2008ம் ஏ.ஆர்.ரஹ்மானும்
Filed under Music , இசை , by Prabhu on 6/05/2009 08:45:00 AM
3
இந்த விஷயத்தைப் பல பேர் ஏற்கனவே அலசி அவங்க அவங்க வீட்டுக் கொடில காயப் போட்டிருப்பாங்க. இருந்தாலும் நானும் கொஞ்சம் அழுக்கு போக அலசிக்குறேன். நான் இதைப் பத்தி எழுதலேனா தலையே வெடிச்சுரும்(எழுத வேற இல்லன்னு சொல்லு). 'நாட்டாம தம்பி பசுபதி டீச்சர வச்சிருக்கான் டோய்'னு செவிடன் கிட்ட சொல்லி அவஸ்தை படுற கவுண்டமணி நிலைமைதான் எனக்கு. நீ எழுதறதுக்கு எல்லாம் ஏண்டா ஓவரா பில்டப்னு நீங்க கேட்டா, பில்டப் எனக்கில்ல, எங்க தலைவருக்குனு சொல்வேன் (அப்போ இளிச்சுக்கிட்டே விஜய் தாவி கொடில இருக்கிற அடுத்தவன் பொண்டாட்டி சேலையெல்லாம் சுத்திக்கிட்டு குதிச்சு intro குடுக்க போறாரானு நக்கலா கேக்குறவங்க வீட்டுக்கு வில்லு டிவிடி அனுப்புவோம்). நான் சொல்றது எங்க இசைப்புயல், Mozart of Madras A.R.Rehman பத்திதான். (ஓ....அதுவா....னு மெல்ல நழுவக்கூடாது. இங்க கொஞ்சம் வேற புரிதலோட(perception) பாப்போம். இதே வருஷம் ஆஸ்கார்(slumdog millionaire) வாங்கிருக்காரு. இத விட அருமையான் பாடல்களை அவர் இசை அமைச்சிருக்காருன்னாலும் இந்த படம் ஆங்கிலம்ன்றதால வாங்கினாரு, அந்த படமும் அப்படி ஊர் உலகத்தில இல்லாத படமில்லனாலும் இந்தியாவ அவங்க பிடிச்ச மாதிரி காண்பிச்தாலதான் இத்தனை விருதுகள்னு பலவாறு பேசுனாலும் நான் அத பத்தி பேச வரல.
எனக்கு விவரம் தெரிஞசதில இருந்து நான் ஏ.ஆர்.ரஹ்மானோட விசிறி. பொதுவா சில வருஷங்களா அவரோட பாடல்கள் அதிகமா வர்றதில்லன்ற வருத்தம் இருந்தது. ஆனா 2008 ஆரம்பமே ஜோதா அக்பர் பாடல்கள் வந்து என்னய மாதிரியான ரசிகர்களுக்கு செம ட்ரீட். அதுல Jashn-e-bahaara னு ஒரு காதல் பாட்டு, உருக்கிடும்(இன்னும் என் ப்ளே லிஸ்ட்ல இருக்கு, ஒரு வருஷம் பின்னயும்). லவ் பண்ணாதவங்களுக்கும் அப்படி ஒரு ஃபீல காட்டும். அதே படத்தில ஒரு ஸூஃபி(இஸ்லாம் வழிபாட்டு) பாடல் ஒண்ணு மனுஷன் ஃபீல் பண்ணி போட்டிருப்பார் போல(எல்லா புகழும் இறைவனுக்கே). இப்படி அட்டகாசமா ஆரம்பிச்ச அந்த வருஷம் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை கடைசி வரை ஏமாத்தல.
அடுத்து அட்டகாசமாக வந்து இளைஞர்களையெல்லாம் ஆட்டம் போட வச்சது 'jaane tu yaa jaane na'(உனக்கு தெரியுமா? தெரியாதா?). அந்த படத்தில ஒரு பாட்டு செம ஹிட்டு! அந்த பாட்டு போன வருஷம் பல காலத்துக்கு முதலிடம் விட்டு இறங்காம இருந்தது. எவன பாத்தாலும் அத முணும்ணுத்துக்கிட்டு திரிஞ்சான். அந்த பாட்டோட முதல் வார்த்தையே ஒரு பிரபல பதிவரோட பேர்தான். ஆங்... புரிஞ்சதா? இல்லையா? புரியாதவங்களுக்கு உடைச்சிடறேன். அந்த பாட்டு "Pappu can't dance saala". புரியுதா அந்த பாட்டோட முதல் வார்த்தை, pappu! நாந்தான்(பிரபல?). பிரபலனு தப்பான க்ளூ குடுத்தேன்னு யார்றா சைட்ல சவுண்ட் குடுக்றது. Jazz musicல 'ஜானே து யா ஜானே நா' எல்லாரும் ரசிச்ச title musicனு அவார்டே குடுக்கலாம். கொஞ்சம்கூட சிதறாம, பதறாம போட்டிருக்கார்.காஃபி ஷாப்பில போட்டு விட்டு கடலை போட்டா நேரம் போறதே தெரியாது, அப்பிடி போட்டிருக்கார். எல்லா பாட்ல்களும் அவ்ளோ ஃப்ரெஷ், அவ்ளோ யூத்ஃபுல். இங்க பதிவரெல்லாம் கல்யாணம் ஆயி நானும் யூத்துதான்னு சும்மா சொல்லியில்ல பார்க்குறீங்க, உங்களுக்கு பிடிக்குமா?
இந்த சமயத்திலதான் ஏ.ஆர்.ரஹ்மானோட அந்த வருஷத்திய ஒரே தமிழ் படைப்பான சக்கரக்கட்டி வந்தது. அட்டண்ட் பண்ணது ஒரு பால்னாலும் அடிச்சது சிக்ஸ்! ஓரே ஹிட்டுல அந்த வருஷம் பல ஹிட்டு கொடுத்த ஹாரிஸ் முதல்கொண்டு எல்லோரையும் பின் தள்ளிக்கிட்டு முன்னாடி வந்தது நம்ம ஏ.ர்.ரஹ்மான் ஓட்டின 'டாக்ஸி'. இது போக மதுஸ்ரீ பாடின(போட்ட) 'மருதாணி விழியில் ஏன்' இன்னமும் கேக்கும்போது என்னவோ மாதிரி ஃபீலிங் இருக்கும். படம் ஓடலைனாலும் பாட்டு ஒரே நாளில பண்பலை வானொலிகளில் அளவில்லாம் ஒடி, ஒரே நாளில அதிகமான தடவை ஓடின பாடல்னு உலக சாதனை படைத்தது. இப்படி ஒரு படம்னாலும் அதுவும் ஓடாத படம்னாலும் எளிதில் மறக்கமுடியாத ஆல்பமாக 'சக்கரக்கட்டி' அமைந்தது.
அடுத்து வந்த ஆல்பம் 'Yuvaraaj'. சல்'மான்' நடித்த இந்த படத்தின் சிறப்பம்சமே இதன் இசைதான். இந்த படம் ஒரு மியூசிக்கல் சப்ஜக்ட். 'மன்மோஹினி மோரே'- இந்தப் பாட்டு ஹிந்துச்தானியும் வெஸ்டர்னும் ஃப்யூஷன் பண்ணிருப்பாரு பாருங்க..ப்ப்ப்பா....சான்சே கிடையாது. 'தில் கா ரிஷ்தா'- இதுல பாடுன ஆட்கள வச்சு ஒரு பாண்டே(band) உருவாக்கலாம், அவ்ளோ பேரு பாடிருக்காங்க. 'தூ ஹி மெரே தோஸ்த்'- இந்த பாட்டுலயும் இதுக்கு முன்னாடி சொன்ன பாட்டுலயும் செல்லோ(cello) விளையாடிருக்கும். ஸ்ரீனிவாஸ் பாடின 'ஜிந்தகி'ய சொல்லவா, இல்ல ரொம்ப நாள் கழி(ளி)ச்சு ஜாவேத் அலி, அல்கா யக்னிக் சேர்ந்து பாடின ' து முஸ்குரா'வ சொல்லவா. 2008ம் வருஷம் அந்த மனுஷன் கைலயும் மூளைலயும் கண்டிப்பா சரஸ்வதி தேவி நின்னு ஆடிருக்காங்க. இந்த படம் ஓடலேனாலும் அமெரிக்காவில ஃபிலிம் லைப்ரரில வைக்க முடிவு பண்ணி டைரக்டருக்கு அவங்க அனுப்பின கடிதம் ஒரு ஆறுதல் பரிசு.
அடுத்து வந்தது 'கஜினி'. இத பத்தி அறிமுகம் தேவையில்ல. இந்த படம் சக்கை போடு போட்டதும், 200கோடி அள்ளுனதும் வரலாறு. இந்த படத்தோட பாட்டுக்கு அத்தனை ஹைப். அந்த படப் பாடல்கள் அனைத்தும் ரிலீஸ் ஆனதும் ஹிட். நல்லாதான் இருந்தது. ஆனா, ஏ.ஆர்.ரஹ்மான் தரத்துக்கு இல்லன்னு நான் சொல்வேன். 'guzarish', 'kaise mujhe' ரெண்டும் ஓகே. எந்த பாட்டும் குறைச்சலே இல்ல. ஆனா எதுவும் not upto his mark. உதாரணத்துக்கு சொல்லனும்னா, கருத்தம்மால இருக்கிற quality படையப்பால இல்லனு சொல்வேன். அதுல ஒரு class இருக்கும்;படத்தோட தேவைக்கு அமைக்கப்பட்டிருக்கும். இது இப்போதைக்கு நல்லாருக்க அல்லது ஹீரோக்காக அமைக்கப்பட்ட contemporary வகையை சேர்ந்தது.(இத படிச்சா என் ஃபிரண்டு, ஏன்டா இப்படி சொரியிறன்னு கேப்பான். அதனால நான் விளக்க உரைய தொடரல.)
இதுக்கு நடுவுல வந்த 'slumdog millionaire' பத்தியும் அந்த இசை பத்தியும் ரஹ்மான் அவார்ட்ஸ் குவிச்சதும் உலகத்துக்கே தெரியும். அதனால அதப் பத்தி நான் பேசல.
இப்படி இந்த பாட்டே கேட்டு முடிக்க முடியாம கேட்டுட்டேஏஏஏஏஎ இருக்கும் போது இப்போ 'Delhi-6' பாட்டு! ஹய்யோ! என்னமா போட்டிருக்காரு(இப்படி வாய பொளக்குறதுக்குனே இந்த பதிவ போட்டிருக்கயா?). 'மசக்களி' ஆட வைக்குதுனு நானும் சொல்லத் தேவயில்ல. அத கேபிள் சங்கர் தெளிவா போட்டிருக்காரு. 'கேந்தா பூ'- கிராமியமாவும்(rustic) அதே நேரம் புதுமையாவும் போட இவராலதான் முடியும். 'ரெஹ்னா தூ', 'தில் கிரா தாஃபதன்' இந்த ரெண்டும் அவ்ளோ சாஃப்டா, அவ்ளோ அழகா இருக்கும். ஒரே படத்துல ஹிந்து மற்றும் இஸ்லாம் பாடல்கள ஒரே devotionஓட ரஹ்மான் தான் குடுக்க முடியும்.
இந்த படங்கள் எல்லாத்திலயும் நான் சொல்லாத பாடல்களும் நல்லாதான் இருக்கும். ஆனால் எல்லாத்தப் பத்தி பேச முடியாதில்லயா? அதானால முக்கியமான பாடல்கள பத்தி மட்டும் பேசினேன்.
இதுக்கிடையில connections ஆல்பம் வந்தது. அதப்பத்தி நீங்க கேபிள் சங்கர் பதிவுல பாக்கலாம். நான் சொல்லாம விட்டது ada மட்டும்தான். அது இப்போதான் கிடைக்கும்போல இருக்கு எனக்கு.
இப்படி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு பொறுமை இருக்காது.(பின்ன? எல்லாத்தையும் உன்ன மாதிரி வெட்டி பையன்னு நினைச்சயா?) இந்த மாதிரி ஒரு வருஷமா இனி வரும் ஒவ்வொரு வருஷமும் ரஹ்மானுக்கு இருக்கனும்னு வாழ்த்துறேன்.
எல்லாம் சுயநலம் தான்! நாம கேக்க நல்ல பாட்டு வேணாமா?
நல்ல அலசல் பப்பு.. இப்ப தெரியுதா..நான் யூத்தான்னு...
/. 'மசக்களி' ஆட வைக்குதுனு நானும் சொல்லத் தேவயில்ல. அத கேபிள் சங்கர் தெளிவா போட்டிருக்காரு.//
“:)
அட, கேபிள் சங்கருக்கு மேல ஒரு யூத்து பதிவுலகத்துல யாரு?
(ஒரு பிரபல பதிவர ஐஸ் வச்சுக்கிட்டா பதிவுலகத்துல நல்லதுதான?)