நான் யார்.....(spiritual இல்ல psychological and logical)

Filed under , by Prabhu on 6/15/2009 09:33:00 PM

3

நான் யார்ன்னு போட்டதும் நான் கடவுள், நான் பிரபு, நான் கிஷோர்ன்னு பின்னூட்டம் போட்டு கலாய்க்கக் கூடாது. இது கொஞ்சம் சைக்காலஜி(சுத்தம்! நீ சும்மா மொக்க போட்டாலே புரியாது, இதுல சைக்கால்ஜி வேறயா?) சம்பந்தப்பட்ட பதிவு. ஹேய்..ஹேய்...மிஸ்டர். எங்க நழுவுறீங்க? ஒரு அதிகாரி எழுதும் போது மரியாதை குடுக்குறதில்ல! ஓகே, மேட்டருக்கு வருவோம். மனுஷனோட குணாதிசயங்கள் (அ) personalitya விளக்குறதுங்கிறதுதான் இந்த பதிவு. இண்டிரஸ்டிங்கா இருக்கும். இதுல எது உங்களுக்கு ஒத்துப் போகும்



Ego என்ற ஆங்கில வார்த்தைக்கு (அது ஆங்கிலமே இல்ல greek என்பது வேற விஷயம்) செல்ஃப்(shelf இல்ல self) அதாவது நான் என்ற அர்த்தம். இத வச்சு ஒரு சில வகைகள நாம விளக்க முடியும்.

me the first
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். me the first னு போட்ட உடனே பின்னூட்டத்தில போடுறவங்கள நினைச்சிங்களா? அது இல்லீங்க. என்ன செஞ்சாலும் அதுல எனக்கு என்ன இருக்குன்னு யோசிக்கிறது. எனக்கும் எல்லாம் கிடைச்சா போதும் அடுத்தவங்க என்ன ஆனாலும் பரவாயில்லைனு நினைக்கிறது தன் முன்னேற்றத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நினைப்பாங்க. (இது என்ன அரசியல்வாதியானு நீங்க கேக்கலாம்). இப்படி பட்டவன்தான் 'egoist'.

அடுத்தது 'egotist'
egoistக்கும் இவங்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.( நடுவில வர்ற 't' என சொன்னா உங்க தலையில இடி விழட்டும்). அவங்களோட செயல் நாந்தான்னு இருக்குனா இவங்களுக்கு பேச்சு நாந்தான்னு இருக்கும். எதுக்கெடுத்தாலும் நான்...நான்...நான்... நாம எதப் பத்தி பேசுனாலும் நான். நாம் டாய்லெட் போனோம்னு சொன்னாக்கூட, "இப்படிதான் நான் டாய்லெட் போனப்ப...." என ஆரம்பிச்சு கொல்லுவானுக. இவனுங்க பேச்சுல ஒரே விஷயம், 'நான்'. நான் பிரதமரா இருந்திருந்தா பண்ணுவேன்னா, இந்த பிராப்ளத்துக்கு என்ன செய்வேனா...... (அய்யோ..நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல. மருந்தடிச்சு கொல்லுங்கடா.)

ஆள விடுங்க சாமி
இவங்க சோஷியலா இருக்க முடியாதவங்க.ஆனா எல்லராலும் அங்கீகரிக்க படனும்னு நெனப்பாங்க.கொஞ்சம் கூச்ச சுபாவம். சயிண்டிஸ்ட் மாதிரி தன்னோட எண்ண ஓட்டங்களை மைக்ரோஸ்கோப் வச்சி பார்த்து, நாம் மத்தவங்களுக்கு எப்படி தெரியிறேன், அவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க என யோசிச்சிட்டு இருப்பாங்க. (நம்மல பத்தி அவ்ளோ காம்ப்ளெக்சா திங்க் பண்ற அளவுக்கு மத்தவங்களுக்கு நேரமில்லங்கிறதுங்கிற விஷயம் அவங்களுக்கு புரியறதில்ல). ஆனா இவங்க ஜீனியஸா இருக்கறதுக்கு சான்ஸ் ஜாஸ்தி. க்ரியேடிவிட்டி நல்லா இருக்கும். இவங்கதான் introvert.

என்னோடு சேர்ந்து ஆடுங்கள்
இவங்க introvertக்கு அப்படியே நேரெதிர். அடுத்தவங்க பிரச்சனைகள்ல உண்மையான ஆர்வம் காட்டுவாங்க. எப்பவும் சந்தோஷமா இருக்கற கேரக்டர். எப்பவும் நிறைய பேரோட இருக்கறத விரும்புவாங்க. இவங்க ஒரு டீச்சரா, லீடரா,நிர்வாகியா இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. எல்லாரோடயும் சகஜமா பழகுவாங்க. 'வேர் இஸ் த பார்ட்டி, எங்க ஊட்ல பார்ட்டி'ன்னு சொல்ற ஆளு இவங்க. இவங்க extrovert என சொல்றாங்க.

ambivert
இவங்க extorvert, introvert ரெண்டும் கலந்து செய்த கலவை. ரெண்டோட கேரக்டரும் சரியான அளவில வெளிப்படும். மொத்ததில நார்மல் மனுஷங்க!

may i help you
இவங்களோட சந்தோஷமே அடுத்தவங்களுக்கு உதவுறதுதான். தன்னோட விருப்பு வெறுப்புகள பாக்காம அடுத்தவங்களுக்கு உதவுவாங்க. உங்கள எல்லாரும் ரொம்ப நல்லவருருன்ன்னு சொல்ல்வாங்க(அவ்வ்வ்...). நீங்கதாங்க altruist.

மனுஷனா......ச்ச்ச....
இவங்களுக்கு மனித குலத்து மேலயே ஒரு வெறுப்பு இருக்கும்.(அப்ப அவ்னுங்க மட்டும் என்னவாம். மனுஷனுங்க ஒண்ணத்துக்கும் லாயக்கில்லனு சொல்வாங்க(ஆனா, எங்கப்பா நான் மாடு மேய்க்கதான் லாயக்குனு சொல்றாரே). இவங்க பேரு misanthrope.

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்....
இவங்களுக்கு பொண்ணுகன்னாலே ஒரு கடுப்பு. குத்துங்க...எஜமான், குத்துங்க என சொல்லிக்கிட்டு திரியிவாய்ங்க.- a misogynist.

அஹம் பிரம்மாஸ்மி
இவங்க உலக வாழ்க்கைய துறந்தவங்க. ஆன்மிகம் தான் இவங்களுக்கு எல்லாமே. தவம், தியானம்னு இவங்க தங்களோட நேரத்தை செலவிடுவாங்க.-an ascetic.

இப்போ இதுல நீங்க யாருன்னு தெரிஞ்சிருக்கும். நான் யார் என கேட்டவுடனே நினைவுக்கு வருது. நான் யாருங்கிறதுக்கு உங்களோட பதில் என்ன? என்னோட லாஜிக் என்னன்னா நான் என்பது என்னோட நினைவுகள்(என் மூளை). நம்ம வாழ்க்கையோட மெமரி தான் நம்ம யாருங்கிற விஷயத்த நமக்கு உணர்த்துது. memento(ghajini) படத்தில பார்த்திங்கன்னா தான் யாரு என்ற விஷயம் தெரியாமதான் தன் வாழ்க்கைக்கு ஒரு பர்பஸ் கொடுக்க, ஒரு இல்லாத (அ) இறந்த மனுஷனோட பேரில ஆள தேடி ஒரு romantic questa அலைஞ்சிக்கிட்டு இருப்பான்.

இந்த questக்கு மட்டும் மனிதன் இருக்கிற வரைக்கும் முடிவே இருக்காது.



டிஸ்கி - இது ஆல்ரெடி எனது அழிந்துபோன ப்ளாக்ல பப்ளிஷ் பண்ணி யூத்புல் விகடன்ல வந்தது.

Comments Posted (3)

youthful vikatan?
very gd very gd... u are posting interesting articles at one go! really mind-blowing. keep gg bro!:)

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!