18 வயசுல ப்ண்ண வேண்டியத 10 வயசுக்குள்ளயே முடிச்சவனுங்க..

Filed under , by Prabhu on 6/20/2009 06:07:00 PM

2




முதன்முதல்ல ஸ்கூல் போக அழுதது இன்னமும் நினைவிருக்கு. அழுக அழுக சமாதானப் படுத்தி எங்க அம்மா என்னய ஆயா கையில விட்டிருவாங்க. வீடு கொஞ்சம் கிட்டங்கிறதால அப்படி ஆயா கூட்டிட்டு போயிருவாங்க. என்னதான் அழுதாலும் க்ளாசுக்கு போய் அழுததில்ல. அங்க போய் ஏ,பி,சி,டி எழுதிட்டு, 'மிஸ் இங்க பாருங்க'(வயசான மிஸ்ஸுங்க, எனக்கும் 4 வயசுதான்), அப்புறம் அந்த பக்க ஸ்லேட்டு நிரம்பினதும் தண்ணி தொட்டு அழிக்கிறதும், ஒண்ணுக்கு போக மிஸ் கிட்ட ஆள்காட்டி விரல மடக்கி 'மிஸ், ஒன் பாத்துரூம்னு' கேக்குறதும், அதுக்கு ஆயாவுடைய தயவ நம்பி நிக்கிறதும் இப்ப நினைச்சு பாத்தா ஏதோ படத்துல நடந்த மாதிரியா நினைவில இருக்கு.

அப்புறம் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது வீடு கொஞ்சம் தள்ளிப் போச்சு; ரிக்ஷா அமர்த்தினாங்க. அந்த ஆளோட முகத்த பாத்தது அடி வயித்துல ஒரு கவ்வ்வ்...... உடனே அழ ஆரம்பிச்சிட்டேன்........அவ்வ்வ்வ்வ்வ்....நான் போகல, அந்த ஆள பாத்தா பயமாயிருக்கு. அம்மா, நீ சோறு ஊட்டும்போது சொல்ற பூச்சாண்டி மாதிரி இருக்கான்மா. விட்டிரும்மா, நீ போய் விடும்மா. கதற கதற அள்ளி போட்டு அனுப்பி விட்டாங்க. அது ப்ரைமரி ஸ்கூல், அஞ்சாப்பு தான் சீனியர். அங்க அஞ்சு படிக்கிற ஒரு அஞ்சுவும், அதுக்கு ஒரு நாலாப்பு குரங்கு அஸிஸ்டண்ட். ரெண்டு சீட் உண்டு; நார்மல் குஷன், சின்ன கட்டை சீட். குஷன்ல சீனியர், கட்டைல நான் (கட்டையில போறவன்னு சொல்லிடாதீங்கோ). சும்மா இருந்தவள இந்த நாலு கிளப்பிவிட (பயபுள்ள கோர்த்து விடுது பாரு). அஞ்சு என்னய ரேக் பண்ண ஆரம்பிச்சிருச்சு.

மொத கேள்வி சுற்று
உன் பேரு என்ன?
பிரபு... பிரபு குமார் (இண்டியன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரிதான் பேரு சொல்வேன்)
என்ன படிக்கிற?
ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்
வயசு?
ஆறு (ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு வயசுன்னு தெரியாதவளெல்லாம் அஞ்சாப்பு படிச்சு என்ன பண்ண போறாளோ?)
சத்தமா பேசுடா?.
ம்ம்.....(மவளே சிக்குவேல)
நாங்க செய்றதெல்லாம் வெளிய சொல்லுவயா?
ம்ஹூம்.... (என்ன செய்வாய்ங்க... ஒரு வேள ரே...ரே.....ரே.... ரேக் பண்ணுவாங்களோன்னு சொன்னேன். கொஞ்சம் கேப் விட்டா புத்தி போறதப் பாரு.)

அப்புறம் அடுத்து தீவிர அடுத்தக் கட்ட நடவடிக்கை.
'சப்'
ம்ம்....
'சப்'....
ம்ம்/...
'சப்'
ம்ம்....
முத்தம் குடுக்குறான்னு நினைச்சா, அத ஆசிட் ஊத்தி அழிச்சிருங்க. அறை விட்டாங்க அவ. அப்ப கூட அழலயே நான். சின்ன வயசிலயே வீரம் இஸ் சீக்ரட் ஆஃப் மை எனெர்ஜி.

அப்புறம் கிள்ளினா. செம வலிப்பா. இப்ப நினைச்சா கூட வலிக்குது. சனியனுக்கு என்ன போட்டு வளத்தாங்களோ, மாடு மாதிரி வேற இருந்துச்சு. அப்புறம் தொடையில கிள்ளினா. ஏனோ அழ மாட்டேன்னு பிடிவாதம்.
வலிக்குதா? (அடிப்பாவி, ஏதோ கொஞ்சுற மாதிரி கேக்குறயே)
ம்ஹூம்....
இன்னும் அழுத்தி"இப்ப?"
முழிச்சேன் (லைட்டா....)
விரல்களிடையே சதைய வச்சு நசுக்க ஆரம்பிச்சா....அவ்வ்வ்வ்......
"இப்ப?"
வலிக்கலையே...
அடுத்து அந்த நாலு உள்ள வந்து "அக்கா நானு?"(டேய், இது என்ன ரோலர் கோஸ்டரா, சான்ஸ் கேக்க")
அந்தப் பக்கி இத்துனூண்டா இருந்துட்டு என்ன டார்ச்சர் பண்ணுது.
அப்பயும் நானொத்துக்களையே!
"இப்ப?"
இல்லக்கா.....(வேணாம் விட்டுரு, அப்புறம் அழுதுருவேன்)

கண்ல நீர் முட்டிட்டு வருது. இப்படியே தொடர்ந்தும் நான் ஒத்துக்கல. எப்படி எனக்கு அவ்ளோ தைரியம்னு தெரியல. இது பல நாள் தொடர்ந்தது. அப்படியும் நான் வலிக்குதுன்னு சொல்லாத்தால கேம் போரடிச்சு விட்டுட்டாளுக ரெண்டு பேரும்.

For a few, they get 'it' up just when somebody is screaming



இப்படியே மெல்ல மெல்ல எனது போராட்டங்கள் குறைந்து நெரிசல் மிகுந்த சாலையில் எனது பயணங்கள் ஆர்ப்பரிக்கும் அலைகடலின் நடுவே விவேகானந்தரின் தியான மண்டபம் போல ஆனது. எதுவும் கேட்கப் படுவதில்லை. எதுவும் கூறப்படுவதில்லை.

அப்படியே 2 வருஷம் ஓடிருச்சு. நான் இப்ப மூணாம் வகுப்பு. திரும்ப அதே மாதிரியான குரல். குஷன் சீட்டுல இருக்கற ஆள் ஜூனியர ஆள ரேக். ஏன் நடக்குது இந்த மாதிரி. இவ்ளோ நாளாச்சு. நீ சீனியர் ஆயிட்ட, இன்னமுமா பயப்படுற நீங்க கேப்பீங்க...

இஹ....ஹா.....ஹா(சூப்பர் ஸ்டார் மாதிரி)

இப்ப குஷன் சீட்டுல நான்.

டிஸ்கி:- என்னவோ இப்ப ரேக்கிங் பண்ணிட்டாங்கன்னு பஞ்சாயத்து பண்றாய்ங்க. நாங்களாம் பிரைமரி ஸ்கூல்லயே ரேக் ஆகி, நாலு பேத்த ரேக் பண்ணவனுங்க. பி கேர் ஃபுல்(நான் என்னய சொன்னேன்.). ஆனா ஒரு விஷயம் என்ன காலேஜ்ல கூட ரேக் பண்ணல, ஆனா ஸ்கூல்ல பண்ணிருக்கானுக.

பின்குறிப்பு- பி.எஸ்.ஜில படிக்கிற பையன ரேக் பண்ணிட்டாங்களாம். ஆனா, ரெடினாவுல ஒன்பது ஓட்டை விழற அளவு என்ன ரேக் பண்ணானுங்கன்னு புரியல. காதுல வேற குறைபாடு வந்திருச்சாம். இதுக்கப்புறம் நடவடிக்கையில ஈடுபடாம, காலேஜ் பேர் கெடக் கூடாதுன்னு சமரசம் பேச ட்ரை பண்ணிருக்காங்க பிரின்ஸ்பால். அந்தப் பையனின் அப்பா போலீஸ்ல போட்டு விட்டாரு. ரேக்கிங் பண்றது ஒரு நட்புறவுக்காக. அத தாக்கவும், கேலி பண்றதுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது.

பின் பின்குறிப்பு - இது ரொம்ப லேட் ரியாக்ஷன்னு சொல்லாதீங்க. ஏற்கனவே நான் இத பப்ளிஷ் பண்ணின ப்ளாக் சீனானது உங்களுக்கு தெரியும்.

Comments Posted (2)

முதல் பத்தி ரொம்ப அழகான நினைவு.

ரொம்ப ரசிச்சுப் படிச்சேன் உங்களின் எழுத்து நடையை. அருமை தம்பி.

//பிரபு... பிரபு குமார் (இண்டியன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரிதான் பேரு சொல்வேன்)//

நல்ல வேளை உங்க பேரு பால் ராஜ் - ball raj -இல்லை!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!