக்ரம் - செம ஸ்மார்ட். நல்ல நடிப்பு. சின்சியாரிட்டி. சேவல் தோற்றத்தில் செய்யு மேனரிஸம் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. அசால்ட்டா ஸ்மைல் பண்ணும் போது அழகாக இருக்கிறார். என்ன செய்வது விக்ரம்? கதை இல்லயே? ஸ்ரேயா- அழகு. கட் செய்த முடி பொருந்துகிறது. கவர்ச்சியான ஆடை அணிந்து செதுக்கி வைத்த மாதிரியான உடலை காட்டுவதில நல்ல கவனத்தை செலுத்தியிருப்பது,பக்கத்து சீட்டிலிருப்பவன் ஸ்ரேயாவை பார்க்கும்போதெல்லாம் நெளிவதில் தெரிந்தது (இன்னைக்கு தூங்கின மாதிரிதான்னு அவன் சொன்னது வேற கதை). வடிவேலு வேஸ்ட். படத்துல கொஞ்ச நஞ்சம் இண்ட்ரெஸ்ட் இருந்தாலும் கெடுக்கிறார். இவ்வளவு மொக்கையை சமீபத்தில் நான் அனுபவிச்சதே இல்லை. சுசி கணேசனே தோன்றி நடிக்க முயற்சி செய்து உள்ளார். ரெண்டு வில்லனுங்களும் சுத்த வேஸ்ட். இவ்வளவு சப்பையான வில்லன்களா? விக்ரம் மேலதிகாரியா மட்டமான தமிழ் பேசுறவர் தான் எங்கள் டோலிவுட் சிங்கம், தன்மான தங்கம் 'பிரின்ஸ்' பாபு (அ) மகேஷ் பாபுவின் தந்தை என்பதாக கேள்வி. நல்லா பாத்துக்கோங்க!

ஒவ்வொருத்தனும் ஓடிவரும்போது கண்ணைக் கட்டி இருந்தாலும் சத்தத்தை வைத்து ஒண்ணு, ரெண்டு என எண்ணுவது, 'உங்கப்பனுக்கு நிஜ வலிப்பில்ல, வலது கை இழுத்தா வாய் இடது பக்கம் கோணும்" உங்கப்பனுக்கு வலது பக்கம் கோணுது' என சொல்லுவது என பல விஷயங்கள ஆங்கில பட அளவுக்கு நுணுக்கம் கொண்டுவர முயற்சி செய்திருக்காங்க.

டெக்னிக்கலா பெர்ஃபெக்ஷன் கொண்டு வர முயற்சி செய்ததன் அடையாளங்கள் தெரிகிறது. படத்தின் சுற்றுசூழல் ஒரு plush செட்டடிங்கில் இருக்கிறது.ஆர்ட் வொர்க் அபாரம். ஆனால் இந்தியா ஒளிர்கிறது மாதிரி இவ்வளவு அழகாகவா சி.பி.ஐ. ஆபிஸ் இருக்கு? சி.பி,ஐ ஐஸ்ல முகத்த முக்கி அடிக்கிறதுக்கு கூட க்ளாஸ் பவுல யூஸ் பண்ணுது. அத விடுங்க கரண்ட் ஷாக் குடுக்க கூட கம்ப்யூட்டர் பயன்படுத்துறாங்க! ஆங்கில படங்களின் சைட் எஃபெக்ட்! ஸ்டண்ட் நன்றாக் இருந்தது. ஆடை வடிவமைப்பு மிக அருமை. ஸ்ரேயாவின் டிசைனர் ஆடைகள் மறைப்பதை விட காட்டுவது அதிகம். கேமரா நல்ல ஸ்டைலிஷ் ஹேண்டிலிங். கேமரா வோட வெயிட்லதான் படமே நிக்குது. ஆனா, சேஸிங் காட்சியில் கேமரா வேகம் பத்தல. ஹெலி கேமரால எடுக்கும் போது ஏதோ சாதாரணமாக போவது போல உள்ளது. இயக்கம் ஓக்கே. ஆனால் எழுத்து ...ம்ஹூம்... தேறாது. இந்த வருடத்தின் பல முண்ணனி இயக்குனர்கள் போன்று இவரும் ஸ்கிரிப்டுல கவுந்துட்டார். நிறைய ஸ்கோப் இருந்தது விக்ரமோட சேவல் கேரக்டரில, ஆனா அதுக்கேத்த கதையில்ல!

பக்கத்திலிருந்த நண்பன் படம் முடிஞ்சு வெளி வந்ததும் ஒருவன் படம் எப்படியிருக்கு என கேட்க, நல்லாருக்கு போய் பாருங்கன்னு சொல்லிட்டான். நாம பாத்துட்டோம் அவன் எப்படி தியேட்டர் வாசல் வரைக்கும் வந்து தப்பிக்கிறது என கேக்குறான். ஆனா டிரைல பார்க்கும் போதே இந்த படமும் கருப்புப் பணம் அப்படி இப்படின்னு இருக்கும்னுதான் நான் நினைச்சேன். ஆனா, கொஞ்சம் வித்தியாசமா எடுப்பனுங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.கதைய சொன்ன என் பிரண்டு bull shitனு ஃபோன வச்சுட்டான். அட, படமே பாக்காத எங்க அம்மாகூட வந்த உடனே என்ன, அந்நியன்' மாதிரியா? கந்தசாமின்னு உருமும் போதே தெரியும்டாங்கிறாங்க! பாருங்கய்யா, இவங்கள்ளாம் கூட கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க! கதைய மாத்துங்கய்யா!
Old wine in a new stylish goblet. My god! the wine stinks!
கந்தசாமி - நொந்தசாமி!
டிஸ்கி - படத்துலதான் கதை இல்லையேன்னு நான் படத்துக்கு போன கதைய இங்க சொன்னேன். ரெண்டு கிராமம் தத்தெடுத்துருக்காம் படக்குழு. அதுக்கு இந்த எழுபது ரூபாயை மொய் எழுதியதா நினைத்துக் கொண்டேன்.

டாப்பு அடிக்கலாம் - வீடியோ ஸ்பெஷல்

Filed under , , by Prabhu on 8/15/2009 03:15:00 PM

7

ரொம்ப நாளா பதிவு போடலயே, ஏன்னு கேக்கலாம் நீங்க(ஜுனூன்!). என்னங்க செய்யுறது! என்னுடைய அலுவல்கள் சூப்பர் மேன் ஜட்டி கணக்கா tight ஆயிடுச்சுங்க! அதுக்கென்ன இப்போ? அதை ஈடு செய்ய உங்களுக்கு ஒரு அனுகுண்டு அறிவிப்பு வச்சிருக்கேன். அது பதிவின் இறுதியில் சொன்ன உடனே இறுதிக்கு போய்டீங்கனா, பல வீடியோக்கள மிஸ் பண்ணிருவீங்க.

ஒரு வீடியோ ஸ்பெஷல் போடனும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். இந்த டாப்ப நம்ம வீடியோஸ், அப்புறம் என்ன தோணுதோ பேசுவோம். வீடியோன்னு சொன்னதும் சில யூத்துகள் 'அப்படி'ன்னு நினைப்பாங்க. ஆனா, எல்லாமே இப்படிதான். சிலதுகள் அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. சில பாட்டெல்லாம் கேட்ட மாதிரி இருக்கும். ஆனா எங்க கேட்டேனே தெரியல. கேட்டிருக்கேனா எனவே ஒரு சந்தேகம் தோன்றுவதுண்டு.
அதுதான் இந்த பதிவு. இதெல்லாம் மட்டும் பிடிச்ச பாடல்கள்னு சொல்லல, மூளையின் பதிவுகளில் அவுட் ஆஃப் போகஸான இடங்களில் இருந்து பளிச்சிடும் சில விஷயங்களின் தொகுப்பு.

முதல்ல சொல்ல வர்ற பாட்டுக்கு கண்டிப்பா நம்ம இயக்குனர் விஷ்ணு வர்த்தனுக்கு நன்றி சொல்லனும். 'மெல்ல மெல்ல என்னை தொட்டுங்கிற' பாட்ட எல்லாத்துக்கு நினைவு படுத்தினாரு. மலேசியா வாசுதேவனோ? சில்க் ஸ்மிதாவும் ரவிசந்திரனும் வர்ற பாட்டு. இது டிஸ்கோ பீரியட்ல வந்த சாங்கோ? அதுவா முக்கியம் இப்போ? இளையராஜா, சில்க் ரெண்டு பேரும் சேர்ந்ததால வந்த மேஜிக் நம்பர் 1. பாருங்க!



அடுத்து வர்ற வீடியோவும் சில்க் ஸ்மிதாவேதான்! 'பூவே இளைய பூவே' - இது கோழி கூவுதுன்னு ஒரு படமாமே! கங்கை அமரனோட பாட்டுன்னு நினைக்கிறேன். பிரபு பூதாகரமா தெரிகிறார். இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடிருக்கார். கடந்த பல வருடங்களா அவர் பாடுவதேயில்லை. வயதானதால் பாடுவதை நிறுத்திவிட்டாரா? குரல் போயிடுச்சுன்னு பேசிக்கிறாங்க. என்னவோ இந்த பாடலையும் இதோ பாருங்க!



'பொன்மேனி உருகுதே' - இதுவும் போன தலைமுறையினருக்கு தெரிந்த பாடல்தான். இதுவும் சில்க்தான். இளையராஜா தான். கமல் கூட இருக்கார். 'மூன்றாம் பிறை'. எல்லாருக்கும் தெரிந்த படம். பாட்டுல சில்க் அவ்ளோ செக்ஸியா இருக்காங்க. ஒரு வித்தியாசமான டான்ஸ் கூட ஆடுறாங்க. Erotic! ஏதோ war dance மாதிரி இருக்கு! என்ன டான்ஸ்னு தெரிஞ்சா சொல்லுங்க!



'குழழூதும் கண்ணனுக்கு' - இந்த பாட்டு தெரியாத தமிழன் இருக்க முடியாது. ராதா கூ கூ ன்னு சவுண்டு விட்டுட்டு ஓடுவாங்க. 'மைக்' மோகன் புல்லாங்குழல் வச்சுக்கிட்டு வாசிக்க தெரிஞ்சவங்களவிட ஓவரா சீன் போட்டுக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறதுக்கும் நடக்குறதுக்கும் நடுவில ஒரு வித்தைய செய்து கொண்டிருப்பார். பாட்டோட சுவாரசியமான விஷயமே ரெண்டு வேற தலைமுறையை சேர்ந்த ஜாம்பவான்கள் இசையமைத்துதான். அது இளையராஜா, எம்.எஸ்.வீ.



'It's my life' -இது Bon Jovi யின் பாடல். இந்த பாடல் காதலி 5 நிமிஷத்தில வந்து சேரனும்னு சொன்ன உடனே கடல் தாண்டி மலை தாண்டி வர்ற மாதிரி ஊரு முழுக்க பாய்ந்து விழுந்தடிச்சு வந்து சேரும் கதாநாயகனப் பத்தின பாட்டு. இது தான் வாழ்க்கை. போனா வராது, போன் போட்டா கிடைக்காது(It's my life. It's now or never)ன்னு சொல்லுறதுதான் ஹைலைட்டான லைன். கண்டிப்பா பிடிக்கும் பாருங்க. ஏற்கனவே அர்ஜுன் காப்பி அடிச்சிட்டாரேன்னு நீங்க கண்டுபிடிச்சா நான் பொறுப்பல்ல!




இப்ப ஒரு தீவிரமான (சீரியஸ்?) வீடியோ. வந்து கொண்டிருக்கும் ஒரு புது இந்தி திரைப்படம். 'Slumdog millionaire' விநியோகம் செய்த Fox Starஆல் விநியோகம் செய்யப்பட உலகமே காத்திருக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் திருவிழா, 'Quickgun Murugan' -Mind it! இதில் ராஜேந்திர பிரசாத், நாசர், ரம்பா, சண்முகராஜன், ராஜு சுந்தரம், மேலும் பல இந்தி நட்சத்திரங்கள் மிரட்டியுள்ளார்கள். தமிழிலும் வர உள்ளது. கண்டிப்பா இந்த டிரைலர் பாக்காம வெளிய போகாதீங்க! பின்னால் வருத்தப்படுவீங்க! 'Quickgun Murugan - The Indian Cowboy.


இது ஆங்கில ட்ரைலர். ஹிந்தியிலயே செம டெரர்தான்:) having my fingers crossed for the release.

இன்னும் பாட்டு பட்டியல் பெருசா வச்சிருக்கேன், கருணாநிதி அவர் குடும்பத்துக்கு சேர்த்த சொத்து கணக்கா! ஆனால், இப்ப இது போது. இந்த பதிவுல நிறைய சில்க் பாட்டு வந்திருச்சுல! அப்போ அவங்களுக்கே டெடிகேட் பண்ணிடுவோம். எனக்கென்னவோ சில்க் பாக்கும்போது கழுதைப் பாலில் குளித்த கிளியோபாட்ராதான் நினைவுக்கு வர்றாங்க. ரெண்டு பேரும் கருப்பழகிகள் என்பதாலோ என்னவோ! ஜெய் சில்க் ஸ்மிதா!

அணுகுண்டு அறிவிப்பு - நான் பல காலமாக எழுததாலும், (எனக்கு நானே எழுதிக் கொண்ட) வாசகர் கடிதங்கள் காரணமாக அதை ஈடு செய்ய ஒரு சிறுகதை எழுதி கொண்டிருக்கிறேன். இது fantasy, futuristic, sci-fi இப்படி பல வகைல சேர்க்கலாம். நீ ஒரு வகைல எழுதினாலே படிக்கமுடியாதுன்னு யாருப்பா சொல்றது? வேணாம் விட்டுருங்க. (விடலைனா?) நான் விட்டுடறேன்! அடுத்த டாப்புல பாக்கலாம்.

டிஸ்கி : நிறைய வீடியோ வச்சிருக்கேன். அதனால லோட் ஆக லேட் ஆனதென்றால், "மன்னிக்க வேண்டுகிறேன்...." கவலைப்படாதிங்க! இதுக்கு வீடியோ சேர்க்கல.