ரூட்டு....ஐட்டம்....அவளா.....அவனா?

Filed under , by Prabhu on 6/20/2009 05:56:00 PM

0


பெண்கள தெய்வம் மாதிரி வணங்க சொல்வாங்க. அதெல்லாம் செய்ய சொல்லல, எனக்கு அதில நம்பிக்கையும் இல்ல. ஆனா குறைந்த படசம் மனிதனுக்கு நார்மலா கொடுக்குற மரியாதைய கொடுக்கனும்னு நினைக்குறேன். பெரிய சலுகைகள் வேணாம், ஆனால் நம்மல பாக்குறா மாதிரியே அவங்களயும் பாக்கலாம்ங்கறது, என் எண்ணம்.

ஃபிகர், அட்டு என்கிற பிரயோகங்கள கூட பொறுத்துக்கலாம். ஆனா இந்த ரூட்டு, ஐட்டம், ஜாரி மாதிரி வார்த்தைகள மட்டும் சரின்னு ஏத்துக்க முடியல. ஏண்டா அவள் அப்படி சொல்றன்னு கேட்டுப் பாருங்க. அவ எப்படி பாக்குறான்னு பாத்துருக்கயா? ஓவரா சைட் அடிப்பா. பேசிப் பாரு வழியுவா. எவன்னாலும் போகலாம், அப்படின்னு ஏகப் பட்ட விமர்சனங்கள். ஆனா,இந்த நாய் சாயந்திரம் ஆனா பஸ்ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டா சுத்துறது எனக்குதான் தெரியும்.

அவன் கேஷுவலா இருக்கும் போது, லாப்ல வச்சு சொல்வேன்,"ஒரு பொண்ன ரூட்டுன்னு சொல்றதுல எனக்கு ஒப்புதல் இல்ல. ஒருத்தி சைட் அடிக்கிறா, அட, அவனுக சொல்ற மாதிரி ரூட்டு விடுறான்னே வச்சுக்குவமே. அப்படி செஞ்சா அவ ரூட்டு, ஜாரி, தே... போன்ற பெயர்கள பெறுகிறாள். அப்ப இதெல்லாம் செய்ற ஆம்பள..... அவனுக்கு என்ன சொல்லுது, இந்த சமூகம். அந்த பையன் சரியில்ல, கல்யாணம் பண்ணி வச்சா சரி ஆயிடும்பா. அப்ப அவன் ரூட்டு விட்டாலோ, சிகனல் கொடுத்தா ரூட்டு இல்லையா? அவனுக்கு வயசு கோளாறு,. நடத்தை சரியில்ல, ரூட்டு. அட்றா சக்க! ஏன் அப்படி? இவன் ஆணா பிறந்ததாலயா? ஒருத்திய இம்சிக்கிறது ஆணோட பிறப்புரிமை. ஆனா, ஒரு பையன ஒரு பொண்ணு அப்ரோச் பண்ணாலே அவ ரூட்டு. எப்படி உருவாது இந்த மாதிரி சட்டங்கள். எந்த அம்பேத்கார் இதுக்கு அரசியலமைப்புகளயும் அதன் சட்டப் பிரிவுகளையும் உண்டாக்கினாரோ? சரி இப்ப ஒரு பையனந்த மாதிரி ரொம்ப அநாகரிகமா பண்ணினா அவன என்ன சொல்றோம், ரூட்டுனா? இல்ல தே...? ம்ஹூம்.... அப்ப கூட அவன திட்டும் போது அவனுக்குன்னு ஒரு வார்தை இல்ல... மிஞ்சி போனா ஒரு தே.மகன் சொல்ற மேல் ஷாவனிஸத்த என்னன்னு சொல்றது..... அதுவும் அம்மாவத் தான் திட்டுது. இந்த தறுதலய பண்ணதுக்கு அவ என்ன செய்வா பாவம்? இவன் உத்தமன்னு அவ நினைச்சிட்டிருப்பா?" இதெல்லாம் சொல்லும்போது அமைதியா கேட்டுட்டு தலையாட்டுவான், ஏதோ இன்னொருத்தனுக்கு சொல்றா மாதிரி. பொதுவா பேசுறேன்னு அவன் நினைச்சிட்டிருக்கான். ஆனா நானோ அவனத்தான் சைடு வாக்கா குத்திட்டிருப்பேன் (நேரா சொல்லி அடிச்சு புட்டான்னா. நானும் ரவுடிதான். பத்து பேர அடிக்கறவன் ரவிடி இல்ல. ப்த்து பேர்ட்ட வாங்குவாறந்தான் ரவுடி.)

அப்புறம் இன்னொரு க்ரூப் இருக்கு, தன்னோட லீலைகள சொல்ல. "பஸ்ல போயிட்டிருந்தேன் டா, அப்ப ஒரு செம ஃபிகர் (நாம பாக்கலைல, என்ன வேணாலும் சொல்வானுக). சில சமயம் சூப்பர் இல்லன்னாலும் நல்ல ஃபிகர்தான்னு சொல்வானுக ( நாம நம்பனுமாம், அதான் இப்படி உண்மைய ஒத்துக்குற மாதிரி ஆக்ட்) அவள பாத்தேன். அவளும் சிக்னல் விட்டா. லைட்டா சிரிச்சா. அதுக்குள்ள அவ ஸ்டாப் வந்திருச்சு. இல்லன்னா அவ நம்பர் வாங்கிருப்பேன், ஏதாவது பண்ணிருப்பேன்னு சொல்வானுக. அது எப்படிடா உனக்கு தெரியும்னு ஒரு இளிச்சவாயன்(அது யாருன்னு தெரிஞ்சா வெளிய சொல்லாதீங்க. ரகசியங்கள் காக்கப் படட்டும்.) கேட்டா, நக்கலா சிரிச்சுட்டு அதெல்லாம் பாத்தாலே தெரியும், இவ ஜாரின்னு. இவன் பெரிய ஜேம்ஸ் பாண்ட் பாத்தவுட்னே கண்டுபிடிக்கிறாராம், போடா!(இதுக்கெல்லாம் ஜேம்ஸ் தாங்க வரணும். ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இல்லன்னு கேக்காதீங்க). இவனப் பத்தின் திட்டி, இப்படி பாக்குற முழியத் தோண்டனும்னு என்கிட்ட சொன்ன பொண்ணு இருக்கு. அது வேற கதை.


ஒருத்திய இவன் ஃபாலோ பண்ணா லவ். அவ பண்ணா அவள ஏதோ ஹூக்கர் ரேஞ்சுக்கு பேசுறாய்ங்கப்பா! என்ன கொடும சார் இது. சரி, அத விடுங்க. இவன் சொல்ற மாதிரி பஸ்ஸுக்கே வருவோம். அதுனால தான் இந்த கொடும நிறைய நடக்குது. ஒரு பொண்ண பாத்து பிடிச்சு போகலாம். அதனால அவள அடிக்கடி பாக்கலாம். சிரிக்கலாம். சிக்னல் பண்ணலாம், அவ சம்மதம் தெரிஞ்சா. அத விட்டுட்டு அவள தொந்தரவு ஏன் பண்ணனும். சரி அவ சம்மதம் தெரிஞ்சா ஏன் தூத்தனும் அவள. இல்லன்னா விடு. ஆமான்னா, அந்தப் பெண்ணோட கம்பெனிய அந்த ட்ராவல்ல அனுபவி. அப்புறம் அத அங்கயே விட்டுட்டு போய்டு. அத விட்டுட்டு அவள ஏன் ரூட்டு, ஐட்டம்ங்கிற? அவ உனக்கு ஒத்துழைக்கனுங்கறயா, வேணாம்ன்கிறயா? நான் மேற்படி சொன்னதெல்லாம் நட்புறவில் மட்டுமே. அத செக்ஷுவலா நினைக்க கூடாது. உன் சிரிப்புக்கு பதில் தந்தவ ரூட்டுன்னா, அவள அழைச்ச நீ ஹூக்கரா? இப்படியே போனா சென்சார்ல கட் ஆயிடும் போலயே, என் கட்டுரை.

பொதுவாவே எல்லா ஆண்களுக்குமே தன் வீட்டு பொண்ணுகளெல்லாம் கண்ணகிக்குகொள்ளுப் பேத்தியாவும், மத்தவளுக தனக்கு மறுப்பு சொல்லாதவளா இருக்கனும்ன்கிற எண்ணம் கொஞ்சம் இருக்கு. நான் ரெண்டுமே வேணாம்னு நினைக்கிறேன். எல்லாரையும் ஒண்ணா பாருங்க. ஒரு பையனப் பாக்கிற மாதிரியே பாருங்க. நான் சொல்றது சைட் அடிக்காத, லவ் பண்ணாதன்னு இல்ல. நான் சொல்ல நினைக்கிறது அவளுக்கு ஒரு சில தனி விதிகள வச்சு அந்த வட்டத்துக்குள்ள நிக்க வச்சு பாக்காத. உனக்கு அவ என்ன கொடுக்கனும்னு நினைக்கிற? மரியாதை. அத அவளுக்கு கொடுத்து பாரு. தானா உனக்கும் வரும், அவகிட்ட இருந்து. உன்னைப் போல பிறரையும் நினை.

இப்படியெல்லாம் பேசுறானே, பெண்ணியத்த சேந்தவனோன்னு நினைக்கலாம். ஆனா, மூணாவது ருஉட்டு பார்வையில நினைக்கிறதத் தான் சொல்றேன். அவங்க பண்ற தொல்லையும் கொஞ்சம் இல்ல. அதப் பத்தி இன்னொரு தடவ எழுதுறேன்.

இந்த படம் சும்மா தமாஷுக்கு

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!