டாப்பு அடிக்கலாம்

Filed under , by Prabhu on 7/05/2009 11:10:00 PM

19

டாப்படிக்கிறதுங்கிறது ஒருத்தர் ரெண்டு பேருன்னு இல்லாம பல பேரு கூடி ஒரே இடத்தில மொக்க போடுறது. அதுவும் பொது இடம் என்றால் மிகவும் நலம். அதுவும் தெரு முனைகளில் அடிப்பது அந்த ஏரியாவில் பெரும் புகழை பெற்றுத் தரும். ஆனா, இதெல்லாம் எங்கள மாதிரியான காலேஜ், ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும்தான். பதிவுகல நடுத்தர வயது 'யூத்'களுக்கு அல்ல. இது பொதுவான வார்த்தைப் பிரயோகம்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, 'சுப்ரமணியபுரம்' படத்துல "தேநீரில் ஸ்நேகிதம்" பாடலில் சுவத்துல 'மாப்ள்' போன்ற வட்டார சொற்களோட எழுதிருப்பாங்க. (அய்யோ...விஷயத்துக்கு வாடா..) இதனால என்ன சொல்றேனா, டாப்பு அடிக்கிறது என்ற புதிய சொல்லாடலை(பிரபல பதிவர்னா இந்த வார்த்தைய அப்பப்ப சொல்லனுமாம்!) பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்யுறேன்.
--------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் குருமா, கொத்து புரோட்டா, கொத்துமல்லி சட்டினி என சரக்கில்லாதப்போ மொக்க போடுறதுக்கு ஒரு பேர் வச்சிருக்கா மாதிரி நம்மளும் ஏதாவது செய்யனுமேனு யோசிச்சப்போ, கண்ட சரக்க கலந்து கொடுக்கிறதால காக்டெயிலுன்னு வைக்கலாம்னா அது கார்க்கிட்ட, சரி நம்ம எழுதறது மேட்டரே இல்லாம சும்மா தான எழுதுறோம் சும்மானு பேர் வச்சா தமிழ்மாங்கனி காயத்ரி கோவிச்சுக்குவாங்க, புரோட்டா குருமானுனு கூட வைக்க முடியல. அதான் கொஞ்சம் regional and cultural டச்சா எங்க slangல டாப்பு அடிக்கலாம்னு வச்சேன். இதுல பல பரிமாணங்களில் மொக்க போட போறேன். Be careful!
--------------------------------------------------------------------------------------------------

சமீபத்துல ஒரு ஹை கோர்ட் குடுத்த ஒரு தீர்ப்பப் பத்தி பதிவுலகமே 'பத்தி' எரியும் நெனச்சேன். புஸ்வானமா போச்சு. கேஸே பத்தி எரியுறதப் பத்திதான். IPC377 ஒழிக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியிருக்காங்க. அந்த் செக்ஷன் sodomy பத்தினது. அதான் ஹோமோ செக்ஷுவாலிட்டி! ஓரினச் சேர்க்கைய குற்றமா அறிவிச்ச அந்த பிரிவத் தூக்குவதன் மூலமா ஓரினச் சேர்க்கை இந்தியாவில் சட்ட பூர்வமானதா ஆகுறதுக்கான அடையாளம் தெரிகிறது. அதுக்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளா(கவிஞ)ரான 'விக்ரம் சேத்' கூட மகிழ்ச்சி தெரிவிச்சிருக்காரு. அந்த ஆளே ஓரினச்(அல்லது ஈரினச்(bisexual) சேர்க்கையாளர்ங்கிறது கொசுறு செய்தி. அடுத்து அவங்க திருமணம் செஞ்சுக்கறதுக்கு கூட சட்டம் வரலாம்!
--------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக் கிழமை என் பிரண்டு அஜயோட அழகர் கோவில் போயிருந்தேன். அங்க மலை மேல பைக்க நிறுத்திட்டு ரெண்டு அடி எடுத்து வைக்கல, 'தம்பி, பைக்குல எதுவும் வச்சிருந்தா எடுத்துக்கோப்பா'னு ஒருத்தரு சொன்னாரு. என்னன்னு திரும்பி பாத்தா, குரங்கு என் பைக்குல ஏறிடுச்சு. திருட்டு குரங்குங்க.! பைக் டாங்க் மேல இருக்குற pouchல கூட கை விடுதுங்க. ஒருத்தர் பைக்குல வச்சிருந்த சாப்பாடெல்லாம் எடுத்துருச்சு. என் பைக்குல ஏறுன குரங்கு, pouchஅ திறந்து பாத்துட்டு அமைதியா இறங்கி போயிருச்சு. அனேகமா என்னோட பைக் துடைக்கிற அழுக்குத் துணிய மோந்து பாத்திருக்கும்! நானும் ரெண்டு நாளா மதுரை மாவட்டச் செய்திகள பாத்துக்கிட்டு இருக்கேன், 'அழகர் கோவிலில் ஒரு குரங்கு மர்மமான முறையில் சாவு'ன்னு நியூஸ் வருமானு.
என் பைக்க பைய திறக்குது பாருங்க, திருட்டு குரங்கு!


அங்கயும் பொரி, கடலை எல்லாம் விக்குறாங்க. அத வாங்கினாலும் குரங்கு பிடுங்கிட்டு போயிரும். இந்த பொரி கடை காரங்கதான் தங்களோட தொழில டெவலப் பண்ண இந்த குரங்குகள வளர்கிறாங்கன்னு ஒரு conspiracy theory கூட வச்சிருக்கேன்.

நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல! அதுங்கள ஒழிக்க கமாண்டோ ட்ரைனிங்!
-------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் பினிசிங் டச்சா கவிதை, நகைச்சுவைனு எழுதுவாங்க. நமக்கு கவிதைன்னு நாலு வாட்டி சொன்னாலே 'ஜல்ப்பு' பிடிச்சிக்கும். அதனால ஒரு ஜோக். அதுவும் 'ஏ' ஜோக்தான் சொல்லனும்னு ஆசை. ஆனா, வரிசையில் முதல் பதிவு என்பதால சைவம்!

விவசாயியும் புது மனைவியும்

ஒரு அமெரிக்க குடியானவன்(?!) சரி, உங்க பாஷையில விவசாயிக்கு கல்யாணம் நடந்தது. அவன் தன் புது மனைவியோட குதிரை வண்டியில போறான்.
அப்போ அந்த குதிரை மக்கர் பண்ணுது. அவனுக்கு சரியான கோபம். 'ஒண்ணு' அப்படின்னு சொன்னானாம். பொண்டாட்டிக்கு புரியல!
இன்னொரு தடவ மக்கர் பண்ணுச்சு அந்த குதிர. 'ரெண்டு' அப்படின்னு சொன்னான். என்னடா, வடிவேலு கணக்கா காமெடி பண்ணிக்கினு இருக்கான், என அவன் பொண்டாடி நெனச்சா.
அடுத்த தடவ மக்கர் பண்ணப்போ, 'மூணு' அப்படின்னு சொல்லிட்டு துப்பாக்கிய எடுத்து அந்த குதிரைய நோக்கி வச்சு......டுமீல்!
அதப் பாத்த அவன் மனைவி, "அடப் பாவி மனுஷா! அநியாயமா ஒரு குதிரைய கொன்னுட்டியே! வாயில்லா ஜீவன் அது! அந்த பாவம் நம்மல சும்மா விடுமா!" என அவன கரித்துக் கொட்ட, அவன் அவளை நோக்கி திரும்பி அமைதியாகச் சொன்னான்,
"ஒண்ணு"

Comments Posted (19)

"டாப்பு" டக்கர் :)

கடைசி ஜோக் மாத்திரம் முன்னாடியே படிச்சுருக்கேன்.

அதென்ன குரங்குகளை ஒழிக்க கமாண்டோ கூட குரங்கு மாதிரியே இருக்கணுமா.. ஐ மீன் அந்த மாதிரி தொங்கணுமா :)

டாப்பு அடிக்கலாம் எந்த ஊர் பாஷை?!

சரி!!
அதுலருந்துதான் நாம வந்தோம்!! அதுக்காக அப்படியேவா?....................நல்லா இருக்கு!!!

டாப்பு... நல்லா தான் யோசிகிரிங்க அப்பு... யாரும் ஆப்பு வைக்காம இருந்தா சரிதான்... அப்பறம் பைக் மேல உக்கார்ந்து இருகுறதுகும் மரத்துல தொங்குறதுகும் 8 வித்யாசம் தேடி பார்த்தேன்.. ந்கொகமக்கா ஒன்னு கூட தெரியுல ... அவ்ளோ பர்பெக்டா இருக்கு.. ..

\\டாப்பு அடிக்கலாம் எந்த ஊர் பாஷை?!\\

எங்க ஊரு பாஷை தானுங்க...!
சென்னைப்பக்கம் "அட்டி"ன்னு சொல்லுவாங்க...!

@நான் ஆதவன்
நன்றி

@சென்ஷி
எங்க ஊரு பாஷை! அதான் எதுங்குறீங்களா?
நாங்களா மதுரக்காரய்ங்க! ஆங்....

@தேவன் மாயம்
வருகைக்கு நன்றி!

@கிஷோர்
ஏன் இருக்காது? உங்கள வினோத் அண்ணன விட்டு கவனிச்சுக்குறேன்!

@டக்ளஸ்
கரெக்ட்! அது என்ன அட்டி? பேரே மட்டியா இருக்கே?
சென்னைகாரனுங்க பேரு வைக்கிறதுல வேஸ்டு பாஸ். மதுரை தி பெஸ்ட்!

commando training pic...சூப்பர்:)

ஹை..ஒரே பதிவுல உன்னோட மூணு போட்டோ..

//பதிவுகல நடுத்தர வயது 'யூத்'களுக்கு அல்ல. //

சரி போயிட்டு வரேன்.

@வினோத்
கிஷோரு ஓட்டினதுக்கு வினோத் அண்ணன்கிட்ட சொல்றேனு சொன்னா, நீங்களே இப்படி ஓட்டுறது வந்து நிக்கிறீங்களே! இது நியாயமா?

@அறிவிலி
அட, கோவிச்சிக்காதீங்க தல! வந்து கூச்சப் படாம படிங்க!

ஜோக் சைவம் என்பதைத் தவிர எனக்கு இந்த பதிவில் பிரச்சனை எதுவும் இல்லை. ;)

கதை சூப்பர்!

naa topnnu vera ninachen... Enga pakkam SLANG la idhukku 'A'rthame vera!!

நல்லா டாப்படிங்க பப்பு.

arumai.. mikka arumai.. tappu adichu mudichaachu.. ippa adikuradhukku palaya gumbal illai.. ellamm ninaivugal maathiram micham.. :) kurangu stills arumai..

டாப்பு.......

டாப்பு அடிக்கிற நீங்க கமெண்டோ ட்ரைனிங் எடுத்த படம் சூப்பர்

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கெடச்சிருக்கே ? வாழ்த்துக்கள்........!!!!!!

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!