நகைச்சுவை (கண்டிப்பாக மொக்கை அல்ல)

Filed under , by Prabhu on 6/02/2009 10:15:00 PM

0

போன ப்ளாகில மொக்கய பத்தி பார்த்தோம். இப்போ நகைச்சுவை கொஞ்சம் பார்ப்போம். அதுக்கு முன்னாடி மொக்கயோட மூலம்(உங்க பிண்ணனில வர்றது இல்லீங்க!.. வார்த்தையோட origin) என்னன்னு தோண்டி பாத்துருவோம். மொக்கன்ற வார்த்தை சில பல காலத்துக்கு முன்னாடி எங்கள் வீடுகளில் வழங்கி வந்த அர்தத்தைக் கேட்டா ஆச்சரியப்படுவீங்க. இங்க தெக்க அதுக்கு (அளவில) பெரிசுன்னுதான் அர்த்தம், ஒரு காலத்தில. அதுவும் ஒரு சில சமூகங்களில் அது ரொம்ப சகஜமா புழங்கி வந்த வார்த்தை. இப்போ என்னடானா திடீர்னு அதோட அர்த்தமே மாறிடுச்சு.

இதுக்கெல்லாம் காரணம், சென்னை தமி'ல'ர்களே காரணம் என கூறிக் கொள்கிறேன். தமிழைக் கொலை செய்வது அவர்கள் பொழுதுபோக்கோ என்னவோ (கேபிள் சங்கர், பரிசில்க்காரன் போன்றோர் படிக்க நேர்ந்தால் இச்சிறுவனை பொறுத்துக் கொள்வார்களாக) ஆனால் நான் சொல்வது உண்மையென தெரிய நீங்க சென்னைவாசியா இருக்கும்பட்சத்தில் கொஞசம் மதுரைக்கு வந்து பாத்துட்டு போங்க. அடுத்தவனுக்கு மரியாதை கொடுக்கும் சில விகுதிகளை உங்கள் அகராதி தொலைத்து விட்டதை உணரமுடியும் (இது சாம்பிள்தான் பாஸ்). பஸ்சில் சீட்டு கிழிப்பவர்(கண்டக்டர்) கூட எல்லாத்தையும் பாத்து கேக்க 'டிக்கட் எடுத்தீங்களா', 'டிக்கட் எடுத்தாச்சா'னு கேட்ப்பாரே தவிர ஒருவனைக் கேக்கும்போது கூட டிக்கட் எடுத்தியானு சென்னைக்காரங்க மாதிரி ஏக வசனத்தில கேக்கறதில்ல. சென்னைல கடைக்கு வந்தவன் கிழவனா இருந்தாலும் ஏக வசனமே தொடர்கிறது. சவுத்தில இருந்து போய் சென்னைவாசியான யாருக்காவது இதேபோல தோணிருக்கா?

வந்துடான்டா தமிழை காப்பாத்த என நீங்க பொலம்புறது புரியுது. நான் அந்த மாதிரியும் இல்ல என்பதை எனது முந்தைய ப்ளாக்('தலைப்பு'- அட, தலைப்பே 'தலைப்பு'தாங்க) விளக்க இயலும். நான் பிறமொழிச் சொற்க்களையே ஏற்றுக் கொள்வது பற்றி சொல்லிருந்தேன்.ரெண்டு பதிவையும் சேர்த்து பார்த்தா, தேவையான மாற்றங்களை ஏற்றும், தேவையில்லா மாற்றங்களைத் தவிர்த்தும் வந்தா தமிழ் ஈஸியா முன்னேறும். பயப்படவேத் தேவையில்ல.

மொக்கயப் பத்தி சொல்லி முடிச்சிர்றேன் (அடங்கமாட்டயா?). இதுமாதிரி சமீபத்தில தான் (ஒரு சில வருஷங்கள்) மொக்கயோட அர்த்தம் மாறிடுச்சு. டைட்டானிக் மொக்க (பெரிய) படம்னு சொன்னா, ' ஆமா, மூணு மணி நேரம், பதினாலு நிமிஷம்'னு சொல்வானுக. இப்போ அதையே சொன்னா அந்த படத்த மொக்கனுசொல்றயானு அடிக்க வர்ரானுங்க(உண்மையில அந்த படத்தில ஜாக் சாகலைனா அது காதல் காவியம் ஆகாம, அட்வென்சர் படம் ஆயிருக்கும்!). என்ன கொடுமை, சரவணன்!!!!!

நகைச்சுவைனு சொல்ட்டு கடைசி வரை மொக்கய போட்டுட்டு போறயேடா ன்னு கேக்குறது புரியுது. அடுத்த ப்ளாக்கில கண்டிப்பாக எழுதுறேன். ஒரு சின்ன காம்ப்பன்சேஷன் (தமிழ்ல என்ன?.....ஈடு?).


"நீ எப்படி இந்த மாதிரியெல்லாம் அறுவை ஜோக் சொல்ற?" எனக் கேட்டதுக்கு அவன், "டெய்லி ஒரு பிளேடு சாப்டு, நீ கூட சொல்லாம்" னு சொன்னானாம்.


இதை மொக்கனு சொல்வீங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி இது கடி ஜோக். ... ஒண்ணு தாங்க இன்னொன்ணா மாறுது!!!!!

இந்த மாதிரி ஜோக்கில் சுஜாதாவின் வசந்த்த மிஞ்ச ஆள் கிடயாது. கடைசி வரை மனுசன் அந்த மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் சொல்லாம போயிட்டாரு.

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!