டாப்பு அடிக்கலாம் - 8

Filed under , , by Prabhu on 3/12/2010 01:41:00 PM

10

ரொம்ப நாள் ஆயிடுச்சுல, டாப்பு அடிச்சு. அதனால் இதோ வந்துட்டேன்.

ட்விட்டர் என் நேரத்தை அதிகமாக சாப்பிடுகிறது. பல சமயங்களில் சுவையான விஷயங்களை அளிக்கிறது.நிறைய மனிதர்களின் நட்பையும். இங்கே பேசியத விட @iamkarki, @ikarthik_, @athisha, @nchokkan, @orupakkam, @venkiraja, @antonianbu  என நீளும் லிஸ்டில் பல பேருடன் குலாவ சமயம் கிடைத்தது. இது போக ட்விட்டரிலேயே பல புது நட்புகள் ஓடுகிறது. 140 எழுத்துக்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டு கீழிருக்கும் விஞ்ஞானப் புனைவு.

காலம் அர்த்தமற்ற நாளில் தூவானம் கண்டு ஒதுங்கினான் - கையில் நீர் தெறித்த கொப்பளம். வானத்தில் காப்பி நிற மேகம். #கதை #விபு

கால வெளியின் இழைகளில் பிழைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். அதனூடே செல்லும் காலம் புரியாத புதிதாய் இருக்க விழைகிறேன் #sci-fi உளறல் 

அல்லது கீழிருப்ப்பது போல மொக்கைகளாகக் கூட இருக்கலாம். 

நம் ஊர் பெண்களுக்குத் தான் என்னருமை தெரியவில்லை. அங்கே என்னை பெண்கள் பார்க்கிறார்கள். மூடாத ஜிப் கூட காரணமாக இருக்கலாம்... #சிரிப்பு 

 இப்படியாக பொழுது ஒடுகிறது. யாராவது ட்விட்டரில் சேர விரும்பினால், க்ளிக் 
ட்விட்டரில் பலரின் கெட்ட பழக்கம், celebrity chasing. 'I'm your big fan' பப்பராசித் தலையனுங்களுக்குள்ள நான் வர விரும்பவில்லை

----------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்ன ‘கொல்லிமலை சிங்கம்’ என்று சிரஞ்சீவி நடித்த டப்பிங் படமொன்று சிறிது நேரம்  பார்த்தேன், கலைஞரில். ஒரு வகையாக நல்ல ப்ளாட் தான். இந்திய இண்டியான ஜோன்ஸ் போல. கொல்லிமலை சிங்கம் - தி கிரேட் கொல்டி காவியம்... பாருங்கய்யா.. ஆனால் அநியாய மசாலா நெடி. அட, ஹீரோ வில்லனிடம் சிக்கிய பிறகு அவனைக் காரில் கூட்டிச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் நிறுத்தும் பொழுது ரீமா சென் தண்ணீர் கொடுக்க வர, ஒரு குத்து பாட்டு தொடங்குகிறது. எப்பேற்பட்ட படங்களிலும் வில்லனை சந்திக்கும் முன் அவசரகதியிலும் கவர்ச்சி நடனம் ஆடுவதை அவர்கள் விடவில்லையா? கிராஃபிக்ஸ் சுமார். பட், அடிப்படை கரு எந்த ஆங்கில சாகச படங்களுக்கும் குறை இல்லை. எடுத்தது தான் நம் பழைய தெலுகு இஸ்டெயிலு!

அவரது மகன் நடித்த ‘மகதீரா’ கூட பார்த்தேன். ’மகதீரா’ புறநானூற்று வீரத்தைக் கண் முன் நிறுத்துகிறது... புல்லரிப்பு தான்! 
------------------------------------------------------------------------------------------------------------------

எல்லோரும் நித்யானந்தாவைப் பற்றி பேசுகிறார்கள். எனவே, நான் பேசப் போவதில்லை. Pass!

------------------------------------------------------------------------------------------------------------------
 கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வோர் சதவீதம் நகரத்தில் 10ஆகவும், கிராமங்களி 17ஆகவும் இருக்கிறது. இதற்கும் மத்தியில், சிட்டி ரொம்ப மோசம், பீச்சு அப்படி இருக்கு, பார்க் இப்படி இருக்கு என மக்கள் சலித்துக் கொள்கிறார்கள். இப்ப என்ன சொல்கிறீர்கள்? இங்கே நகரத்தில் நாம் social networking site களில் வீணாக்கும் நேரங்களை அவர்கள் வேறு விதமாக செலவு செய்கிறார்கள் போல!
------------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
ஜானோட அம்மா மேக்கப் பண்ணிகிட்டிருந்தாங்க. அப்போ ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த ஜான்,


ஜான் - அம்மா என்ன பண்றே?
அம்மா - இருக்கும் அழகை கூட்டுறதுக்காக இந்த க்ரீம் பூசறேன் டா, கண்ணா.

பிறகு முகத்தில் அப்பியதை உரித்து எடுக்கத் தொடங்க.

ஜான் - என்னம்மா, முடியலையா?

------------------------------------------------------------------------------------------------------------------
காதலங்கிறது தலையில் விழுந்த காக்காபீ மாதிரி. வழித்துப் போடுவதும் எடுத்து நக்குவதும் அவரவர் கைகளில் இருக்கிறது.

Comments Posted (10)

//காதலங்கிறது தலையில் விழுந்த காக்காபீ மாதிரி. வழித்துப் போடுவதும் எடுத்து நக்குவதும் அவரவர் கைகளில் இருக்கிறது//

மச்சான், இதுவல்லவா தத்துவம்...இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் ...
:)

//இங்கே நகரத்தில் நாம் social networking site களில் வீணாக்கும் நேரங்களை அவர்கள் வேறு விதமாக செலவு செய்கிறார்கள் போல!//

ட்விட்டரில் வேற மாதிரி இருந்துச்சே :)

லிட்டில் ஜான் ஜோக்குன்னு சொல்றீங்க..ரைட்டுண்ணே.

@சிவன்
எல்லாம் ட்விட்டரில் அடிச்சிருக்கோம் :)

@வி.பாலகுமார்
பாஸ், தமிழில ஒரு டீஜன்ஸி தேவைப்படுது :)

@ராஜூ
ஏன் நல்லாலில்லயா?

என்ன ஜோக்கய்யா அது?? ஒன்னியும் புர்ல..?

--

மத்தபடிக்கு ட்வீட்டர் தத்துவங்கள் எல்லாம் ஜூப்பரு. அட.. நானும் இனிமே ட்வீட்டர் ஏரியாவுக்குள்ள வரலாம் போல இருக்கே?? :)

மக்கா... கிராமத்தில் எத்தனை பேர், நகரத்தில் எத்தனை பேர் இருக்காங்கன்னு கணக்கு போடும்லே...!!

ஆனா.. கிராமத்தில்.. என்னா நடக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். ;) ;)

எங்க ஊருக்குப் பக்கத்துல ‘மலைவேப்பன்குட்டை’-ன்னு இன்னொரு கிராமம் இருக்கு. அங்கதான்.. இந்த பேய் புடிச்சவனுங்களுக்கு விபூதி கொடுப்பானுங்க. அந்த ஊர்ல.. நடக்கற மேட்டரெல்லாம் இருக்கே....!!!

இப்ப மட்டும் நான் ஊர்ல இருந்தா.. ப்லாகில் அந்தக் கதையெல்லாம் எழுதியிருப்பேன்.

அந்த ஊருக்கு மட்டும் 17 கிடையாது. 71!!! அல்லது 100!!

@பாலா
விடுங்க, ஜோக் புரியலைன்னா என் தப்பு தான்!


உங்க ஊருக்குப் பக்கத்துல இப்படியெல்லாம் இருக்கும் போது உங்க மேல நம்பிக்கை இல்லையே! நீங்க வேற ஸ்பானிஷ் தோழி அப்படி இப்படின்னு சுத்துறீங்க!

தமாசு தமாசக்கீது..

நன்னாருக்கு !! காக்காப்பீ பத்தி நீங்க எழுதிருக்குறத நானு யோசிச்சிப் பார்த்தேன் . . . டமாஸாத்தேன் இருந்திச்சி . . :-) கிராமத்துல இருக்குற வாலிபக்குறும்புக நகரத்துல இல்ல . . அதுதான் 17 கு காரணம் . . அப்புறம், இந்த மலைவேப்பன்குட்டைய கூகிள் மேப்புல கண்டுபுடிக்க வேண்டியது தான் . . திரிமுன் டகோபா !!

டாப் கியரில் எகிறுது. ......

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!