பிரவேசம்

Filed under , by Prabhu on 5/30/2009 03:30:00 AM

5

இதுதான் என்னுடைய முதல் படைப்பு என்று சொல்வதற்க்கில்லை என்றாலும் இணையத்தில் என்னுடைய முதல் பதிவு இதுதான். இதில் எனது கருத்துக்களை பதிவு செய்வது என்ற எண்ணம் வந்தததிற்கு ஒரு சிலரின் எழுத்துக்களும் காரணம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். பதிவுகளுக்கும் பதிவர்கள் பற்றியும் எனக்கு அறிமுகம் கொடுத்தத் தோழனையும் குறிப்பிடே ஆக வேண்டும். அந்த 'ழ','ர','ற' ஆகிய எழுத்துக்களே வாயில் வராத அந்த 'தமிழனின்' பங்கு இதில் இன்றியமையாதது. அஜய் என்னும் அத்தோழரே எனக்கு பதிவுகளை அறிமுகப்படுதினார். எனக்கும் பதிவுலகிற்குமான உறவுக்கு ஒரு வாரம் தான் வயது. 'அதுக்குள்ள எழுத வந்துடையா?' என்று கேட்கலாம். எல்லாம் ஒரு முயற்சி தான், தலைவா!

பதிவுலகிற்கு வலது கால் எடுத்து வைத்து உள்ளே வந்திருக்கும் என்னை பூத்தூவி வரவேற்ப்பீர்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லையானாலும் ஆதரவு கரம் அளித்து அணைத்து(பெண்களாக இருப்பது நலம்) கொள்(ல்)வீர்கள்(ல்) என்று நினைக்கிறேன். பிழைகள் எதுவும் இருப்பின் பொறுத்து கொல்மின் (இப்பிரயோகத்தின் பின்புலத்தை விளக்குங்களேன்). நான் எழுதுவதில் தங்களுக்கு எவ்வகையிலாவது கோபமோ, எரிச்சலோ இருந்தால் என்னை திட்டுவதோடு நில்லாமல் அப்படியே என்னை எழுதுவதற்கு ஊக்குவித்த எழுத்துக்களுக்கு சொந்த காரரான கேபிள் ஷங்கர் பதிவிற்கும் ஒரு பின்னுட்டத்தைப் போட்டுவிடுங்கள். என்ன செய்வது ஷங்கர் (கேபிள் என்று அழைப்பதா? இல்லை, ஷங்கர் என்றா?) அவர்களே, உங்கள் எழுத்துதான் எழுதும் ஆசையயை தூண்டியது. அடுத்து ஹாலிவுட் பாலாவின் சாதாரண பேச்சு வழக்கு தமிழ் எழுதுமுறையும் என்னை கவர்ந்து பதிவெழுத தூண்டியது. (இவ்வாறு அவர்களிடம் முன்னறிவிப்பின்றி நான் அவர்கள் பெயரை பயன்படுத்தியதற்கு அவர்கள் என்னை மன்னிப்பார்களாக).

வழக்கம்போல "எனக்கு எழுத்துலகு புதுசு... ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கய போடுறேன்னு சொன்னா.. என்னோட மானசீக முன்னோடி கே.சங்கர் 10 கேள்விகள் கேக்குறேன்னு என்னைய வச்சு ஓட்டி தள்ளிடுவாரு" ஆனா நான் என்ன சொல்றேனா நீ எழுதுறது நல்லா இல்ல, நீயெல்லாம் ஏன் எழுதுறனு யாரவது கேட்டா,... "நாந்தான் அப்பவே சொன்னேனேநான் புதுசு'னு" அப்படினு பிட்டு போட்டு பொழச்சிக்குவோம்ல! அதுக்குதான் இந்தஎபெக்ட்டு! '