ஹேய், இருந்தாக்கா அள்ளி கொடு, இல்லேன்னா சொல்லி கொடு

Filed under , by Prabhu on 6/17/2009 09:29:00 PM

1

என்ன தலைப்ப பாத்ததுமே புரிஞ்சிருக்குமே.... எதப் பத்தின்னு தெரிஞ்சிருக்கும். ஹேய் எவன்டா அது சிரிக்கிறது...மவனே டாராயிருவ... அண்ணன் எவ்ளோ நல்லவருன்னு தெரியுமா.... கொடை வள்ளல்கள் ஏழு இல்லடா...எட்டு....


ஒ.கே. கட்...
பப்பு, நீங்க எவ்ளோ பெரிய பிரபலம்! ஏன் திடீர்னு ரித்தீஷோட பிரசார ஷூட்டுக்கு வர்றீங்க?

அதுக்கு காரணம் அவரோட கொடைத்தன்மையும்(வெரி இம்பார்டண்ட்!), தமிழ்மக்கள் மேல் அவருக்கு இருக்குற அக்கறையும் தான்(அதெல்லாம் அப்புறம்தான்). அவரு செஞ்ச விஷயங்கலெல்லாம் கேட்டீங்கன்னா அசந்து போய்டுவீங்க! அவரு படம் போடுற அன்னைக்கு எவ்ளோ பிரியாணி கடைகள் பிழைக்குது தெரியுமா? வாழ்நாளில தியேட்டரே பாக்காத பிச்சைக்காரங்களுக்கு கூட தியேட்டர பாக்க வச்ச ஏழைகளின் பங்காளன். ரஜினியோட குசேலன் ரிலீஸ் பண்ணி நொடிச்சவனுங்க கூட இருக்காங்க, ஆனா எங்க அண்ணன நம்பிக் கெட்டவன் எவனும் கிடையாது.

உங்களுக்கு சொன்னாப் புரியாது, எங்க அண்ணன் கிட்ட வந்து ஏதாவது உதவி கேட்டு பாருங்க. என்ன உதவி? எதுனாலும். ஏரியா ஃபங்ஷனா ரூ.5000, கல்யாணமா ரூ.50000, அட இவ்ளோ என்னங்க, வளைகாப்புக்கு கூட ரூ15000 குடுக்குறாருங்க! அட இதுக்கெல்லாம் அவரு பிரதிபலன் எதிர்பார்க்கிறதில்ல. அவருக்கு கட் அவுட் வச்சா மட்டும் போதும். அட், அதையும் அவரே சொந்த செலவுலயே வச்சிருவாருங்க. எந்த அரசியல்வாதிங்க இதெல்லாம் பண்ணுவா? அட, நீங்க ஒரு பிச்சக்கார.......(அட, முடிக்க விடுங்கப்பா!)னுக்கு ஒரு ரூபா போடுறதுக்கு முன்னாடி அமெரிக்காவோட அணு ஆயுத ஒப்பந்தம் பண்ற மாதிரி ரியாக்ஷன் குடுப்பீங்க. ஆனா, எங்க அண்ணன் யோசிக்காம செய்வாரு.ஆனா ஃபோட்டோ எடுத்துக்குவாரு(வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!).
அவரு படத்துக்கு எல்லாத்துக்கும் டிக்கட். பில் கேட்ஸே படம் எடுத்தாலும், கொள்ளையா காசு வச்சி வித்துருவான். ஆனா, எங்க அண்ணனோ பணம் குறிக்கோளா இல்லாம, படத்துக்கு செலவு பண்றதோட நிக்காம எல்லாத்துக்கும் இலவசமா காட்டி, தமிழ் மக்களுக்கும் தியேட்டர் ஓனர்களூக்குமான செலவுகளையும் தாங்கிக்கிற சுமைதாங்கி!

முதல்முதல்ல இவர பத்தி எப்படி தெரிய வந்தது?
காலேஜ்ல கலாட்டவா ஆயி ஸ்ட்ரைக் ஆயிடுச்சு. அதனால நிறைய லீவு கிடைச்சது. அதனால என் நண்பர்கள் சிலர் ஊர் சுத்தனும்னு முடிவு பண்ணாங்க. கன்யாகுமரில இருந்து சென்னை வரை சைக்கிள்ல சுற்றுப் பயணம். கேட்டா உலக அமைதி வேண்டியாம். அடப் பாவி, உன்னாலதானடா காலேஜ்ல சண்டை ஆகி லீவு விட்டுருக்காங்க! இதோட முடிவுல அமைச்சர் ஸ்டாலின பாத்துட்டு வர்றதா ஒரு முடிவு. அந்த இடத்துல வந்தாரு நம்ம தலைவர் ரித்தீஸ். அப்போ அவரோட ஷூ லேஸ் எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதியால அவுந்திருச்சு! கட்ட முடியாம கஷ்டப் பட்டிருக்காரு தலைவர். ஷூ லேஸ் கட்டத் தெரியாம இல்லீங்க. கடவுளே வந்து நின்னாலும் குனிஞ்சு நிக்க மாட்டாரு. நீங்க கட்டத் த்ரியாதுன்னு நினைச்சிட்டீங்களா?ச்சே....ச்சே.... அங்க காத்திருந்த என் நண்பன் ஹெல்ப் பண்ணிருக்கான். உடனே பாக்கெட்ல இருந்து 500ரூ எடுத்து கொடுத்தாரே எங்க தானைய தலைவர்! இப்போ சொல்லுங்க எங்க தலைய அடிச்சுக்க ஆளிருக்கா?

இவ்வளவு பண்ணினவருக்கு ஒரு அங்கீகாரம் வேணாமா? அதத்தான் சொல்ல வரேன். இப்போ அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கிருக்காங்க. இப்பவும் எதுக்காக தேர்தல்ல நிக்குறாருன்னு நினைக்குறீங்க. மக்களுக்காகதான். எத்தன அரசியல்வாதிய பாத்துருக்கீங்க. எல்லாரும் காச அடிப்பாங்க. ஆனா, எங்க கலியக கர்ணன் தனக்கு மிஞ்சியது போக தானமும் பண்றார். அந்த நல்ல மனசு யாருக்கு வரும்?

"ஹேய், இருந்தாக்கா அள்ளி கொடு, இல்லேன்னா சொல்லி கொடு; நம்ம வழி நல்ல வழிடா!"

டிஸ்கி: எனக்கு ஒரு கவர அண்ணன் அனுப்புவாருன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி2: ஓட்டு போடாதவர்களுக்கு அண்ணன் சார்பில் ஆட்டோ அனுப்பி வைக்கப்படும்.

Comments Posted (1)

ஹ்ம்ம்.. அப்புறம்..?

LOL. :))))

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!