சில பயணங்கள் - 5

Filed under , , by Prabhu on 3/09/2010 08:05:00 AM

5

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4


பொங்கலுக்குப் பிறகே இரண்டு முறை பெங்களூர் சென்றுவிட்டேன். சினிமா பற்றி சிறிதாக முதல் பதிவில் பேசியிருந்தேன். சினிமா பற்றி மீண்டும் தொடருவோம். மதுரைக்காரன் - சினிமாப் பைத்தியம் என என் ஊருக்கு பட்டம் கட்ட முயற்சி வேண்டாம். பெங்களூரின் ஆச்சரியம் என்ன வென்றால் கன்னட படம் ரிலீஸாவது தெரியவில்லை. ஆனால் தமிழ் படம் ஜோராக ரிலீஸ் ஆகிறது. நான் பொங்கலுக்கு போன பொழுது ஊர் முழுக்க , ;குட்டி’, ‘கோவா’ பட போஸ்டர்கள் தான். அந்தப் படங்களுக்கும் பொதுவாக ஒட்டப் படும் போஸ்டர்கள் தவிர எங்கள் ஊரில் பல காலங்களுக்கு முன் ஒழிந்த மல்டிகலர் போஸ்டர்களும் ஒட்டுகிறார்கள். இது அஜய் அவன் சோனி செல் பேசியில் பிடித்தது.

இன்னுமா?

கன்னட படங்களைப் பற்றி பேசவில்லை என்றால் எப்படி? கன்னட பட ஹீரோக்கள் கவர்ச்சியாக இல்லை. ‘முங்காரு மலே’ கணேஷ் ஓ.கே என என் அண்ணன் சொல்வான். கன்னட பட போஸ்டர்கள் மிக அரிது. சமீபத்தில் போன பொழுது ‘ஆப்த ரக்‌ஷகா’ ரிலீஸ். விஷ்ணுவர்தன் கடைசியாக நடித்த படம். பாவம், போஸ்ட் புரொடக்‌ஷன் சமயத்தில் இறந்து போனார். ’ஆப்த மித்ரா’(சந்திரமுகி) வின் இரண்டாம் பாகம் எனப்  பரபரப்பாக பேசப்பட்ட படம். பண்பலையில் ‘விஷ்ணு வர்த்தன், விமலா ராமன் போன்றோர் நடித்த ஆப்த ரக்‌ஷகா’, ‘சூப்பர்ஹிட் பாடல்கள் கொண்ட படம் ஆப்த ரக்‌ஷகா’ என ’வாங்கிவிட்டீர்களா’ ரக விளம்பரங்களைப் போல கூவி விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் அந்த விளம்பரங்கள் நம் ஊரோடு ஒப்பிடும் பொழுது பத்தாண்டுகள் பின்னாடி இருந்தன போல் இருந்தது.


’நீ  ஒரு வயசா இருக்கும்போது பெங்களூர் முழுக்க சுத்திப் பார்த்தோம்’ என என் அம்மா சொல்வாங்க. எனக்கு நினைவிலில்லை. நான் விவரம் தெரிந்து நான்கு வருடம் முன் தான் பெங்களூர் சென்றேன். அப்பொழுது என் அண்ணன், அண்ணனின் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். ஒருவன் காலையில் எழுந்ததும் மணி அடித்து சாமி கும்பிடும் அளவு பக்தி பழம். இன்னொருவன் அப்பொழுதே இரண்டு செல்பேசிகள் வைத்துக் கொண்டு செல்பேசியின் ஸ்பீக்கர் வலிக்கும் வரை பேசுவான்; எந்நேரமும் ‘ஹி.. ஹி..’ என ஃபோனில் ஒரு சிரிப்பு; எப்படி பாஸ் இவ்வளவு நேரம் கடலை போடுறீங்க?

அவர்களுடன் BTM Layout  செல்லும் வழியில் ஏதோ தியேட்டரில் ஷகீலா படம் ஓடியது. அதில் ஆச்சரியம் என்னவென்கிறீர்களா. அந்த பக்திப் பழம் சொன்ன தகவல் தான் ஆச்சரியம். அந்த ஷகீலா படம் நூறு நாள் ஓடி குத்து விளக்கு ஏற்றிக் கொண்டாடியிருக்கின்றனர் பெங்களூர் தியேட்டர் பெருமக்கள். கேரளாவிற்கு பிறகு இந்தியாவிலேயே அதிக அளவிலான கவர்ச்சி படங்கள் வெளியாகும் மாநிலம் கர்நாடகாதானாம். ரொம்ப starvation போல. அதே போல நான் முதலில் பெங்களூரு சென்ற பொழுது ஊர் முழுக்க ஒரே நமீதா காய்ச்சல். நமீதா அப்போ தான் கன்னட எண்ட்ரி. ஹீரோ ஏதோ டி.ஆர்., மாதிரியான நடிப்பு மற்றும் இயக்கம் கேஸ் போல. கன்னட சினிமான்னு சொல்லிட்டு எனக்கு பிடிச்ச நடிகை ‘திவ்யா ஸ்பந்தனா’ என சொல்லாமல் போனா என் மனது சாந்தி அடையாது.

என் பெங்களூர் சினிமா அனுபவம் PVR cinemas பற்றி சொல்லாமல் முழுமை அடையாது. நான் 'Pirates of the Carribean Sea - At the world's end' அங்குதான் பார்த்தேன். படம் முழுக்க புயல் மழையென இருக்க, ஏதோ தியேட்டரில் என் பிடறிக்குப் பின்னால் நீர் விழுவது போலாக ஒலி அமைப்பு மிரட்டலாக இருந்தது தியேட்டரில். இந்திய அளவிலான இந்த திரையரங்கு சங்கிலி பெங்களூரில் Forumன் மூணாவது மாடியில் உள்ளது. அந்த மூணாவது மாடியிலேயே 11 ஸ்கிரீன் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் போன பொழுது அமிதாப் நடித்த 'Rann’ பார்த்தேன். வழக்கமான ஒரு நல்ல RGV படம். அந்தத் தியேட்டரில் மொக்க படம் பார்த்தால் கூட சுவாரஸ்யமாக இருக்கும் போலத் தோணியது. இதே தியேட்டருகில் காலேஜ் முயற்சி செய்து, ஆனால் அதே காலேஜின் வேறு கேம்பஸ் கிடைத்த சோகம் எனக்கு. ம்ஹூம்.

கன்னடத்தில் பெங்களூர் என்று வைத்து விட்டார்கள். நியாயமாக தமிழில் ’பெண்களூர்’ என்று வைத்திருக்க வேண்டும். கொடைக்கானலுக்கு பிறகு இயற்கையை வியந்த இடம் பெங்களூர் தான்.

இப்படியாக இந்தப் பயணத் தொடர் நிறைவடைகிறது. சுபம்!

Comments Posted (5)

சின்னச் சின்ன சுவாரஸியமான தகவல்கள் இந்த பயணத்தொடரில் இருந்தது பப்பு.
சினிமாவைப் பத்தி பதிவெழுதி மறுபடியும் தமிழன்னு நிரூபிச்சுட்ட :)

@ஆதவன்
ஹி.. ஹி..

ஆமா.. எந்த காலேஜ்? எந்த ஏரியா? நம்ம தற்காலிக ஏரியா பிடிஎம். நானு சீக்கிரமே வேற ஏரியா போகப்போறேன் . . நீங்க இங்க தான் இருக்கப்போற பட்சத்துல, நாம ஏன் சந்திக்கக்கூடாது? இருபது வரிகளுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக . .:-)

நீ பெங்களூர்க்கு எதோ 'பெரிய பிளான்' பண்ணியே போற மாதிரி இருக்குதே..!!

@ கருந்தேள் கண்ணாயிரம்

//நீங்க இங்க தான் இருக்கப்போற பட்சத்துல, நாம ஏன் சந்திக்கக்கூடாது?//

நீங்க 'கருந்தேள் கண்ணாத்தாவா' இருந்தா உடனடியா சந்திப்பதற்க்கான வாய்ப்புகள் அதிகம்..ஆனா நீங்க கண்ணாயிரமா போயிட்டிங்களே கொஞ்சம் பொறுமையா தான் சந்திப்பு அமையும்..:)

வழக்கம்போல் அருமை. இன்னுமா அந்த போஸ்டர்ஸ்? அதுவும் பெங்களூர்ல? :O

ஷகிலா? ஐ ஹோப் யு வில் என் ஜாய் யுவர் ஸ்டே தேர்! ;-)

ராம்கோபால்வர்மா படம் எப்படி பாக்குறீங்க? எனக்கென்னவோ அந்த கேமரா ஆங்கிள்ஸ், அப்புறம் அந்த பிஜிஎம் தாங்க முடியறதில்ல. :-(

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!