என்ன கருமமோ?

Filed under , by Prabhu on 6/02/2009 10:17:00 PM

3

நேத்துக் காலையில கிளாசுல இருக்கிறப்போ திடீரென ஒரு sms வந்துச்சு. திறந்து பார்த்தப்போ எனக்கு ஒண்ணும் புரியல. திரும்ப படிச்சப்போ புரிஞ்சது ஆனா சந்தேகம். பாகிஸ்தான் போன இலங்கை வீரர்கள தாக்கிட்டாங்கனு போட்டிருந்துச்சு. எனக்கு அவங்க பாகிஸ்தான் போனதே தெரியாது.கிரிக்கெட்டுக்கும் எனக்குமான உறவ பன்னிரண்டாப்போட முறிச்சுக்கிட்டேன். நான் பாத்தாலே தோத்து போறாங்க, பாக்கலேனா உலக சாதனை! அட்லீஸ்ட் வெற்றியாவது உண்டு. என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு! போங்கடா நீங்களும் உங்க விளையாட்டும், ஒரு நாள் வேஸ்ட் பண்றாய்ங்க! அப்படினு விட்டுட்டேன் (ச்சீச்சீ... இந்த பழம் புளிக்கும்). அந்த smsல சந்தேகம் ஏன்னு கேக்கலாம். காரண்ம் அத அனுப்பினவன். அவன் சும்மாவே C.M.செத்துடாரு, மூணு நாளு லீவுனு அனுப்புவான்(அட, இத விடுங்க, நாகேஷ் என்ன பண்ணுவாரு, அவருக்கெல்லாம் 6 மாசம் முந்தியே இரங்கல் செய்தி அனுப்பினவன்). அவனையா நம்புறதுனு நினைச்சா நிஜமாவே நடந்திருக்கு. என்ன கருமமோ?

இது வந்ததும் எனக்கு என்ன தோணுச்சுனா, நம்ம நாட்டுக்காரன்னா கூட பரவாயில்ல, முன் விரோதம்னு நினைச்சுக்கலாம். பாவம் இலங்கைக்காரங்க, அதுவும் விளையாடுரவங்கள போய்...ச்ச்ச்ச்ச...(உங்களுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடயாது). யாருங்க அடிச்சுருப்பா? அதுவும் எஸ்கேப் ஆயிட்டாங்களாமே? இத்தனைக்கும் அங்க நிறைய தீவிரவாத இயக்கங்களுக்கு ISI உதவி இருக்குனு சொல்வாங்க. அவங்களுக்கே கடுக்காய் குடுத்துட்டாங்க போல! இப்போ உணர்ச்சிவசப்படுவாரு பாருங்க ராஜ்பக்க்ஷே... அவங்களோட உதவில இலங்கைல ரேடார் வைகனும்னு நினைச்சப்ப அங்க தீவிரவாதம் இல்லயா?அந்த ரேடார் வச்சா நம்மளோட பங்களூருல இருக்கற விமான கட்டுமான தளத்த பாக்கலாமாம். என்ன கருமமோ?

எப்போ பாத்தாலும் பாகிஸ்தானுக்கு இடம் கொடுப்பேன், சீனாக்கு இடம் குடுப்பேன்னு நம்மல மிரட்டுறதே இவனுங்களுக்கும் பொழப்பாப் போச்சு.. இங்கிட்டு பாகிஸ்தானோட ரேடார் ப்ளான், அங்கிட்டு சீனாப் படைகிட்ட இருந்து பயிற்சி, விமானம் அப்படினு இந்தியாவ மிரட்டுறது. அப்பதான தமிழனுங்கள காப்பத்தறதுக்கு யோசிப்பானுங்க இந்தியாக்காரனுங்க. ஏன்னா உன் அவனுங்க இந்த ரெண்டு நாட்டுக்காரங்களையும் உள்ள விடுறது, இந்தியாக்காரனுக்கு கூடாரத்துக்குள்ள ஒட்டகத்தை விடுறமாதிரி. அதான் இந்தியா திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பொத்திக்கிட்டு இருக்கு. ந்ம்ம பாதுகாப்பா, அங்க இருக்கும் தமிழர்கள காப்பாத்துறதானு வந்தா நம்ம பாதுகாப்புதானு முடிவு எடுத்திட்டு அத சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கஷ்டப்படுது அரசாங்கம். அவங்களயும் தப்பு சொல்ல முடியாது.உண்மையில பிண்ண்னியில என்ன நடக்குதுனு நமக்கு தெரியிறதில்ல. என்ன கருமமோ?

இந்த தமிழ் ஈழம் மேட்டரும் எனக்கு புரியலங்க. நான் சின்னப் பையன்(நிஜமாவே!), அதனால என்னய மன்னிச்சிருங்க. எனக்கு நம்ம தமிழர்கள் கஷ்டப் படுறாங்கனு புரியுது. அவங்கள காப்பாத்தனும்னு புரியுது. அவங்க உரிமைகள் கிடைக்கனும்னு புரியுது. அவங்க அதுக்காக போராடனும்னு புரியுது. ஆனா இந்த தனி நாடு கேக்குறது சரியானு புரியலைங்க.
ஏன்னா, காஷ்மீர் தனி நாடு கேக்கும் போது நாம குடுக்கறதில்லயே. முக்கியமான விஷயம் என்னன்னா, காஷ்மீர் நம்ம நாடல சேர்ந்தது லேட்டாதான். பாகிஸ்தான் அட்டாக் பண்ணுவாங்கிற பயத்தில லால் பகதூர் சாஸ்திரிய கூப்பிட்டு கையெழுத்து போட்டு இந்தாங்க நாடு, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ, நாட்ட நல்லா பாத்துக்கோங்கனு அந்த ராஜா(சுல்தானோ?.. என்ன கருமமோ?) நம்மகிட்ட குடுத்துட்டு எஸ்கேப் அயிட்டாரு. அன்னைல இருந்து இந்தியா தான் காஷ்மீர தன் தலையில(மேப்ப பாருங்க!) வச்சு காப்பாத்திட்டு இருக்கு(வருஷம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ராணுவ செலவுல!என்ன கருமமோ...). இப்ப சொல்லுங்க, இந்த ரெண்டு நிலைமையும் ஒண்ணுதான? அப்புறம் ஏன் இந்த 'உண்மை' தமிழர்கள் வேற வேற தீர்ப்புகள் வச்சிருக்காங்க. வித்தியாசம் இருந்தா விளக்கம் குடுங்க. இல்ல, இதுக்கு அரசியல் காரணம் இருக்குங்கறாங்க. சும்மா ஸ்டண்ட் பண்றாய்ங்களாம். என்ன கருமமோ?

இதெல்லாம் இங்க எழுதலாம், சந்தேகம் கேக்கலாம்ல. ஒண்ணும் பஞ்சாயத்து வராதே. நமக்கு இதெல்லாம் பழ்க்கம் இல்லீங்க. சாதாரண பையன் பிரச்சன வந்த உடனே பெரிய பைட் மாஸ்டர் ஆகுறதுக்கு நாம என்ன விஜயா? இந்த ராம் சேனா பத்தி ஒரு forum எழுதுனவர் மேல கேஸ் போட்டாங்களாம். இதுக்கெல்லாமா கேசு போடுவாய்ங்க! என்ன கருமமோ?

Comments Posted (3)

என்ன பாப்பு, பதிவுகளை அள்ளி வீசியிருக்க...வெரி குட் வெரி குட்...
//பிரச்சன வந்த உடனே பெரிய பைட் மாஸ்டர் ஆகுறதுக்கு நாம என்ன விஜயா?//

அகில உலக விஜய் ரசிகை மன்றத்தின் சார்பாக உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்:)
உடல் மண்ணுக்கு உயிர் விஜ்யக்கு!!

ஆமா, ஆனா பப்ளிகுட்டி பண்ண தான் நேரமில்ல.

மறு பிரவேசம் செய்ததை சொல்லவே இல்லையே... நன்று... தொடருங்கள்...

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!