Vigilante Movies

Filed under , , by Prabhu on 12/02/2010 07:48:00 AM

5

கொஞ்ச காலம் கழிச்சு வந்து எழுதும் போது, ஏதோ புதுசா யாரு வீட்டுக்குள்ளயோ போய் சீட்டு நுனியில் உட்காருவது போலான ஃபீலாக இருக்கிறது. பதிவு ஏத்திட்டு செக் செய்கிறப்போ முன்ன அளவு மக்கள் வந்து பாக்குறதுமில்லங்கிறப்போ, ‘சரி, நியாயம் தான்’ எனத் தோன்றுகிறது. திரும்பவும் இங்க வந்து நிலைநிறுத்திக்க கொஞ்ச நாளாகும். நமக்கே இப்படி இருக்கே, குப்ரிக் மாதிரி ஆசாமிகள் எப்படி 50 வருஷத்துக்கு 12ஏ படம் எடுத்துட்டு இப்படி நிலைத்து இருக்கிறார்கள்?

இது ஒரு சின்ன பதிவுதான். ஒரு அப்சர்வேஷன் அல்லது ‘ஒ’ப்சர்வேஷன் ;).
 தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே எடுப்பது இல்லையே என்ற நினைப்பு உண்டு. ஆனால், அந்த மாதிரி படங்களுக்கு முக்கிய தேவையான தாவுவதற்கு உயரமான கட்டடங்களும் ஆக்சிடண்ட் ஆகி வில்லனாவதற்கு தேவையான அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்களும் இல்லாமல் போனதாலோ என்னவோ படங்கள் வரவில்லை. முக்கியமாக காமிக் படிக்கும் வழக்கம் வேறு இல்லை. அங்கோ ஒரு 60 வருட பாரம்பரியம் இருக்கிறது. இன்னும் ஓவ்வொரு கதையும் revamp ச்செய்தால் வாங்கிப் படிக்கிறார்கள். மாதாமாதம் இழுவையாய் செல்லும் கதைகளையும் படிக்கிறார்கள்.


இதிலும் ஒவ்வொரு காலக்கட்டக்களிலும் ஒவ்வொருவிதமான மனநிலை மக்களின் இடையில் நிலவும் போது காமிக்குகளிலும் அதே நிலை இருக்கும். 50களிலும் 60களிலும் உலகப் போரின் தாக்கம் அதிகம் இருந்தது. உதாரணம் - Marvelன் Captain America. அதன்பின் எல்லா கதைகளிலும் குளிர் போரின் தாக்கம் இருந்தது. கதைகளில் சோவியத் சூப்பர் வில்லன்கள் இருந்தார்கள். இதே போல DC comicsம் Golden Age, SIlver Age, Modern என கதையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டும் அவ்வப்பொழுது விழுந்து எழுந்திருத்துக் கொண்டே இருக்கும்.

இதே போல போன decade ல் காமிக் மற்றும் அதன் சார்ந்த படங்களும் விழுந்தபின் மறுமலர்ர்ச்சியை SpiderMan மூலம் கண்ட பொழுதுதான் நம் மக்களுக்கும் டப்பிங்கில் அவற்றை பார்க்க ஆரம்பிக்க, அந்த படம் ஓடிய தைரியத்தில் இன்ன பிற காமிக்களும் திரைக்கு வர ஆரம்பித்தன.

இப்படியே அங்க வெட்டிவிட்டு நம்ம ஊருக்கும் வருவோம். நம்ம ஊரிலும் காமிக் தீவிர ஃபாலோயிங் இருந்தது. அதுவும் இப்பொழுது டப்பிங் படம் போல டப்பிங் காமிக்குள் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தன. எனக்கு இவைப் பற்றி நேரடி அனுபவம் அதிகம் இல்லை. தமிழ் காமிக்குகளின் இறுதிகாலத்தை ஒட்டியே என் சிறுவயது இருந்தது. அதனால் என்னதான் காமிக்குகள் படித்திருந்தாலும் பின்புலன் தெரிய வாய்ப்பில்லை. ’கருந்தேள்’ க்கு அதிகம் தெரிய வாய்ப்புண்டு. இங்கே ப்ளாக்குகளிலேயே இதற்கு அதிக மக்கள் உலவுகிறார்கள். நிறைய பழைய வரலாற்றை எழுதுகிறார்கள்.

தமிழ் காமிக்குகளின் முன்னோடி அம்புலிமாமாவாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. சின்ன வயதில் வெளியூர் போகும் முன் பழைய புத்தகக் கடையில் இருந்து அம்புலிமாமா வாங்கிக் கொடுப்பார் அப்பா. திடீர் பயணமென்றால் பேருந்து நிலைய தமிழ் காமிக்குகள். அதிலும் இரண்டு பதிப்பகங்கள்தான் எனக்கு தெரியும். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ். நான் படித்தது பெரும்பாலும் லயன் தான். கொஞ்சம் கவ்பாய், மாயாவி மற்றும் கருஞ்சிறுத்தை டைப் சரக்குகளைப் படித்திருக்கிறேன். இதில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை. மாயாவி The Phantomல் இருந்து வந்த விஜிலாண்டி ரகம்.

டைட்டிலுக்கு வந்தாச்சு. எழுத ஆரம்பிச்சதே ஏன் தமிழில் அல்லது இந்தியாவில் சூப்பர் ஹீரோ அல்லது விஜிலாண்டி டைப் படங்கள் இல்லை என்பதுதான். சூப்பர் ஹீரோ உங்களுக்குத் தெரிந்தது தான். பூச்சி கடித்ததில் இருந்து பிற கிரகங்களில் வந்தவன் என்கிற வகையில் பல காரணங்களால் ஆகிறவன். இந்த வகையில் நம் ஊரில் வந்த ஒரே சரக்கு ‘சக்திமான்’ - சூப்பர்மேனின் rip-offஆக இருந்தாலும் இந்தியாவின் ஆகமவிதிகளின் படி அமைந்த கதை. நல்ல ரெஸ்பான்ஸ் பார்வையாளர்கள் இருந்தாலும், ரொம்பவும் நீளுவதாக மக்கள் கருதியதால் தொடர் முடிந்தது. நம் மக்கள் வில்லனை முடித்து சுபம் போட்டுவிட எண்ணுகிறார்கள். அறுபது வருஷமாக ஆனானப்பட்ட சூப்பர்மேன் கண்களிலேயே கண் விட்டு ஆட்டும் Lex Luthor இன்னும் இருப்பதை யாரும் அங்கே கேட்பதில்லை. மக்களின் மனநிலை வித்தியாசம் அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் இருப்பதே இதற்கு காரணம்.


அடுத்து விஜிலாண்டி(Vigilante). விஜிலாண்டி படங்களும் ஒரு வகையில் நம் ஊரில் இல்லை. விஜிலாண்டி என்பது முகமுடி மாட்டிக் கொண்டு எந்த சூப்பர் பவரும் இல்லாமல் சாதாரண பலத்தாலோ இல்லை உபகரணங்கள் கொண்டோ அநியாயத்து எதிராக சண்ண்டையிடுபவன். சோ, நியாயப்படி பார்த்தால் Batman சூப்பர் ஹீரோ இல்ல. ஒரு vigilante. இதே போல Punisher, Dare Devil என ஒரு லிஸ்ட் இருக்கு.


அங்க one-shot காமிக் எல்லாம் கூட வரும். ஒரே சீரிஸ் போட்டு தனி கதையை சொல்லி முடித்து விடுவார்கள். 'Watchmen' பார்த்தவர்களுக்கு தெரியும் அது. அது ஒரு one-shot. அது ஒரு குழுவாக அமைந்த விஜிலாண்டிகளைப் பற்றிய படம். அதை படமாக எடுத்திருந்தார் ‘300’ பட இயக்குனர்.


இப்போ ஒரு சந்தேகம் வருது. தமிழில் vigilante படங்கள் வந்ததே இல்லையா? ஏன் இல்லை? ராபின் ஹூட் ரகப் படங்களான் பல ஷங்கர் படங்களும் ஒரு வகையில் விஜிலாண்டி படங்கள் தான். ஜெண்டில்மேன் ஒரு உதாரணம். இவை எல்லாம் விஜிலாண்டி பொதுவான குற்றங்களை எதிர்ப்பதாக இல்லாமல் லஞ்சம், ஊழல், அலட்சியம் என ஒவ்வொரு விதமான Red Tapeன்னால் வரும் தீமைகளை தீம்களாகக் கையாண்டாலும் இவைகளை விஜிலாண்டி படங்களாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது கெட்டப் போட்டுக் கொண்டு கொள்ளையடிப்பதில் இல்லையென்றாலும் unplanned ஆக போகும் வழியில் எல்லாம் லஞ்சம் வாங்கும் நபர்களை கொல்லும் இந்தியனில் அப்பட்டமாக ஒரு விஜிலாண்டியில் ஸ்டைல் தெரிகிறது. என்னதான் ஜெண்டில் மேன் முதல் இந்தியன் வரை காண்பித்தாலும் அவை எல்லாம் ஒரு முழுமையான vigilante படங்கள் கிடையாது.  ஒரு சில வகைகளில் சில விதிமுறைகள் ஒத்து வரவில்லை. ஒரு பக்கவான விஜிலாண்டி படம் என்றால் நீங்கள் எதிர்பாராத வகையில் ஷங்கருக்கு பதிலாக அவரது குரு எஸ்.ஏ.சி யை தான் குறிப்பிடவேண்டும்.
படம்- நான் சிகப்பு மனிதன்

என்னதான் தங்கச்சி அம்மா செண்டிமெண்ட் வைத்து கதையை ஆரம்பித்தாலும் அவன்  குடும்பம் உருக்குலைந்த பின் பழிவாங்க துப்பாக்கி எடுப்பது, பின் இது மாதிரியாக எத்தனை பேர் கஷ்டப் படுவார்கள் என மற்றவங்களுக்கும் உதவப் போவது என கிளம்பும் அவர், சிகப்பு டீ-ஷர்ட் லெதர் ஜாக்கெட் என ஒரே உடை, ராபின் ஹூட் என்ற ஒரு புனைப் பெயர், இரவில் வீதிகளில் உலா வருவது, வரும் வழியில் தவறுகள் நடந்தால் சுடுவது, அவை எல்லால் அஃபென்ஸிவ் க்ரைமாக இருப்பது, அவர் பெயரில் பத்திரிக்கையில் விவாதங்கள் வருவது, போலீஸ் துரத்துவது, எல்லா கிரிமினல்களும் ஒன்றுகூடி இவரை அழிக்க முயலுவது என பல வகையில் இது விஜிலாண்டி படங்களின் விதிகளை ஒத்து வருவதால் இன்னபிற இந்திய செண்டிமெண்ட்களையும் எஸ்.ஏ சியின் ட்ரேட்மார்க் விஷயங்களையும் புறந்தள்ளிவிட்டு இதை ஒரு முழுமையான தமிழ் விஜிலாண்டி படம் எனலாம் என்கிறேன். கொஞ்சம் பெருசாகிடுச்சுல்ல? ஏதோ யோசிக்க ஆரம்பிச்சு, எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லாமல். போகிறபோக்கில் நினைவிற்கு வந்த எல்லாம் சேர்த்து எழுதிக் கொண்டு வந்தாகிவிட்டது. அதனால் இந்த நிலை. சோ, தமிழில் சூப்பர் ஹீரோ படங்கள் இல்லை. விஜிலாண்டி படங்கள் உண்டு. சோ...? சும்மாதான், ஒரு ‘ஒப்சர்வேஷன்’.

இரு அவளுக்கு ஒரு நான் - மறு பதிப்பு

Filed under , , by Prabhu on 11/26/2010 06:51:00 PM

5

பக்கத்து ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் நண்பனும் அறைத் தோழனுமான் அஜயுடன் ரொட்டி சாப்பிடும் நேரத்தில் விவாதம் தொடங்கியது. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டாவென ஒரு நூற்றாண்டாக தேய்ந்த பதிப்பில் முத்துராமன் கேட்டது பற்றி அல்ல. அவள் அழகா என்பதில். அவனுக்கு நான் அவளைப் பின்தொடரும் இந்த நேர விரய பழக்கங்கள் ஆகவில்லை. ஆனால், நானோ அந்த தருணங்களைச் சேமித்து அசைபோட்டு செரிக்கும் ரகம். அவனிற்கு ஆராய்ச்சியைத் தவிர எதிலும் பொறுமை கிடையாது. கழிக்கும் நேரத்திலேயே பல் விளக்கும் ஜாதி அவன். நானோ கழிப்பறையில் உலகை சிருஷ்டிப்பவன்.

பேச்சை மாற்றும் நோக்கோடு ஆராய்ச்சியைப் பற்றி பேசினால் அவனது கூடத் தலைவரின் ‘ஐன்ஸ்டைன்’ கனவுகளைப் பற்றிய பினாத்தல் தொடர்ந்தது. லைப்ரரியின் வாசலில் சிகரட் பதிலாக வெற்றுப் புகை கக்கும்  எலெக்ட்ரானிக் சிகரட் உதட்டுடன் பேசிக் கொண்டிருக்கும் எனக்கு, அவள் வந்தால் சிகரட்டை மறைத்து நல்லவனாக முயற்சிக்காகவா? அப்படிநல்லவனாக பிம்பம் ஏற்படுத்துவதும் கெட்ட எண்ணமோ? நீரில் விழுந்த நாய் போல மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களை சிலுப்பி உதறுகிறேன். அவள் வருகிறாள்.

அருகிலிருக்கும் அஜய் முதுகில் இடிக்க, வருபவளிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்,
'என் பெயர் அன்ஷு. ச்சீ... அன்ஷூ, என் பெயர் ராஜ்’,

ம்ஹூம்.. இப்படி இல்லை, அவளிடம் கேட்டேன், "நீ அன்ஷூ தான? கவிதா சொன்னாங்க”.
அவள்,”யாரு கவிதா?”.
“அதானே? யாரு? தூக்கத்தில் உன்னிடம் பேசச் சொன்னவள்.”
அவள் புருவம் உயர்த்தும் பொழுது,”இது ஜோக், ஹா.. ஹ.. என் பெயர் ராஜ்.” என்ற பொழுது அவள் புருவம் உதடு மேல் நோக்கி வளைந்தது..

ம்ம்ம்.. இல்லை...  இப்படியும் வேண்டாம் என ஆயிரத்தெட்டு சிமுலேஷன்களுக்கு மத்தியில் schizophreniaவின் அறிகுறிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிதேன்.காதல் ஒரு மிகைப்படுத்தபட்ட உணர்ச்சியாக படுகிறது. 21ம் நூற்றாண்டின் இறுதியில் காதலிற்கு புனித பட்டம் குடுப்பதையோ அது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.

அஜயிடம் இருந்து நான் பிரிந்து எனது ஆராய்ச்சிக் கூடத்துக்கு சென்ற பொழுது பே.ரா. ராமசாமி உணவை உண்டு கொண்டிருந்தார். இப்பொழுது போனால அதை விட்டுவிட்டு மனுஷன் ஆராய்ச்சி பற்றி பேச ஆரம்பித்து விடுவார். நேரம் கொடுப்போம்.

இவரின் ஆராய்ச்சிக்கு எனக்கு மூன்றாவது கண் தேவைப்படுகிறது. கால எந்திரம் செய்கிறார். உங்களுக்கு கால-வெளி தொடர்புகளைப் (Time-Space continuum) பற்றித் தெரியுமா? தெரியாமல் எப்படிப் போகும். நூற்றாண்டு காலமாக கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். அதைக் கொஞ்சம் திரித்தால் இவர் தியரி வந்து விடும். காலம்-வெளி இரண்டையும் கலந்த ஒரு 4 பரிமாண உலகை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Graphல் குறிக்க முடியுமா எனக் கேட்டால் கொஞ்சம் கடினமானாலும் இப்பொழுது இருக்கும் நேரத்தை ரெஃபரன்ஸாக வைத்து பின்னோக்கி அல்லது முன்னோக்கி கணக்கிடலாம். சிறு அவகாச நேரங்களுக்குள் செய்வது இதனால் கடினமாகிறது. இந்த தேவையில்லாத சரக்கு எதற்கு. காரில் போவது போல காலவெளியிலும் ஸ்ட்ரெயிட்டா போய் லெஃப்டுக்கா கட் பண்ணி நேரா போய் யு-டர்ன் போடமுடியும். அதுதான் விஷயம்.

இதற்கு மேல் அறிவியல் வேண்டாம். சில நாட்களாக ஒரு மாதிரியாக இருக்கிறது. அதிகபட்சமான சந்தோஷத்தில் ஏதோ தொண்டைக்குள் எழுவது போல. அஜயிடம் கேட்டால், ’மசக்கையாய் இருக்கிறாய், மாங்காய் வாங்கி சாப்பிடு’ என்பான். அவள் மேலான ஈர்ப்புதான் காரணம் என நினைக்கிறேன். இது 20ஆம் நூற்றாண்டின் எச்சமான சில உணர்வுகள். மனம் வழக்கத்திற்கும் மாற்றத்திற்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது. கட்டமைப்பிற்குள் வாழும் மனது, அந்தக் கட்டமைப்பில் வாழுகின்றதன் செக்குமாட்டுத்தன்மையின் வெறுப்பில் உழல்கிறது. இதற்கு இதுதான் செய்தல் வேண்டுமென்ற கட்டாயங்கள் பிடிக்கவில்லை. எல்லாரும் இது போல்பேசுவதால் நானும் அவளிடம் போய் ஏதாவது பேச வேண்டுமா? இல்லை, என் அவசியத்திற்க்காக, எனக்கு அவளைப் பிடிப்பதனால் நான் பேசித் தான ஆக வேண்டுமா என மண்டையடிக்கிறது. சமூகத்தில் பின்தொடருவதால் சில பழக்க வழக்கங்களை நமக்குத் தேவையில்லாமலே கடைபிடிக்கிறோம். அதில் ஒன்று இதுவோ என தோணுகின்றது.

ராமசாமி வர, ‘ஏன் சார், சாப்பிடவில்லையா?’ என்றேன்

‘சாப்பிட்டேனே’.

‘நான் பார்த்துக் கொண்டிருந்தேனே’

‘டைம்லைன் இருக்கே’

‘சாப்பிடக் கூட டைம் ட்ராவல் அதிகமாப் படலை?’

‘இல்லை. இது காலப் பயணம் இல்லை. நாம் அவ்வளவு தூரம் போகவில்லை’

’என்ன? பின் நாம் செய்த வேலை அனைத்தும்? சோதனைக்கு தயாரென சொன்னது?’

’‘ரியாலிட்டி வார்ப்பிங்’ தான் நிஜமாக நாம் கண்டுபிடித்திருப்பது’

என் பார்வையை கண்ட அவர், ’ நீ இருப்பது ஒரு ரியாலிட்டி. ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு செயலும் அதற்கேற்ற பின்விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. உன்னுடைய தேர்வுகளே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இது போல பல்லாயிரக்கணக்கான கட்டமைப்புகளின் (சிஸ்டம்ஸ்) ஒன்றுடன் ஒன்று இயைந்த தேர்வுகளும் வேறுபாடுகளுமே வெவ்வேறு உலகம் அல்லது ரியாலிட்டியை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு கிளம்பும் முன் ஒரு காபி குடிக்கலாமென்ற் ஆசையில் கடைக்கு சென்று, வண்டியை தவற விடுகிறாய் அல்லது காபியை தியாகம் செய்து விட்டு வண்டியை பிடித்து விடுகிறாய். இப்பொழுது உன் வாழ்க்கையில் இரண்டு ரியாலிட்டிகளாக பிரிகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறது. இதன் மூலம் ஒரு ரியாலிட்டியில் கூலித் தொழிலாளியாகவும் இன்னொரு ரியாலிட்டியில் ராஜாவாகவும் இருக்கலாம். வாழ்வு தேர்வுகளினால் ஆனது. கால-வெளி இழைகளின் இயற்கையான பிழைகளின் மூலம் நீ பயணம் செய்து வேறு ரியாலிட்டியின் வேறு காலத்திற்குக் கூட செல்ல முடியும். நான் மதுரையில் யாருடன் உணவு உட்கொண்டேன் என்றால் நீ நம்ப மாட்டாய்.’ என்க...

’இது நம்பும் படியாகவா இருக்கிறது. அவர் 12ம் நூற்றாண்டு. அழிவதற்கு முன்பான சில வெற்றிகளின் விளிம்பில் இருந்த சமயம். நீயும் நம்புகிறாயா’ என்றான் அஜய்.

நானே பயணம் செய்தேன் என்ற பொழுது அவனுக்கு நேற்று தின்ற கோழி வயிற்றில் இருந்து கூவுவது போல உணரவே கழிவறை சென்று அது வெளியேறிவிட்டதை உறுதி செய்து கொண்டான்.

எனக்கு மௌரிய காலத்து விஷயம் ஏதாவது  கிடைக்குமா எனக் கேட்ட அஜயிடம், ‘நான்  அடுத்து போன காலத்தில் அரசரே கிடையாது. நூற்றுக்கணக்கானவர் சேர்ந்து தான் ஒரு நாட்டுக்கு ராஜா ’ என்றேன்.

‘நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி அரசர்?”
“ம்ஹூம்.  மக்கள் தான் தேர்ந்து எடுக்கிறார்கள், ஒரு குழுவை”
’ஏதோ விஞ்ஞானப் புனைவில் படிப்பது போல கேவலமான ஒரு utopia  வாக படுகிறதே? ஏதாவது ஆதாரம்?’ எனக் கேட்ட அஜயிடம் எதோ பொருளை எடுத்துக் காண்பித்தான்.
’என்ன இது?’
’இது புத்தகம்.  மரத்தால் செய்த இதை காகிதம் என்கிறார்கள். அந்த உலகத்தில் எல்லாவற்றையும் இதில் பதித்து தான் படிக்கிறார்கள்’
அதை வாங்கி பிரித்தான், “இரு அவளுக்கு ஒரு நான் - மறுபதிப்பு”

’தீராக் காதலுடன்’ யாரோ எழுதி அதன் கீழ் பவுண்டன் பென் குழிகளில் வழிந்த மை, ‘Anshu D' எனப் பரவியிருந்தது.

கழிப்பறை இலக்கியம்

Filed under , , , by Prabhu on 11/21/2010 07:58:00 AM

8

முந்தா நேத்து ‘உலக கழிப்பறை நாளாமே?” பதிவு எழுதவோ படிக்கவோ நேரமே கிடைக்கல.அதான் இது ஒரு பழைய ரிப்பீட்டு.முன்ன இதுக்கு ஒரு ரெண்டாம் பாகம் வச்சிருந்தேன். மறந்து போச்சு :(

இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு. இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,

"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...."

"WIFE- wonderful Instrument For Enjoyment"

"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"

"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.

Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"


காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.

"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"


அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.

"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "

இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.

இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)

"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"

(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!


பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!

இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.

அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .

பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.


ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!

இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."

இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!


பல் பிடுங்கி கூட்டம்

Filed under , , by Prabhu on 6/18/2010 06:29:00 AM

8

’பல் போனா சொல் போச்சு’ இல்ல? பொண்டாட்டி வந்தாலும் போச்சுன்னு சில பேர் வாதிடலாம். ஆனால், நான் உடல்கூறு ரீதியா பேசுறேன், Post trauma எல்லாம் நம்ம டிபார்ட்மெண்ட் இல்ல. பல்லு போனா சொல்லோட போச்சுன்னா பரவாயில்ல, பல ருசியான உணவுகளையும் எடுத்துட்டு போயிடும். அப்புறம் முறுக்கை மிக்ஸியில் அடித்து சக்கரை கலந்து ஸ்பூனில் சப்பி சாப்பிட வேண்டியதான். எனக்கு 'பல்’வேறு உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை பல்வலி என்ற ஒன்றை மட்டும் அனுபவித்ததில்லை.

பலகாலமாக என் ஆஸ்தான பல் டாக்டர், ‘பிரபு, எப்ப வந்து பண்ணிக்கிற?’ எனக் கேட்டுக்கிட்டே இருந்தாரு.
”டாக்டர், இது என்ன கல்யாணமா?” என கேட்டேன்.
“ஒரு வகையில அப்படித்தான். பயப்படுறியே?”
”பண்ணனும்னு ஆச்சு. பண்ணிருவோம்”
”என்னைக்கு வர்ற?”
“திங்கள்?”
“டன்.” “டாக்டர், வலிக்குமோ?”
சிரிச்சுகிட்டே, “கட்டெறும்ப விட கம்மியா தான் வலிக்கும்.”
மையமாய் ஆட்டிவிட்டு வந்தேன்.

அடுத்த நாள் 5 மணி குறிச்சிட்டாங்க. வந்தப்போ அவர் ஜன்னலைத் தாண்டிதான் வரவேற்பு அறைக்கு போகனும். அவர் ஆனந்த விகடன் படிச்சுகிட்டு இருந்தார். அவருக்கென்ன, பல்லு என்னது. ஒருத்தனும் இல்லை என்றாலும் கொஞ்சம் சீனுக்காகவோ என்னவோ உட்கார வைத்திருந்தார். கொஞ்சம் வார்ம் அப் எக்ஸர்சைஸ் செய்து கல்லில் கத்தியைத் தீட்டி, இடுக்கியை விரித்து விரித்து மடக்கி லெதர் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்து வரை இழுத்து விடுவது எல்லாம் என் மனக் கண்ணில் ஓடியது. அதுவரை செம இண்டரஸ்டிங்கான 2007 குட்டி விகடன் ஒண்ணுல, ‘கற்றதும் பெற்றதும்’, ‘ஹாய் மதனெ’ல்லாம் படிச்சிட்டிருந்தேன். அவசர அவசரமாக ஒரு சுடிதார் அணிந்த பெண் உள்ளே ஓடினார். பிறகு என்னை உள்ளே அழைக்க, அங்கே போனால் அந்த சுடிதார் பெண் முகமுடி அணிந்து இருந்தார். திடீரென பார்த்ததும் ‘பக்’கென இருந்தது.
”என் செயின கழட்டி கொடுத்துடறேங்க”
“வாட்?” என்றார்.
“ஒண்ணுமில்ல டாக்டர்”
“பிரபு, நான் ஒரு கன்ஸல்டிங் டாக்டர் கூப்பிடிருந்தேன்ல, இவங்கதான், அது”
இத்தோட என்னை பேச்சில இருந்து கழட்டி விட்டுட்டாங்க.
"வாய நல்லா திற. ஆங்.. அப்படியே வச்சிரு”
“மகேஷ், முந்தா நாள் நல்ல மழை இல்ல?”
“ஆமா டாக்டர், நேத்தும் பெஞ்சிருந்தா கொஞ்சம் வெப்பம் குறைஞ்சிருக்கும்”
ஒரு திருகு ஊசியை அந்த முகமுடி ஒரு மிஷினில் மாட்டி, வாயினுள் விட்டு அந்த பல்லில் கடைய ஆரம்பித்தார். Bore போடும் முறைதான். சைடில் நர்ஸ் வைத்த் குழாய் தண்ணீரை வெளியேத்திக் கொண்டிருந்தது.

”மகேஷ் டாக்டர்,  மழை பெஞ்சப்போ ஒரு பேஷண்ட் விட்டுப்போச்சே?”
“இவருதான் அது”
“ஓ. அன்னிக்கு ஒரே ட்ராஃபிக் சார். ஒரு சின்ன மழை பெஞ்சதுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டில பைக் சீட்டு வரை தண்ணி.”
“ஆமா, மழை நீர் வடிகாலே சரியில்ல”
”வாய மூடிறாத” என்றார் என்னைப் பார்த்து.
வாயில் இருந்து நுனி வளைத்த சிரிஞ்ச் எடுத்து பல்லிலிட்ட துளையில் என்ன பீச்சினார். கொஞ்சம் பெரிய திருகு ஊசியை மாட்டினார். பிறகு விட்ட இடத்தில் இருந்து நீண்ட நேரமாக உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னொரு முறை ஊசி பீச்சல், இன்னும் பெரிய ஊசி போட்டு குடாய்தல் எனத் தொடர்ந்தது. பேச்சும் தான். ’ஏன்யா,  ‘Pulp Fiction' மாதிரி பேசிட்டே இருக்கீங்க’. கடைசியில அளவு செக் செய்ய ஒரு விரல்கட்டை குச்சி நாலை வாயில் சொருகும் போதுதான், ‘அட, இவ்வளவு பெரிய ஓட்டை நாலு எப்ப போட்டாங்க’ன்னு இருந்தது. 
“நர்ஸ், அதை சுட வைங்க”
நர்ஸ் ஒரு சின்ன கம்பியை சூடு பண்ணினார், சுத்தம் செய்த இடத்தை ஸ்டெரிலைஸ் செய்ய.
“எதுக்கு ரெண்ட சூடு பண்ற?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க.”
“ஆங்?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க”
“நான் தான் டாக்டர்?”
“நான் தான மேடம் நர்ஸு?”
”ஏய், முதல்ல நீ படிச்சு முடிச்சுட்டயா?”
பக்கத்தில் இன்னொரு டாக்டர், “போன மாசம் தான்”
நான், ”டாக்டர், அப்ப போன மாசம் வரைக்கும் எனக்கு போலி நர்ஸா?” என்றேன்.
”ஏய், நீ வாய மூடாத!”
”போன மாசம் வரைக்கும் எனக்கே போலி நர்ஸ் தாம்பா!”, என்றார் மகேஷ்
”அப்படிதான், திரும்ப மூடக் கூடாது”, என்றது முகமுடி.
என் கலவரத்தைப் பார்த்த நர்ஸ், “சும்மா இருங்க டாக்டர். ஏற்கனவே நர்ஸ் தான். இது மேல் படிப்பு.”
மகேஷே வந்து ஓட்டையை அடைத்தார்.

”அவ்வளவுதான். வந்து சேர்ல உக்காரு”
“இவ்வளவுதானா?”
“ஏன் வருத்தமா இருக்கா? கடவாப் பல்லு ரெண்டு சும்மாத் தான் இருக்கு புடுங்கிருவோமா?”
“இல்ல டாக்டர்...”
“இருக்குன்னு சொல்றேன்ல”
“அய்யோ, நான் Root canal Treatmentன்னதும் ஒரு வகை சைனீஸ் டார்ச்சர் எதிர்பார்த்தேன்”
“இந்த காலத்துலயா? இன்னும் ஏதோ நாங்க பல்ல குரடு வச்சு புடுங்கறதாவே கற்பனை பண்ணிகிட்டு இருக்கீங்க.”
"டாக்டர், உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு...”
 ”உங்கப்பா கோவிலுக்கு போகும் போது ஃபீஸ் வாங்கிக்குறேன். நீ போய்டு வா”

இதை எழுதி இரண்டு வாரத்துக்கும் மேலேயே ஆகிறது. இதே டைட்டில அப்ப வச்சு எழுதிருந்தா என்ன நினைச்சிருப்பீங்க? அப்ப ஏதோ சண்டையாமே? என்ன பிரச்சனைன்னே எனக்குத் தெரியாது. என்னவோ போங்க! இன்னும் நிறைய எழுத வேற வேற விஷயங்களை எழுத பிளான் இருந்தது. பட், அந்த விஷயங்கள் எல்லாம் பின்னால் போயிடுச்சு. இப்ப, நான் பெங்களூரில் காலேஜ் சேர்ந்துட்டேன். அதுக்கே நேரம் சரியாப் போகுது. பெங்களூர்வாசிகளே, ரோட்டில என்னய மாதிரியே யாரையாவது காதில் எம்பி3 பிளேயருடன் பாத்தீங்கன்னா, அது நான் தான். தைரியமா வந்து பேசலாம். ஆனால், சில விஷமிகளின் வயித்தெரிச்சல் காரணமாக நான் பெங்களூர்வாசிகளுக்கே தெரியாத பெங்களூரைத் தாண்டி ஒரு இடத்தில் இருக்கும் கேம்பஸில் தான் படிக்கிறேன் என்பதால் அடிக்கடி சிட்டி குள்ள வரமுடியப் போவதில்லை. காலேஜ் பேரைப் பற்றி கேக்காதீங்க. அப்பதான், அப்பப்ப rip செய்ய வசதியாக இருக்கும்.

கடைசில கருத்து சொல்லனுமே. அசிங்கமான படம் எடுத்தாக்கூட நம்ம ஊரில சொல்வாங்களே! தயவுசெய்து பல்லுல ஏதாவதுன்னு உடனே காட்டிடுங்க. பல் பிடுங்கறதோ, Root canal treatment ஓ ரொம்ப வலிக்கவே இல்லை. பல்ல ரெண்டு தரம் விளக்குறத விட முக்கியமான விஷயம், எந்த சமயத்திலயும் பல்லுல எந்த உணவுப் பொருளையும் தங்க விடாதீங்க. அதுதான் சிம்பிளான விஷயம். அப்புறம் தப்பித் தவறி பல்லில் குழி இருந்திட்டால், அடைச்சிடுங்க. அப்படியே, ஸ்கிரீன் மேல கங்கை அமரன் படம் போல ஒரு மஞ்சக் கலரில் கூப்பிய கை வந்து வணக்கம் சொல்லுறதா கற்பனை பண்ணிக்கோங்க.

Lock, Stock and Two barrels (1998)

Filed under , , by Prabhu on 5/19/2010 06:42:00 PM

17

Tom என்ற சூப்பர் மார்கெட்/ப்ளாக் மார்கெட் ஆசாமி, Soap என்று தன் கைய  சுத்தமாகவே இருக்கனும்ங்கிற  ஒரு சமையல்காரன், Bacon என ஒரு திருடன், அப்புறம் Ed - இவன் சீட்டுல கில்லாடி. இப்படி சம்பந்தமில்லாத நாலு பேரும் நீண்ட நாள் நண்பர்கள். இவங்க எல்லாரும் காசு சம்பாதிக்க முடிவு செஞ்சு  Ed ஓட சீட்டு விளையாடுற திறமை மேல முதலீட்டைப் போட நினைக்கிறார்கள். இல்லீகலா சீட்டு விளையாட, அதற்கு குறைந்தபட்ச தேவையான 100,000 பவுண்ட்ஸை எடுத்துக்கிட்டு Hatchet Harrey க்கு ஃபோன் போடுறாங்க.

Hatchet Harry. இவனைப் பற்றியும் சொல்லியாகனும். இவன் ஒரு Porn King. பார் கூட வச்சிருக்கான். அதே தான், Pole dance ஓட தான். Spank batல் இருந்து செக்ஸ் டாய் வரை விற்பதும் கூட. இது எல்லாம் போக இந்த இல்லீகல் சூதாட்டமும் நடத்துறான். இவனுக்கு ஒரு பில்டப் வேண்டாம்? இவனுக்கு வேலை செய்யுறவன் ஒருத்தன் சரியில்லை என சந்தேகம் வந்து விசாரிக்கும் போது அவன் கொடுத்த விளக்கம் போதலை எனத் தோணியதால், கையில் கிடைச்ச பொருளைத் தூக்கி அடிச்சே கொன்னுட்டான். அவன் கையில் கிடைத்த பொருள் - 15இன்ச் டில்டோ. ஊருக்குள்ள இவன் பேரக் கேட்டா பயப்படுவாங்க. இவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இவனோட இருக்கும் Barry the Baptist தான் டீல் செய்வான். தண்ணியில் முக்கி முக்கி அடிப்பதால் இந்தப் பெயர். உபதொழில் - பணம் கொடுக்காதவங்க விரலை வெட்டுவேன் என மிரட்டுவது. Harryயின் வராக்கடன் கணக்குகளை வட்டியும் முதலுமாக வசூலிப்பது Big chris. இவனுக்கு தன் பையன்னா உயிரு. அந்த பயலும் அப்பாவோட தொழிலுக்கு போவான். சமீபத்தில ஏலத்துக்கு போக இருக்கும் antique துப்பாக்கிகள் மேல Harryக்கு ஒரு கண். அதைத் திருட Dean, Gary என ரெண்டு தேங்காய் மூடி திருடர்களைத் துப்பாக்கி கேபினட்குள்ள இருக்கிறது தவிர மத்ததெல்லாம் உனக்கு என்ற டீலில் அனுப்புகிறான் Barry.

இதற்கு நடுவில் Edன் பக்கத்துவீட்டுல ஒரு கேங் இருக்கு. போதைப் பொருள் ஆசாமிகளை தாக்கி சரக்கைக் கடத்திக் கொண்டு வந்து பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு அபாரமான கூட்டம். அவர்கள் வீட்டில் சாவதானமாக பேசினால் கூட Ed வீட்டு Closet ல் எதிரொலிக்கும். அந்தக் கூட்டத்தில் ஒருவனான Plank தான் ஒவ்வொரு போது கும்பலையும் கண்டுபிடித்துக் போட்டுக் கொடுப்பது. அந்தக் கூட்டத்தின் திட்டக்குழுத் தலைவன் Dog கொஞ்சம் வயலண்டான ஆசாமி.  Plank பலகாலமாக தனக்கு கஞ்சா கொடுக்கும் ஆசாமிகளை மார்க் செய்கிறான்.

இதற்கிடையில் Ed பணத்தை எல்லாம் Hatchet Harryன் தந்திரத்துக்கு தோற்றது மட்டுமல்லாமல் 500,000 அவனிடமே கடன் வேறு வாங்கி ஆடித் தொலைகிறான், மகாபாரதம் டப்பிங்கில் பார்க்காதவன். ஒரு வாரத்தில் காசு வரலைன்னா ஒவ்வொரு நாளும் ஒரு விரல். நாலு பேரு சேத்தா நாப்பது நாளு தாங்குதேன்னு நினைச்சா, தினமும் எல்லார் கையிலும் ஒரு விரல் எடுப்பானாம் Barry.  அப்புறம் Ed அப்பாவோட பாரை எடுத்துப்பாங்களாம். அவங்கப்பா அது கேள்விபட்டதும் Ed மூக்கில குத்து உடுறாரு. இதற்கடுத்து மொக்க பிளான் நிறைய போடுறாங்க. அப்ப பக்கத்து வீட்டு ஆசாமிகள் பெரிய கொள்ளை ஒன்றை, Plank கஞ்சா வாங்கும் ஆட்களை கொள்ளை அடிப்பதை முடிவு செய்கின்றனர். அதை இவர்களிடம் இருந்து நாம் கொள்ளை அடிக்கலாம் என நம்ம ஹீரோ கேங்க் முடிவு செய்ய, Nick the Greek என்ற இடைத்தரகன் மூலம் அந்த சரக்கை Rory Breaker  என்ற Afro தலையனிடம் விற்க முடிவு செய்கிறார்கள். இவனும் டெரரான ஆசாமிதான். இந்தக் கொள்ளைக்கும் துப்பாக்கி வாங்கி தர்றவன் Nick தான், அது கேபினட்டுக்கு வெளிய இருந்ததால தங்களது என நினைத்து Gary,  Dean 700 பவுண்டுகளுக்கு விற்ற 250 மில்லியன் பெறுமானமுள்ள antique துப்பாக்கிகள்.

இப்ப கஞ்சா விக்கிறவங்களையும் அறிமுகப்படுத்திருவோம், என்ன? கெமிஸ்ட்ரி படிக்கிற மூனு இஸ்கோல் பசங்கதான் கஞ்சா வளர்க்கிறாங்க, வீட்டுக்குள்ளையே. படிக்கிற பசங்கள் என்பதால் குவாலிட்டி ஏ1. பிஸினஸ் எதிர்பாராத வகையில் சூடுபிடிக்க ஏக பணம். ஆனா பசங்க சப்பையானவங்க. அதைப் பார்த்ததால்தான் Plank  இந்த திட்டமே போட்டிருக்கான். ஆனால் யாருக்குமே தெரியாத விஷயம் இந்த தொழிலயே அந்தப் பசங்க Rory Breakerக்காக தான் செய்யுறாங்க. ஆனா நம்ம பசங்களோ அதை கொள்ளை அடிச்சவங்களையே கொள்ளை அடிச்சு அதை முதலாளிகிட்டயே விக்க போற அறிவாளிகள்.

இதுவரைக்கும் தான் சொல்லமுடியும். இதற்கப்புறம் சொல்லனும்னா கார்த்திகேயன் மாதிரி ஆள் முழுக்கதை எழுதினால் தான் உண்டு. இதுக்கப்புறம் படம் முழுக்க, டமால், டுமீல், டப், பாம், படபடப்ட, என சைஸுக்கு ஏத்தாப்ல சவுண்டோட விதவிதமாக துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டே இருக்கு. படம் முழுக்க லோடு லோடா சர்ப்ரைஸ்கள் வச்சிருக்காங்க. காமெடியும் க்ரைமும் கலந்த மாதிரியான படம். Jason Statham, Jason Felamyng தவிர எனக்கு எந்த ’முகமும்’ தெரியவில்லை. Jason Statham காமெடில கெளப்புறாரு. கஷ்டமான accent. சப்டைட்டில்ஸ் புண்ணியம். பாலா மாதிரி ’மொழி பிரியல’ன்னு உதட்ட பிதுக்காமல், 700 MB டவுண்லோட் பண்ண நீங்க Kb கணக்கில் சப்டைட்டில்ஸ் டவுண்லோட் பண்ணிக்கோங்க. படம் முழுக்க ஒலிக்கும் இசை, பாடல்களும் ஏக பொருத்தம். Gary, Harryஐ என்கவுண்டர் செய்யும் இடத்தில் வித்தியாசமான இசை அந்த காட்சியின் பிரம்மாண்டத்தையும் அதே சமயம் absurdityஐயும் காட்டக் கூடிய இசை சம்பந்தமே இல்லாமல் எனக்கு ஒரு புல்லரிப்பாக இருந்தது.




Guy Ritchie - இயக்குனர். இவர் பிரிட்டிஷ் கேங்ஸ்டர் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரும் Tarantino மாதிரி வித்தியாசமான ஆசாமி என்று சொன்னால் பாலா  கோவிச்சுக்குவாரான்னு தெரியலை. ஆனால் இது கம்பேரிசன் இல்ல. தோணுச்சு. Ritchieன் படங்களில் காமெடி கலந்த வசனங்கள் பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் 'Inglourious Basterd’ Hugo Stiglitz கதாபாத்திரத்துக்கு கதை சொல்லுவாரே Tarantino, அது போல கதை சொல்லி விளக்குறது இவரோட வழக்கம். இவர் கதை சொல்லுகிற முறை எனக்கு பிடித்து விட்டது. இந்த இயக்குனரின் 4 படங்கள் பார்த்துவிட்டேன், ஓகே, ஒரு ஷாட் பிலிமும் பாத்திருக்கேன். Sherlock Holmes தவிர மற்றவையெல்லாம் கிட்டதட்ட ஒரு கும்பல் குழப்பக் கதைதான் என்பது ஒன்றுதான் இவருடைய பின்னடைவு. இவர் ஒரே மாதிரியாக படங்கள் எடுக்கிறார். இதுதான் இவரிடம் எனக்கு ஒரே தயக்கமான விஷயம்.  வசனங்களை அடிச்சுக்க முடியாது. இந்த படத்தில் ’Fuck’ஐ ஃபுல் ஸ்டாப்பாக யூஸ் செய்கிறார். சின்ன மாதிரி -
Rory Breaker -  If you hold back anything, I'll kill ya. If you bend the truth or I think you're bending the truth, I'll kill ya. If you forget anything, I'll kill ya. In fact, you're gonna have to work very hard to stay alive, Nick. Now, do you understand everything I've said? 'Cause if you don't, I'll kill ya. :D
Lock, Stock and Two Smoking Barrels - படத்தில் Barry சொல்வான் - Lock, Stock and Fuckin' lot.

Inglourious Basterds (2009)

Filed under , , by Prabhu on 5/17/2010 06:42:00 PM

17

தொடர்ந்து பல காலமாக என்ன காரணமாகவோ நான் பார்த்த படங்கள் எதிலும் ஒட்டுதலே இல்லாமல் சலிப்பாக இருந்த நிலையில்..... ‘Inglourious Basterds' பார்த்த பொழுது தோன்றிய ஒரே வார்த்தை, marvelous. என்னை முழு ஈடுபாடுடன் பார்க்க வைத்தது இந்த படம்.

இந்த படம் எடுத்த Quentin Tarantino உம் சரி இவர் நண்பர் Rodriguez உம் சரி எப்பொழுதும் பழைய படங்களை நினைவு கூறும் விதமாக காட்சியமைப்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இதிலும் அது போன்று இருக்கிறது. இது உலகப் போர் படங்கள் ரக படம் என்றாலும் கொஞ்சம் Spaghetti western ஸ்டைலிலும் கலந்து அடித்திருக்கிறார். எனக்கு அது தெரிந்தது 'Once upon a time in Nazi occupied France' என்ற முதல் அத்தியாயத்தின் பெயர் தான். பாஸ்டர்டுகளின் நாஜிக் கொலை அறிமுகத்தில் வரும் ஸ்பானிஷ் கிடார், பாரில் Mexivan Standoff பற்றி விவாதிப்பது, க்ளைமாக்ஸின் நிலை, ஹிட்லரை கொல்ல ஒரே நேரத்தில் பல வகையில் பலர் ஏற்பாடு செய்திருப்பது போன்றவற்றாலும் நாம் இதை உறுதி செய்து கொள்ள முடிகிறது. இன்ன பிற விஷயங்களும் கலந்திருப்பதாக சொல்கிறார்கள். கேமரா, இசை எல்லாம் அவர் ரகத்தில்.

வசனம், வசனம், வசனம்..... இது இல்லாமல் Tarantino படமா? தாராளமய கொள்கையில் வசனங்களை வாரியிறைக்கிறார். அத்தனையும் பிரஞ்சு, ஜெர்மானிய மொழிகளில். Brad Pittன் அறிமுகத்தின் பொழுது வரும் வசனங்கள் பட்டையை கிளப்பும் ரகம். அதுவும் Brad Pittன் மாடுலேஷன் பிச்சிருக்காரு. என்னதான் பிராட் பிட் நல்லா நடிச்சிருந்தாலும், எனக்கு Hans 'Jew hunter' Landa எனும் SS அதிகாரியா வரும் Christopher Waltz என்கிற ஆஸ்திரிய நடிகர் நடிப்பு தான் அபாரம் எனத் தோன்றியது. படம் பார்த்த பிறகு நோண்டினால் இவர் இந்தப் படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான அகாடமி அவார்டு வாங்கிருக்காருன்னு தெரிஞ்சது.(Prabhu, you got an eye for talent) தகுதியான ஆள் தான்! ஷோஷன்னாவாக வரும் பெண் ஓ.கே. இவர்களைத் தவிர மற்றவர்கள் அதிகம் வருவது இல்லை.

க்ளாசிக்(தமிழில் என்ன?) என்று சொல்லக்கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. Donny 'The Bear Jew' Donovitchஆக வரும் எலி ரோத் ‘டான்.. டான்..’ ரக இசையுடன் கொடுக்கும் எண்ட்ரி, Brad Pitt தான் பிழைக்க விட்டவர்களுக்கெல்லாம் நெற்றியில் சுவஸ்திகா போட்டு அனுப்புவது, Hugo Stiglitz என்பவனுக்கு மஞ்சள் எழுத்தில் பெயர் போட்டு அவன் கதையை சொல்வது எல்லாம் Tarantino ட்ரேட் மார்க். Eli Roth, Tarantino, Rodriguez எல்லாம் ‘Homage திரைப்பட நண்பர்கள் குழு - LA' வின் உறுப்பினர்கள் போல. ரோத் படங்களையும் பார்க்க ஆசை வந்துவிட்டது இந்த படத்தில் அவரைப் பார்த்ததும். பிறகு முதல் காட்சியில் 'Jew hunter' Landa வின் இண்டெரோகேஷன் காட்சி உலகப் போர் 2 படங்களில் வரக் கூடிய க்ளாசிக்கல் காட்சி. Landaவை நடிப்பிற்காக ரசிப்பதா இல்லை வில்லனாக வெறுப்பதா என புரியவில்லை.


கதை இது தான். 'Inglourious Basterds' என்பது அமெரிக்க யூதர்களால் ஆன நாஜிக்கு எதிரான ஒரு கொலை வெறி ராணுவ கும்பல். பல காலமாக நாஜி மக்களின் மனதில் ஒரு கிலியாக இருக்கிறார்கள். இவர்கள் ஒரு தியேட்டரில் வைத்து படம் பார்க்க வரும் நாஜியின் முக்கிய ஆசாமிகளைப் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் திடீரென வேற தியேட்டரில் அதே நாஜி கொள்கை பரப்பு படம் வெளியிட மாற்று முடிவாகிறது. அந்த தியேட்டர் உரிமையாளரோ Landa விடமிருந்து தப்பிய ஒரு யூத பெண், படம் ஓட்டுபவர் கருப்பன் (வெளங்குச்சு!). இவள் தன் இன மக்களுக்காக அந்த நாஜித் தலைவர்களைக் கொன்று பழி வாங்க நினைக்கிறாள். இந்த நிலையில் ஹிட்லரே தியேட்டருக்கு வரப் போவது தெரியவர, இரண்டு குரூப்பும் போரையே முடித்து விடலாம் என்ற ஆசையில் தனித்தனியாக இம்முயற்சியில் இறங்குகிறார்கள். ஆனால் ஹிட்லரைக் கொல்வதற்கு திட்டமிடுதல் சாதாரணமா? அதனால் அந்த திட்டத்தை (கணிணி)திரையிலயே பாத்துக்கோங்க.

வழக்கம் போல வன்முறைக்கு எந்தக் குறையும் இல்லை. ஆ,ஊன்னா துப்பாக்கிய எடுத்து சத்தமாக சுட்டுக் கொள்கிறார்கள். பார் காட்சி ஆரம்பிக்கும் போதே, அண்ணன் இங்க ஒரு பைட்டு வைக்கப் போறாருன்னு கணிச்சத அவர் பொய்யாக்க வில்லை. அவருக்கு waitressகள் மேல என்ன கடுப்போ, எல்லா படங்களிலும் ஏதாவது பஞ்ச் வச்சிருப்பாராம். இந்தப் படத்தில் போட்டுத் தள்ளிவிடுகிறார். ஒவ்வொரு நாஜியைக் கொல்லும் போது ம்தலையின் தோலை மயிரோடு வெட்டி உரித்து எடுக்கிறார்கள். கடைசியில் ’சதக்’, ’சதக்’ கென கத்தியை சொருகி Landa தலையில் சுவஸ்திகா வரைந்து விட்டு, ‘I think this just might be my masterpiece’ என்பது செம டச்.

படத்தில் தவறுகளே இல்லையானு வழக்கம் போல கேப்பீங்க. ஹிட்லர் எவ்வளவு பெரிய சர்வாதிகாரி? அவரைக் கொல்வதற்கு இப்படி ’நாயக்கர் பாவா’ வைக் கொல்வது போல சப்பையாக திட்டம் போடுவது கொஞ்சம் அபத்தம். ப்டம் முழுக்க சப்டைட்டிலை நம்பி பார்ப்பது பாலாவுக்குக் கஷ்டமாக இருந்தாலும் நாங்கள் பொதுவாகவே அவ்வாறுதான் படம் பார்க்கிறோம் என்பதால் பிரச்சனை இல்லை. படம் லீனியர் திரைக்கதையாக இருக்கிறது என்று சொன்னால் சிரிப்பீர்களா? ஆனால், Nolan, Tarantino போன்றவர்கள் படங்களின் கதை நேராக ஓடும் போது ஏனோ விசித்திரமாக இருக்கிறது. சில பல குறைகள் இருந்தாலும், ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக உலகப் போர் படங்களைப் பார்க்க இதைவிட வேறு வழியில்லை.

பட டைட்டிலில் இருக்கும் எழுத்துப் பிழைக்கான காரணத்தை கேட்டால், 'சொல்லமாட்டேன். அதில்ல் இருக்கும் கலைத்துவம் போயிரும்’ என பின்நவீனத்துவவாதிகள் போல சொல்கிறார் Tarantino.

Inglourious Basterds - Bloody Good Bhaskers

டாப்பு அடிக்கலாம் - 10

Filed under , by Prabhu on 5/16/2010 12:35:00 PM

14

ராவணன் தமிழிலும் வெளியாகிவிட்டது. பொதுவாக ரஹ்மான் ஆல்பம் வெளியானால் எந்நேரமும் அதே பாடலே கணிணியில் ஓடிக் கொண்டிருக்கும். இந்த தடவை அப்படியில்லை. ராவணன் படம் கோபத் காண்டே என்ற நக்சல் தலைவன் சம்பந்தமான கதை என்று விகடனில் சொல்லுகிறார்கள். மணிரத்னம் இதை மறுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அப்ப கண்டிப்பா இது நக்சலோட கதைதான். ஏற்கனவே இப்படித்தான் இருவர், குரு போன்ற படங்களுக்கு நிஜ கதை இல்லை என்றார். His refusal is as good as acceptance.
------------------------------------------------------------------------------------

பாணா காத்தாடி பட பாடல்கள் பரவாயில்லை. கேட்கலாம். வழக்கம் போல மூக்கில் பாட ஒரு பாட்டு வைத்திருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.

------------------------------------------------------------------------------------

வர வர நிலைமை பாடாதியாகிக் கொண்டிருக்கிறது. கடைசியாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் போது தொடங்கியது பிறகு அங்கிருந்து ,மதுரை திரும்பும் போதும் அதன் பிறகு மதுரையிலும் தொடர்கிறது. எங்கே திரும்பினாலும் நடக்கிறது. பைக்கில் செல்லும் போது முன் செல்லும் வண்டியின் பில்லியனில் ஒரு அழகான பெண். ஓவர் டேக் செய்கையில் பார்த்தால் அந்த ஓட்டுநரின் முன்னே பெட்ரோல் டாங்கில் 5 வயசு குழந்தை. இப்படி தான் எங்கே பார்த்தாலும். கல்யாணம் ஆனவர்களுக்கும் ஆகாத பெண்களுக்கும் இடையில் ஒரு சேலை, பத்து கிலோ எடை என்ற வித்தியாசத்தைக் கடைபிடிக்கும் தமிழ் கலாசாரம் எங்கே போனது? என்ன கொடுமை சரவணன் இது?!

------------------------------------------------------------------------------------

பிளஸ்2 ரிசல்ட் வெளி வந்திருச்சாம். யாருக்கு வேணும்? நான் எழுதிய வருடங்களுக்கு முன்னயோ பின்னயோ 10ம், 12 வகுப்பு அரசுத் தேர்வுகளைப் பற்றி யோசித்ததே இல்லை. எனக்கு இந்த பரிட்சை, அதுக்கு படிப்பு போன்ற விஷயங்கள் பிடிக்கவே இல்லை. மொக்கையா இருக்கு. நம்ம எஜுகேஷன் சிஸ்டமே ஒருவகையில் பெண்கள் ஆதரவாக தான் இருக்கு. இதை யாரோ சைக்காலஜிஸ்டே சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி தியரைஸ்ட் படிப்பு பசங்க மூளைக்கு வேலைக்கு ஆகாதாம். அப்புறம், எல்லா வருடமும் பெண்களே சாதிக்கிறார்கள் என்பது தில்லாலங்கடி வேலைதானே?

------------------------------------------------------------------------------------

இந்த நடிகர்கள் இளவரசு வையும், ‘மகாநதி’ சங்கரையும் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொரு படத்திலும் வந்து ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப் தாங்க முடியவில்லை. அவர் இவரு அவரு, கிழிச்சிருவார், தைச்சிருவாரு என கொல்றாய்ங்கப்பா! அதுவும் கடைசி சில படங்களில் மகா மொக்கை! யாருய்யா அது, சுறா ந்க்கிறது? நான் விஜய பத்தி தப்பா பேசாத ஒரே பதிவர் என கார்க்கி கிட்ட சொல்லிருக்கேன். அதைக் காப்பாத்துறேன். ஒரே ஆள எல்லாரும் அடிககிறது வீரமில்ல. வாங்க, வேற யாரையாவது குத்தலாம். :)

------------------------------------------------------------------------------------

இந்த தடவை லிட்டில் ஜான் வேணாம். வேற ஒன்று.

ஒரு வட இந்தியன் வழிப்பறி கேசில் மாடிக் கொண்டான். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்த வட இந்தியனின் வக்கீல், ‘என் தரப்பு ஆசாமி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இந்த ஊரைப் பத்தி ஒன்னும் தெரியாது. தமிழே சில வார்த்தைகள் தான் பேசத் தெரியும். ஆதலால் இந்த அப்பாவியை விடுதலை செய்ய வேண்டுகிறேன்.’

நீதிபதி வட இந்தியனைப் பார்த்து, ‘உனக்கு தமிழ் எவ்வளவு தூரம் தெரியும்?’ என்றார்.

அதற்கு அவன் உடைந்த தமிழில், ‘மரியாதையா உன்னோட பர்ஸை என்கிட்ட கொடுத்துரு’ என்றான்.

ராவண் - இசை

Filed under , by Prabhu on 5/02/2010 10:59:00 AM

6

ஏற்கனவே சில பதிவுகளில் சொன்னது போல, சின்ன வயதில் இருந்து ரஹ்மான் விசிறியாக இருப்பதால் ’ராவண்’ பாடல் வெளியீடை எழுதும் ஆசையைத் தவிர்க்க இயலவில்லை.

Beera - இந்தப் பாடலைப் பற்றி சொல்ல தேவையில்லை. ஹீரோ அறிமுகம். அவனுக்கு அவன் பெருமை தான் முதலில் என்பதையும் ஆக்ரோஷமானவன் என்பதை சொல்கிறது. காட்டுத்தனமான இசை அவன் கதாபாத்திரத்தை விளக்குகிறது. இந்த பாடல் பல பேரின் எதிர்பார்ப்பை பம்படித்துவிட்டது.

Thor de killi - இது வழக்கம் போல பொங்கி எழும் வகை பாடலாகத் தெரிகிறது. ஆனால் இசையில் சோதனை முயற்சி. இடையில் ஷெனாயோ என்னவோ வருகிறது. கல்யாணம் போல. கல்யாண வீட்டில் வைத்து ஐஸ்வர்யாவை லபக்கிவிடுகிறாரா அபிஷேக் எனத் தெரியவில்லை. முடிவில் வேகமெடுப்பது சுவாரஸ்யம்.

Ranjha Ranjha - ரேகா பரத்வாஜ் குரலில் காதல் ஏக்கம் வழிவது போல் அருமையான பாடல். நீண்ட நாள் பிறகு ரஹ்மான் இசையில் அனுராதா ஸ்ரீராம். ஆல்பத்தின் சிறந்த பாடல். ஜாவேத் அலி குரலும் பாடலுக்குள் கலந்து ஓடுகிறது.

Kata kata - ரோஜாவில் வரும் ‘ருக்குமணி ருக்குமணி’ போன்ற பாடல் என்கிறார்கள். பலி ஆட்டை வெட்டப் போறாங்கடோய் என்ற ரீதியில் வரிகள் செல்கிறது.

Behne de - கார்த்திக் குரல் இல்லாமல் ரஹ்மான் ஆல்பம் எப்படி? இதோ. கார்த்திக் அருமையாக பாடியிருக்கிறார். காதல் வலியில் இருப்பவனின் பாடல் என புரிவதற்கு இந்தி புரியத் தேவையில்லை.

Khili re - ஒரு மென்மையான பாடல். மற்ற பாடல்கள் அளவிற்கு கவரவில்லை. ஆனால் பிடிக்கவில்லை என சொல்லிவிட இயலாது. பழைய ரஹ்மான் பாடல்களின் வாடை குபீரென அடிக்கிறது.

ஹிந்தியில் குல்சாரும், தமிழில் வைரமுத்துவுமாக பாடல்கள் எழுதுவது ‘உயிரே’ வை நினைவுக்கு கொண்டுவருகிறது. பாடல்கள் அனைத்தும் காட்சியமைப்பின் பலத்துக்காகவே ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. நிறைய எக்ஸ்பெரிமெண்ட் செய்திருக்கிறார் வழக்கம் போல. ஒரு நல்ல ஆல்பம். படத்தின் எதிர்பார்ப்புகளை ஏற்றிவிடுகிறது.

தமிழ் ட்ரைலர் பிடிச்சிட்டோம்ல!

டாப்பு அடிக்கலாம் - 9

Filed under , , by Prabhu on 5/01/2010 02:22:00 PM

6

ரொம்ப காலமாக எதுவும் எழுதவில்லை. அதிகம் ப்ளாக் பக்கம் வரவில்லை. எதுவும் எழுத படிக்க விருப்பமில்லை. ஒரே வறட்சி! என்னுடைய இலவச இண்டெர்நெட் அளவை தாண்டிவிட்டது கூட காரணமாக இருக்கலாம். என்னவோ, இணைய சண்டைகளில் இருந்து ஒரு பத்து நாட்களுக்கு விடுதலை :).

-------------------------------------------------------------------------------------------------------------------
முதல் நாள் சுறா ரிலீஸ். மறுநாள் அஜித் பிறந்தநாள். என் நண்பர்களில் இரண்டு பேருக்கும் ரசிகர்கள் உண்டு. இரண்டு நாளும் மெசேஜ் அனுப்பி சாவடித்துவிட்டானுங்க. ரெண்டு நடிகர்களுமே ஆளுக்கு அவங்க அவங்க பங்குக்கு மொக்க படமா எடுத்து விடுறாங்க. இந்த லட்சணத்தில் யாரு படம் நல்லாருக்கு , எது மோசம் என இரண்டு குழுவும் அடிச்சிக்கிறது. கஷ்டம்!

-----------------------------------------------------------------------------------------------------------------
பொழுது போகாமல் படம் வரைய கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். போர்ட்ரைட் அளவு இல்லைன்னாலும்  caricature  அளவுக்காவது கற்றுவிட ஆசை இருக்குறது. அமீபா வரையத் தெரியாதவனுக்கு அது மாஸ்டர்பீஸ். இதை சொல்லித் தரும் pdf அல்லது வெப்சைட் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------
Guy de Maupassant எழுதிய சிறுகதைகளின் தொக்குப்பு ஒன்று படிக்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸில் வாழ்ந்த இருந்த மனிதர். அப்பொழுதே அங்கு நம் நாட்டைக் கம்பேர் செய்யும் பொழுது கொஞ்சம் ‘free society' ஆகத் தான் இருந்திருக்கிறது. மனுஷன் சாகும் போது கிறுக்கு பிடிச்சு போயிருச்சாம். அதே சமயத்தில் வாழ்ந்த பல வித்தியாச எழுத்தாளர் ஆசாமிகள் இப்படித்தான் கிறுக்கு பிடித்து, கையில் அஞ்சு பைசா இல்லாமல் இறந்திருக்கிறார்கள். 

O'Henry யின் சிறுகதை தொகுப்பு தயாராக இருக்கிறது. அவர் நம் ப்ளாக்கர் சிறுகதைகளின் தந்தை. கேஷுவலாக கொண்டு போய் டொக்குத்தனமாக முடிக்க கூச்சப்படாதவராக தெரிகிறார். இவரும் வெற்றியான இலக்கிய வாழ்விற்குப் பிறகும் அஞ்சு பைசா இல்லாமல் இறந்திருக்கிறார். சிறுகதை எழுதும் போது நினைவில் வைத்துக்கோங்க!

-----------------------------------------------------------------------------------------------------------------
’ராவண்’ பாடல்கள் வெளியாகிவிட்டது. நல்ல ஆல்பம். அதைப் பற்றி எழுதியதை நாளை வெளியிடுகிறேன். ஸ்டில்கள் பரபரப்பைக் கிளப்புகிறது. ‘பீரா பீரா’ பாடல் பட்டையை கிளப்புகிறது. அதை தமிழில் ரஹ்மான் பாடுவாதாக கேள்வி. காட்டுப் பிண்ணனியில் படம் நகருகிறது போல. தமிழில் ஆல்பம் இன்னும் வரவில்லை. விரைவில் வர வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------

போன வருடத்தில் இருந்து காமிக் படிக்கிற வழக்கம் வைத்திருக்கேன். Batman, Supermanல் தொடங்கி Wanted, Sin city என கிராஃபிக் நாவல் வரை டவுண்லோட் செய்து படித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ‘கருந்தேள் கண்ணாயிரம்’ கொடுத்த ப்ளூபெர்ரி சீரீஸ் படித்தேன். இப்பொழுது XIII ரெகமெண்ட் செய்கிறார்.  காமிக் ஆர்வம் இருக்கிறவர்கள் ட்ரை செய்யலாம். சின்ன வயதில் வெளியூர் பயணம் செய்கையில் மட்டும் லயன் காமிக்ஸ் வாங்கி கொடுப்பார்கள். அந்த பழக்கமும் இப்பொழுது எனக்கு காமிக்ஸ் மேல் இருக்கும் ஆர்வத்திற்கு காரணமாக இருக்கலாம். அப்பொழுது தமிழில் படித்தேன், இப்பொழுது ஆங்கிலத்தில் படிக்கிறேன். சிறிதே வித்தியாசம். இப்பொழுது தமிழில் காமிக்கே வருவதில்லையோ?

-----------------------------------------------------------------------------------------------------------------
எங்க ஊரில் இப்பொழுதுதான் சித்திரைத் திருவிழா. திருவிழா என்றால் இது திருவிழா. ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகிக் கொண்டேயிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒட்டகம், ரோஸ் மிட்டாய், மக்கள், மாசி வீதிகள், பெண்கள், பெரிய தேர் என திருவிழா என்றதும் பல விஷயங்கள் ப்ளாக் லேபிள்கள் போல ஞாபகம் வருகிறது. இதைப் பற்றி ஒரு தனி பதிவே காத்திருக்கிறது. அப்போ கவனிச்சுக்கலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------

டச் விட்டுப் போனதால் லிட்டில் ஜானையே மறந்துவிட்டேன். அவனில்லாம் எப்படி டாப்பு?

லிட்டில் ஜான்
ஜான் வகுப்பில் டீச்சர் கேள்வி கேட்கிறார், ”ஒரு மரத்தில் 100 பறவைகள். வேடன் ஒண்ண சுட்டா மிச்சம் எத்தனை?”
ஜான், “ஒண்ணுமிருக்காது. சத்தம் கேட்ட மிச்சதெல்லாம் பறந்திருக்கும்.”
அதற்கு டீச்சர், “கணக்கின் விடை 99. இருந்தாலும் இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு”
பதிலுக்கு ஜான் ஒரு கேள்வி கேக்குறேன்னு சொன்னான். டீச்சர் ஒத்துக் கொண்டதால் கேட்டான். “மூணு பெண்கள் ஒரு கடையில் கோன் ஐஸ்  சாப்பிடுறாங்க. ஒரு பெண் கடிச்சு சாப்பிடுறாள். ஒருத்தி நக்கி சாப்பிடுறாள். ஒருத்தி சப்பி சாப்பிடுறா. இதுல யாருக்கு கல்யாணம் ஆயிருக்கும்?”
டீச்சர் தயக்கமாக, “ம்ம்ம்.... சப்பி சாப்பிடுற பெண்? என்கிறார்.
அதற்கு ஜான் “இல்ல. கையில் கல்யாண மோதிரம் போட்டிருக்கும் பெண். பட், உங்களோட அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு”

பையா - சில குறிப்புகள்

Filed under , by Prabhu on 4/02/2010 10:56:00 PM

17

என் முடிவுகளுக்கு எதிராக மீண்டும் ஒரு படத்தைப் பற்றி.

படம் ஆரம்பித்த உடனே கதையை துவக்க எத்தனை தமிழ் படங்களில் முயற்சியாவது பண்ணியிருக்கிறார்கள்? இந்தப் படத்தில் துவங்கி விடுகிறது. எதிலிருந்தோ விலகி ஓடும் தமன்னா கார்த்தியை டாக்ஸி ஓட்டுநர் என தவறாக நினைத்து பாம்பே போக அழைக்கிறார். ஏற்கனவே சில முறை அவரை பெங்களூரு வீதிகளில் பார்த்து வழிந்த கார்த்தி, வாய்ப்பு கிடைத்ததும் கிளம்பிவிடுகிறார். தலா ஒரு கும்பல் இருவரையும் துரத்த, ஏன் என்பது திரையில். 

கார்த்தி - நல்ல நேர்த்தியாக இருக்கிறார். ஒரு ஜனரஞ்சக காதாநாயகனாக நிறைகிறார். சூர்யா பல இடங்களில் தெரிகிறார். அவர் மேல் குற்றமில்லை. அவருடைய ஜீன்களில் எழுதபட்டுள்ள ந்யூக்ளிக் ஆசிட் கோடிங்கைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இந்தப் படத்திலாவது கலர் கலராக வருகிறார்.

தமன்னா - ரொம்ப அழகு. நடிப்பு தேவையான அளவு இருக்கிறது. தமிழின் பெரிய நட்சத்திரமாக கண்டிப்பாக வருவார் எனத் தெரிகிறது. அநியாய அழகு. கர்சீப் எடுத்துக் கொள்ளவும். இடுப்பில் பாவாடை சரி செய்யும் அழகு... ம்ம்ம்...

மிலிந்த் சோமன் - வில்லன் ஆனாலும் பெரிய கதாபாத்திரம் இல்லை. ஆள் நேர்த்தி என்பதை சொல்ல வேண்டியதில்லை. அவர் Super model ஆச்சே. நல்ல கட்டுமஸ்தாக இருக்கிறார். இரண்டு சண்டை காட்சிகளில் வருகிறார். அவ்வளவே.


சண்டை காட்சிகள் -  இரண்டாவது பாதியில் வரும் சண்டை காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட படத்திற்கு இவ்வளவு மொக்கையான சண்டை காட்சிகளா? இறுதிகட்ட சண்டை என்னை சமாதானப்படுத்தவில்லை, படத்திற்கு நியாயம் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்

பாடல்கள் - பாடல்கள் எல்லாம் ஆடுவதை விட துள்ளிக் குதிக்கவே போடப்பட்டிருக்கின்றன. படத்தின் பெரிய பலம் பாடல்களும், பின்ணனி இசையும்.

அறிமுகக் காட்சி - இவ்வளவு மொக்கையான அறிமுகக் காட்சி! பல தடவைப் பார்த்த விஷயங்கள். லிங்குசாமியிடம் எதிர்பார்க்கவில்லை.

சோனியா - 'Happy days' சோனியா இந்த படத்தில் நடித்திருக்கிறார். பல பேர் அந்த தெலுங்கு படத்தைப் பார்த்து சோனியா விசிறி ஆகியிருக்கிறோம். இந்தப் படத்தில் அவரை குண்டாக பார்த்தது ஒரே வருத்தம் :(
அதே போல ஜெகன் பெரிய அளவில் வாய்ப்பில்லாத கதாப்பாத்திரத்தில்.


படம் நல்ல வேகத்தில் தொந்தரவு இல்லாமல் சீராக செல்கிறது. முதல் பாதியில் முழுக்க சண்டையும் இல்லாமல், சஸ்பென்ஸும் உடைக்காமல் நன்றாக செல்கிறது. இரண்டாவது பாதி சண்டையில் கோட்டைவிட்டார்கள். வித்தியாசமாக இருக்கிறது. கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள். நல்ல பொழுது போக்கு.

பையா - Lacks punch.

நித்ய’ஆனந்த’ அனுபவம்

Filed under , by Prabhu on 3/28/2010 05:11:00 AM

16

இதை ஒரு ஓட்டத்தில் சொல்லிவிடத்தான் எண்ணினேன். ஆனால் இது பலராலும் தொடப் படாத பகுதி என்பதாலும் இதற்கு தனி பதிவு பெற தகுதி இருப்பதாலும் தனியாக வெளியிடுகிறோம்.

அரிப்பு, சொறிதல் - இரண்டுமே பிரித்துப் பார்க்க முடியாத படி பின்னியிருக்கும் வார்த்தைகள். ஆங்கிலத்திலும் கூட. ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டு அடுத்ததைத் தவிர்க்க இயலாது. ’அவனுக்கு அரித்தது. அவன் சொறிந்து கொண்டான்’ என்ற உதாரணம் உங்களுக்கு இதை எளிமையாக விளக்கும்.

அறிவியல் கூறுவதுபடி அரிப்பும் வலியும் தூரத்து உறவாம். இரண்டுக்குமான உடல் வேதியியல் மாற்றங்கள் பல விதங்களில் ஒற்றுமையுடன் இருக்கிறது. வித்தியாசங்களும் உண்டு. இரண்டுமே தானியங்கிச் செயல்களைத் தூண்டுபவை. ஆனால் நான் பேசவந்தது அறிவியல் அல்லவே.

சொறிவது சுகமான அனுபவம். அதில் சில பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருக்கின்றன. சொறிவது நோயினால் மட்டுமல்ல படபடப்பு, பதட்டம் போன்றவற்றாலும் நிகழுகிறது. நான் சொறிவதை வைத்தே என் அம்மா என் எண்ணங்களைப் படிக்கிறார். சாப்பிடும் போது விழி பிதுங்க சொறிந்தேன் என்றால் சாப்பிட முடியல என புரிந்து கொண்டு அனுப்பிவிடுவார்.  NSS முகாம் சென்ற பொழுது ஒரு பேராசிரியர் சாப்பாடு விஷயத்தில் மிகக் கெடுபிடி. நாலு பருக்கை இருந்தால் கூட கூச்சப்படாமல் ’உள்ளே போய் இருப்பதை வழித்து தின்னுட்டு வா’ என விரட்டி விடுவார். வந்தவர்களோ வீணாக்குவதில் வள்ளலாக இருந்தார்கள். அதனால் குதிரை கொள்ளைத் தின்பது போல தட்டிலிருப்பதை அப்படியே வாயில் திணித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள். பொங்கலன்றும் அங்கேயே இருக்க நேர பொங்கல் நிறைய செய்து எல்லோர் தட்டிலும் கொட்டிவிட, நான் முக்கால்வாசி தின்னுவதற்குள் முழிபிதுங்க, நெளிந்து, தலையை சொறியும் கண்றாவியை காணச் சகிக்காமல் கொட்ட அனுமதித்தைக் கண்டு முகாமே மூக்கைச் சொறிந்தது.


’ ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. பக்கத்திலிருக்கும் ராணியை நோக்கி ராஜா தன் பார்வையை வீச, ராணி ராஜாவின் பின்னால் வந்து வசமாக சொறிந்து விடுவார். என்ன தான் ராஜாவாக இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் என்று என் நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் அதை கண்கூடாக பார்க்கிறேன். வீடுகளிலேயே நடக்கிறது, மனைவி கணவனுக்கு முதுகு சொறிந்து விடுவது. அதில் ஒரு அசால்ட்டான feudalism தெரிகிறது. அதே சமயம் ஒரு ஆசையும் தெரிகிறது. சுஜாதாவிடம் ஒரு புதிதாக மணமான வாலிபன் ஒருவன் கூறியதாக அவர் எழுதியது : ”கல்யாணம் செய்துகிட்டாலே இம்சைதான். ஆனால் என்னதான் சொன்னாலும் மனைவி முதுகு சொறிந்துவிடும் சுகத்துக்காக கண்டிப்பாக கல்யாணம் செய்துக்கலாம் சார்”. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

சிலசமயம் சொறியும் போது அது எரிச்சலின் வெளிப்பாடாக இருக்கும்.அப்படியே பிச்சுக்கலாம் போல இருக்கு என்போமே அந்த வகை.  ஆனால் விரைவில் மண்டை குளோபல் வார்மிங்கால் பாதிக்கப்பட்ட பூமி உருண்டையாக ஆகும் வாய்ப்பு அதிகம்.

 இதே போல கோபம், பொறுமை இனமை என எல்லாவற்றிற்கும் ஒரு வகை சொறியும் விதம் இருக்கிறது. சந்தோஷமாக இருந்தாலும் நிதானமாக வயிற்றில் சொறியும் ஒரு பழக்கம் இருக்கிறது - கடற்கரை அருகே காற்று வாங்கும் அனுபவம் போல. இது நிஜமாலுமே சொறிவது போல அல்ல. சாப்பிட்டுவிட்டு மெலிதாக உறக்கம் வரும் நேரம் வயிற்றை மென்மையாகத் தடவிக் கொடுத்தல் போன்ற நித்ய ஆனந்த அனுபவம்.  

போன வருடம் ரிசஷனின் பொழுது ஒருவனை வேலை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று அவன் விரக்தியில் தற்கொலை முடிவுக்கு வந்தான். பாலத்தின்  சுவர் மேல் நின்று குதிக்க இருக்கையில் கீழே ஆற்றங்கரையில் இரண்டு கைகளுமே இல்லாத ஒருவன் குதித்து குதித்து ஆடிக் கொண்டிருந்தான். அட, இரண்டு கை இல்லாதவனே சந்தோஷமாக இருக்கும் பொழுது நமக்கென்ன குறை வந்தது என்று தற்கொலை முயற்சியை கைவிட்டான். கீழே போய் அவனுக்கு நன்றி தெரிவிக்க சென்றான். இவனது நன்றியை கேட்ட அவன், ’ஆடிக்கொண்டிருக்கேனா? யோவ், நீ வேற கடுப்பேத்தாதே. முதுக்கு அரிக்குது. அதை சொறிய முடியாமல் தவிக்கிறேன். வந்துட்டான்’.



மதிய தூக்கம்

Filed under , by Prabhu on 3/15/2010 10:52:00 PM

10

உலகமாய் இலக்கின்றி சுழலும் காற்றாடி
பிரபஞ்சத்தின் தகவல் குப்பைகளை திரையில்
ஹார்மோன் கழிவுடன் தூசு அப்பிய சட்டை
கட்டிலின் காலடியில் மன்றாட
விட்டத்தின் நூல் வலையை காற்றாடி தொட்டிலாட்ட
சூரியன் மேலான கான்கிரீட் கூரையின்  கோபம் என்னிடம்
காமத்துடன் கீழிமையை மேலிமைத் தழுவ முயல
கடலில் தத்தளிப்பவன் கரமாய்,
முழுகி எழும் மூளை,
அறை வாங்கினமா என கன்னம் தடவி எழும் நான்
நாற்காலி முதுகை வளைத்து சோம்பலுடைத்து
வெளியே தள்ள, மீண்டும் முதுகில் வேதாளாமாய் அது

டாப்பு அடிக்கலாம் - 8

Filed under , , by Prabhu on 3/12/2010 01:41:00 PM

10

ரொம்ப நாள் ஆயிடுச்சுல, டாப்பு அடிச்சு. அதனால் இதோ வந்துட்டேன்.

ட்விட்டர் என் நேரத்தை அதிகமாக சாப்பிடுகிறது. பல சமயங்களில் சுவையான விஷயங்களை அளிக்கிறது.நிறைய மனிதர்களின் நட்பையும். இங்கே பேசியத விட @iamkarki, @ikarthik_, @athisha, @nchokkan, @orupakkam, @venkiraja, @antonianbu  என நீளும் லிஸ்டில் பல பேருடன் குலாவ சமயம் கிடைத்தது. இது போக ட்விட்டரிலேயே பல புது நட்புகள் ஓடுகிறது. 140 எழுத்துக்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டு கீழிருக்கும் விஞ்ஞானப் புனைவு.

காலம் அர்த்தமற்ற நாளில் தூவானம் கண்டு ஒதுங்கினான் - கையில் நீர் தெறித்த கொப்பளம். வானத்தில் காப்பி நிற மேகம். #கதை #விபு

கால வெளியின் இழைகளில் பிழைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். அதனூடே செல்லும் காலம் புரியாத புதிதாய் இருக்க விழைகிறேன் #sci-fi உளறல் 

அல்லது கீழிருப்ப்பது போல மொக்கைகளாகக் கூட இருக்கலாம். 

நம் ஊர் பெண்களுக்குத் தான் என்னருமை தெரியவில்லை. அங்கே என்னை பெண்கள் பார்க்கிறார்கள். மூடாத ஜிப் கூட காரணமாக இருக்கலாம்... #சிரிப்பு 

 இப்படியாக பொழுது ஒடுகிறது. யாராவது ட்விட்டரில் சேர விரும்பினால், க்ளிக் 
ட்விட்டரில் பலரின் கெட்ட பழக்கம், celebrity chasing. 'I'm your big fan' பப்பராசித் தலையனுங்களுக்குள்ள நான் வர விரும்பவில்லை

----------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்ன ‘கொல்லிமலை சிங்கம்’ என்று சிரஞ்சீவி நடித்த டப்பிங் படமொன்று சிறிது நேரம்  பார்த்தேன், கலைஞரில். ஒரு வகையாக நல்ல ப்ளாட் தான். இந்திய இண்டியான ஜோன்ஸ் போல. கொல்லிமலை சிங்கம் - தி கிரேட் கொல்டி காவியம்... பாருங்கய்யா.. ஆனால் அநியாய மசாலா நெடி. அட, ஹீரோ வில்லனிடம் சிக்கிய பிறகு அவனைக் காரில் கூட்டிச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் நிறுத்தும் பொழுது ரீமா சென் தண்ணீர் கொடுக்க வர, ஒரு குத்து பாட்டு தொடங்குகிறது. எப்பேற்பட்ட படங்களிலும் வில்லனை சந்திக்கும் முன் அவசரகதியிலும் கவர்ச்சி நடனம் ஆடுவதை அவர்கள் விடவில்லையா? கிராஃபிக்ஸ் சுமார். பட், அடிப்படை கரு எந்த ஆங்கில சாகச படங்களுக்கும் குறை இல்லை. எடுத்தது தான் நம் பழைய தெலுகு இஸ்டெயிலு!

அவரது மகன் நடித்த ‘மகதீரா’ கூட பார்த்தேன். ’மகதீரா’ புறநானூற்று வீரத்தைக் கண் முன் நிறுத்துகிறது... புல்லரிப்பு தான்! 
------------------------------------------------------------------------------------------------------------------

எல்லோரும் நித்யானந்தாவைப் பற்றி பேசுகிறார்கள். எனவே, நான் பேசப் போவதில்லை. Pass!

------------------------------------------------------------------------------------------------------------------
 கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வோர் சதவீதம் நகரத்தில் 10ஆகவும், கிராமங்களி 17ஆகவும் இருக்கிறது. இதற்கும் மத்தியில், சிட்டி ரொம்ப மோசம், பீச்சு அப்படி இருக்கு, பார்க் இப்படி இருக்கு என மக்கள் சலித்துக் கொள்கிறார்கள். இப்ப என்ன சொல்கிறீர்கள்? இங்கே நகரத்தில் நாம் social networking site களில் வீணாக்கும் நேரங்களை அவர்கள் வேறு விதமாக செலவு செய்கிறார்கள் போல!
------------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
ஜானோட அம்மா மேக்கப் பண்ணிகிட்டிருந்தாங்க. அப்போ ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த ஜான்,


ஜான் - அம்மா என்ன பண்றே?
அம்மா - இருக்கும் அழகை கூட்டுறதுக்காக இந்த க்ரீம் பூசறேன் டா, கண்ணா.

பிறகு முகத்தில் அப்பியதை உரித்து எடுக்கத் தொடங்க.

ஜான் - என்னம்மா, முடியலையா?

------------------------------------------------------------------------------------------------------------------
காதலங்கிறது தலையில் விழுந்த காக்காபீ மாதிரி. வழித்துப் போடுவதும் எடுத்து நக்குவதும் அவரவர் கைகளில் இருக்கிறது.

சில பயணங்கள் - 5

Filed under , , by Prabhu on 3/09/2010 08:05:00 AM

5

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4


பொங்கலுக்குப் பிறகே இரண்டு முறை பெங்களூர் சென்றுவிட்டேன். சினிமா பற்றி சிறிதாக முதல் பதிவில் பேசியிருந்தேன். சினிமா பற்றி மீண்டும் தொடருவோம். மதுரைக்காரன் - சினிமாப் பைத்தியம் என என் ஊருக்கு பட்டம் கட்ட முயற்சி வேண்டாம். பெங்களூரின் ஆச்சரியம் என்ன வென்றால் கன்னட படம் ரிலீஸாவது தெரியவில்லை. ஆனால் தமிழ் படம் ஜோராக ரிலீஸ் ஆகிறது. நான் பொங்கலுக்கு போன பொழுது ஊர் முழுக்க , ;குட்டி’, ‘கோவா’ பட போஸ்டர்கள் தான். அந்தப் படங்களுக்கும் பொதுவாக ஒட்டப் படும் போஸ்டர்கள் தவிர எங்கள் ஊரில் பல காலங்களுக்கு முன் ஒழிந்த மல்டிகலர் போஸ்டர்களும் ஒட்டுகிறார்கள். இது அஜய் அவன் சோனி செல் பேசியில் பிடித்தது.

இன்னுமா?

கன்னட படங்களைப் பற்றி பேசவில்லை என்றால் எப்படி? கன்னட பட ஹீரோக்கள் கவர்ச்சியாக இல்லை. ‘முங்காரு மலே’ கணேஷ் ஓ.கே என என் அண்ணன் சொல்வான். கன்னட பட போஸ்டர்கள் மிக அரிது. சமீபத்தில் போன பொழுது ‘ஆப்த ரக்‌ஷகா’ ரிலீஸ். விஷ்ணுவர்தன் கடைசியாக நடித்த படம். பாவம், போஸ்ட் புரொடக்‌ஷன் சமயத்தில் இறந்து போனார். ’ஆப்த மித்ரா’(சந்திரமுகி) வின் இரண்டாம் பாகம் எனப்  பரபரப்பாக பேசப்பட்ட படம். பண்பலையில் ‘விஷ்ணு வர்த்தன், விமலா ராமன் போன்றோர் நடித்த ஆப்த ரக்‌ஷகா’, ‘சூப்பர்ஹிட் பாடல்கள் கொண்ட படம் ஆப்த ரக்‌ஷகா’ என ’வாங்கிவிட்டீர்களா’ ரக விளம்பரங்களைப் போல கூவி விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் அந்த விளம்பரங்கள் நம் ஊரோடு ஒப்பிடும் பொழுது பத்தாண்டுகள் பின்னாடி இருந்தன போல் இருந்தது.


’நீ  ஒரு வயசா இருக்கும்போது பெங்களூர் முழுக்க சுத்திப் பார்த்தோம்’ என என் அம்மா சொல்வாங்க. எனக்கு நினைவிலில்லை. நான் விவரம் தெரிந்து நான்கு வருடம் முன் தான் பெங்களூர் சென்றேன். அப்பொழுது என் அண்ணன், அண்ணனின் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். ஒருவன் காலையில் எழுந்ததும் மணி அடித்து சாமி கும்பிடும் அளவு பக்தி பழம். இன்னொருவன் அப்பொழுதே இரண்டு செல்பேசிகள் வைத்துக் கொண்டு செல்பேசியின் ஸ்பீக்கர் வலிக்கும் வரை பேசுவான்; எந்நேரமும் ‘ஹி.. ஹி..’ என ஃபோனில் ஒரு சிரிப்பு; எப்படி பாஸ் இவ்வளவு நேரம் கடலை போடுறீங்க?

அவர்களுடன் BTM Layout  செல்லும் வழியில் ஏதோ தியேட்டரில் ஷகீலா படம் ஓடியது. அதில் ஆச்சரியம் என்னவென்கிறீர்களா. அந்த பக்திப் பழம் சொன்ன தகவல் தான் ஆச்சரியம். அந்த ஷகீலா படம் நூறு நாள் ஓடி குத்து விளக்கு ஏற்றிக் கொண்டாடியிருக்கின்றனர் பெங்களூர் தியேட்டர் பெருமக்கள். கேரளாவிற்கு பிறகு இந்தியாவிலேயே அதிக அளவிலான கவர்ச்சி படங்கள் வெளியாகும் மாநிலம் கர்நாடகாதானாம். ரொம்ப starvation போல. அதே போல நான் முதலில் பெங்களூரு சென்ற பொழுது ஊர் முழுக்க ஒரே நமீதா காய்ச்சல். நமீதா அப்போ தான் கன்னட எண்ட்ரி. ஹீரோ ஏதோ டி.ஆர்., மாதிரியான நடிப்பு மற்றும் இயக்கம் கேஸ் போல. கன்னட சினிமான்னு சொல்லிட்டு எனக்கு பிடிச்ச நடிகை ‘திவ்யா ஸ்பந்தனா’ என சொல்லாமல் போனா என் மனது சாந்தி அடையாது.

என் பெங்களூர் சினிமா அனுபவம் PVR cinemas பற்றி சொல்லாமல் முழுமை அடையாது. நான் 'Pirates of the Carribean Sea - At the world's end' அங்குதான் பார்த்தேன். படம் முழுக்க புயல் மழையென இருக்க, ஏதோ தியேட்டரில் என் பிடறிக்குப் பின்னால் நீர் விழுவது போலாக ஒலி அமைப்பு மிரட்டலாக இருந்தது தியேட்டரில். இந்திய அளவிலான இந்த திரையரங்கு சங்கிலி பெங்களூரில் Forumன் மூணாவது மாடியில் உள்ளது. அந்த மூணாவது மாடியிலேயே 11 ஸ்கிரீன் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் போன பொழுது அமிதாப் நடித்த 'Rann’ பார்த்தேன். வழக்கமான ஒரு நல்ல RGV படம். அந்தத் தியேட்டரில் மொக்க படம் பார்த்தால் கூட சுவாரஸ்யமாக இருக்கும் போலத் தோணியது. இதே தியேட்டருகில் காலேஜ் முயற்சி செய்து, ஆனால் அதே காலேஜின் வேறு கேம்பஸ் கிடைத்த சோகம் எனக்கு. ம்ஹூம்.

கன்னடத்தில் பெங்களூர் என்று வைத்து விட்டார்கள். நியாயமாக தமிழில் ’பெண்களூர்’ என்று வைத்திருக்க வேண்டும். கொடைக்கானலுக்கு பிறகு இயற்கையை வியந்த இடம் பெங்களூர் தான்.

இப்படியாக இந்தப் பயணத் தொடர் நிறைவடைகிறது. சுபம்!

சில பயணங்கள் - 4

Filed under , by Prabhu on 3/06/2010 09:37:00 AM

8

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
Forumல் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான் : உணவு, பெண்கள். இரண்டிற்குமான ஒற்றுமையை நான் சொன்னால் ஆபாசமாகிவிடுமென்பதால் விட்டுவிடுவோம். அங்கே எல்லோரும் மிகச் சுதந்திரமாக இருக்கிறார்கள். பொதுவாகவே சாலையில் பெண்கள் ஆண்கள் கைகளைப் பிடித்து செல்வது சகஜமாகவே இருக்கிறது. அங்கே ஷோகேசில் ஒரு பொம்மை இருந்தது. ஆனால் குட்டையாக, கொஞ்ச அதிகமான சதைப்பிடிப்புடன் யாரு ஷோகேஸ் பொம்மை செய்கிறார் என யோசிக்கும் நேரத்தில்தான் தெரிந்தது அது ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்று. ஏன் இப்படி கண்ணாடிகிட்ட நின்று குழப்புகிறாள்? இந்த ஊருக்கு எந்த எந்த ஊரில் இருந்தெல்லாம் வருகிறார்களென இங்கு தெரிகிறது. வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பது போல தெரிகிறது. அல்லது அவர்களுடைய ‘சங்கி மங்கி’ தன மூஞ்சி காட்டிக் கொடுக்கிறதோ என்னவோ.
மெக் டொனால்ட் - சீச்சீ புளிக்கும்...
PVR Cinemasன் 11 திரையரங்குகள் மூன்றாவது மாடியில் இருக்கிறன. அவற்றைப் பற்றி வேறு ஒரு பதிவில் எழுதி வைத்திருக்கிறேன். பிறகு வெளியிடுகிறேன். MCDonald burger(பாலாவின்Food Inc., பதிவு படித்திருந்தால் இது நடந்திருக்காது) உடன் கிளம்பும் நேரத்தில் Landmark நினைவிற்கு வந்தது. அங்கே சென்று புத்தகங்கள் இருக்கும் பகுதியில் ஒரு ஒரு மணிநேரம் செலவானது. ராமானுஜன் என்று ஒருத்தரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், தேடின பொழுது கைக்காசு இடித்ததால், தாகூர் ‘கீதாஞ்சலி’யில் அப்படி என்ன எழுதியிருக்கிறார் எனப் பார்க்க வாங்கினேன். ஆனாலும் ராமானுஜன் புத்தகத்தை அங்கேயே உட்கார்ந்து சிறிது தேய்த்துவிட்டுதான் வந்தேன். Sachin Garg என ஒருவர் எழுதிய ‘A sunny shady life' எடுத்தேன். சேத்தனின் FPS ரகத்தில் எழுதியிருப்பார் போல. படித்துவிட்டு சொல்கிறேன். 

K.R.Marketஅருகே ஒரு மசூதி
K.R.Market என்று ஒரு ஏரியா பெங்களூரில் இருக்கிறது. கோரமங்களாவில் இருந்து 340 வரிசையில் பல பஸ்கள் Forum வழியாக மார்க்கெட் செல்கிறது. மார்க்கெட் பகுதியை பார்க்கும் பொழுது இதுதான் பழைய பெங்களூரோ எனத் தோன்றுகிறது. அந்த வீதிகளைக் காணும் பொழுது இப்பொழுது பெங்களூரில் இருக்கும் அந்த வெளிநாட்டுத்தனம் சிறிதும் இல்லாத ஒரு சாதாரண இந்தியக் கடைத்தெரு போன்று இருக்கிறது. எனக்கு அந்தக் கடைத்தெருவைப் பார்த்ததும் மதுரை டவுன்ஹால் ரோடு போன்று இருந்தது. பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்து மதுரையை சிறிதே மறந்துவிட்டவனைக் கொண்டு வந்து நிறுத்தி டவுன்ஹால் ரோடு என்று சொன்னால் சிறிது நேரத்திற்கு நம்பியே விடுவான் போலிருந்தது எனக்கு. உள்ளே நடக்கும் பொழுது என் சொந்த ஊரில் நடப்பது போல உரிமையுடன் நடந்தேன். அங்கே இலியாஹூ.எம்.கோல்ட்ராட் எழுதிய, ' The Goal’ என்ற மேலாண்மை கோட்பாடுகள் கலந்த நாவல் வாங்கினேன்.  இது சில காலம் முன்பு ஆனந்த விகடனில் தமிழாக்கப்பெற்று தொடராக வெளிவந்தது. இதை வாங்கிய சில நாட்களில் படித்தாகிவிட்டது. இன்னும் சில விஷயங்கள் விளங்கவில்லை. மற்றபடி சுவாரஸ்யமான நாவல். தமிழாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல் இருப்பவைகளைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்கு தாவு தீர்ந்துவிடும் என்பதால் கூட இருக்கலாம்.  ஆங், சொல்ல மறந்துவிட்டேன், இந்த மார்க்கெட் அருகே பெங்களூர் கோட்டை என்று ஒன்று இருந்தது. அது திப்பு சுல்தான் கோட்டை என்று சொன்னாலும், ஆரம்பத்தில் அது கெம்ப கவுடா என்னும் விஜயநகர பிரதிநிதியால் கட்டப்பெற்றது என்பதும் பின்னால் பிரிட்டிஷார் வயிற்றுக்குள் போகும் முன் வரை ஹைதர் அலி-திப்புவின் கைகளில் இருந்தது என்பதும் விக்கிபீடியாவின் வாக்கு. அந்த கெம்ப கவுடா பெயரில் பெங்களூரில் ஒரு பகுதி கூட இருக்கிறது.



Qutub Minar
மேலே இருக்கும் இரண்டு படங்களும் லால் பாக்கில் எடுத்தது. நல்ல பெரிய பார்க் அது. எக்கசக்க மரங்கள். எங்கள் ஊரில் ஒத்த மரம் நிற்க வக்கில்லை. நகரத்திற்குள் இவ்வளவு பெரிய பார்க் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, தமிழகத்தில்.

 எல்லா வேலைகளும் முடித்துக் கிளம்பும் போது எண்ண ஓட்டங்கள் வேறு விதமாக இருந்தது. Introspection. வெளியூர் பயணங்கள் அதை உண்டாக்க வல்லது. பிற ஊர்களில் பயணம் செய்கையில் வெவ்வேறு மக்களைப் பார்க்கையில் எண்ண ஓட்டங்கள் சீராக ஓடுகின்றன; நம்மை சுய மதிப்பீடு செய்கின்றன. எனக்கு, இது எண்ண ஓட்டங்களுக்கான பயிற்சி என்பது போன்ற உணர்வு. இப்படி சென்ற எண்ண ஓட்டங்கள் என் பிரச்சனைகளை அலச உதவியாய் இருந்தது.

இன்னும் ஒரு பதிவு மிச்சம் இருக்கிறது. அதை இரண்டொரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். சென்னை போனதையும் சேர்த்து எழுதுவதற்குத் தான் சில பயணங்கள் என்று தலைப்பிட்டேன். ஆனால் இதற்கே ரொம்ப நாட்கள் எடுத்துக் கொண்டதால் நிறைய தகவல்கள் மறந்து விட்டன. சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அண்ணா ‘சாலை’ என்று சொல்கிறார்கள். ஆனால் அது, கோச்சடையில் ஆரம்பித்து விரகனூர் சுற்றுச்சாலையை தாண்டும் போலிருக்கிறது.(இவ்வளவு தான் மதுரையின் குறுக்களவு அளவு என்பதனை கொள்க!).  சென்னையில் இரவு நேரத்தில் பேருந்தில் ஏறினால் ஒரு தீர்த்தம் உண்டவரையாவது  (மோந்து) பார்க்காமல் இறங்க மாட்டீர்கள். இந்த இரவு நேரம் என்பது ஏழு மணியிலேயே தொடங்கிவிடுகிறது. நல்ல ஊருய்யா. என்ன தான் இருந்தாலும், நம்ம ஊரோட பிரதிநிதியா நம்மை நினைத்துக் கொண்டு அடுத்த ஊரை கிழிப்பதில் உள்ள சுகமே தனி.

சில பயணங்கள் - 3

Filed under , by Prabhu on 3/03/2010 01:08:00 PM

8

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5

171 பேருந்தே மெஜஸ்டியில் இருந்து கோரமங்களா வரும் வழியில் Dairy Circleல் நிற்கும் என தெரிந்ததால் மெஜஸ்டி சென்று 171 பிடித்து செல்லும் வழியில் பேச்சு என் நண்பனின் பிரதாபங்களைப் பற்றி ஆரம்பித்தது. அவனைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். மதுரையிலிருந்து பெங்களூர் சென்று மேலாண்மை படிக்கும் மாணவன். சௌராஷ்டிரன். சௌராஷ்ட்ரா என்பது மதுரையில் மிகுந்து இருக்கும் மொழி சார்ந்த பிரிவு என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இவர்களைப் பற்றி பின்னாளில் விஸ்தாரமாக பேசுவோம். எப்படி நான் அண்ணன் இருக்கும் தைரியத்தில் செல்கிறேனோ, அதே போல் அக்கா, பவா(சௌராஷ்டாவில் அக்கா கணவர்) இருக்கும் தைரியத்தில் சென்றவன் அவன். எங்கள் ‘கேங்’கில் சின்ன பையன் இவன் என நினைத்தோம். ஆனால் நாங்கள் தான் சின்ன பையன்களாக இருக்கிறோம். அவனுக்கு சென்னை, பெங்களூர் என மாநிலத்துக்கு ஒரு நண்பி உண்டு. மதுரையில் சந்தித்த பெண் சென்னைக்குப் படிக்கப் போக, இவன் பெங்களூர் சென்றால், அங்கே வகுப்பில் படிக்கும் இரண்டாம் தலைமுறை பெங்களூர்வாசியான ஒரு பெண் என வாழ்கிறான். அடுத்த அக்காவை ஹைதராபாத்தில் கட்டிக் கொடுக்கிறார்களாம். ஒன்று ரிசர்வ் செய்யப்பட்டது. இந்த மாதிரி ஆசாமிகளுடன் பேசுவதில் கடுப்பு என்னவென்றால், ‘அவ இப்படி சொல்றா? ஏண்டா இப்படி?’ , ‘மாப்ள படத்துக்கு போலாம்னு சொல்றா. என்ன செய்யலாம்?’, என்பது போன்ற வயிற்றெரிச்சலைக் குழல் வைத்து ஊதும் கடமையை செவ்வனே செய்கிறார்கள். இவர்களுக்கு தேவை விடையல்ல. என்ன சொன்னாலும் அப்படியல்ல, இப்படியல்ல என ’மன்மதன்’ சத்யன் போல நம்மை வெறுப்பேற்றுவார்கள். நான் என்னவென்றே புரியாத ஒரு பார்வையை குடுத்துவிட்டு பேச்சை திசை திருப்பிவிடுவேன். அது நமக்கும் நம் நட்புக்கும் நலம்.

Dairy circleல் ஒரு ’நந்தினி’ விற்பனை நிலையம் இருந்தது. நந்தினி என்பது ‘ஆவின்’ போல கர்நாடகா அரசின் பால் கொள்முதல்-விற்பனை நிறுவனம். அந்த நிலையத்தின் பின்னாலேயே நந்தினி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையும் இருந்தது. Dairy Circle பெயரே அதனால் தான் வந்திருக்க வேண்டும். நந்தினியில் ஒரு புட்டி பால் வாங்கிக் குடித்து விட்டுத்தான் மறுவேலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். நந்தினியைப் பற்றி பேசும் போது ஆவினைப் பற்றி பேசாமல் விட முடியவில்லை. இரண்டுமே மாட்டின் பெயரினைக் கொண்டு அமைந்தவை. ‘ஆவின்’ என்ற பெயரின் அழகை சில ஆண்டுகளுக்கு முன் தான் அறிந்து கொண்டேன். பல நாளாக அதன் பெயரைப் பற்றி யோசிக்காத என் மூளையுள் தற்செயலாக பொறி தட்ட, யோசித்தால் ஆ என்றால் பசு என்று அர்த்தம். எனவே பசுவின் பால் என்பதுதான் ஆவின் பால் என அப்பொழுதுதான் தோன்றியது. ஆவின் பால், நெய், மைசூர்பா என அனைத்திற்கும் நல்ல பெயர் இருக்க, இன்னும் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஆவின். உள்ளே ஊழல் அதிகம் என்று கேள்வி. இப்படி நல்ல விஷயங்கள் இருக்கும் அரசாங்க நிறுவனங்களையும் வீணடிக்கிறார்கள்.

இது வேற நந்தினி

விசாரித்து பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து சென்றேன். உள்ளே பல்வேறு மாநிலத்திலிருந்தும் ஒரு சில வெளிநாடுகளிலிருந்தும் வந்து இருக்கும் பலரைக் காண இயன்றது.  அந்தத் தடவையும் அதன் பிறகு தற்பொழுது இருமுறையும் பெங்களூர் சென்ற பொழுதெல்லாம் ஒவ்வொரு முகத்தையும் காணும் பொழுது மூளை இவள் எந்த மாநிலமாக இருப்பாள், இவன் தமிழனோ என தொடர்ந்து கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. மூளைக்கு அயற்சியைக் குடுத்தாலும் பிடிவாதமாகத் தொடர்வதால் எண்ணங்களைத் துண்டிக்கும் முயற்சியில் அவனுடன் பேச ஆரம்பித்தேன். அங்கிருக்கும் ஒருவனைத் தோராயமாகப் ஒரு ஒரியாக்காரனைப் பிடித்து கொஞ்ச நேரம் பேசினோம். எனது பேரைக் கேட்டவன் ’typically tamilian’ என பஞ்சாபியிடம் சொன்னான். சிரித்தாலும் இன்னமும் மூளையில் ஒரு குழப்பமும் வெறுப்பும் இருக்கிறது. கலிங்க நாட்டவனுக்கு இவ்வளவு கொழுப்பா? அமைச்சரே...) அதென்ன 'typically'? (பேரைக் கேட்டாலே ஊகித்துவிடலாம் என்பதுதானா இல்லை எதுவும் இளக்காரமாக சொன்னானா?

பிறகு Forum போக பாஸ் இருக்கும் தினவில் பஸ் ஏறி செல்கையில் நடத்துனரிடம் கேட்டால் போகாது என்றார். பக்கத்திலிருந்தவரின் கன்னடத்தை அறைகுறையாக புரிந்து கொண்டு கார்பரேஷன் நிறுத்தத்தில் இறங்கி விசாரித்து செல்லும் முன் ஒரு பானி பூரி சாப்பிட்டோம். நான் பெங்களூரில் சாப்பிட்ட பானி பூரிகளிலே சிறந்தவை கார்பரேஷன் அருகில் சாப்பிட்டவைதான். அங்கே மிளகாய் பொடியெல்லாம் போட்டுக் கொடுக்கிறார்கள். எட்டு பூரி கொடுக்கிறார்கள் (பல இடங்களில் 6 தான்). முடிந்தபின் பானி இன்றி கிழங்கு, சாட் பொடி மட்டும் போட்டு ஒரு பூரி கொடுக்கிறார்கள். சாப்பிட்ட பின் வெத்தலை போடுவது போல விந்தையான பழக்கமாக பட்டது.

Forum பற்றி அடுத்த பதிவில் பேசுவோம். மிகவும் சிறிய பகுதிகளாகப் போடுகிறேனோ? என்ன செய்வது, பதிவர்கள் பெரியவைகளைப் படிக்க மூக்கால் அழுகிறார்கள். ஒரு 16 பக்க கதை இன்னும் என் பதிவில் சீண்டுவாரில்லாமல் இருக்கிறது. சுவாரஸ்யமா கொண்டு போறேனா என்பது தான் கேள்வி . போகுதா இல்லை அடுத்த பதிவை பெரிதாக எழுதி முடிச்சிடவா?

நிலவு கரையும் முன்...

Filed under , , by Prabhu on 3/01/2010 10:55:00 AM

14

பூமியின் நிழலில் நிலா ஒளிந்த
அந்த வேளையின் இருளில்
தொலைத்த உன்னை,
ஒவ்வொரு தேய்பிறையிலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
மெல்ல கரைந்து இருளில் கலக்கும் முன்
மங்கிய ஒளியில் உன் கை பிடித்து
சூரியன் உறையும் உலகை நோக்கி செல்வேன்.


கொஞ்சம் அறிவியல் பிண்ணனி - இது சந்திர கிரகணம் வைத்து எழுதியது. பூமியின் நிழலுக்குள் முழுதாக எப்போதாவது வரும் வேளையில் மட்டுமே முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. உபயம் - விக்கி

விண்ணைத் தாண்டி வருவாயா

Filed under , , by Prabhu on 2/27/2010 04:53:00 PM

17


பொதுவாக விமர்சனம் எழுதுவது என்ற விஷயத்தை பல காலமாக செய்யவில்லை. அதற்கு பல காரணம் இருந்தாலும், எல்லாரும் எழுதி பதிவுலகம் முழுக்க ஒரே சரக்காக பார்க்கும் பொழுது சுட வைத்த பால் போல எரிச்சல் பொங்கி வழிகிறது. ஆனால் இந்தப் படத்திற்கு யாரும் இன்னும் நிறைய எழுதாத காரணத்தால் நான் எழுதுகிறேன், விமர்சனம் அல்ல. சொந்தக் கருத்துக்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா - முழுக்க முழுக்க காதலாகி கசிந்துருகி....

படம் ஆரம்பிக்கும்பொழுதே காதலும் ஆரம்பித்து விடுகிறது. பிறகு படம் முழுக்க காதல், காதல், காதல். எந்த வித சிதறல்களும் இன்றி காதலையே காட்டுகிறார்கள். இப்படி வெறுமனே காதலை மட்டும் எடுத்த படம் இதுவாகத் தான் இருக்கும். படம் முடிந்ததும் கனத்த மனதுடன் செல்ல வைக்கிறார், கௌதம். இஞ்சினியரிங் முடித்துவிட்டு துணை  இயக்குனராகும் ஒருவன், மாடி வீட்டு மலையாள கிறிஸ்டியனைக் காதலிக்கும் கதை.  வழக்கம் போல கௌதம் ஷார்ப்பான வசனங்களாலும், சிம்புவின் வாய்ஸ் ஓவர் மூலமும் இட்டுச் செல்கிறார். இப்படி சுத்தமான, கலப்படமில்லாத, அக்மார்க் காதல் கதை எடுக்க எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. பெரும்பாலும் தொய்வில்லாமலே செல்கிறது. ’அவனவன் காதலுக்காக அமெரிக்காவுக்கே போறான்’ என்பதும், கௌதமிடம் துணை இயக்குனாராக சேரவேண்டுமெனும் பொழுதும், ‘ஏன், தமிழ் படத்துலயே இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறயா?” என்றும் தன்னையே கலாய்த்துக் கொள்கிறார்.

பாடல்கள் காட்சியமைப்பிலும் அருமை. சிம்பிளான நடன அமைப்புகள், அசைவுகள் என சிம்பு கலக்குகிறார். நடிப்பிலும் உதறுகிறார். காதலினால் அவர் படும் அவஸ்தைகளைக் உணரவைக்கும் நடிப்பு. எப்பொழுதுமே நண்பர்களிடம் சொல்வதுண்டு, ‘சிம்பு செம டேலண்ட். ஆனா மாஸ் ஹீரோ நினைப்பில் கொல்கிறார்’ என. நிரூபித்து இருக்கிறார். த்ரிஷாவும் அழகாக அலைவதோடு அல்லாமல் நன்றாக நடித்து(உருகி) இருக்கிறார். ஆனால் சிம்புவே மேலோங்கி இருக்கிறார். கணேஷ் என்ற ஒளிப்பதிவாளராக வருபவர் நல்ல சுவாரஸ்யம். பல சமயங்களில் நகைச்சுவை அவர் டிபார்ட்மெண்ட். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனராகவே வந்து இயக்குனர் பொறுப்பின் கண்டிப்பைக் காட்டியிருக்கிறார்.

சிம்பு, த்ரிஷா இருவருமே படத்தில் செம அழகு என்பதை போஸ்டர்கள் சொல்லியிருக்கும். மனோஜ் பரமஹம்ஸா படத்திற்கு அழகுணர்ச்சி சேர்த்திருக்கிறார். ரஹமான், படத்தில் விளையாடியிருக்கிறார். என்னைப் பொறுத்த வரை ரஹ்மான் படத்தில் ஒரு கேரக்டராகவே தெரிகிறார். கதாநாயகியை முதன்முதலில் பார்க்கும் பொழுது அவள் வழிகேட்டு மாடிவரையிலும் போகும்வரை குடுக்கும் சிம்பொனி ரக இசை அருமை. ஒவ்வொரு பிண்ணனியும் சிறப்பாக இருக்கிறது. இருவரும் கேரளாவில் பேசும் காட்சியில், ’ஆரோமலே’ வின் ஆரம்பத்தில் வரும் இசையை மெல்லிய பிண்ணனியாக விட்டு இருப்பது வாய்பே இல்லை.

படம் கொஞ்சம் நீளமோ? த்ரிஷா கடைசியில் பிரியவேண்டும் என முரண்டு செய்யும் போது பெரிய காரணம் இல்லையென்றாலும், இது கொஞ்சம் இயல்புதான். இப்படியான கதைகளை நிறைய நாம் பார்த்திருப்போம். சில குறைகளும் இருக்கத் தான் செய்கிறது, படத்தில். படம் எல்லோருக்கும் பிடித்து விடாது. நிறைய பேருக்கு பிடிக்கும்.
எந்த கவர்ச்சி உடை எதுவும் இல்லாமலேயே, ’ஓமனப் பெண்ணே’ பாடல்  காட்சியமைப்பு செம sensuous. யப்பா, தாங்கல. :)

பாதி படத்திற்கு பிறகு சத்தம் கொடுத்து தொந்தரவு செய்தவர்களை என்ன செய்யலாம்? படம் இப்படி இருக்குமென அவர்களுக்கு கணிப்பு இருக்காதா என்ன? ஒருவன், ‘என்னடா மணிரத்னம் படம் மாதிரி இருக்கு?’ என சலித்துக் கொள்கிறான். மணிரத்னம், கௌதம் படங்கள் எல்லாம் Urban classics ரகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

பதின்மம்

Filed under , , by Prabhu on 2/24/2010 11:22:00 AM

17

பதின்ம வயதுகள் - டீன் ஏஜ்.

சொல்லும்போதே பெருமூச்சு தான் வருகிறது. அந்தப் பருவம் முடிந்து ஒன்பதாவது மாதம். எனக்கென்னவோ டீன் - ஏஜ் முடிந்ததும் ஒரு மாதிரி உடைந்துவிட்டேன். சின்னப் பையன் என்ற சாக்கில் அனுபவித்த சலுகைகள் கிடையாது. ஏன் என்னை நானே இன்னும் வயசு இருக்கு, என்ன அவசரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. என்ன தான் என் அப்பா நான் செய்யும் விஷயங்களுக்கு, ‘சின்னப்பையன் தானே’ என்றாலும், உலகம் அவ்வாறு பார்க்கப் போவதில்லை. ம்ஹூம்.

டீன் - ஏஜின் அருமை புரியாதவர்கள் பல. இழந்தபிறகு வருத்தப்படுவர். நான் நிகழும் போதே அதன் அருமை புரிந்து கொண்டேன். ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை. நான் தெரிந்தே இழந்துவிட்ட சில விஷயங்கள் பல. இன்னும்  50-100 புத்தகங்கள் உபயோகமானவையாக படித்திருக்க வேண்டும் அந்த வயதிற்குள். இன்னும் அதிக அளவில் பலவிதமான இசை தொகுப்புகளைக் கேட்டிருக்க வேண்டும். விளையாண்டிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் அறைகுறையாக பயின்ற டேபிள் டென்னிஸைத் தொடர்ந்திருக்க வேண்டும். நன்றாக அடுத்தவரிடம் பேசும் கலையை கற்றிருக்க வேண்டும். இது போல இன்னும் பல எனக்கு வேண்டியிருக்க, நான் மட்டும் வருடங்களுக்கு வேண்டாதவனாகிப் போய் விட்டேன். அவை என்னை விட்டு உருண்டோடி விட்டன.

அட, இழந்ததை ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். நான் பெற்றதும் பலவே. அனுபவித்த தருணங்களின் அருமையும் இனிப்பவையே. 

பதிமூன்றாம் வயதில் தவளையின் இனப்பெருக்க உத்தியைப் படித்த பொழுது ‘சைக்கிள் பம்ப்’ போன்ற அதன் முறையை கிண்டல் செய்து சிரித்தது நினைவில் இன்னும் இருப்பது என் ’அபார’ ஞாபக சக்திக்கு ஆச்சரியம்தான். 
முதன்முதலாக ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, Nancy Drew, Hardy Boys என ஓடிக் கொண்டிருந்த வருடம்.

ஒன்பதாம் வகுப்பில் எதேச்சையாக சொல்லிய வார்த்தையில் இருந்து ‘ப்ரீத்தி’ என்ற பெயரை வைத்து என்னை நண்பர்கள் ஓட்டியதும், நிஜமாலுமே அப்படி ஒருத்தி வேறொரு வகுப்பில் இருந்ததும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அந்த பெண் எந்த ஆசிரியரையாவது காண எங்கள் வகுப்பிற்கு வந்தால் என் பெயரைக் கூவி நாராசமாக்குவார்கள். என்னவோ, கடைசி வரை அந்தப் பெண்ணுக்கு நான் ஒருவன் இருந்ததே தெரியாது. நான் கவலைப்பட்டதில்லை. நான் அப்ப எல்லாம் சைட் அடிச்சதில்லைங்கிறது உண்மைன்னாலும் நம்பவா போறீங்க?

ஒன்பதாம் வகுப்பு சரித்திர வகுப்பின் போது கூரையில் இரண்டு அணில்களின் சில்மிஷம் கண்டு சிரித்து மாட்டிய பொழுது, எழுந்து பேந்த பேந்த முழித்தோம். அப்பொழுது என்னுடன் திவாகர் என்று ஒரு நண்பன் உண்டு. எங்கள் தீம் சாங் ஊமை விழிகளில் வரும் ஒப்பனிங் பாடலான ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ தான். இது இப்படியானதுக்கு ஒரு பெரும் காரணமொன்றுமில்லை. அந்தப் படத்தின் முன்பாதி கதை நான் அதுவரை பார்த்ததே இல்லாத காரணத்தால் அதைக் கூறுகையில் அந்த பாட்டுக்கு ’நங்கன நங்கன’ ஒரு வித்தியாசமான பிண்ணனி இசை கொடுத்துக் கொண்டே பாடுவான். அதனாலே பலமுறை வகுப்பில் அந்த சத்தத்தைக் குடுத்து சிரித்து மாட்டியிருக்கிறோம்.


பத்தாம் வகுப்பில் கவலையின்றி இருந்தது மார்க்கில் பளிச்சிட, அந்த மதிப்பெண்களை நான் கேரளா சுற்றுலாவை சுசீந்திரத்தில் துவக்கும் சமயத்தில் தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன். பிறகு சுற்றுலா முடிந்து வந்து நிதானமாக பள்ளி தேட முற்பட்டேன். கால தாமதம் காரணமாக பெரிய பள்ளிகளில் கிடைக்காத போதும் வருத்தப் படவில்லை. காலத்துடன் வந்திருந்தாலும் என் மதிப்பென்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை.

எனக்கு எட்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்பில், ‘பருப்பு’ என்பது பட்டப் பெயர். அப்பவே நான் பெரிய பருப்பு எனத் தெரிந்திருக்கிறது என்று பொய் சொல்லாமல் சொல்ல வேண்டுமென்றால், என் பெயரை வேகமாக சொன்னால் ‘பருப்பு’ என திரிகிறது என்று புது இலக்கண விதியை கண்டுபிடிக்க என் பெயர் பயன்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அசிங்கமான பெயர்களை நான் இன்னும் யாருடன் பகிர்ந்ததில்லை. போவதில்லை.

பதினோராம் வகுப்பில் புதிதாக சேர்ந்த பள்ளியில் அப்போழுதே பிரசவித்திருந்த எலியைக் காணும் அரிய சந்தர்ப்பம். ரோமம் ஏதும் இன்றி அம்மா தேங்காய் கொழுக்கட்டை செய்யும் போது மீந்து போன மாவை குட்டியாக பிடித்து வைத்து வேக வைக்கும் கொழுக்கட்டையை போன்று இருந்தna மூன்று குட்டிகளும் . சிறிது ரத்தத்துடன் பிறந்து கிடந்த அவற்றில் ஒன்று இறந்தது, எப்படி என இப்பொழுது நினைவில் இல்லை.

பன்னிரண்டாம் வகுப்பில் முடிந்த பொழுது என் வீட்டிலேயே, அப்பொழுதுதான் தயாநிதி மாறன் அறிமுகப் படுத்திய அகலவரிசை(Broadband)யில் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் தான்(76% - ரொம்ப மட்டமில்லை) என்று பார்த்ததும் காரணமின்றி எனக்கு சிரிப்பு. தொலைபேசியில் அதை என் அப்பாவிடம் கூற, அவரும் அதே போல சிரிக்க, நானும் சேர்ந்து சிரித்த விந்தையான தருணம் யாருக்கும் அமைந்திராது.

இதன் பிறகு என் வாழ்க்கையில் நான் எடுத்த முக்கிய, நல்ல முடிவு, அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தது. உயிரியலுக்கு விண்ணப்பம் போட்டு கிடைத்த பிறகு இயற்பியலுக்கும் விண்ணப்பம் போட்டு இயற்பியலில் சேர்ந்தேன். பிறகு 10 நாளுக்கு பிறகு உயிர்தொழில்நுட்பவியலின் ஆர்வம் காரணமாக உயிரியலுக்குத் தாவினேன். அது மட்டுமல்ல இயற்பியல் படித்தால் நமக்கு வெவ்வேறு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எம்.பி.ஏ தவிர பிற வாய்ப்புகள் எதுவும் இருந்து திசை மாறவிடக் கூடாது என்றும் உயிரியல் படித்தால் எம்.பி.ஏ படிக்க முடியாதா என்றும் தெனாவட்டுடன் உயிரியல் எடுத்தேன். அதன் பிறகு என்னைப் பார்தது இந்தியாவிற்கு ஒரு ஆறு, ஏழு விஞ்ஞானிகள்(அ) இழப்பாகிவிட்டது.

கல்லூரி வாழ்க்கையில் அனுபவித்தற்கே தனிப் பதிவு போடலாம். ஷான்சி க்ளப்(இப்பொழுது இல்லை), கல் பெஞ்சுகள் [இதற்கும் அதே கதி :( ] , மரத்தடி வட்ட சுவர், காண்டின், டி.பி.எம் நூலகம், நிறைய மரங்கள், மாணவர்-ஆசிரியர் நட்புறவில் ஒரு வித்தியாசமான துறை என அனுபவித்தது ஏராளம், தாராளம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது ஹாரி பாட்டரில் வரும் பள்ளி போல் புரியாத பாதைகளாக காடு போல இருக்கும். இதை சிறிது அழித்த கோபம் இன்னும் எங்களுக்கு அபரிமிதமாக உண்டு. இப்பொழுது இந்தக் கல்லூரியில், என் துறையில் தலைவராக இருந்தவரை இவ்வளவு சாதாரணமாக, பேசி, கிண்டல் செய்து சிரிக்கும் அளவுக்கு ப்ளாக்கர் ஆக்கியிருக்கிறது. அவர் தருமி(link).

அதன் பிறகு கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்து அதிலும் நாங்கள் கவலைப் படாமல், கடலையும் கூத்துமாக நன்றாக பொழுது கடத்தினோம். வருடத்திற்கு ஒரு பெண்ணாக கடமையாக சைட் அடித்தோம். நாங்கள் எல்லோரும் ஏக பத்தினி விரதனோட முன்னோடிகள். ஒரு பெண்ணை குறித்துக் கொண்டு அவளை மட்டுமே சைட் அடிப்போம். கடைசி வரைக்கும் அவளிடம் சரியாக பேசவில்லை என்ற வருத்தத்தைத் தவிர ஹார்மோன் விளையாட்டுகள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் நகக்கடிப்பு வெற்றியடையும் இந்திய கிரிக்கெட் போல சுவாரஸ்யமாகவே இருந்தது. 

இவ்வளவையும் சொல்லிவிட்டு அஜய்(link) பற்றி சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தாவிட்டாலும் அவன் குமட்டில் குத்துவான் என்பதால் சொல்லிவிடுகிறேன். மேற்கூறிய அனைத்து சமயங்களிலும் என் உற்ற தோழன். என் குடும்பத்திலொருவன் போல என்றெல்லாம் ஓவராக சொன்னால் அவனுக்கு அரிப்பு ஏற்படுமென்ற காரணத்தால் மேற்கொண்டு விளக்கம் வேண்டியதில்லை.

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அஜயால் ப்ளாக்கர் எனக்கு அறிமுகமாகிய ஒரே வாரத்தில் எழுத நுழைந்து விட, அந்த ப்ளாக்கை சரியாக எனது பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு ப்ளாக்கர் பிடுங்கிவிட்டது. எனது டீன் - ஏஜ் முடிந்தது, ப்ளாக்கரின் மூடு விழாவுடன் தான். அது நடந்து இப்பொழுது ஒன்பது மாதமாகி இதை கிஷோரின்(link) அழைப்பிற்கிணங்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். பொதுவாக எனக்கு தொடர் பதிவுகளில் நம்பிக்கை இல்லை. இதை கிஷோருக்காகவே எழுதுகிறேன். அப்புறம், சூர்யாவுக்கு(link) ஒரு தொடர் பதிவு கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை என்பதை கூறிக் கொள்கிறேன். யாராவது இதற்கு முன்னர் என்னை தொடர் பதிவிற்கு கூப்பிட்டு நான் எழுதவில்லை என்றால் மன்னிக்கவும், ஒருவேளை அந்த தலைப்பில் நான் வறண்ட கருத்துக்களுடையவனாக இருந்திருக்கலாம்

ஐயா, யாரு இந்த மாதிரி தொடர் பதிவுகளைத் தொவக்குபவர்?நான் யாரையும் அழைக்கவில்லை. ஒரு அளவுக்கு மேல் இதே மாதிரி சரக்கை எல்லாரிடமும் படித்தால் சலிப்பு தட்டிவிடாது?

சில பயணங்கள் - 2

Filed under , by Prabhu on 2/23/2010 11:20:00 AM

10

மடிவாலாவில் இறங்கியதும் ஆட்டோவாலாக்கள் மொய்க்கிறார்கள். எல்லோருக்கும் தமிழ் தெரிகிறது. நீங்கள் அங்கே இறங்கி, ’ஐயா நான் சிரம பரிகாரம் செய்து கொள்ள ஒரு நல்ல விடுதிக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றால் கூட புரிந்து கொள்வார்கள். சிறிதே தடுமாறும் தமிழ் பேசவும் செய்கிறார்கள். மீட்டருக்கு மேல் பத்து கேட்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன் முதன்முதலில் போன பொழுது மீட்டரே வேத வாக்கு. சமீப வருடங்களாக சென்னைக் காரர்களைப் பார்த்துக் கற்று கொண்டிருக்கிறார்கள. மீட்டருக்கு மேல் பத்து கேட்டார், ஐந்தைக் கொடுத்து சமாளித்தோம்.

கோரமங்களாவில் என் அண்ணன் வீட்டுக்கு போய் கதவைத் திறக்கவும் ஓடி வந்து எட்டி கண்ணை உருட்டிப் பார்த்துவிட்டு பின்வாங்கினவள், என் அண்ணன் மகள் சுகிதா. சுகிதா  என்றால் ஒளி கீற்று என்பது போன்ற அர்த்தம் வரும். என்னடா புதுசா வாயில் வராதபடி வச்சிருக்கீங்கன்னு எங்க அத்தை கூட கேட்டாங்க. வாயில் நுழையுற மாதிரி வைக்கனும்னா வாழைப்பழம்னு தான் வைக்கனும் என கவுண்டமணி சொல்வார். பெயர் வைக்கும் போது யாரும் அதிகம் பயன்படித்தாத பெயராக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஒரு obsession. என் பெயரை சொல்லி அடுத்தவனைக் கூப்பிடும் போது ஏற்படும் அசூயைக் கூட காரணமாக இருக்கலாம்.

அண்ணன் வீட்டிற்குப் போனதும் கடமையாக கொட்டிக் கொண்ட பிறகு குசல விசாரிப்புகளும் குழந்தையுடன் விளையாட்டும் தொடர்ந்தது. சுகிதா துறுதுறுவென வருகிறாள். அவளுக்கு உட்காரத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். உட்கார்ந்து பார்த்ததில்லை, ஒரே ஓட்டம் தான். ஒரு வயது தான் ஆகிறது. அதற்குள் அநியாய அடம். அம்மா, ப்பா என்று எப்பயாவது பாசம் பொங்கும் போது மட்டும் வருகிறது. நான் சொல்லச் சொல்லி சொன்னால் வாயில் விரல் வைத்துக் கொண்டு கேவலமாக நம்மை பார்க்கிறாள், ‘வெட்கமாயில்ல’ என்பது போல். நான் அவளைத் தூக்கி வெளியே வந்த பொழுது, bbaa, bbaa என சத்தம் எழுப்பி கையை அழைத்தாள். அந்த திசையில் பார்த்தால் மாடு. மாடி வீட்டு நாய் ராமு வந்தால் ட்டா,ட்டா என அழைக்கிறாள். காதைப் பிடித்து இழுக்கிறாள். நான் நாய் இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பித்ததே காலேஜ் வந்த பிறகு தான். அதற்கு முன் சித்தப்பா வீட்டிற்குக் கூட சுத்தி தான் செல்வேன், அந்த குட்டி பொமரேனியன் நாய்க்காக.

இப்படிபட்ட சாகச வீராங்கனை பயப்படும் விஷயம் உணவு. ம்ஹூம்.. ஒரு வாய் உண்ணேன் என்கிறாள். அதனாலேயே வத்தலாக இருக்கிறாள். மடியில் போட்டு பாலோ அரைத்த உணவோ கொடுக்கும் முன் நடு விரல் இரண்டை சூப்பிக் கொண்டு வெளியே எடுக்க மாட்டாள். மேஜையில் இருக்கும் பொருளை எல்லாம் சூறையாட அவள் ஓடி வந்தால், ஒரு புட்டி பாலை வைத்து அவளை விரட்டி விடுவேன்.  இந்த தடவை அவளுக்கு டயாபர்  அண்ணன் பெரிதாக வாங்கி விட அவள் டெண்டுல்கர் போல அதை அப்பப்போ அட்ஜெஸ்ட் செய்து கொண்டே ஒரு முழி முழிப்பாளே பார்க்கனும். சிரிப்பாக இருந்தது. அவள் தத்தக்க தத்தக்க என நடந்து விழும் அழகு... வாய்ப்பே இல்லை.

அன்று ட்வீட்டில் நான் பெங்களூர் வந்ததை கேட்காதவர்களுக்கும் கூவி சொல்லிவிட்டு தூங்கச் சென்றேன். அடுத்த நாள் ஊர் சுற்ற வேண்டி இருந்தது. அதிகபட்ச அலம்பல்களுடன் பெங்களூர் வாழ் நண்பன் என்னுடன் வர ஒப்புக் கொண்டான். வேறு எங்கு செல்லத் தெரியாமல் என் நண்பன் கூப்பிட்ட இஸ்கான்(ISKCON) செல்வதற்காக மெஜஸ்டி பேருந்து நிலையத்தில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. போகும் வழியில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைப் மனப்பாடம் செய்யும் முயற்சியில் அயற்சியடைந்து FM கேட்கத் துவங்கினேன். சென்ற முறை போல இந்த முறை நெடுக கன்னடம் கேட்கப் பிடிக்கவில்லை. தண்டவாளத்தின் நடுவே ஓடி மின்சார ரயில் பிடிப்பவனைப் போல நடுவிலிருந்த கன்னடத்தைத் தாண்டி இந்தி மற்றும் ஆங்கில ஸ்டேஷன்களில் ஓடிக் கொண்டிருந்தேன்.

மெஜஸ்டியில் நண்பனுக்காக காத்திருக்கும் சமயத்தில் இயற்கை ’அன்னை’ ’ஃபோன் போட’, சேலம் பேருந்து நிலையம் நினைவுக்கு வர, தயக்கத்துடன் சென்றால், கழிப்பறை இலவசம். கழிப்பறை சுத்தமாகதான் இருந்தது. பிறகு எங்கிருந்துதான் அப்படி முக்கைத் தட்டிக் குடலை வாய் வழியே வெளியே கூப்பிடும் நாற்றம் வருகிறது எனப் புரியவில்லை. வெளியேறிய சிறிது நேரத்தில் சொன்னபடி ஒன்றாம் நடைமேடையில் சந்தித்தோம். ’இஸ்கான்’ செல்லும் பஸ்ஸைப் பிடித்து நடத்துனரிடம், ‘இஸ்கான் வந்தா சொல்லுங்க’ என தமிழில் சொல்லிவிட்டு ஒரு நாள் சீட்டு வாங்கினான். 32 ரூபாய்க்கு டிக்கட் வாங்கினா வோல்வோ பஸ் தவிர எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முழுக்க எங்கு வேணுமென்றாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். ’இங்க தைரியமா தமிழில பேசு. நிறைய பேருக்குத் தெரியும்’, என விளக்கினான். அவனிடம், ‘நீ முதலில் தமிழில் பேசு’ என்றது அவனுக்கு புரியவில்லை. நான் அதன் பிறகு சில பல சமயங்களில் தமிழ்  பேசியிருக்கிறேன். நிறைய புரிந்து கொள்கிறார்கள்.

 இஸ்கானுக்கு இங்கு இறங்கி நடக்கனும் என்று சொன்னதும் இறங்கி நடந்த எங்களுக்கு நீண்ட வரிசையில்லாத இஸ்கானைக் கண்டதும் புத்துணர்வுடன் சென்றால், ‘சூரிய கிரகணத்தின் காரணமாக மாலை வரை இஸ்கான்’ மூடப்பட்டிருக்கும் என்ற பலகை எங்களைப் பார்த்து பல் இளித்தது. சரி Forum போகலாம் என முடிவு செய்த பொழுது, எனக்கு என் வேலை தோன்றியது. போகும் வழியில் ஒரு காலேஜில் இறங்கி எவன் வாயையாவது பிடுங்கிவிட்டு செல்லலாம் என சொல்ல பேருந்து நிறுத்ததிற்கு கிளம்பினோம். எந்த பேருந்தில் வந்தோமோ அதே பேருந்தே கிடைத்தது. போதும், தொடர விடுவோம். அடுத்த பதிவில் எனக்கு பெங்களூர் பற்றித் தெரிந்த கொஞ்ச விஷயங்களை வளவள என்று பேசுவோம்.