Lock, Stock and Two barrels (1998)

Filed under , , by Prabhu on 5/19/2010 06:42:00 PM

17

Tom என்ற சூப்பர் மார்கெட்/ப்ளாக் மார்கெட் ஆசாமி, Soap என்று தன் கைய  சுத்தமாகவே இருக்கனும்ங்கிற  ஒரு சமையல்காரன், Bacon என ஒரு திருடன், அப்புறம் Ed - இவன் சீட்டுல கில்லாடி. இப்படி சம்பந்தமில்லாத நாலு பேரும் நீண்ட நாள் நண்பர்கள். இவங்க எல்லாரும் காசு சம்பாதிக்க முடிவு செஞ்சு  Ed ஓட சீட்டு விளையாடுற திறமை மேல முதலீட்டைப் போட நினைக்கிறார்கள். இல்லீகலா சீட்டு விளையாட, அதற்கு குறைந்தபட்ச தேவையான 100,000 பவுண்ட்ஸை எடுத்துக்கிட்டு Hatchet Harrey க்கு ஃபோன் போடுறாங்க.

Hatchet Harry. இவனைப் பற்றியும் சொல்லியாகனும். இவன் ஒரு Porn King. பார் கூட வச்சிருக்கான். அதே தான், Pole dance ஓட தான். Spank batல் இருந்து செக்ஸ் டாய் வரை விற்பதும் கூட. இது எல்லாம் போக இந்த இல்லீகல் சூதாட்டமும் நடத்துறான். இவனுக்கு ஒரு பில்டப் வேண்டாம்? இவனுக்கு வேலை செய்யுறவன் ஒருத்தன் சரியில்லை என சந்தேகம் வந்து விசாரிக்கும் போது அவன் கொடுத்த விளக்கம் போதலை எனத் தோணியதால், கையில் கிடைச்ச பொருளைத் தூக்கி அடிச்சே கொன்னுட்டான். அவன் கையில் கிடைத்த பொருள் - 15இன்ச் டில்டோ. ஊருக்குள்ள இவன் பேரக் கேட்டா பயப்படுவாங்க. இவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இவனோட இருக்கும் Barry the Baptist தான் டீல் செய்வான். தண்ணியில் முக்கி முக்கி அடிப்பதால் இந்தப் பெயர். உபதொழில் - பணம் கொடுக்காதவங்க விரலை வெட்டுவேன் என மிரட்டுவது. Harryயின் வராக்கடன் கணக்குகளை வட்டியும் முதலுமாக வசூலிப்பது Big chris. இவனுக்கு தன் பையன்னா உயிரு. அந்த பயலும் அப்பாவோட தொழிலுக்கு போவான். சமீபத்தில ஏலத்துக்கு போக இருக்கும் antique துப்பாக்கிகள் மேல Harryக்கு ஒரு கண். அதைத் திருட Dean, Gary என ரெண்டு தேங்காய் மூடி திருடர்களைத் துப்பாக்கி கேபினட்குள்ள இருக்கிறது தவிர மத்ததெல்லாம் உனக்கு என்ற டீலில் அனுப்புகிறான் Barry.

இதற்கு நடுவில் Edன் பக்கத்துவீட்டுல ஒரு கேங் இருக்கு. போதைப் பொருள் ஆசாமிகளை தாக்கி சரக்கைக் கடத்திக் கொண்டு வந்து பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு அபாரமான கூட்டம். அவர்கள் வீட்டில் சாவதானமாக பேசினால் கூட Ed வீட்டு Closet ல் எதிரொலிக்கும். அந்தக் கூட்டத்தில் ஒருவனான Plank தான் ஒவ்வொரு போது கும்பலையும் கண்டுபிடித்துக் போட்டுக் கொடுப்பது. அந்தக் கூட்டத்தின் திட்டக்குழுத் தலைவன் Dog கொஞ்சம் வயலண்டான ஆசாமி.  Plank பலகாலமாக தனக்கு கஞ்சா கொடுக்கும் ஆசாமிகளை மார்க் செய்கிறான்.

இதற்கிடையில் Ed பணத்தை எல்லாம் Hatchet Harryன் தந்திரத்துக்கு தோற்றது மட்டுமல்லாமல் 500,000 அவனிடமே கடன் வேறு வாங்கி ஆடித் தொலைகிறான், மகாபாரதம் டப்பிங்கில் பார்க்காதவன். ஒரு வாரத்தில் காசு வரலைன்னா ஒவ்வொரு நாளும் ஒரு விரல். நாலு பேரு சேத்தா நாப்பது நாளு தாங்குதேன்னு நினைச்சா, தினமும் எல்லார் கையிலும் ஒரு விரல் எடுப்பானாம் Barry.  அப்புறம் Ed அப்பாவோட பாரை எடுத்துப்பாங்களாம். அவங்கப்பா அது கேள்விபட்டதும் Ed மூக்கில குத்து உடுறாரு. இதற்கடுத்து மொக்க பிளான் நிறைய போடுறாங்க. அப்ப பக்கத்து வீட்டு ஆசாமிகள் பெரிய கொள்ளை ஒன்றை, Plank கஞ்சா வாங்கும் ஆட்களை கொள்ளை அடிப்பதை முடிவு செய்கின்றனர். அதை இவர்களிடம் இருந்து நாம் கொள்ளை அடிக்கலாம் என நம்ம ஹீரோ கேங்க் முடிவு செய்ய, Nick the Greek என்ற இடைத்தரகன் மூலம் அந்த சரக்கை Rory Breaker  என்ற Afro தலையனிடம் விற்க முடிவு செய்கிறார்கள். இவனும் டெரரான ஆசாமிதான். இந்தக் கொள்ளைக்கும் துப்பாக்கி வாங்கி தர்றவன் Nick தான், அது கேபினட்டுக்கு வெளிய இருந்ததால தங்களது என நினைத்து Gary,  Dean 700 பவுண்டுகளுக்கு விற்ற 250 மில்லியன் பெறுமானமுள்ள antique துப்பாக்கிகள்.

இப்ப கஞ்சா விக்கிறவங்களையும் அறிமுகப்படுத்திருவோம், என்ன? கெமிஸ்ட்ரி படிக்கிற மூனு இஸ்கோல் பசங்கதான் கஞ்சா வளர்க்கிறாங்க, வீட்டுக்குள்ளையே. படிக்கிற பசங்கள் என்பதால் குவாலிட்டி ஏ1. பிஸினஸ் எதிர்பாராத வகையில் சூடுபிடிக்க ஏக பணம். ஆனா பசங்க சப்பையானவங்க. அதைப் பார்த்ததால்தான் Plank  இந்த திட்டமே போட்டிருக்கான். ஆனால் யாருக்குமே தெரியாத விஷயம் இந்த தொழிலயே அந்தப் பசங்க Rory Breakerக்காக தான் செய்யுறாங்க. ஆனா நம்ம பசங்களோ அதை கொள்ளை அடிச்சவங்களையே கொள்ளை அடிச்சு அதை முதலாளிகிட்டயே விக்க போற அறிவாளிகள்.

இதுவரைக்கும் தான் சொல்லமுடியும். இதற்கப்புறம் சொல்லனும்னா கார்த்திகேயன் மாதிரி ஆள் முழுக்கதை எழுதினால் தான் உண்டு. இதுக்கப்புறம் படம் முழுக்க, டமால், டுமீல், டப், பாம், படபடப்ட, என சைஸுக்கு ஏத்தாப்ல சவுண்டோட விதவிதமாக துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டே இருக்கு. படம் முழுக்க லோடு லோடா சர்ப்ரைஸ்கள் வச்சிருக்காங்க. காமெடியும் க்ரைமும் கலந்த மாதிரியான படம். Jason Statham, Jason Felamyng தவிர எனக்கு எந்த ’முகமும்’ தெரியவில்லை. Jason Statham காமெடில கெளப்புறாரு. கஷ்டமான accent. சப்டைட்டில்ஸ் புண்ணியம். பாலா மாதிரி ’மொழி பிரியல’ன்னு உதட்ட பிதுக்காமல், 700 MB டவுண்லோட் பண்ண நீங்க Kb கணக்கில் சப்டைட்டில்ஸ் டவுண்லோட் பண்ணிக்கோங்க. படம் முழுக்க ஒலிக்கும் இசை, பாடல்களும் ஏக பொருத்தம். Gary, Harryஐ என்கவுண்டர் செய்யும் இடத்தில் வித்தியாசமான இசை அந்த காட்சியின் பிரம்மாண்டத்தையும் அதே சமயம் absurdityஐயும் காட்டக் கூடிய இசை சம்பந்தமே இல்லாமல் எனக்கு ஒரு புல்லரிப்பாக இருந்தது.
Guy Ritchie - இயக்குனர். இவர் பிரிட்டிஷ் கேங்ஸ்டர் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரும் Tarantino மாதிரி வித்தியாசமான ஆசாமி என்று சொன்னால் பாலா  கோவிச்சுக்குவாரான்னு தெரியலை. ஆனால் இது கம்பேரிசன் இல்ல. தோணுச்சு. Ritchieன் படங்களில் காமெடி கலந்த வசனங்கள் பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் 'Inglourious Basterd’ Hugo Stiglitz கதாபாத்திரத்துக்கு கதை சொல்லுவாரே Tarantino, அது போல கதை சொல்லி விளக்குறது இவரோட வழக்கம். இவர் கதை சொல்லுகிற முறை எனக்கு பிடித்து விட்டது. இந்த இயக்குனரின் 4 படங்கள் பார்த்துவிட்டேன், ஓகே, ஒரு ஷாட் பிலிமும் பாத்திருக்கேன். Sherlock Holmes தவிர மற்றவையெல்லாம் கிட்டதட்ட ஒரு கும்பல் குழப்பக் கதைதான் என்பது ஒன்றுதான் இவருடைய பின்னடைவு. இவர் ஒரே மாதிரியாக படங்கள் எடுக்கிறார். இதுதான் இவரிடம் எனக்கு ஒரே தயக்கமான விஷயம்.  வசனங்களை அடிச்சுக்க முடியாது. இந்த படத்தில் ’Fuck’ஐ ஃபுல் ஸ்டாப்பாக யூஸ் செய்கிறார். சின்ன மாதிரி -
Rory Breaker -  If you hold back anything, I'll kill ya. If you bend the truth or I think you're bending the truth, I'll kill ya. If you forget anything, I'll kill ya. In fact, you're gonna have to work very hard to stay alive, Nick. Now, do you understand everything I've said? 'Cause if you don't, I'll kill ya. :D
Lock, Stock and Two Smoking Barrels - படத்தில் Barry சொல்வான் - Lock, Stock and Fuckin' lot.

Comments Posted (17)

beautiful review dude,we need more

எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று . . தலைவர் கய் ரிட்சியின் பிக் பேங் அதிரடி அறிமுகம் !!

ஒவ்வொரு கேரக்டர்லயும் ஒரு டைப்பு வெச்சி, படத்த இன்னும் சுவாரஸ்யமாக்கிருப்பாரு தலைவர் !! பின்னுங்க !! அப்படியே ஸ்னாட்ச் பத்தியும் எழுதுறது . . :-)

@ashley.
THanx.

@கருந்தேள்
கண்டிப்பா. இந்த ஒரு படத்திலயே ரசிகனாயிட்டேன். ஸ்னாட்சு தானே, எழுதிருவோம்.

really superb..excellent..

//Guy Ritchie - இயக்குனர். இவர் பிரிட்டிஷ் கேங்ஸ்டர் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரும் Tarantino மாதிரி வித்தியாசமான ஆசாமி என்று சொன்னால் பாலா கோவிச்சுக்குவாரான்னு தெரியலை. ஆனால் இது கம்பேரிசன் இல்ல. தோணுச்சு.//

பாலா ஒத்துக்கமாட்டார்.. ஆனால் இருவருமே மிக மிக சிறப்பானவர்கள் என்பதே என் கருத்து.

// இந்த இயக்குனரின் 4 படங்கள் பார்த்துவிட்டேன், ஓகே, ஒரு ஷாட் பிலிமும் பாத்திருக்கேன். Sherlock Holmes தவிர மற்றவையெல்லாம் கிட்டதட்ட ஒரு கும்பல் குழப்பக் கதைதான் என்பது ஒன்றுதான் இவருடைய பின்னடைவு. இவர் ஒரே மாதிரியாக படங்கள் எடுக்கிறார். இதுதான் இவரிடம் எனக்கு ஒரே தயக்கமான விஷயம். //

ஒரே மாதிரி படம் தான். ஆனால் மிக சிறப்பாக இருக்கும். உண்மையிலேயே மிக சிறப்பாக கதை சொல்கிற ஆள் இவர். அருமையான கதை சொல்லி.
Revolver பார்த்திருக்கிறீர்களா? lock stock, snatch, revolver மற்றும் rocknrolla படங்களில் எது சிறப்பானவை என்று என்னிடம் கேட்டால், பதில் சொல்வது மிகக்கடினம்.
ஆனால் Revolver குதிரை முகத்தை நிமிர்த்தி ஜெயிக்கும். மிக சிறப்பான psychological thriller game..

நான் இயக்குனர் guy ritchie, அவரின் revolver, மற்றும் sherlock holmes பற்றி மூன்று பதிவுகளை எழுதத்துவங்கி இரண்டை முடித்து வைத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் வெளியிடுகிறேன்.

///really superb..excellent..//

யோவ்... குசும்புதானே?? :) :)


---


பப்பு... அது இன்னாபா.. ரெண்டு பதிவா என்னை வம்புக்கு இழுத்துகினு??

ஒத்துக்க முடியலைன்னு சொல்லலை. ஆனா.. ஆஹா ஓஹோன்னு எல்லோரும் புகழுற அளவுக்கு என்னன்னுதான் புரியலை.

நம்புங்க... எதுக்கும் திரும்ப பார்த்து வைப்போமேன்னு, ரிவால்வர், லாக், ஷெர்லக் மூணையும் திரும்பப் பார்த்தேன். அப்பவும் சத்தியமா வெளங்கலை.

கூடிய சீக்கிரம், நீங்களும், சரவணக்குமாரும் கண்டுபிடிச்சதை கண்டுபிடிக்கப் பார்க்கறேன்.

-----

காலைல படிக்கும் போது.. ஒரு 2-3 பாரா மிஸ்ஸிங்.

Guy Ritchie படங்களுக்கு விமர்சனம் எழுதணும்னா கை வலிக்கிற அளவுக்கு கதை எழுத வேண்டியிருக்கும்.. சூப்பரா எழுதியிருக்கீங்க..

Lock Stock நல்ல படம்தான்.. ஆனா, நீங்க சொன்ன மாதிரி, lock stock, snatch, rocknrolla இது மூனுக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கறதே கஷ்டமா இருக்கு..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நல்ல காமெடியான விமர்சனம் பப்பு
தொடர்ந்து இதுபோல எதிர்பார்ப்போம்.பிரபல சினிமா ப்லாக் பதிவர்களையே மிஞ்சிடுவீங்க போலருக்கு,ஃபாலோவரும் ஆயிட்டோம்ல?தொடர்ந்து வருவோம்ல

நல்லா படம்தான், ஆனா குவென்டின் படங்களோட ஒப்பிடும் அளவுக்கு இல்லை - ஆகையால் பாலா அண்ணனுடன் ஒத்துபோகிறேன்.

அமெர்க்காவின் கலைஞர், வாழும் வள்ளுவர் ஹாலிவுட் பாலாவை வம்புக்கு இழுக்கும் போக்கை கண்டித்து நான் உண்ணும் விரதத்தில் இறங்குகிறேன். (பில் அண்ணன் பாலாவுக்கு அனுப்பப்படும்).

ரொம்ப வருஷங்களுக்கு முன்பு ஸ்டார் மூவீஸ் சேனலில் பார்த்த படம் இது. அப்போதே ரசித்தேன். பின்னர் டிவிடியில் இன்னமும் பார்க்கவே இல்லை. மறுபடியும் பார்க்க தூண்டிவிட்டீர்கள்.

என்னுடைய நண்பர் ஒருவருக்கு உங்கள் வலைப்பக்கத்தை சிபாரிசு செய்தேன். அன்றிரவு அவருக்கு பொன் செய்தால் அவர் இந்த பதிவை படித்து விட்டு இந்த படத்தை பார்த்துக்கொண்டு இருப்பதாக கூறி பிறகு பொன் செய்யும்படி சொல்லி விட்டார்.

//ஆனா.. ஆஹா ஓஹோன்னு எல்லோரும் புகழுற அளவுக்கு என்னன்னுதான் புரியலை.//

அண்ணே, போங்க, போய் பெண் சிங்கம் அமெரிக்காவில் வந்துடுச்சான்னு பாருங்க.

பார்த்து, அதையாவது விமர்சனம் செய்யுங்க. ஏதோ சின்னப்பசங்க அவங்களுக்கு புரிஞ்ச வகையில் படத்த பத்தி பேசக்கூட விடமாட்டேன்குறீங்க?

@ஜெய்
ஆமா, predictably unpredictable.

@வெங்கட்
நான் கம்பேரே பண்ணலயே. அது மாதிரியான ஒரு வித்தியாசமான படம் என்றேன்.

@விஸ்வா
ஆமா, சின்ன பசங்கள வந்து ரேகிங் பண்ணறது. அப்புறம் பெருசுகள் சேர்ந்து மாநாடு நடத்தி சின்னப் பசங்கள்னு அவங்களயே சொல்லிக்கிறது.

//@விஸ்வா
ஆமா, சின்ன பசங்கள வந்து ரேகிங் பண்ணறது. அப்புறம் பெருசுகள் சேர்ந்து மாநாடு நடத்தி சின்னப் பசங்கள்னு அவங்களயே சொல்லிக்கிறது.//

விடுங்க பிரதர், நம்மள மாதிரி யூத்துகளோட பீலிங் எப்போதான் இந்த பெரியவங்களுக்கு புரியுமோ?

நல்ல பதிவு நன்றி பப்பு. :)

@கார்திக்
யோவ், உங்களுக்கு எல்லாம் என்னய பாத்தா எப்படி இருக்கு?

Guy Ritchie fan naan..

Rory Breaker dialog Fkin awsme

Snatch Sherlock holmes kidacha paarunga

J: I've a strong suspicion we should have been rocket scientists, or Nobel Peace Prize winners or something.

Charles: Peace Prize? Ooh. Be lucky to find your penis for a piss, the amount you keep smoking.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!