டாப்பு அடிக்கலாம் - 7

Filed under , , by Prabhu on 1/06/2010 09:58:00 AM

30

இளையராஜா விஷயம் ஒன்றை கொஞ்ச பழைய சமீபத்தில் ட்விட்டரில் கண்டு ரீட்விட் செய்த விவரங்களை சொல்லுகிறேன். இந்தப் பாடல் ரஜினியின் 100வது படமான 'ஸ்ரீராகவேந்திரா' வில் இளையராஜாவின் இசையில் ஜானகியின் குரலில் இடம்பெற்றது 1985. ஆனால் இதே பாடல் 2003 ல் நமக்கே தெரியாமல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதை ட்விட்டரில் சொல்லியவர் nchokkan. 'உனக்கும் எனக்கும் ஆனந்தம்' என்ற பாடலின் இந்த ரீமிக்ஸை கேளுங்க. Black eyed Peas குழுவின் The elephunk ஆல்பத்தில் the elephunk theme என்ற பெயரில் bonus track ஆக ரிலீஸ் செய்யப் பட்டிருக்கிறது.


ஆனால் இந்தப் பொக்கிஷம் தொலைந்து விடக் கூடாதென்ற 'நல்ல எண்ணத்துடன்' இந்தப் இசையை இதே ராப் மிக்ஸுடன் 'திரு திரு துறு துறு' மூலம் தமிழுக்கு வேறு பாடலில் எடுத்து வந்திருக்கிறார் மணி சர்மா. காப்பி என்றெல்லாம் சொல்லாதீங்க. பின்ன, ஜெர்மனி சிடி ல மட்டும் இருக்கும் போனஸ் ட்ராக்கை சுட்டிருக்கிறாரே. அதுக்கு ஒரு தேடல் வேண்டாமா? நம் இசையை மீட்டு கொடுத்திருக்கிறார். நீங்களும் அந்த Black eyed peas சரக்கை தேடுங்கள். சரளமாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
என்னடா, ப்ளாக்கரில் அடுத்த பிரச்சனை வரவில்லயே என நினைத்து முடிக்கல, வந்துடுச்சு. ஆனால், போன தடவை அளவு பெருசா இல்லையே? என்னவோ, நமக்கு எதுக்கு? இங்க எழுத வரும் பலர், சும்மா பொழுது போக்கா தான் எழுத வர்றோம். சில மொக்கைகள், சில் கதைகள், நண்பர்கள் என போய்கிட்டு இருக்கிறதல, ’எனக்குதான் நல்லது தெரியும். நான் உங்களுக்கு மோட்சத்துக்கு வழிகாட்டுறேன்’ ரக ‘alternative POV' கேசுகள் பண்ணும் தொல்லை தாங்கலப்பா! (இதை தட்டச்சி சிலபல நாட்கள் ஆகிவிட்டது.)
------------------------------------------------------------------------------------------------------------------
திவாரி- 85 வயசுல 3 பொண்ணுங்க! வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கய்யா! நமக்கு 20 வயசுதான் ஆகுது! அதை விடுங்க. இப்ப அந்த பையன்(!) 3 பொண்ணுகளோட இருந்தால் என்ன? 4 பொண்ணுங்களோட இருந்தால் என்ன? யாரையும் கட்டாயப்படுத்தியிருந்தா, அவங்க கேசு போட்டிருந்தால் பிரச்சனை. இல்லையே, அப்புறம் என்ன? அவங்களுள் ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் அவரோட சொந்த விஷயத்தில் மூக்க நுழைக்கிறதுக்கு அரசியல் தான் காரணம். யப்பா, 85 வயசுல இப்படி இளமையா இருக்கிறாரே ஆச்சரியப்படுவாங்களா, அதை விட்டுட்டு...
-----------------------------------------------------------------------------------------------------------------
’கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்’ - தெலுகு படம் பார்த்தேன். ஃபீல் குட் ரகம். ரொம்ப புதுமையான கதையெல்லாம் இல்லையென்றாலும் நல்லா இருந்தது. என்னைப் போல ஸ்மார்ட் சித்தார்த்தின் ஃபேனாக இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம். 30 வயசு ஆள் என்று சொன்னால் நம்பவா முடிகிறது. காலேஜ் பையன் தான். தம்ஸ் தான் கதாநாயகி. ரம்யா கிருஷ்ணன் சித்தார்த் அம்மாவாக(!). விமர்சனம் வேண்டுமென்றால் கேபிள் சங்கர் தளத்தில் தேடவும்.
----------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
லிட்டில் ஜானின் அம்மாவை ஒரு சமயம் பள்ளிக்கு கூப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். அங்கே, ‘உங்க பையனால் வகுப்பில் பிரச்சனை. முதலில் அவனுக்கு ஆண் பெண் வித்தியாசமே தெரியலை. புரியவைங்க’ எனக் கூறி அனுப்புகிறார்கள். நேராக வீட்டிற்கு போனதும் அவனை படுக்கயறைக்கு அழைத்து சென்று, ‘முதலில் வந்து அம்மாவின் ப்ளவுஸை கழட்டு’ என்றாள். பையன் செய்தான். ‘இப்பொழுது இடுப்பிலிருக்கும் என் துணியை கழட்டு.’ அதையும் செய்தான். இப்படியாக தன் ப்ரா, பேண்டீஸையும் கழட்டச் சொன்னாள் அம்மா. பிறகு ஜானிடம், “கண்ணா, இனிமேல் இப்படி அம்மாவோட டிரஸ போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போகக் கூடாது, சரியா?”.
-----------------------------------------------------------------------------------------------------------------

’இணைய’க் காதல்

அது பெண்ணாவென்பதின் அறியாமை
ஆனாலும் அளவலாவும் ஆர்வம்
சிறு அரட்டைகளில் ஸ்மைலி இடைச்செறுகல்கள்
கல்லூரியின்  விட்டதும் கடமையுடன்
வீடு திரும்பி கணினியில் கடலையிடல்
கணங்களில் காதலித்து
தவிர்ப்பில் வெறுத்து
வெறுப்பில் இறைஞ்சி
இரவில் போர்வையடியில்
திருட்டு குறுஞ்செய்திகளின் குறுகுறுப்பு
தொலைபேசியில் காதலித்து
அடைகாத்திருந்த அந்த நாள்
முத்தமிட்டு பத்திரமாக பதிவு செய்தேன்

-----------------------------------------------------------------------------------------------------------------