நித்ய’ஆனந்த’ அனுபவம்

Filed under , by Prabhu on 3/28/2010 05:11:00 AM

16

இதை ஒரு ஓட்டத்தில் சொல்லிவிடத்தான் எண்ணினேன். ஆனால் இது பலராலும் தொடப் படாத பகுதி என்பதாலும் இதற்கு தனி பதிவு பெற தகுதி இருப்பதாலும் தனியாக வெளியிடுகிறோம்.

அரிப்பு, சொறிதல் - இரண்டுமே பிரித்துப் பார்க்க முடியாத படி பின்னியிருக்கும் வார்த்தைகள். ஆங்கிலத்திலும் கூட. ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டு அடுத்ததைத் தவிர்க்க இயலாது. ’அவனுக்கு அரித்தது. அவன் சொறிந்து கொண்டான்’ என்ற உதாரணம் உங்களுக்கு இதை எளிமையாக விளக்கும்.

அறிவியல் கூறுவதுபடி அரிப்பும் வலியும் தூரத்து உறவாம். இரண்டுக்குமான உடல் வேதியியல் மாற்றங்கள் பல விதங்களில் ஒற்றுமையுடன் இருக்கிறது. வித்தியாசங்களும் உண்டு. இரண்டுமே தானியங்கிச் செயல்களைத் தூண்டுபவை. ஆனால் நான் பேசவந்தது அறிவியல் அல்லவே.

சொறிவது சுகமான அனுபவம். அதில் சில பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருக்கின்றன. சொறிவது நோயினால் மட்டுமல்ல படபடப்பு, பதட்டம் போன்றவற்றாலும் நிகழுகிறது. நான் சொறிவதை வைத்தே என் அம்மா என் எண்ணங்களைப் படிக்கிறார். சாப்பிடும் போது விழி பிதுங்க சொறிந்தேன் என்றால் சாப்பிட முடியல என புரிந்து கொண்டு அனுப்பிவிடுவார்.  NSS முகாம் சென்ற பொழுது ஒரு பேராசிரியர் சாப்பாடு விஷயத்தில் மிகக் கெடுபிடி. நாலு பருக்கை இருந்தால் கூட கூச்சப்படாமல் ’உள்ளே போய் இருப்பதை வழித்து தின்னுட்டு வா’ என விரட்டி விடுவார். வந்தவர்களோ வீணாக்குவதில் வள்ளலாக இருந்தார்கள். அதனால் குதிரை கொள்ளைத் தின்பது போல தட்டிலிருப்பதை அப்படியே வாயில் திணித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள். பொங்கலன்றும் அங்கேயே இருக்க நேர பொங்கல் நிறைய செய்து எல்லோர் தட்டிலும் கொட்டிவிட, நான் முக்கால்வாசி தின்னுவதற்குள் முழிபிதுங்க, நெளிந்து, தலையை சொறியும் கண்றாவியை காணச் சகிக்காமல் கொட்ட அனுமதித்தைக் கண்டு முகாமே மூக்கைச் சொறிந்தது.


’ ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. பக்கத்திலிருக்கும் ராணியை நோக்கி ராஜா தன் பார்வையை வீச, ராணி ராஜாவின் பின்னால் வந்து வசமாக சொறிந்து விடுவார். என்ன தான் ராஜாவாக இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் என்று என் நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் அதை கண்கூடாக பார்க்கிறேன். வீடுகளிலேயே நடக்கிறது, மனைவி கணவனுக்கு முதுகு சொறிந்து விடுவது. அதில் ஒரு அசால்ட்டான feudalism தெரிகிறது. அதே சமயம் ஒரு ஆசையும் தெரிகிறது. சுஜாதாவிடம் ஒரு புதிதாக மணமான வாலிபன் ஒருவன் கூறியதாக அவர் எழுதியது : ”கல்யாணம் செய்துகிட்டாலே இம்சைதான். ஆனால் என்னதான் சொன்னாலும் மனைவி முதுகு சொறிந்துவிடும் சுகத்துக்காக கண்டிப்பாக கல்யாணம் செய்துக்கலாம் சார்”. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

சிலசமயம் சொறியும் போது அது எரிச்சலின் வெளிப்பாடாக இருக்கும்.அப்படியே பிச்சுக்கலாம் போல இருக்கு என்போமே அந்த வகை.  ஆனால் விரைவில் மண்டை குளோபல் வார்மிங்கால் பாதிக்கப்பட்ட பூமி உருண்டையாக ஆகும் வாய்ப்பு அதிகம்.

 இதே போல கோபம், பொறுமை இனமை என எல்லாவற்றிற்கும் ஒரு வகை சொறியும் விதம் இருக்கிறது. சந்தோஷமாக இருந்தாலும் நிதானமாக வயிற்றில் சொறியும் ஒரு பழக்கம் இருக்கிறது - கடற்கரை அருகே காற்று வாங்கும் அனுபவம் போல. இது நிஜமாலுமே சொறிவது போல அல்ல. சாப்பிட்டுவிட்டு மெலிதாக உறக்கம் வரும் நேரம் வயிற்றை மென்மையாகத் தடவிக் கொடுத்தல் போன்ற நித்ய ஆனந்த அனுபவம்.  

போன வருடம் ரிசஷனின் பொழுது ஒருவனை வேலை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று அவன் விரக்தியில் தற்கொலை முடிவுக்கு வந்தான். பாலத்தின்  சுவர் மேல் நின்று குதிக்க இருக்கையில் கீழே ஆற்றங்கரையில் இரண்டு கைகளுமே இல்லாத ஒருவன் குதித்து குதித்து ஆடிக் கொண்டிருந்தான். அட, இரண்டு கை இல்லாதவனே சந்தோஷமாக இருக்கும் பொழுது நமக்கென்ன குறை வந்தது என்று தற்கொலை முயற்சியை கைவிட்டான். கீழே போய் அவனுக்கு நன்றி தெரிவிக்க சென்றான். இவனது நன்றியை கேட்ட அவன், ’ஆடிக்கொண்டிருக்கேனா? யோவ், நீ வேற கடுப்பேத்தாதே. முதுக்கு அரிக்குது. அதை சொறிய முடியாமல் தவிக்கிறேன். வந்துட்டான்’.



Comments Posted (16)

"சொரி"யா சொல்லிட்டீங்க.

haha. soooper post. :))

super சொரி. சாரி சாரி...super postனு சொல்ல வந்தேன்:)

கொட்டாவி மாதிரி.. இதை படிக்கும் போது.. உடம்பு முழுக்க சொறிஞ்சிக்கனும் போல தோணுதே..?

உங்களுக்கும் அந்த ஃபீலிங் வந்துச்சா??

தலைப்ப பார்த்து நண்பன் கவுத்திருவானோன்னு நினைச்சன். நல்ல வேலை ஏமாத்தல.
சுகமா எழுதிட்ட கடைசியா பத்தி சூப்பர்.

பப்பு சார் உங்க பதிவு அருமைங்க.
நேரம் கிடைச்சா இந்த நித்யானந்தாவை பத்தி நான் எழுதினையும் படிங்க சார்.
இந்த இழவுக்காகத்தான் விபச்சாரத்தை நான் சட்டபூர்வமாக்க சொல்றேன்.

@karthik @chitra @thamizhmangani
சொரிங்க!

@பாலா
அந்த மாதிரி ஃபீல் எல்லாம் எங்க ஜீன்லயே இருக்கு பிரிக்க முடியாது

@மணி
ஹேய், நம்ம எல்லாம் தப்பி தவறியாவது அடுத்தவன் சூட்டில குளிர் காயுற வேலைய பார்ப்போமா? நிறைய எழுதி கிழிச்ச விஷயங்களைத் தொடக்கூடாதென்பது கம்பெனி கொள்கை

@முருகேசன்
நன்றி

ஏங்க.. முருகேகசன் அம்புட்டு சொல்லுறாரு..! சும்மா வெறும் ’நன்றி’ன்னு சொல்லிட்டு விட்டுட்டீங்களே?

சொறிய சொறிய இன்பம்கிறது இதுதானோ..:-)))

அளவாக சொரியுங்க

பப்பு சார்,
என்ன வெறும் நன்றி மட்டும் தானா?
நீங்க என் ப்ளாகுக்கு வருவீங்கன்னு எவ்ளோ எதிர்பார்த்தேன்.
என்னை யாராவது பாராட்டமாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் தான் சார்.

பப்பு சார்,
என்ன வெறும் நன்றி மட்டும் தானா?
நீங்க என் ப்ளாகுக்கு வருவீங்கன்னு எவ்ளோ எதிர்பார்த்தேன்.
என்னை யாராவது பாராட்டமாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் தான் சார்.

ஹாலிவுட் பாலு சார் ரெகெமண்டேஷனுக்கு ரொம்ப நன்றிங்கசார்

arumai! arumai! paratukal.

@பாலா
வாங்கய்யா.. வாங்க கோர்த்துவிட.

@முருகேசன்
நேத்து உங்க சைட்டுக்கு வந்தா கோடிங்கா தெரிந்தது. அதான் ஒண்ணும் போடல. இப்போ தான் படிக்கிறேன்...

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது.
அவர்கள் சேரி பாலரை பட்டினி போட்டு
செய்தனர் பாலபிஷேகம்
நீ..பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அதை
அஞ்சல் செய்து மிஞ்சியதை கொட்டுங்கள்.
வாங்கிக்கொள்வது
சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும்,
அதன் பின்னான பாவமுமே முக்கியம்
என்பது உன் ஆணை

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
மேலுலகின் அதிர்வுகள் உன்னை அண்டாத போது
தீண்டத்தகாதவனாய் , நெஞ்சில் இருள் மண்டியிருந்ததுண்டு
அதிர்வுகள் துவங்கியது

பகிர்வுகள் துவங்குவது வழக்கம் தானே
உன் கவிதையின் இடைவெளிகளில் ஓங்கார முழக்கம் தானே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான
கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து மகிழும் மண்டூகங்கள்
மண்மூடிப்போகும்.
கண் மூடி யோசி
இறையருள் யாசி

காசியில் குடிபுகுந்தாலும்
பாவம் தொலையாத பாதகருக்கும் சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோ பீஷ்டம்

பாவம் அவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் உன் ஆணைகளை இவர்கள் கெஞ்சலாக பார்க்கின்றனர்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்.
மரை கழன்ற மந்தர்களின் செவியில் மறையின் மறை பொருள் உணர்ந்த
உன் உரை புகுமோ?

மாவரைக்கும் மிஷின் களாய், துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழன்று
சுவர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவிகளால்
காது குடையும் முடை நாற்றமெடுத்த கிடையில்
உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத "சோ" தலையர்கள்
ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே
இவர்களை பாதிக்கின்றன.

ஊதும் சங்கை ஊதிவை.
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.
மந்தர்கள் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன்னுள் உறை பரமனுக்கு முகமன் சொல்லி
முத்தமிழ் கடல் மூழ்கி முத்தெடுத்து வலைப்பூவில் பதித்து
பூக்களை தொடுத்து மாலையாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள்
வாழ்க்கையில்
என்றரற்றி பொருளுக்காக வாழ்க்கையையும் வாக்கையும்
அடகு வைத்து வீண முத்தர்கள் ஆகிப்போன
வாணி புத்திரர்களை மறந்துவிடாதே
நெஞ்சக்கழல் துறந்துவிடாதே
மேகத்துக்கப்பாலிருந்து
கொட்டும் வார்த்தைகளை வாங்கி வை
நினைவில் தேங்க வை
பண்ணில் மானுடம் ஓங்க வை

நீயா எழுதுகிறாய்.
படியளுக்கும் பெருமான் கொட்ட
படியெடுக்கும் பணியாள் நீ
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
பார் முழுக்க பல்லாயிரம்
சாதியார்
ஆசை தணியார்
பரமனுக்கு பணியார்
அடக்கம் அணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து

காத்தவன் இழப்பான்
இழப்பவன் பெறுவான் இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனிதமனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கையுண்டு இளமையில் முதுமை
எதிலும் இயலாமை
கருசுமக்க ஆள் தேடுவோர்
இனி கருவாக்கவும் தேடுவரோ?

சகதியை யொத்த சங்கதி பலவுண்டு
சக்தி இழந்துவிட்டார்.
சிவனார் போல் தானே
மண வாழ்வை மயானமாக்கி
சிவ தாண்டவம் புரிகின்றார்.

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாய் சில வாக்கியங்கள் கூறிவிட்டு
உன் இறை தேடி மறை புகுவாய்

வாழும் மாந்தரை பார்
வீழும் வீணரை பார்
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை

முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல் தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்
நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?


நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேணும்
எழுது
சமகாலர்கள் சமாதிகளின் மீதாவது
உன் கவிதைகள் அபாய விளக்குகளாய் ஒளிரட்டும்

நாளைய சமூகமேனும் செழிக்கட்டும்.

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
ஆகப்போவதென்ன ஆண் பிள்ளை அழுது ........
புதிதாய் பாழாகப்போவதென்ன
மனிதனே பழுது

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!