Inglourious Basterds (2009)

Filed under , , by Prabhu on 5/17/2010 06:42:00 PM

17

தொடர்ந்து பல காலமாக என்ன காரணமாகவோ நான் பார்த்த படங்கள் எதிலும் ஒட்டுதலே இல்லாமல் சலிப்பாக இருந்த நிலையில்..... ‘Inglourious Basterds' பார்த்த பொழுது தோன்றிய ஒரே வார்த்தை, marvelous. என்னை முழு ஈடுபாடுடன் பார்க்க வைத்தது இந்த படம்.

இந்த படம் எடுத்த Quentin Tarantino உம் சரி இவர் நண்பர் Rodriguez உம் சரி எப்பொழுதும் பழைய படங்களை நினைவு கூறும் விதமாக காட்சியமைப்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இதிலும் அது போன்று இருக்கிறது. இது உலகப் போர் படங்கள் ரக படம் என்றாலும் கொஞ்சம் Spaghetti western ஸ்டைலிலும் கலந்து அடித்திருக்கிறார். எனக்கு அது தெரிந்தது 'Once upon a time in Nazi occupied France' என்ற முதல் அத்தியாயத்தின் பெயர் தான். பாஸ்டர்டுகளின் நாஜிக் கொலை அறிமுகத்தில் வரும் ஸ்பானிஷ் கிடார், பாரில் Mexivan Standoff பற்றி விவாதிப்பது, க்ளைமாக்ஸின் நிலை, ஹிட்லரை கொல்ல ஒரே நேரத்தில் பல வகையில் பலர் ஏற்பாடு செய்திருப்பது போன்றவற்றாலும் நாம் இதை உறுதி செய்து கொள்ள முடிகிறது. இன்ன பிற விஷயங்களும் கலந்திருப்பதாக சொல்கிறார்கள். கேமரா, இசை எல்லாம் அவர் ரகத்தில்.

வசனம், வசனம், வசனம்..... இது இல்லாமல் Tarantino படமா? தாராளமய கொள்கையில் வசனங்களை வாரியிறைக்கிறார். அத்தனையும் பிரஞ்சு, ஜெர்மானிய மொழிகளில். Brad Pittன் அறிமுகத்தின் பொழுது வரும் வசனங்கள் பட்டையை கிளப்பும் ரகம். அதுவும் Brad Pittன் மாடுலேஷன் பிச்சிருக்காரு. என்னதான் பிராட் பிட் நல்லா நடிச்சிருந்தாலும், எனக்கு Hans 'Jew hunter' Landa எனும் SS அதிகாரியா வரும் Christopher Waltz என்கிற ஆஸ்திரிய நடிகர் நடிப்பு தான் அபாரம் எனத் தோன்றியது. படம் பார்த்த பிறகு நோண்டினால் இவர் இந்தப் படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான அகாடமி அவார்டு வாங்கிருக்காருன்னு தெரிஞ்சது.(Prabhu, you got an eye for talent) தகுதியான ஆள் தான்! ஷோஷன்னாவாக வரும் பெண் ஓ.கே. இவர்களைத் தவிர மற்றவர்கள் அதிகம் வருவது இல்லை.

க்ளாசிக்(தமிழில் என்ன?) என்று சொல்லக்கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. Donny 'The Bear Jew' Donovitchஆக வரும் எலி ரோத் ‘டான்.. டான்..’ ரக இசையுடன் கொடுக்கும் எண்ட்ரி, Brad Pitt தான் பிழைக்க விட்டவர்களுக்கெல்லாம் நெற்றியில் சுவஸ்திகா போட்டு அனுப்புவது, Hugo Stiglitz என்பவனுக்கு மஞ்சள் எழுத்தில் பெயர் போட்டு அவன் கதையை சொல்வது எல்லாம் Tarantino ட்ரேட் மார்க். Eli Roth, Tarantino, Rodriguez எல்லாம் ‘Homage திரைப்பட நண்பர்கள் குழு - LA' வின் உறுப்பினர்கள் போல. ரோத் படங்களையும் பார்க்க ஆசை வந்துவிட்டது இந்த படத்தில் அவரைப் பார்த்ததும். பிறகு முதல் காட்சியில் 'Jew hunter' Landa வின் இண்டெரோகேஷன் காட்சி உலகப் போர் 2 படங்களில் வரக் கூடிய க்ளாசிக்கல் காட்சி. Landaவை நடிப்பிற்காக ரசிப்பதா இல்லை வில்லனாக வெறுப்பதா என புரியவில்லை.


கதை இது தான். 'Inglourious Basterds' என்பது அமெரிக்க யூதர்களால் ஆன நாஜிக்கு எதிரான ஒரு கொலை வெறி ராணுவ கும்பல். பல காலமாக நாஜி மக்களின் மனதில் ஒரு கிலியாக இருக்கிறார்கள். இவர்கள் ஒரு தியேட்டரில் வைத்து படம் பார்க்க வரும் நாஜியின் முக்கிய ஆசாமிகளைப் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் திடீரென வேற தியேட்டரில் அதே நாஜி கொள்கை பரப்பு படம் வெளியிட மாற்று முடிவாகிறது. அந்த தியேட்டர் உரிமையாளரோ Landa விடமிருந்து தப்பிய ஒரு யூத பெண், படம் ஓட்டுபவர் கருப்பன் (வெளங்குச்சு!). இவள் தன் இன மக்களுக்காக அந்த நாஜித் தலைவர்களைக் கொன்று பழி வாங்க நினைக்கிறாள். இந்த நிலையில் ஹிட்லரே தியேட்டருக்கு வரப் போவது தெரியவர, இரண்டு குரூப்பும் போரையே முடித்து விடலாம் என்ற ஆசையில் தனித்தனியாக இம்முயற்சியில் இறங்குகிறார்கள். ஆனால் ஹிட்லரைக் கொல்வதற்கு திட்டமிடுதல் சாதாரணமா? அதனால் அந்த திட்டத்தை (கணிணி)திரையிலயே பாத்துக்கோங்க.

வழக்கம் போல வன்முறைக்கு எந்தக் குறையும் இல்லை. ஆ,ஊன்னா துப்பாக்கிய எடுத்து சத்தமாக சுட்டுக் கொள்கிறார்கள். பார் காட்சி ஆரம்பிக்கும் போதே, அண்ணன் இங்க ஒரு பைட்டு வைக்கப் போறாருன்னு கணிச்சத அவர் பொய்யாக்க வில்லை. அவருக்கு waitressகள் மேல என்ன கடுப்போ, எல்லா படங்களிலும் ஏதாவது பஞ்ச் வச்சிருப்பாராம். இந்தப் படத்தில் போட்டுத் தள்ளிவிடுகிறார். ஒவ்வொரு நாஜியைக் கொல்லும் போது ம்தலையின் தோலை மயிரோடு வெட்டி உரித்து எடுக்கிறார்கள். கடைசியில் ’சதக்’, ’சதக்’ கென கத்தியை சொருகி Landa தலையில் சுவஸ்திகா வரைந்து விட்டு, ‘I think this just might be my masterpiece’ என்பது செம டச்.

படத்தில் தவறுகளே இல்லையானு வழக்கம் போல கேப்பீங்க. ஹிட்லர் எவ்வளவு பெரிய சர்வாதிகாரி? அவரைக் கொல்வதற்கு இப்படி ’நாயக்கர் பாவா’ வைக் கொல்வது போல சப்பையாக திட்டம் போடுவது கொஞ்சம் அபத்தம். ப்டம் முழுக்க சப்டைட்டிலை நம்பி பார்ப்பது பாலாவுக்குக் கஷ்டமாக இருந்தாலும் நாங்கள் பொதுவாகவே அவ்வாறுதான் படம் பார்க்கிறோம் என்பதால் பிரச்சனை இல்லை. படம் லீனியர் திரைக்கதையாக இருக்கிறது என்று சொன்னால் சிரிப்பீர்களா? ஆனால், Nolan, Tarantino போன்றவர்கள் படங்களின் கதை நேராக ஓடும் போது ஏனோ விசித்திரமாக இருக்கிறது. சில பல குறைகள் இருந்தாலும், ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக உலகப் போர் படங்களைப் பார்க்க இதைவிட வேறு வழியில்லை.

பட டைட்டிலில் இருக்கும் எழுத்துப் பிழைக்கான காரணத்தை கேட்டால், 'சொல்லமாட்டேன். அதில்ல் இருக்கும் கலைத்துவம் போயிரும்’ என பின்நவீனத்துவவாதிகள் போல சொல்கிறார் Tarantino.

Inglourious Basterds - Bloody Good Bhaskers

Comments Posted (17)

முதல்ல,

மீ தி பர்ஸ்ட்.

//க்ளாசிக்(தமிழில் என்ன?) //

வேறொன்றுமில்லை, கிளாசிக்கு - அவ்வளவுதான்.

// ப்டம் முழுக்க சப்டைட்டிலை நம்பி பார்ப்பது பாலாவுக்குக் கஷ்டமாக இருந்தாலும் நாங்கள் பொதுவாகவே அவ்வாறுதான் படம் பார்க்கிறோம் என்பதால் பிரச்சனை இல்லை.//

செம கமென்ட். பெரியண்ணா பாலா படிப்பார் என்றே நம்புகிறேன்.

இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் - நாங்க எல்லாம் பொதுவா தமிழ் படுத்தப்பட்ட ஆங்கில படங்களையே ரசிப்பவர்கள்.

//Inglourious Basterds - Bloody Good Bhaskers //

இந்த பாஸ்கர் யாருங்கண்ணா? காலேஜ்ல உங்க சீனியரா?

// Tarantino போன்றவர்கள் படங்களின் கதை நேராக ஓடும் போது ஏனோ விசித்திரமாக இருக்கிறது //

பல்ப் ஃபிக்‌ஷன், கில் பில் அளவுக்கு inter-chapter non-linearity இல்லைன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்துக்குள்ள non-linear-ஆ இருக்குன்னு நினைக்கிறேன் பிரபு.. Hugo Stiglitz introduction, the soldier with swasthik telling flashback to hitler, In last chapter Hans Landa explaining how he placed the bomb etc..

நல்ல விமர்சனம்..

^ ஜெய்..,

ஃப்ளாஷ்பேக் எல்லாம் நான் லீனியரில் சேராது.

அப்ப நம்மூர்லதான் உலகத்துலயே அதிகமான நான் லீனியர் படம் எடுத்ததா கணக்கு வரும்.

//பெரியண்ணா பாலா படிப்பார் என்றே நம்புகிறேன். //

இப்படி சொல்லி சொல்லியே... உங்க நாற்பது வயசை குறைச்சி சொல்ல ட்ரை பண்ணுங்க. :)

//(Prabhu, you got an eye for talent)//

யோவ்.. நாங்க படம் பார்த்தப்பவே அண்ணனை பத்தி சொல்லி... ஆஸ்கர் ப்ரடிக்‌ஷன்ல.. இவருக்குத்தான் விருதுன்னே.. சொல்லிட்டோம்.

இன்னாபா.. நீ.. காந்தி செத்துட்டாரான்னு கேட்டுகினு?

@ ஹாலிவுட் பாலா, ஸ்க்ரீன்ல ஒரு சீன்ல இருந்து இன்னொரு சீன்க்கு chronological order இல்லாம தாவினாலே non linear-தான்னு நினைக்கிறேன்.. இல்லையா?

Casablanca மாதிரி ஃப்ளாஷ்பேக்கை சீன் மாத்தாம பேச்சுலேயே சொல்லி முடிச்சுட்டா, அதுதானே லீனியர்?

Flashback-க்கும் non-linear-க்கும் ஒரு தெளிவான வித்தியாசம் இருந்தா சொல்லுங்க.. எனக்கு சொல்லத்தெரியல..

http://en.wikipedia.org/wiki/Nonlinear_narrative
It says,
”Defining nonlinear structure in film is, at times, difficult. Films may use extensive flashbacks or flashforwards within a linear storyline, while nonlinear films often contain linear sequences.”

இன்னும் சரியா சொல்லணும்னா, ஃப்ளாஷ்பேக் ஒரு கேரக்டரோட நினைவுகள் இல்லையா?

எந்த கேரக்டரோட நினைவாகவும் இல்லாம, audience-க்காக ஒரு சீனை நடுவில non-chronological order-ல திணிக்கறது non-linear-தானே..

இந்தப் படம் என்றுடனேயே நினைவுக்கு வருவது 'Jew hunter' Landa எனும் SChristopher Waltz தான்.என்ன ஒரு நடிப்பு.மனுஷன் சும்மா பின்னி இருப்பாரு.அதுக்கு அடுத்தது நெத்தியில ஸ்வஸ்திகா போடறது தான்.அதிலும் குறிப்பா அப்போ வரும் அந்த வசனங்கள்.Especially,the dialog "I think this is my masterpiece"....

ஐ ஜாலி . . நம்ம அண்ணனுங்க ரோட்ரிகஸ் மற்றும் க்வெண்டினு பத்தி பதிவு . . சூப்பரப்பு . . ! இதுவும் எனக்குப் புடிச்ச படந்தேன் . .

விஸ்வா சொன்னமேரி, நாங்கள்லாம் தமிழ்ப்படுத்தப்பட்ட படங்கள ரசிக்குறவைய்ங்க . . அதுதான் ஒரு தமிழ் காமிக்ஸ் படிக்குற ஃபீலிங்கி தருது !! :-)

இந்த ரெண்டு பேரப்பத்தியும் நானும் என்னோட ஆங்கில வலைப்பூல இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதும்போது (அது ரொம்ப நாளு முந்தி . . அப்பல்லாம் கருந்தேள் ஆரம்பிக்காத கட்டம்) சொல்லிருக்கேன் . . நல்ல பதிவு . .

அப்பறம், தமிழிஷ்ல உங்க பதிவோட டைட்டில் ’Inglourious Basterds (௨௦௦௯)’ அப்படின்னு வந்திருக்கே . . இது ஏதோ கெட்ட வார்த்தை தானே . . :-)

@kingviswa
பாஸ், மீ த ஃபர்ஸ்ட் போடுற அளவுக்கு பெரிய ஆள் இல்ல நாங்க.
பாஸ்கர் ஒரு.... வேணாம்ங்க!

@ஜெய்
அது tarantino டெக்னிக் தான். HUgo Stiglitzன் பின் கதை போடுவதெல்லாம் க்வெண்டனின் ஸ்டைல். நான் லீனியரில் வராது. அந்த வீரனின் ஃப்ளாஷ்பேக் பாலசந்தர் படங்களில் பயன்படுத்தப்பட்ட முறைதான்.

@பாலா
பாஸ், உங்களோட எல்லாம் போட்டி போட முடியுமா? ஏதோ எங்க ரேஞ்சுக்கு கெஸ் செய்ததே பெருசு.

@illuminati
என்ன எண்ணங்களும் அதே!

@கருந்தேள்
நக்கல் தானே! அது 2009 ந் தமிழ் வடிவம்.

சூப்பரப்பு.. ரொம்ப நாள் ஆச்சி.. (எதுக்குனு கேக்காத.. எதுக்கோ?)

Boss. Commeta tamila adika option illayae?

Unga vemarsanam dhool. Unga blogguku nan fan aiyaten..

Thodarnthu varuvaen. Adutha murai orkutla tamila type panni comment panraen :)

@Kaber vasuki
அடடா, அதுக்குள்ள விசிறி அப்படி இப்படின்னு... இன்னும் நாலு பதிவுகளைப் பார்த்துட்டு துப்பாம இருந்தா சரி!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!