Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Everyday

Filed under , by Prabhu on 10/25/2009 06:56:00 PM

10

வரவர நான் ரொம்ப பிஸி ஆகிட்டு வர்றேன். பரிட்சைகள் நெருங்குது. படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அதானால பதிவு எழுதுவது கொஞ்சம் கஷ்டம். அது எழுதும் நேரத்துல என்ன ஆயிரம் பேரு தேர்வுல முந்திகிட்டு இருப்பான். அதனால், நான் எழுதுவது நிறுத்திடலாம்னு......... சொல்லல. கிட்டதட்ட நிறுத்திக்கிறேன். ஆனா இடைவெளியில உங்களுக்கு டார்ச்சர் கொடுக்கனுமேன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். கரப்பான் பூச்சிய பாத்தேனே, அதே மேஜையில் உட்கார்ந்து படிக்கும் முயற்சியில் புத்தகத்தில் நட்சத்திரங்களாக கிறுக்கிக் கொண்டிருந்த போது கண நேரத்தில் தோன்றியது இந்த யோசனை. மடமட வென்று அங்கயே உட்கார்ந்து செல்லில் ஒரு கவிதைய வடிச்சிட்டேன். எல்லாரும் அதை வடியாம, சிந்தாம, சிதறாம, பதறாம பருகி மகிழுங்கள். ஆனால், ஆங்கிலத்தில் எழுதி இருக்கேன். அப்பதான் என்ன எழுதினாலும் தப்பு ரொம்ப கண்டுபிடிக்க மாட்டாங்க. பல பேரு படிக்காம கூட நல்லாருக்குனு சொல்லுவாங்க. அதனால கோச்சிக்காம இங்கே(கிளிக்குங்க.. கிளிக்காம போறீங்க?) வந்து படிச்சிடுங்க!




                                ஆண்டவா இன்னும் இவ்வளவு இருக்கா படிக்க?

கூ.....கூ........ வடக்கே போகும் ரயில்

Filed under , by Prabhu on 8/27/2009 08:10:00 AM

5

எல்லாம் சரியா இருக்கா? வீட்ட பூட்டிட்டயா? இழுத்துப் பார்த்தயா? ப்ரஷ் எடுத்து வச்சயா? முதல்ல நாளைக்கு போட ஜட்டி எடுத்து வச்சயா? இப்படி பல ஆதாரக் கேள்விகள் கேட்கப்பட்டதென்றால் ஊருக்கு கிளம்புகிறேன் என்று அர்த்தம். ஆனா ஊருக்கு போவதற்குள் ஒவ்வொருத்தரும் பண்ணுகிற ஆயுத்தம் இருக்கிறதே! எனக்கு தெரிந்து ஒரு காம்பௌண்ட்டில் வாழும் நபர், தனது கழிவறையை மட்டும் பூட்டி விட்டு செல்வார், பூட்டு போட்டு! அங்க என்னங்க தங்கமலை ரகசியமா இருக்கு என கேட்கலாம்! ஆனால், பூட்டாமல் நாலு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் அவசரமாக கழிவறைக்கு செல்லும் போது, எவனோ திருட்டுத்தனமாக நாலு நாளைக்கு முன்னால் பண்ணிய அசிங்கம் காய்ந்து இருந்தால் அதன் அத்தியாவசியம் தெரியும்.

அப்புறம் மற்ற ஊரிலிருந்து சென்னைக்கு போறவங்க கனவு, அங்க போனதும் அதப் பாக்கனும், இதப் பாக்கனும், அப்படியே பீச் போகனும், சத்யம் சினிமாஸ் போகனும் என பல. ஆனால் அங்க இருக்குறவன், நான் கடைசியா பீச்சுக்கு போனது பன்னிரண்டாம் வகுப்பு லீவுல என்பான், சரி, சத்யம் கூட்டிட்டு போவான்னு பாத்தா சத்தியமா காசு இல்ல மாப்ள் என்பான். இவனுங்கள நம்பி பிரயோஜனம் இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு, நண்பனப் பாக்கப் போறேன்னு நம்மளே ஊரச் சுத்திட்டு வந்திடனும்.

இது பத்தாதுன்னு இன்னொரு குரூப் அலையுறானுங்க! கடலை போட கெளம்பிடுறானுங்க! ஆர்குட்ல மீட் பண்ணி ஸ்கராப் அனுப்பிக்குறாங்க, அப்புறம் மொபைலுக்கு தாவிடறாங்க! அடுத்து சென்னைக்கு நுழைவுத்தேர்வு எழுத அனுப்புனா, ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் கடலை போட்டுகிட்டு ஊரச் சுத்துறானுங்க! நமக்கு வயிறு எரியுது பாஸ்! அதுவும் நாம ஒரு பையனோட ஸ்பென்சர்ல சுத்திட்டு இருக்கும் போது, அங்கயும் அவனுங்க எதிர்பாராம வந்து கடுப்ப கெளப்புவானுங்க! போங்கடா, சென்னைல வேற இடமா இல்ல! நாங்க போற இடத்துக்கா வருவீங்க?

எங்க போனாலும் அங்க அத வாங்கிட்டு, இங்க இத வாங்கிட்டு வான்னு ஒரு குரூப் அலைவானுங்க! சின்னப் பையன் என்பதால் எனக்கு அந்தப் பிரச்சனை இல்ல. ஆனா, ஊருக்கு போய் வந்த பிறகு அந்த ஊர் பொண்ணுங்க எப்படின்னு சில குறுந்தகவல் விசாரிப்புகள் இருக்கும்!

எனக்கு பொதுவாகவே பஸ் பயணங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை. ரயில் பயணங்களையே விரும்புகிறேன். அந்த தடக் தட்க்குடன், சிறு குலுக்கல்களுடன், ஒரு சிப்ஸ் பாக்கெட்டோ, இல்ல கொண்டு செல்லும் உணவோ, காதில் இயர் போன்களுடன்... பயணமே தெரிவதில்லை. ரயில் அனுபவங்கள் பல. ஒரு நண்பன் கூட கிடைத்திருக்கிறான். இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என யோசிக்கலாம். நாளைய வைகை எக்ஸ்பிரஸில் சென்னை செல்கிறேன். ஞாயிறு வரை அங்கிருப்பேன்.ஞாயிறு மதியம் அங்கிருந்து கிளம்புகிறேன். My senseless, silly romantic non-poetic poem but with rhyme and hymn could be found here.

கூகுளின் கூட்டு சதி

Filed under , , by Prabhu on 6/22/2009 06:29:00 AM

8

பதிவுலகத்துக்கு நான் வந்து இப்பொழுது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆயிருக்கும். இங்க வந்து நான் பெருசா சாதிச்சிட்டதா சொல்ல மாட்டேன். ஆனா, சில appreciable பதிவுகள வெளியிட்டிருக்கேன். கிஷோர், கேபிள் சங்கர், பொன்னியின் செல்வன், வினோத் கௌதம், வால் பையன், ஹாலிவுட் பாலா, 'எனது பயணங்கள்' பிரபு, 'my thoughts da machi' காயத்ரி, 'குப்பைத்தொட்டி' நான் ஆதவன் என பல நபர்கள சந்திச்சதும், அவங்கள்லாம் என்னோட பாலோயர்ஸா இருந்ததும் தான் எனது ஒரே achievement பதிவுலகத்தில. அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. நான் வேற எங்க ஊரு அழகிரியப் பத்தி பதிவிட்டிருதேனா, அதனால தான் உன்னோட பளாக்க(Blog) ப்லாக்(block) பண்ணிட்டாங்க. அடுத்து அண்ணன் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாருன்னு வேற கெளப்பி விடுறானுங்க.

நான் இந்த பதிவுலகிற்கும், இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கும் சேவை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பொறுக்காத சில தமிழ் விரோத சக்திகள் தான் இதை செய்திருக்கனும். இது எனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட புல்லுருவிகள் தான் செய்திருக்கவேண்டும். இது எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதி. இதற்கு ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. விரைவில அந்த சிடி ரிலீஸ் செய்யப்படும். இப்ப தான் தலைவர்களோட தில்லுமுல்லு எல்லாம் பிட்டு படம் மாதிரி சிடி ரிலீஸ் பண்ணி பரபரனு போகுதே. கலைஞர் கூட அவரு காமெடிக்கு சிடிதான் யூஸ் பண்றார். சிடிய பாத்து கண் கலங்குறாராம், இலங்கைதமிழர்களுக்கு. அட, இங்க எதுக்கு அரசியல்? வரவர மேட்டர விட்டு அடிக்கடி விலகி போயிட்டிருக்கேன். ப்ரொபசர் ஆகுறதுக்கான தகுதி எதுவும் வளருதோ?

சரி, மேட்டருக்கு வருவோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவ போட்டுட்டு என் ப்ளாக்குக்கு போனா அங்க ஒரு மால்வேர் வார்னிங் வந்தது. அப்புறம் தெரியாத கோடிங்கெல்லாம் வச்சு மணிகணக்கா முட்டி, கூகுள கொஞ்சி மேடர கண்டு பிடிச்சா ntamilங்கிற social bookmarking siteதான் என்னோட பிரச்ச்னைக்கு காரணம். ntamilனு பேரு வச்சுக்கிட்டு என்னயவே போட்டுப் பாக்குறீங்களான்னு அத ரிமூவ் பண்ணிய பிறகும் கூகுள் என்னய போட்டுப் பாத்துட்டான்.

கடந்த ஒரு மாசமா பல நல்ல விஷயங்கள் தோன்றும் போதெல்லாம் ப்ளாக் இல்லாத வெறுமைய புரிஞ்சுக்க முடிந்தது. செமஸ்டர், கேரியர்னு வேற பல தடங்கல்கள். இதில சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு பதிவுலக விட்டு வெளியேறிடலாம்னு கூட நினைச்சிருக்கேன். நான் போனா யாரும் மிஸ் பண்ண போறதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு ரொம்ப ஆக்டிவிட்டியோட இருந்த நான், இந்த ஒரு மாத்ததில தடம் தெரியாமல் போய்விடவில்லையா? இதுதான் பதிவுலகம். Easy comes, easy goes. இப்பவும் பழைய அளவு ஆக்டிவிட்டியோட இருக்குறது முடியுமான்னு தெரியல. பார்க்கலாம்.

என்னுடைய பழைய ப்ளாக்கிலிருந்து பல பதிவுகள திரும்ப பதிவிட்டிருக்கேன். அந்த ப்ளாக் போனது கூட ஒரு indicationa இருக்கலாம். அத விட நல்ல பதிவுகள குடுக்க முயற்சி செய்வோம்.