Lucky Number slevin
Filed under விமர்சனம் , by Prabhu on 6/20/2009 06:05:00 PM
0
படம் திடீரென புருவம் சுழிய வைக்கும் இரு புக்கிகளின் கொலையுடன் ஆரம்பிக்கிறது. காலியான ஏர்போர்ட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் கதை சொல்லிக் கொண்டே அவன் கதையை முடிக்கிறார், Good Kat (Bruce wllies). Kansas city shuffle என்கிறான். ஒரு காலத்தில ஒரு குதிரை ரேஸ் நடக்கும் போது ஒரு குதிரைக்கு மருந்து குடுத்து ஜெயிக்க வைக்கிற விஷயம், அந்த டாக்டர் வழியாக, ஒரு விலைமாது, ஒரு பணக்காரன், அவன் நண்பன், ஒரு பார் வெய்டர் என கேயாஸ் தியரி மாதிரியாக MaX கைக்கு வந்து சேருகிறது. அவன் அதில் பெட் கட்ட, மருந்துக்கு திட்டம் போட்ட கும்பல் அது லீக்கானது தெரிஞ்சதும் அது சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கொன்னுடறாங்க குடும்பத்தோட. இதுதான் Kansas city shuffle ஆ என தூங்குமூஞ்சி கேட்ட பொழுது, இல்லை அது ஆரம்பம்தான், உன்ன கொல்லுறதுதான் Kansas city shuffle ன்னு சொல்லிக்கிட்டே அவன் கழுத்த கோழி மாதிரி திருகிடறான். ஒரு பிணம் இல்லாமல் Kansas city shuffle நடக்காதுன்னு சொல்லிக்கிட்டே அவன எடுத்திட்டு போறான்.
இதுக்கப்புறம் ஹீரோவோட அறிமுகம் Slevin kelevra (Josh Harnett ). பேசிப் பேசியே மூக்குல குத்து வாங்கிற கேரக்டர்ல நல்லா நடிச்சிருக்கார். அவரோட பாத்திரப் படைப்பே எந்நேரமும் பேசுறதுதான். அவன் ஃபிரண்டு வீட்டில தங்கியிருக்கும்போது அவன் ஃபிரண்டு நிக் என நினைத்து இவனத் தூக்கிட்டு போயிடறாங்க துண்டோட. அங்க The Boss (Morgan Freeman) என் கடன திருப்பிக் கொடுக்கறயா இல்ல அதுக்கு பதிலா என் மகனக் கொன்ன Rabbi(Ben Kingsley) யோட பையன போட்டுத் தள்ளினா விட்டுடறேன் என சொல்லுகிறான்.
இப்ப வில்லன்களோடபேக்ரவுண்ட். ரெண்டு எதிரெதிர் வானுயரக் கட்ட்டங்கள்ல கடைசி மாடி பெண்ட் ஹவுஸ்ல மூணு இன்ச் குண்டு துளைக்கா கண்ணாடியின் பின்னாடி கடந்த 20 வருடமா வாழ்க்கை நடத்திட்டு வர்ற எதிரிங்கதான், The Boss ம், Rabbi ம். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயந்து அந்த ஒரு மாடிலயே இருபது வருஷமா வாழ்ந்திட்டு வர்றாங்க. இந்த சமயத்துலதான் பாஸோட மகன் செத்துப் போக, ராபியோட மகன கொல்லுறதுக்காக Good katஅ கூப்பிடுறார் பாஸ். இவனோட டீல் வச்சுக்கிற அதே நேரத்தில அதே நேரத்தில ராபிக்கிட்ட பாஸ கொல்லுறேன்னு ஒரு டீல் வச்சுக்கிறான் அவன்.
இப்ப ரெண்டு பேருக்கிட்டயும் ஹீரோவ மாட்டி விடறான் Good Kat, ஸ்லெவின் ஃப்ரண்டு Nick Fisherஒட பேர வச்சு. ஒரு பக்கம் பாஸ் ராபியோட ஹோமோ செக்ஷுவல் மகன, அவன் வீக்னஸ வச்சே முடிக்க சொல்ல, மறுபக்கம் என்னோட 33,000 டாலர கொண்டுவான்னு ராபி படுத்த ஸ்லெவின் நடுவில சிக்கி சீப்ப்டுறான்.
எதிர்வீட்டு லொட லொட பொண்ணா கதாநாயகி (Lucy Liu – சார்லீஸ் ஏஞ்சல்ஸ்ல பாத்திருப்பீங்களே!). இவன் ஏன் இந்த வட்ட்த்துக்குள்ள சிக்கினான் என துப்பறியறேன்னு லொட லொடத்துக்கிட்டேஏஏஏஏஏ... இருக்காங்க. இடையில Good kat அ படமெடுத்திடறாங்க, ஒரு சந்தேகத்தில. ஆனா, அது யாருன்னு ரெண்டு பேருக்கும் புரியல. இதற்கிடையில் ஒரு போலிஸ் அதிகாரி Marty இவன துரத்த ஆரம்பிச்சிடறான்.
கடைசியா, ராபியோட பையன் The fairy கிட்ட பழகி, ஹோமோ செக்ஷுவல் மாதிரி காட்டி, அவன் வீட்டுல வச்சுப் போட்ரலாம்னு ப்ளான் போட, அங்கயே வச்சு ஸெல்வின போட்டுட்டு கூட்டுத் தற்கொலையா ஆக்கிடலாம்னு Good kat திட்டம் போட, ராபியோட பையன இவன் கொன்னானா, குட் கேட் கிட்ட இருந்து ஸெல்வின் தப்பிச்சானா, ராபி கிட்ட ஒத்துகிட்ட மாதிரி பாஸ காலி பண்ணினா குட் கேட், போலீஸ்கிட்ட இருந்து ஸெல்வின் எப்படி தப்பிப்பான், குட் கேட்ட ஃபோட்டோ எடுத்த லிண்ட்சே பிழைச்சாளா, kansas city shuffle னா என்ன, அந்த முதல் கொலைகள் ஏன் நடந்தன, கடைசியில இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன, இந்தப் படத்தின் பெயருக்கு அர்த்தம் என்ன என விளக்குவதுதான் கதை.
படம் கடைசி 40 நிமிஷம் முழுக்க கிட்ட்தட்ட க்ளைமாக்ஸ் தான். The Fairyய கொன்ன பிறகு கதையோட போக்கே தடாலடியா மாறிடுது, படத்துல கதாநாயகி சில சமயங்களில் அதிகமாக பேசுவது போலத் தெரியலாம். வில்லன்கள் இருவரும் அருமை. பள்ளிக் கூடப் பையனைப் போல படிய வாரிய தலையுடன் புரூஸ் வில்லிஸ் இளமையாகத் தெரிகிறார். ஹீரோ தனது வேலையை திறமையாகத்தான் செய்திருக்கிறார்.
படத்தின் எடிட்டிங் இந்த மாதிரியான படங்களுக்கு ஏற்றவாறு நல்லா க்ரிஸ்பாதான் இருக்கு. படத்தில எடிட்டிங்ல அங்க அங்க பிசிறு விட்டு பின்னாடி காட்சிகளை கோர்த்து பார்க்கும் வகையில பண்ணிருக்காங்க. கடைசில என்ன தான் நடக்குது இங்கனு சீட் நுனிக்கு தள்ளிடுவாங்க.
ஆமா.... இந்தக் கதைய எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, நம்ம கேபிள் சங்கர் ‘லாடம்’ங்கிற படத்துக்கு எழுதினது மாதிரியே இருக்கலாம்னு ஞாபகப்படுத்துகிறேன். வித விதமா சுடுறாய்ங்க!
--------------------------------------------------------------------------------------------------
சில வசனங்கள், இந்தப் படத்திலிருந்து
ஸ்லெவின் லிண்ட்சேவிடம், “ கெட்ட்து நடந்தா எப்பவும் மூணு மூணாவே நடக்கும்”
தனது காதலி இன்னொருத்தியிடம் செக்ஸ் வச்சுக்கிட்டிருக்கறத பாத்தப்போ அவ இது ஆக்ஸிடண்ட்னு சொல்லுவா.அதுக்கு. “அது எப்படி? அவன் தடுக்கி நீ விழுந்திட்டயா?”
லிண்ட்சே திடீரென வந்தப்ப அவன் துண்டில்லாம பாத்திருவா. போன பிறகு திரும்பவும் திடீரென எட்டிப் பார்த்து, “இன்னொரு ஷோ கிடைக்குமான்னு பார்த்தேன்?”
லிண்ட்சே - “ஒரு கப் சக்கரை (சக்கரை சுரேஷ் இல்லீங்க!)வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”
ஸ்லெவின் – “கப் எங்கே?”
லிண்ட்சே - “கப் இருந்தா நான் சக்கரை மட்டும்தான வாங்க வந்திருப்பேன். நான் ஒரு கப் சக்கரை வாங்க வந்திருக்கேன்”
இவன் மூக்க உடைச்ச பிறகும் வாய் குறையாம பேசிட்டிருப்பான். அப்ப Morgan Freeman- “I’ll bet it was that mouth that got you that nose “
The Boss ஸ்லிம்மோட பிணத்தை வச்சு கேள்வி கேட்டுட்டு ஸெல்வினப் பார்த்து, “அவன யாரோ சுட்ட்துல இருந்து அவன் செவிடாயிட்டான்”.
--------------------------------------------------------------------------------------------------
Lucky Number Slevin – Luckily Good
Comments Posted (0)
Post a Comment
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!