விண்ணைத் தாண்டி வருவாயா

Filed under , , by Prabhu on 2/27/2010 04:53:00 PM

17


பொதுவாக விமர்சனம் எழுதுவது என்ற விஷயத்தை பல காலமாக செய்யவில்லை. அதற்கு பல காரணம் இருந்தாலும், எல்லாரும் எழுதி பதிவுலகம் முழுக்க ஒரே சரக்காக பார்க்கும் பொழுது சுட வைத்த பால் போல எரிச்சல் பொங்கி வழிகிறது. ஆனால் இந்தப் படத்திற்கு யாரும் இன்னும் நிறைய எழுதாத காரணத்தால் நான் எழுதுகிறேன், விமர்சனம் அல்ல. சொந்தக் கருத்துக்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா - முழுக்க முழுக்க காதலாகி கசிந்துருகி....

படம் ஆரம்பிக்கும்பொழுதே காதலும் ஆரம்பித்து விடுகிறது. பிறகு படம் முழுக்க காதல், காதல், காதல். எந்த வித சிதறல்களும் இன்றி காதலையே காட்டுகிறார்கள். இப்படி வெறுமனே காதலை மட்டும் எடுத்த படம் இதுவாகத் தான் இருக்கும். படம் முடிந்ததும் கனத்த மனதுடன் செல்ல வைக்கிறார், கௌதம். இஞ்சினியரிங் முடித்துவிட்டு துணை  இயக்குனராகும் ஒருவன், மாடி வீட்டு மலையாள கிறிஸ்டியனைக் காதலிக்கும் கதை.  வழக்கம் போல கௌதம் ஷார்ப்பான வசனங்களாலும், சிம்புவின் வாய்ஸ் ஓவர் மூலமும் இட்டுச் செல்கிறார். இப்படி சுத்தமான, கலப்படமில்லாத, அக்மார்க் காதல் கதை எடுக்க எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. பெரும்பாலும் தொய்வில்லாமலே செல்கிறது. ’அவனவன் காதலுக்காக அமெரிக்காவுக்கே போறான்’ என்பதும், கௌதமிடம் துணை இயக்குனாராக சேரவேண்டுமெனும் பொழுதும், ‘ஏன், தமிழ் படத்துலயே இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறயா?” என்றும் தன்னையே கலாய்த்துக் கொள்கிறார்.

பாடல்கள் காட்சியமைப்பிலும் அருமை. சிம்பிளான நடன அமைப்புகள், அசைவுகள் என சிம்பு கலக்குகிறார். நடிப்பிலும் உதறுகிறார். காதலினால் அவர் படும் அவஸ்தைகளைக் உணரவைக்கும் நடிப்பு. எப்பொழுதுமே நண்பர்களிடம் சொல்வதுண்டு, ‘சிம்பு செம டேலண்ட். ஆனா மாஸ் ஹீரோ நினைப்பில் கொல்கிறார்’ என. நிரூபித்து இருக்கிறார். த்ரிஷாவும் அழகாக அலைவதோடு அல்லாமல் நன்றாக நடித்து(உருகி) இருக்கிறார். ஆனால் சிம்புவே மேலோங்கி இருக்கிறார். கணேஷ் என்ற ஒளிப்பதிவாளராக வருபவர் நல்ல சுவாரஸ்யம். பல சமயங்களில் நகைச்சுவை அவர் டிபார்ட்மெண்ட். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனராகவே வந்து இயக்குனர் பொறுப்பின் கண்டிப்பைக் காட்டியிருக்கிறார்.

சிம்பு, த்ரிஷா இருவருமே படத்தில் செம அழகு என்பதை போஸ்டர்கள் சொல்லியிருக்கும். மனோஜ் பரமஹம்ஸா படத்திற்கு அழகுணர்ச்சி சேர்த்திருக்கிறார். ரஹமான், படத்தில் விளையாடியிருக்கிறார். என்னைப் பொறுத்த வரை ரஹ்மான் படத்தில் ஒரு கேரக்டராகவே தெரிகிறார். கதாநாயகியை முதன்முதலில் பார்க்கும் பொழுது அவள் வழிகேட்டு மாடிவரையிலும் போகும்வரை குடுக்கும் சிம்பொனி ரக இசை அருமை. ஒவ்வொரு பிண்ணனியும் சிறப்பாக இருக்கிறது. இருவரும் கேரளாவில் பேசும் காட்சியில், ’ஆரோமலே’ வின் ஆரம்பத்தில் வரும் இசையை மெல்லிய பிண்ணனியாக விட்டு இருப்பது வாய்பே இல்லை.

படம் கொஞ்சம் நீளமோ? த்ரிஷா கடைசியில் பிரியவேண்டும் என முரண்டு செய்யும் போது பெரிய காரணம் இல்லையென்றாலும், இது கொஞ்சம் இயல்புதான். இப்படியான கதைகளை நிறைய நாம் பார்த்திருப்போம். சில குறைகளும் இருக்கத் தான் செய்கிறது, படத்தில். படம் எல்லோருக்கும் பிடித்து விடாது. நிறைய பேருக்கு பிடிக்கும்.
எந்த கவர்ச்சி உடை எதுவும் இல்லாமலேயே, ’ஓமனப் பெண்ணே’ பாடல்  காட்சியமைப்பு செம sensuous. யப்பா, தாங்கல. :)

பாதி படத்திற்கு பிறகு சத்தம் கொடுத்து தொந்தரவு செய்தவர்களை என்ன செய்யலாம்? படம் இப்படி இருக்குமென அவர்களுக்கு கணிப்பு இருக்காதா என்ன? ஒருவன், ‘என்னடா மணிரத்னம் படம் மாதிரி இருக்கு?’ என சலித்துக் கொள்கிறான். மணிரத்னம், கௌதம் படங்கள் எல்லாம் Urban classics ரகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

Comments Posted (17)

இந்த படம் பிடிக்கலைன்னு சொன்னா யூத் கிடையாதுன்னு பதிவுலகத்துல முத்திரை குத்துறதா சொல்றாங்களே உண்மையா பப்பு?

ச்சே.. ச்சே... அப்படியெல்லாம் யாரும் குத்தமாட்டாங்க....


ஆனா........ நான் குத்துவேன்....

I will give a try.

சுருக்கமா எழுத முயற்சி பண்ணி இப்படி எழுதிருக்கேன்..

//இந்த படம் பிடிக்கலைன்னு சொன்னா யூத் கிடையாதுன்னு பதிவுலகத்துல முத்திரை குத்துறதா சொல்றாங்களே உண்மையா பப்பு?//

அதானே..யாருய்யா குத்துறது :))

//ஆனால் இந்தப் படத்திற்கு யாரும் இன்னும் நிறைய எழுதாத காரணத்தால் நான் எழுதுகிறேன்//

நானும் அதனால்தான் எழுதினேன்..அப்போதான அதிகமா ஹிட்ஸ் வரும் :)

எந்த தியேட்டர்ல பார்த்தீங்க..? ஜாஸ்லையா?

நல்ல சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேரமிருந்தால் என்னுடைய பதிவுப் பக்கம் வந்து பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க! :)

நல்ல பதிவு

"படம் முடிந்ததும் கனத்த மனதுடன் செல்ல வைக்கிறார்," u could have avoided this in your blog.... the climax reveals whether its happy ending or not.

நேத்து ஒரு 'நல்லவன்' பேச்சை கேட்டு ஷார்ஜா வரைக்கும் போயிட்டு இந்த படத்தை பார்க்காமல் வந்தேன்..
ரஹ்மான்க்காகவது பார்த்து இருக்கணும்..

சூப்பர். நிறைய நான் பீல் பண்ண விசயத்தையே எழுதியிருக்கீங்க. நன்றி

ஒரு நல்ல படம் மக்களை சென்றடையனும். அது தான் முக்கியம். இது தமிழ் சினிமாவின் காதலுக்காக எடுக்கப்பட்ட ஒரே படம். இதுல காதல தவிர வேற எதுவும் இல்லங்கிறது தான் பிளஸ்.

கட்டாயம் பாருங்க. அப்புறம் பீல் பண்ணுங்க

@சசி
நன்றி வருகைக்கு

@வெற்றி
அட, ஆமாங்க... மதுரயா பாஸ்?

@வினோத்
என்னய்யா மனுஷன் நீங்க... ரஹ்மான் படத்தில நிறஞ்சு இருக்காரு. சிம்புக்காகவும் பாக்கலாம் பாஸ். சிம்பு கசக்கி பிழிகிறார், மனதை.

@அன்பு
ஆமாம்... அண்ணன் சொல்ற மாதிரி எல்லாரும் பாத்துட்டு ஃபீல் பண்ணுங்க...

என்னய்யா இது? சினிமா பற்றி எழுதினால் மட்டும் ஹிட்ஸ் பொழிகிறது?

இதோ காலைல எட்டு மணிக்கி இந்தப் படத்த பார்த்துட்டு ,வெளில வந்த உடனே மை நேம் இஸ் கான் பாக்க ஓடி, இப்ப தான் வந்தேன் . .:-) நான் பார்த்த தமிழ் காதல் படங்களிலேயே இந்தப் படம் ஒரு தனி ரகம் . . இதோ என்னோட விமர்சனத்த எழுதிக்கினு இருக்கேன் . . :-)

விமர்சனனனனனம் சூப்பர்.. ம்ம நடக்கட்டும்..

பப்பு, நல்ல அழகான சுருக்கமான நச் விமர்சனம்.

எங்க ஒரு முறை சொல்லுங்க “நான் வளர்கிறேனே மம்மி”. உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. :)

வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!