எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு!

Filed under , , by Prabhu on 6/16/2009 09:02:00 AM

5

காதல்......ம்ம்ம்ம்....அது ஒரு தனி ஃபீல் தான் (இவனும் ஆரம்பிச்சுட்டானா, டேய் நல்லாதானடா இருந்தீங்க?). ஆனா அது என்னன்னு தான் புரியல.(டேய், ஏற்கனவே மண்ட காஞ்சு போய்தான் இங்க வர்றோம். இங்க நீயுமா?). சரி இப்படி சொல்லலாம், காதல்னா ஒரு அரை நிமிஷம் என்னன்னு யோசிங்க? இப்போ சொல்லுங்க, அப்படின்னா என்ன? ஒண்ணும் தோணலயா? இததாங்க சொன்னேன். இதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது.(முடியல....)


நானும் பல பெண்களை லவ் பண்ணி பாத்துட்டேன். என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? லவ் பண்ணவள பாத்துக்கிடே இருந்தா நம்ம கண்ணு முன்னாடியே இன்னொருத்தன் அவள லவ் பண்ண ஆரம்பிச்சதுதான் நடந்தது. ஆனா நம்ம லவ் பண்றத விட அவனவன் லவ் பண்ற கதைய கேட்டுப் பாருங்க, ரொம்ப சுவாரசியமா இருக்கும். அவனவன் படுற கஷ்டத்தைக் கேட்டா காமெடியா இருக்கும்.(இந்த ரணகளத்திலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது?)


சில பேரு பிறக்கும் போது கடவுள் அரைக் கிலோ மச்சத்த பார்சல் பண்ணி கூடவே வச்சு அனுப்புவாரு போல!(கிலோக் கணக்கில இருந்தா அது கேன்சர்டா!). எங்க போனாலும் அவனுங்கள பொண்ணுங்க துரத்துறாங்க. நம்ம ஒரு பொண்ண சைட்டே அடிச்சாலும் திரும்ப ஒரு லுக்க கூட விட மாட்டேங்றாங்க. மேலூர்ல இருந்து எங்க காலேஜ் வந்து படிக்கிற ஒருத்தன் முதல் வருஷமே எங்க மதுரை சிட்டில(நாங்களும் சிட்டிதான்பா! படத்துலதான் ஏதோ கிராம்ம் மாதிரி காட்டி கிண்டல் பண்றாய்ங்க!). ஒரு ஸ்கூல் பொண்ண காலையும் மாலையும் பின்தொடருவத ஒரு வேண்டுதலாவே பண்ணிக்கிடிருந்தான், அவ மதிக்கல. அவன் படிக்காம நாசமாப் போறத பாத்து ஒருத்தன்ஏண்டா இப்படின்னு மொக்கய போட்டு அவன திருத்தி வழிக்கு கொண்டுவந்தா, இப்போ அவ வந்து இவன லவ் பண்றேங்கறா!(இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்!). இப்போ அவன் அவள ஏத்துக்கல; நான் படிக்கனும்னு சொல்லிட்டான்(டேய், நான் உன்ன காலேஜ்லயே பாத்த்தில்லயே!)


இதுக்கு அடுத்த வருஷம் கடைசியில இவன் ஒருத்தியப் பத்தி பேசிட்டிருக்கறதப் பார்த்து, “ரமணி, நீ இன்னும் அவள விடலயா?” எனக் கேட்ட்துக்கு, பக்கத்திலிருந்தவன்இது வேற ஒருத்திடா. அவங்க ஊர்க்காரி.” எனக் கூறிவிட்டு, “அவன் கிடக்குறான், நீ சொல்லுடா மாப்ளஎனக் கதையில் மூழ்கினான். என்ன்ன்னு கேட்டா அது எசகுபிசகான அவன் காதல் லீலைகள். ஏண்டா இப்படி அலையுறீங்கன்னு கேட்டுக்கிட்டே நானும் அவன் பக்கத்துல உக்காந்தேன் (ஹி.. ஹிக்க்ர்ர்ர்ர்த்தூஅப்படி துப்பிட்டு மேல படிங்க).


மூணாவது வருஷம் திரும்ப லேட்டா வர ஆரம்பிச்சான். ஏண்டானு கேட்டப்போ மொத்தக் கதையையும் சொன்னான். அந்த பொண்ணு இன்னொருத்தன் பொண்டாட்டியாம்(க்க்ர்ர்ர்ர்….). 18 வயசுலயே அவள கட்டிக்கிட்டு துபாய்க்கு போய்ட்டான் புருஷன்காரன். அந்த கேப்பில தான் இவனோட லவ்வு! ஒருநாள் அவளுக்கு ஃபோன் போட, அவ மாமனார் அத எடுக்க, இவன் ஜலதோஷமா, இப்படி இருக்கு குரலுண்டிருக்கான். அப்புறம் எல்லாத்துக்கும் தெரிஞ்சு போய் அவன அவங்கப்பா கொஞ்ச நாள் மாமா வீட்டில இருடான்னு அனுப்பி வைச்சுட்டார்..

, அதான் லேட்டா?”

அதனால இல்லடா

பின்ன?”

இல்ல, இப்ப நான் நத்தத்திலிருந்து பஸ்ல வரேன்….”, இழுக்கிறான், இது சரியில்லயே?

அதத்தான் சொன்னியே

அதுல வரும்போது தினமும் அர்ச்சனான்னு ஒரு பொண்ணும் வருது

நான் ஒருமாதிரி பாக்குறதப் பார்த்த அவன், “ சும்மா பேசிட்டிருப்போம்டா. பஸ்ல போர் அடிக்கும்ல

சரிஎன நான் அவன் பேச வாய்ப்பு கொடுத்தேன்.

அவ இத எழுதிக்குடுத்தாடா. இத என்ன்ன்னு படிச்சு சொல்லுடா?”

அது ஹிந்தியில் எழுதிருந்துச்சு, அதான் என்கிட்ட வந்திருக்கு. அதப் பாத்துட்டு நான் அவன கேவலமா பாத்ததும் அவனுக்கு புரிஞ்சிருச்சு. ஆர்வமாக் கேட்டான், “என்னடா போட்டிருக்கு?”

ஆங்…. அவளுக்கு எய்ட்ஸாம், மறுவாழ்வு குடுக்குறியான்னு கேட்டிருக்கா

டேய், விளையாடாதடா. என்ன போட்டிருக்கு

ஆமா, நீ சானியா மிர்சா, உன்னோட டென்னிஸ் விளையாடுறோம். போடாஆஅ…… வேற என்ன இழவ எழுதி இருக்கப் போறா? உன்னை காதல் செய்கிறேன்றத எழுதி காதலுக்கு பதிலா மட்டும் டாஷ் போட்டிருக்கா, ஃபில் பண்ணி அனுப்புங்க, அக்கா இதயத்த பொட்டலத்துல தந்தாலும் தந்திருவாங்க”(வயித்தெரிச்சல கிளப்புறானுங்க, சார்)

மாப்ள், நீயே பதில் எழுதிருடா

இந்த பொழப்புக்கு….”

கோவிச்சுக்காதடா!”

சரி, பழகின பாவத்துக்கு!”

தாங்கஸ்டா! இதோட அவள பத்தி முழுசா எழுதிக் கொடுத்திருக்காடாஅது பார்க்க அந்நியன்ல அம்பி எழுதுன மாதிரியே இருந்துச்சு.

டேய், இவ உன்ன லவ் பண்றாளா? , இல்ல உன்கிட்ட வேலை கேக்குறாளா? அவ ஸ்கூல் பொண்ணுதானான்னு பாத்துக்கோடா. ஜெராக்ஸ் கடையில வேலை பாக்குறவளா இருக்கப் போகுது!”

மச்சான், தங்கச்சியப் பத்தி தப்பா பேசாத

இப்போதான் லவ் லெட்டர் எழுதுன. தங்கச்சின்ற?”

உனக்கு சொன்னேன் டா

அடி செருப்பால! ஏண்டா மொன்ன நாயே, உன் சவுரியத்துக்கு என்னய உருட்டுறியா? ஓடி போயிரு

கோவிச்சுக்காத மாப்ள”, எனக் கட்டிப் பிடித்து கூல் டிரிங்க் வாங்கிக் குடுத்து கூலாக்கிவிட்டு போனான்.


கொஞ்ச நாள் கழித்து வேலண்டைனுக்கு சிறிது நாட்கள் முன்பு,

மச்சான், வேலண்டைன் டே வருதுடா

அதுக்கு நான் என்ன பண்றது. நான் என்ன லவ்வா பண்ணுறேன்”(அத வேற ஞாபகப் படுத்தி கடுப்பேத்துறானுங்க சார்)

அதுக்கு இல்லடா

வேற் என்ன ம்#%$&%#”

வேலண்டைன் வருதுல. உன் தங்கச்சிக்கு என்ன வாங்கிக் கொடுக்ற

டேய், தங்கச்சிக்கு வேலண்டைன்ல எதுவும் வாங்கிக் கொடுக்க்க் கூடாது. வாங்கிக் கொடுத்தா அது தங்கச்சியா இருக்காது. என்ன சொல்ற, வாங்கிக் கொடுக்கவா?”

உன்கிட்ட கேக்குறதுக்கு நான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி செலவு பண்ணிறலாம்”.

அதுக்கப்புறம் ஒரு நாள் அவனுக்கும் அவளுக்கும் சண்டைனு வந்தான்.

என்னடா ஆச்சுஎனக் கேட்டேன்.

அவ பண்ணுனது பிடிக்கலடா

என்ன பண்ணுனா

அவ தங்கச்சிக்கு பிறந்தநாள்னு சொல்லவே இல்ல

தங்கச்சிக்குதான, அதனால என்ன? அதுக்கு என்ன சொல்லு

எனக்கு கோவம் வந்திருச்சு. அவளப் பார்த்துஎனக்கு உன்ன பாத்த்தும் புடிச்சிருச்சு, உன் தங்கச்சிய ரொம்பப் பிடிச்சு போச்சு. அவ பிறந்த நாளை எப்படி சொல்லாம விட்டன்னு சொல்லிட்டு சண்டைய போட்டுட்டு வந்திட்டேண்டா. திரும்ப எப்படி பேசுறதுன்னு தெரியலன்னு சொன்னான்.


நான்மௌனம் பேசியதேசூர்யாவ மனசில வச்சுக்கிட்டு,”நிறுத்துடா விளக்கெண்ணெய். நல்லாத் தானடா இருந்தீங்க. அப்புறம் எங்கிருந்துடா வந்துச்சு இந்த கரும்ம். காலைல கொண்டுபோய் விடுறதும், சாயந்திரம் கூப்பிட போறதும், சண்டை போடுறதும், அதுக்காக நீங்க சேருற வரைக்கும் பக்கத்தில இருக்கறவன பிடிச்சு மொக்க போடுறதும், எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு”, என கிழிச்சுட்டேன்.


பின்ன, என்ன பாத்தா மைக் மாதிரியா இருக்கு? போறவன் வர்றவன் எல்லாம் மொக்க போடுறான். ஆனா ஒண்ணு (ஆனா ஒண்ணுதான், ஆவன்னாதான் ரெண்டுன்னு சொல்றவங்களுக்கு கேர்ள் பிரண்டே கிடைக்காமல் போக! கல்யாணமாயிடுச்சேன்னு கொக்கரிக்கரவங்களுக்கு புதுசா கிடைச்சு அது பொண்டாட்டிக்கும் தெரிஞ்சிரும்). கைகால் உடைஞ்சவன்டயும் காதல் பண்றவன்டயும் சிக்கவே கூடாது. சிக்கினா சவ சவன்னு அதப் பத்தியே பேசி சாவடிச்சுருவானுங்க.

Comments Posted (5)

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Pappu Welcome Bac..

Fonts ஒழுங்கா தெரியுல..செக் பண்ணு..

தாங்க்ஸ் வினோத் அண்ணா. நீங்க போட்ட லெட்டர கூகுள் ஒண்ணுமே செய்யலயா?

nice

பெரியபுள்ளதனமால்ல இருக்கு...
குட்...குட்...
கலக்குங்க...

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!