ராவண் - இசை

Filed under , by Prabhu on 5/02/2010 10:59:00 AM

7

ஏற்கனவே சில பதிவுகளில் சொன்னது போல, சின்ன வயதில் இருந்து ரஹ்மான் விசிறியாக இருப்பதால் ’ராவண்’ பாடல் வெளியீடை எழுதும் ஆசையைத் தவிர்க்க இயலவில்லை.

Beera - இந்தப் பாடலைப் பற்றி சொல்ல தேவையில்லை. ஹீரோ அறிமுகம். அவனுக்கு அவன் பெருமை தான் முதலில் என்பதையும் ஆக்ரோஷமானவன் என்பதை சொல்கிறது. காட்டுத்தனமான இசை அவன் கதாபாத்திரத்தை விளக்குகிறது. இந்த பாடல் பல பேரின் எதிர்பார்ப்பை பம்படித்துவிட்டது.

Thor de killi - இது வழக்கம் போல பொங்கி எழும் வகை பாடலாகத் தெரிகிறது. ஆனால் இசையில் சோதனை முயற்சி. இடையில் ஷெனாயோ என்னவோ வருகிறது. கல்யாணம் போல. கல்யாண வீட்டில் வைத்து ஐஸ்வர்யாவை லபக்கிவிடுகிறாரா அபிஷேக் எனத் தெரியவில்லை. முடிவில் வேகமெடுப்பது சுவாரஸ்யம்.

Ranjha Ranjha - ரேகா பரத்வாஜ் குரலில் காதல் ஏக்கம் வழிவது போல் அருமையான பாடல். நீண்ட நாள் பிறகு ரஹ்மான் இசையில் அனுராதா ஸ்ரீராம். ஆல்பத்தின் சிறந்த பாடல். ஜாவேத் அலி குரலும் பாடலுக்குள் கலந்து ஓடுகிறது.

Kata kata - ரோஜாவில் வரும் ‘ருக்குமணி ருக்குமணி’ போன்ற பாடல் என்கிறார்கள். பலி ஆட்டை வெட்டப் போறாங்கடோய் என்ற ரீதியில் வரிகள் செல்கிறது.

Behne de - கார்த்திக் குரல் இல்லாமல் ரஹ்மான் ஆல்பம் எப்படி? இதோ. கார்த்திக் அருமையாக பாடியிருக்கிறார். காதல் வலியில் இருப்பவனின் பாடல் என புரிவதற்கு இந்தி புரியத் தேவையில்லை.

Khili re - ஒரு மென்மையான பாடல். மற்ற பாடல்கள் அளவிற்கு கவரவில்லை. ஆனால் பிடிக்கவில்லை என சொல்லிவிட இயலாது. பழைய ரஹ்மான் பாடல்களின் வாடை குபீரென அடிக்கிறது.

ஹிந்தியில் குல்சாரும், தமிழில் வைரமுத்துவுமாக பாடல்கள் எழுதுவது ‘உயிரே’ வை நினைவுக்கு கொண்டுவருகிறது. பாடல்கள் அனைத்தும் காட்சியமைப்பின் பலத்துக்காகவே ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. நிறைய எக்ஸ்பெரிமெண்ட் செய்திருக்கிறார் வழக்கம் போல. ஒரு நல்ல ஆல்பம். படத்தின் எதிர்பார்ப்புகளை ஏற்றிவிடுகிறது.

தமிழ் ட்ரைலர் பிடிச்சிட்டோம்ல!

Comments Posted (7)

ரகுமான் பாடல்களின் சுவையை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது சுலபமல்ல. கேட்டுட்டே இருக்கேன். ஒரு நாள் பனிக்குடம் உடையும் :))

@கார்க்கி
கண்டிப்பா, கேட்க கேட்க எங்கெங்க எதை பேக் பண்ணி வச்சிருக்காரு என்பது தெரியவரும் பொழுதுஆச்சரியமா இருக்கும்.

வெல் . .டு பீ ஃப்ரான்க், ராவணில் ரஹ்மான் புதிதாக எதுவுமே செய்யவில்லை என்பது தான் நான் கண்ட உண்மை . . மிக மிக சாதாரணமான இசை .. இதில் அவர் போட்ட இசை முழுதும், ஆல்ரெடி அவர் பல முறை போட்ட ஒன்று தான் . . (உதா - திருடா திருடா, தக்‌ஷக்). இந்தப்படத்தில் எந்தப் பாட்டுமே என்னைக் கவரவில்லை . .

அதேபோல், தற்சமயம், விஷால் பரத்வாஜின் இசையில் கிடைக்கும் ஃப்ரெஷ்னெஸ், ரஹ்மானின் இசையில் மிஸ்ஸிங். . ரஹ்மானுக்குத் தேவை கொஞ்சம் ரெஸ்ட் என்று எனக்குத் தோன்றுகிறது . . இது எனது கருத்து . .

அல்ரெடி டவுன்லோடட். இனி கேட்கனும். கேட்டுகிட்டே இருக்கனும்

@கருந்தேள்
யூஷுவல் ஃப்ரஷ்னஸ் இதில் இல்லை. நியாயம் தான். விஷால் பரத்வாஜ் போல புதுமை இல்லை. சரியே. ஆனால் பிடித்திருந்தது. இதை விட தில்லி - 6 மிகவும் எக்ஸ்பெரிமண்டலாக இருந்தது.

@ஆதவன்
ஆமா, ரஹ்மான் இசை தனுஷ் சொல்ற மாதிரி கேட்க கேட்க தான் பிடிக்கிறது

very nice. :-)

வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!