சில பயணங்கள் - 3
Filed under பயணக் கட்டுரை , by Prabhu on 3/03/2010 01:08:00 PM
8
சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
171 பேருந்தே மெஜஸ்டியில் இருந்து கோரமங்களா வரும் வழியில் Dairy Circleல் நிற்கும் என தெரிந்ததால் மெஜஸ்டி சென்று 171 பிடித்து செல்லும் வழியில் பேச்சு என் நண்பனின் பிரதாபங்களைப் பற்றி ஆரம்பித்தது. அவனைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். மதுரையிலிருந்து பெங்களூர் சென்று மேலாண்மை படிக்கும் மாணவன். சௌராஷ்டிரன். சௌராஷ்ட்ரா என்பது மதுரையில் மிகுந்து இருக்கும் மொழி சார்ந்த பிரிவு என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இவர்களைப் பற்றி பின்னாளில் விஸ்தாரமாக பேசுவோம். எப்படி நான் அண்ணன் இருக்கும் தைரியத்தில் செல்கிறேனோ, அதே போல் அக்கா, பவா(சௌராஷ்டாவில் அக்கா கணவர்) இருக்கும் தைரியத்தில் சென்றவன் அவன். எங்கள் ‘கேங்’கில் சின்ன பையன் இவன் என நினைத்தோம். ஆனால் நாங்கள் தான் சின்ன பையன்களாக இருக்கிறோம். அவனுக்கு சென்னை, பெங்களூர் என மாநிலத்துக்கு ஒரு நண்பி உண்டு. மதுரையில் சந்தித்த பெண் சென்னைக்குப் படிக்கப் போக, இவன் பெங்களூர் சென்றால், அங்கே வகுப்பில் படிக்கும் இரண்டாம் தலைமுறை பெங்களூர்வாசியான ஒரு பெண் என வாழ்கிறான். அடுத்த அக்காவை ஹைதராபாத்தில் கட்டிக் கொடுக்கிறார்களாம். ஒன்று ரிசர்வ் செய்யப்பட்டது. இந்த மாதிரி ஆசாமிகளுடன் பேசுவதில் கடுப்பு என்னவென்றால், ‘அவ இப்படி சொல்றா? ஏண்டா இப்படி?’ , ‘மாப்ள படத்துக்கு போலாம்னு சொல்றா. என்ன செய்யலாம்?’, என்பது போன்ற வயிற்றெரிச்சலைக் குழல் வைத்து ஊதும் கடமையை செவ்வனே செய்கிறார்கள். இவர்களுக்கு தேவை விடையல்ல. என்ன சொன்னாலும் அப்படியல்ல, இப்படியல்ல என ’மன்மதன்’ சத்யன் போல நம்மை வெறுப்பேற்றுவார்கள். நான் என்னவென்றே புரியாத ஒரு பார்வையை குடுத்துவிட்டு பேச்சை திசை திருப்பிவிடுவேன். அது நமக்கும் நம் நட்புக்கும் நலம்.
Dairy circleல் ஒரு ’நந்தினி’ விற்பனை நிலையம் இருந்தது. நந்தினி என்பது ‘ஆவின்’ போல கர்நாடகா அரசின் பால் கொள்முதல்-விற்பனை நிறுவனம். அந்த நிலையத்தின் பின்னாலேயே நந்தினி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையும் இருந்தது. Dairy Circle பெயரே அதனால் தான் வந்திருக்க வேண்டும். நந்தினியில் ஒரு புட்டி பால் வாங்கிக் குடித்து விட்டுத்தான் மறுவேலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். நந்தினியைப் பற்றி பேசும் போது ஆவினைப் பற்றி பேசாமல் விட முடியவில்லை. இரண்டுமே மாட்டின் பெயரினைக் கொண்டு அமைந்தவை. ‘ஆவின்’ என்ற பெயரின் அழகை சில ஆண்டுகளுக்கு முன் தான் அறிந்து கொண்டேன். பல நாளாக அதன் பெயரைப் பற்றி யோசிக்காத என் மூளையுள் தற்செயலாக பொறி தட்ட, யோசித்தால் ஆ என்றால் பசு என்று அர்த்தம். எனவே பசுவின் பால் என்பதுதான் ஆவின் பால் என அப்பொழுதுதான் தோன்றியது. ஆவின் பால், நெய், மைசூர்பா என அனைத்திற்கும் நல்ல பெயர் இருக்க, இன்னும் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஆவின். உள்ளே ஊழல் அதிகம் என்று கேள்வி. இப்படி நல்ல விஷயங்கள் இருக்கும் அரசாங்க நிறுவனங்களையும் வீணடிக்கிறார்கள்.
இது வேற நந்தினி |
விசாரித்து பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து சென்றேன். உள்ளே பல்வேறு மாநிலத்திலிருந்தும் ஒரு சில வெளிநாடுகளிலிருந்தும் வந்து இருக்கும் பலரைக் காண இயன்றது. அந்தத் தடவையும் அதன் பிறகு தற்பொழுது இருமுறையும் பெங்களூர் சென்ற பொழுதெல்லாம் ஒவ்வொரு முகத்தையும் காணும் பொழுது மூளை இவள் எந்த மாநிலமாக இருப்பாள், இவன் தமிழனோ என தொடர்ந்து கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. மூளைக்கு அயற்சியைக் குடுத்தாலும் பிடிவாதமாகத் தொடர்வதால் எண்ணங்களைத் துண்டிக்கும் முயற்சியில் அவனுடன் பேச ஆரம்பித்தேன். அங்கிருக்கும் ஒருவனைத் தோராயமாகப் ஒரு ஒரியாக்காரனைப் பிடித்து கொஞ்ச நேரம் பேசினோம். எனது பேரைக் கேட்டவன் ’typically tamilian’ என பஞ்சாபியிடம் சொன்னான். சிரித்தாலும் இன்னமும் மூளையில் ஒரு குழப்பமும் வெறுப்பும் இருக்கிறது. கலிங்க நாட்டவனுக்கு இவ்வளவு கொழுப்பா? அமைச்சரே...) அதென்ன 'typically'? (பேரைக் கேட்டாலே ஊகித்துவிடலாம் என்பதுதானா இல்லை எதுவும் இளக்காரமாக சொன்னானா?
பிறகு Forum போக பாஸ் இருக்கும் தினவில் பஸ் ஏறி செல்கையில் நடத்துனரிடம் கேட்டால் போகாது என்றார். பக்கத்திலிருந்தவரின் கன்னடத்தை அறைகுறையாக புரிந்து கொண்டு கார்பரேஷன் நிறுத்தத்தில் இறங்கி விசாரித்து செல்லும் முன் ஒரு பானி பூரி சாப்பிட்டோம். நான் பெங்களூரில் சாப்பிட்ட பானி பூரிகளிலே சிறந்தவை கார்பரேஷன் அருகில் சாப்பிட்டவைதான். அங்கே மிளகாய் பொடியெல்லாம் போட்டுக் கொடுக்கிறார்கள். எட்டு பூரி கொடுக்கிறார்கள் (பல இடங்களில் 6 தான்). முடிந்தபின் பானி இன்றி கிழங்கு, சாட் பொடி மட்டும் போட்டு ஒரு பூரி கொடுக்கிறார்கள். சாப்பிட்ட பின் வெத்தலை போடுவது போல விந்தையான பழக்கமாக பட்டது.
Forum பற்றி அடுத்த பதிவில் பேசுவோம். மிகவும் சிறிய பகுதிகளாகப் போடுகிறேனோ? என்ன செய்வது, பதிவர்கள் பெரியவைகளைப் படிக்க மூக்கால் அழுகிறார்கள். ஒரு 16 பக்க கதை இன்னும் என் பதிவில் சீண்டுவாரில்லாமல் இருக்கிறது. சுவாரஸ்யமா கொண்டு போறேனா என்பது தான் கேள்வி . போகுதா இல்லை அடுத்த பதிவை பெரிதாக எழுதி முடிச்சிடவா?
நான் குட்டி பாப்பாதான் ! பொய் சொல்லி உள்ள வந்துட்டேன் ஒட்டு போடா மாட்டேன் போ !
ச்சே.. ச்சே.. புள்ள என்னத்தையெல்லாம் கண்டுபிடிக்குது?? ஆ-ன்னா பசு!!
அப்ப ஈ -ன்னா??? :)
இதென்ன கொத்து பரோட்டா மாதிரி, பானிபூரியெல்லாம்?? பதிவு போற வேகத்துல.. நடந்தே கர்னாடகா போய்ட்டு வந்துடலாம் போல இருக்கே?!
//அப்ப ஈ -ன்னா??? :) //
ஈ தான், வேறென்ன !
(எவ்ளோ பிரச்சனைகளுக்கிடையே கஷ்டப்பட்டு பதிவெழுதிட்டு உக்கார்ந்திருந்தா, பின்னூட்டத்துக்கு பதில் சொல்றத பாரு... )
@ராஜன்
என்னங்க இது சின்னபுள்ள்த் தனமா? காசு வாங்கிட்டு ஓட்டு போடாததுக்காக ஆட்டோ அனுப்புறோம்...
@பாலா
இந்த ரவுசு தான வேணாங்கிறது... அப்புறம் mametல திட்டுவோம்...
@பாலகுமார்
அப்படிசொல்லுங்க பாஸ்...
பெங்களூர் மட்டும் தானே போயிட்டு வந்த..வேற எந்த ஊருக்கும் போலைல..:)
சும்மா சொன்னேன்..தொடர்ந்து எழுது..:)
அப்படியே சாரு எழுத்தை படிக்கிற மாதிரியே இருக்கு பப்பு!
(சத்தியமா இது பாராட்டு தான்)
@வினோத்
பெங்களூர் தான்... ஒரு மாதிரி வள வளக்குதா?
@ஆதவன்
அவரை படிச்சதே இல்லைங்க... ஏன் இப்படி? அவர திட்ட மட்டும் தான யூஸ் பண்ணுவாங்க?
பயனுள்ள இடுகை.