கூகுளின் கூட்டு சதி

Filed under , , by Prabhu on 6/22/2009 06:29:00 AM

8

பதிவுலகத்துக்கு நான் வந்து இப்பொழுது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆயிருக்கும். இங்க வந்து நான் பெருசா சாதிச்சிட்டதா சொல்ல மாட்டேன். ஆனா, சில appreciable பதிவுகள வெளியிட்டிருக்கேன். கிஷோர், கேபிள் சங்கர், பொன்னியின் செல்வன், வினோத் கௌதம், வால் பையன், ஹாலிவுட் பாலா, 'எனது பயணங்கள்' பிரபு, 'my thoughts da machi' காயத்ரி, 'குப்பைத்தொட்டி' நான் ஆதவன் என பல நபர்கள சந்திச்சதும், அவங்கள்லாம் என்னோட பாலோயர்ஸா இருந்ததும் தான் எனது ஒரே achievement பதிவுலகத்தில. அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. நான் வேற எங்க ஊரு அழகிரியப் பத்தி பதிவிட்டிருதேனா, அதனால தான் உன்னோட பளாக்க(Blog) ப்லாக்(block) பண்ணிட்டாங்க. அடுத்து அண்ணன் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாருன்னு வேற கெளப்பி விடுறானுங்க.

நான் இந்த பதிவுலகிற்கும், இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கும் சேவை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பொறுக்காத சில தமிழ் விரோத சக்திகள் தான் இதை செய்திருக்கனும். இது எனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட புல்லுருவிகள் தான் செய்திருக்கவேண்டும். இது எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதி. இதற்கு ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. விரைவில அந்த சிடி ரிலீஸ் செய்யப்படும். இப்ப தான் தலைவர்களோட தில்லுமுல்லு எல்லாம் பிட்டு படம் மாதிரி சிடி ரிலீஸ் பண்ணி பரபரனு போகுதே. கலைஞர் கூட அவரு காமெடிக்கு சிடிதான் யூஸ் பண்றார். சிடிய பாத்து கண் கலங்குறாராம், இலங்கைதமிழர்களுக்கு. அட, இங்க எதுக்கு அரசியல்? வரவர மேட்டர விட்டு அடிக்கடி விலகி போயிட்டிருக்கேன். ப்ரொபசர் ஆகுறதுக்கான தகுதி எதுவும் வளருதோ?

சரி, மேட்டருக்கு வருவோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவ போட்டுட்டு என் ப்ளாக்குக்கு போனா அங்க ஒரு மால்வேர் வார்னிங் வந்தது. அப்புறம் தெரியாத கோடிங்கெல்லாம் வச்சு மணிகணக்கா முட்டி, கூகுள கொஞ்சி மேடர கண்டு பிடிச்சா ntamilங்கிற social bookmarking siteதான் என்னோட பிரச்ச்னைக்கு காரணம். ntamilனு பேரு வச்சுக்கிட்டு என்னயவே போட்டுப் பாக்குறீங்களான்னு அத ரிமூவ் பண்ணிய பிறகும் கூகுள் என்னய போட்டுப் பாத்துட்டான்.

கடந்த ஒரு மாசமா பல நல்ல விஷயங்கள் தோன்றும் போதெல்லாம் ப்ளாக் இல்லாத வெறுமைய புரிஞ்சுக்க முடிந்தது. செமஸ்டர், கேரியர்னு வேற பல தடங்கல்கள். இதில சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு பதிவுலக விட்டு வெளியேறிடலாம்னு கூட நினைச்சிருக்கேன். நான் போனா யாரும் மிஸ் பண்ண போறதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு ரொம்ப ஆக்டிவிட்டியோட இருந்த நான், இந்த ஒரு மாத்ததில தடம் தெரியாமல் போய்விடவில்லையா? இதுதான் பதிவுலகம். Easy comes, easy goes. இப்பவும் பழைய அளவு ஆக்டிவிட்டியோட இருக்குறது முடியுமான்னு தெரியல. பார்க்கலாம்.

என்னுடைய பழைய ப்ளாக்கிலிருந்து பல பதிவுகள திரும்ப பதிவிட்டிருக்கேன். அந்த ப்ளாக் போனது கூட ஒரு indicationa இருக்கலாம். அத விட நல்ல பதிவுகள குடுக்க முயற்சி செய்வோம்.

Comments Posted (8)

வந்துட்டான்யா வந்துட்டான் ;) ஹா ஹா வாழ்த்துகள் பாலோ செய்தாச்சு

பப்பு எத்தனை லெட்டர் நான் அனுப்புனேன் ஒன்னும் பதில் இல்லை..
சரி போனது போச்சு..
இப்ப புது ப்ளாகுல நீ அப்ப எழுதுனதை எல்லாம் One by One ரிலீஸ் பண்ணு கொஞ்ச நாள் கழிச்சு அது வரைக்கும் புதுசாவே எழுது..

வெல்கம் பேக்!

மறக்காம என்னோட பேரையும் சேர்த்து இருக்கீங்களே. நன்றி பப்பு. அடுத்தடுத்த உங்களோட குறும்பு பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

ஹாய்! எனக்கு மட்டுந்தானு நினைச்சேன். உங்களுக்குமா? ( அல்பசந்தோசமா! ) நான்
என் ப்ளோக்க திறக்க பார்த்தா இதுதான் (Bolgspot.com
What you need, when you need it ) வருது.
கூக்குல் சர்ச்சுல போனா என் ப்ளோக்கே இல்லேனு வருது. அதனால என் gmail ஓபன் செஞ்சு அதன் மூலமா உள்ள போறேன். பெரிய சிரமமாய் இருக்கு. என் ப்ளோக்க
ஓபன் பண்ணிப் பாருங்க. கமெண்டு ஒன்னு கொடுங்க. அப்படியே உங்க தோஸ்துகளுக்கும் கொஞ்சம் சொல்லி விடுங்க. அப்பப்ப பாத்துப்போம்.வரட்டா

பப்பு.. ஆரம்பம் ஆகட்டும் உன் லீலைகள்...

Not able to copy/paste from google transliteration box.

Welcome back & all the best pappu!

வெல்கம் பேக் பப்பு

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!