பையா - சில குறிப்புகள்

Filed under , by Prabhu on 4/02/2010 10:56:00 PM

17

என் முடிவுகளுக்கு எதிராக மீண்டும் ஒரு படத்தைப் பற்றி.

படம் ஆரம்பித்த உடனே கதையை துவக்க எத்தனை தமிழ் படங்களில் முயற்சியாவது பண்ணியிருக்கிறார்கள்? இந்தப் படத்தில் துவங்கி விடுகிறது. எதிலிருந்தோ விலகி ஓடும் தமன்னா கார்த்தியை டாக்ஸி ஓட்டுநர் என தவறாக நினைத்து பாம்பே போக அழைக்கிறார். ஏற்கனவே சில முறை அவரை பெங்களூரு வீதிகளில் பார்த்து வழிந்த கார்த்தி, வாய்ப்பு கிடைத்ததும் கிளம்பிவிடுகிறார். தலா ஒரு கும்பல் இருவரையும் துரத்த, ஏன் என்பது திரையில். 

கார்த்தி - நல்ல நேர்த்தியாக இருக்கிறார். ஒரு ஜனரஞ்சக காதாநாயகனாக நிறைகிறார். சூர்யா பல இடங்களில் தெரிகிறார். அவர் மேல் குற்றமில்லை. அவருடைய ஜீன்களில் எழுதபட்டுள்ள ந்யூக்ளிக் ஆசிட் கோடிங்கைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இந்தப் படத்திலாவது கலர் கலராக வருகிறார்.

தமன்னா - ரொம்ப அழகு. நடிப்பு தேவையான அளவு இருக்கிறது. தமிழின் பெரிய நட்சத்திரமாக கண்டிப்பாக வருவார் எனத் தெரிகிறது. அநியாய அழகு. கர்சீப் எடுத்துக் கொள்ளவும். இடுப்பில் பாவாடை சரி செய்யும் அழகு... ம்ம்ம்...

மிலிந்த் சோமன் - வில்லன் ஆனாலும் பெரிய கதாபாத்திரம் இல்லை. ஆள் நேர்த்தி என்பதை சொல்ல வேண்டியதில்லை. அவர் Super model ஆச்சே. நல்ல கட்டுமஸ்தாக இருக்கிறார். இரண்டு சண்டை காட்சிகளில் வருகிறார். அவ்வளவே.


சண்டை காட்சிகள் -  இரண்டாவது பாதியில் வரும் சண்டை காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட படத்திற்கு இவ்வளவு மொக்கையான சண்டை காட்சிகளா? இறுதிகட்ட சண்டை என்னை சமாதானப்படுத்தவில்லை, படத்திற்கு நியாயம் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்

பாடல்கள் - பாடல்கள் எல்லாம் ஆடுவதை விட துள்ளிக் குதிக்கவே போடப்பட்டிருக்கின்றன. படத்தின் பெரிய பலம் பாடல்களும், பின்ணனி இசையும்.

அறிமுகக் காட்சி - இவ்வளவு மொக்கையான அறிமுகக் காட்சி! பல தடவைப் பார்த்த விஷயங்கள். லிங்குசாமியிடம் எதிர்பார்க்கவில்லை.

சோனியா - 'Happy days' சோனியா இந்த படத்தில் நடித்திருக்கிறார். பல பேர் அந்த தெலுங்கு படத்தைப் பார்த்து சோனியா விசிறி ஆகியிருக்கிறோம். இந்தப் படத்தில் அவரை குண்டாக பார்த்தது ஒரே வருத்தம் :(
அதே போல ஜெகன் பெரிய அளவில் வாய்ப்பில்லாத கதாப்பாத்திரத்தில்.


படம் நல்ல வேகத்தில் தொந்தரவு இல்லாமல் சீராக செல்கிறது. முதல் பாதியில் முழுக்க சண்டையும் இல்லாமல், சஸ்பென்ஸும் உடைக்காமல் நன்றாக செல்கிறது. இரண்டாவது பாதி சண்டையில் கோட்டைவிட்டார்கள். வித்தியாசமாக இருக்கிறது. கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள். நல்ல பொழுது போக்கு.

பையா - Lacks punch.

Comments Posted (17)

போட்டிருக்கத் தேவையில்லை. ஏதோ போட்டுவிட்டேன். இனிமேல் சினிமா பார்த்துவிட்டு எழுதுவதை நிறுத்த முயல்கிறேன். எல்லோரும் எழுதப் போகும் விஷயத்தை நானும் எழுதுவதில் என்ன இருக்கிறது?

இனிமேல் சினிமா பார்த்துவிட்டு எழுதுவதை நிறுத்த முயல்கிறேன். எல்லோரும் எழுதப் போகும் விஷயத்தை நானும் எழுதுவதில் என்ன இருக்கிறது?


....... அப்படியா?

@chitra
அப்படியான்னா என்னங்க அர்த்தம்? இன்னும் ரெண்டு நாளில் பாருங்கள், ப்ளாக்கரில் 150 விமர்சனங்கள் விழும்.. :)

நல்லா எழுத முயற்ச்சித்தமைக்கு நன்றீ. படம் பார்க்க தூண்டவில்லை உங்கள் விமர்சனம்.

குமுதம் விமர்சனம் எழுதியாகிவிட்டது என்பதற்காக விகடன் அதே படத்தை விமர்சிக்காமல் இருப்பதில்லை. நாம் எவ்வாறு மற்றவர்களிடம் இருந்து நம்முடைய ரசனைகளில் வேறுபடுகிறோம் அப்படியே நம் சிந்தனைகளும் வேறுபடுவதால், தொடர்வதில் தப்பில்லை.

ரைட்டுண்ணே..

@மதுரை சரவணன்
படமே அப்படித்தான் :)

@விஸ்வா
அதுவும் சரிதான்

@ராஜு
ரைட்டு!

m.. விமர்சனமா..? ரைட்டு..:)

@கேபிள் சங்கர்
எல்லாம் உங்க மகிமை தான் குருவே!

@வினோத்
இப்படி அப்பட்டமா கேட்டிருக்க கூடாது.

anonymous
athu sari. neenga yarune terla... enatha bloguku varathu? nan konja naala blogger pakkame avlova varadila... follow panradilaye onnu rendu blog dan oru weekkuke padichiruken...

:)) சொல்றதுக்கு 1ன்னுமே இல்ல....

டேய் படம் நல்லா இருக்கா இல்லையா? நீ சொல்றது வச்சி தான் போகணும்.. ( ஏன்ன படம் நம்மள மாதிரி யூத் பசங்களுக்கு.. ஆனா விமர்சனம் எல்லாம் பெரியவங்களே பண்றாங்க.. :) )

ஐயா,
இந்த கமெண்ட் நான் போட்டதல்ல .யாரோ சில்மிஷம் பண்ணியிருக்காங்க .உடனே இதை தூக்கிருங்க‌

@முருகேசன்
ரெண்டு மூணு நாளு பதிவு பக்கம் இல்லைன்னா என்னன்னவோ கூத்து நடக்குதே... நீக்கிடுறேன்.

@கிஷோர்
அதெல்லாம் சொல்ல மாட்டோம். நாங்க பெற்ற இன்பம் எதுவானாலும் மற்றவர்களு, அடையட்டும்.

ஓகேபா நாளைக்கு போறேன். ஹையோ தமன்னா அழகா? அசின் இல்லாத ஊருக்கு தமன்னா சர்க்கரை போல. :)

>இன்னும் ஒருநாள் பார்ப்பேன்,அப்படியும் வரலை ஃபாலோவரும் எடுத்துடுவேன்<

அவ்ளோதானா அன்னானி? வீட்டுக்கு முன்னாடி உண்ணாவிரதம் இருப்பேன். கடையடைப்பு ஊர்வலம் நடத்துவேன் அப்படின்னுலாம் சொன்னா நல்லா இருக்கும். LOL. :D :D

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!