டாப்பு அடிக்கலாம் - 10

Filed under , by Prabhu on 5/16/2010 12:35:00 PM

14

ராவணன் தமிழிலும் வெளியாகிவிட்டது. பொதுவாக ரஹ்மான் ஆல்பம் வெளியானால் எந்நேரமும் அதே பாடலே கணிணியில் ஓடிக் கொண்டிருக்கும். இந்த தடவை அப்படியில்லை. ராவணன் படம் கோபத் காண்டே என்ற நக்சல் தலைவன் சம்பந்தமான கதை என்று விகடனில் சொல்லுகிறார்கள். மணிரத்னம் இதை மறுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அப்ப கண்டிப்பா இது நக்சலோட கதைதான். ஏற்கனவே இப்படித்தான் இருவர், குரு போன்ற படங்களுக்கு நிஜ கதை இல்லை என்றார். His refusal is as good as acceptance.
------------------------------------------------------------------------------------

பாணா காத்தாடி பட பாடல்கள் பரவாயில்லை. கேட்கலாம். வழக்கம் போல மூக்கில் பாட ஒரு பாட்டு வைத்திருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.

------------------------------------------------------------------------------------

வர வர நிலைமை பாடாதியாகிக் கொண்டிருக்கிறது. கடைசியாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் போது தொடங்கியது பிறகு அங்கிருந்து ,மதுரை திரும்பும் போதும் அதன் பிறகு மதுரையிலும் தொடர்கிறது. எங்கே திரும்பினாலும் நடக்கிறது. பைக்கில் செல்லும் போது முன் செல்லும் வண்டியின் பில்லியனில் ஒரு அழகான பெண். ஓவர் டேக் செய்கையில் பார்த்தால் அந்த ஓட்டுநரின் முன்னே பெட்ரோல் டாங்கில் 5 வயசு குழந்தை. இப்படி தான் எங்கே பார்த்தாலும். கல்யாணம் ஆனவர்களுக்கும் ஆகாத பெண்களுக்கும் இடையில் ஒரு சேலை, பத்து கிலோ எடை என்ற வித்தியாசத்தைக் கடைபிடிக்கும் தமிழ் கலாசாரம் எங்கே போனது? என்ன கொடுமை சரவணன் இது?!

------------------------------------------------------------------------------------

பிளஸ்2 ரிசல்ட் வெளி வந்திருச்சாம். யாருக்கு வேணும்? நான் எழுதிய வருடங்களுக்கு முன்னயோ பின்னயோ 10ம், 12 வகுப்பு அரசுத் தேர்வுகளைப் பற்றி யோசித்ததே இல்லை. எனக்கு இந்த பரிட்சை, அதுக்கு படிப்பு போன்ற விஷயங்கள் பிடிக்கவே இல்லை. மொக்கையா இருக்கு. நம்ம எஜுகேஷன் சிஸ்டமே ஒருவகையில் பெண்கள் ஆதரவாக தான் இருக்கு. இதை யாரோ சைக்காலஜிஸ்டே சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி தியரைஸ்ட் படிப்பு பசங்க மூளைக்கு வேலைக்கு ஆகாதாம். அப்புறம், எல்லா வருடமும் பெண்களே சாதிக்கிறார்கள் என்பது தில்லாலங்கடி வேலைதானே?

------------------------------------------------------------------------------------

இந்த நடிகர்கள் இளவரசு வையும், ‘மகாநதி’ சங்கரையும் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொரு படத்திலும் வந்து ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப் தாங்க முடியவில்லை. அவர் இவரு அவரு, கிழிச்சிருவார், தைச்சிருவாரு என கொல்றாய்ங்கப்பா! அதுவும் கடைசி சில படங்களில் மகா மொக்கை! யாருய்யா அது, சுறா ந்க்கிறது? நான் விஜய பத்தி தப்பா பேசாத ஒரே பதிவர் என கார்க்கி கிட்ட சொல்லிருக்கேன். அதைக் காப்பாத்துறேன். ஒரே ஆள எல்லாரும் அடிககிறது வீரமில்ல. வாங்க, வேற யாரையாவது குத்தலாம். :)

------------------------------------------------------------------------------------

இந்த தடவை லிட்டில் ஜான் வேணாம். வேற ஒன்று.

ஒரு வட இந்தியன் வழிப்பறி கேசில் மாடிக் கொண்டான். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்த வட இந்தியனின் வக்கீல், ‘என் தரப்பு ஆசாமி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இந்த ஊரைப் பத்தி ஒன்னும் தெரியாது. தமிழே சில வார்த்தைகள் தான் பேசத் தெரியும். ஆதலால் இந்த அப்பாவியை விடுதலை செய்ய வேண்டுகிறேன்.’

நீதிபதி வட இந்தியனைப் பார்த்து, ‘உனக்கு தமிழ் எவ்வளவு தூரம் தெரியும்?’ என்றார்.

அதற்கு அவன் உடைந்த தமிழில், ‘மரியாதையா உன்னோட பர்ஸை என்கிட்ட கொடுத்துரு’ என்றான்.

Comments Posted (14)

நான் 'உயிரே' பாட்டு கேட்டுட்டு இருக்கேன் பாஸ். 'மோகத்தினால் வரும் பித்து நிலை. இது மோசமில்லை ஒரு முக்தி நிலை' வாவ்! :)

//கல்யாணம் ஆனவர்களுக்கும் ஆகாத பெண்களுக்கும் இடையில் ஒரு சேலை, பத்து கிலோ எடை என்ற வித்தியாசத்தைக் கடைபிடிக்கும் தமிழ் கலாசாரம் எங்கே போனது?

பின்றீங்க. நானும் இதேதான் சொல்லனும்னு நெனைச்சிட்டு இருந்தேன். :)

விஜயை அடிக்கிறது வீரமில்லைனு அவர காமெடி பீஸாக்கிட்டீங்க. நல்லா இருங்க. :))

வீ வான்ட் லிட்டில் ஜான் பேக்!

அந்த நார்த் இந்தியன் காமெடி..
:-))

ஆளு சத்தத்தையே காணோமேப்பா? அடிக்கடி வாங்க.. (யார அடிக்கன்னு கேக்கப்புடாது..)

@karthik
அஃதே. இன்னும் பழைய பாடல்கள் கேட்டுட்டிருக்கேன்.

நான் காமெடி பீஸுன்னெல்லாம் சொல்லல. கார்க்கி கொஞ்சம் கவனிங்க!

@ராஜூ
அது ஆக்சுவலி இத்தாலியன் அமெரிக்கா போன கதை. நான் கொஞ்சம் மாத்தியாச்சு!

@கா.பா
ஒரே பிஸி! :)

// ஒரே ஆள எல்லாரும் அடிககிறது வீரமில்ல//

நீங்க கனவுகளின் காதலன் ப்லாகில் அவர் சுறாவுக்கு சூப் வைச்ச பதிவை படிச்சிப் பாருங்க. முடிஞ்சா.. Car Key-யையும்... எடுத்துக்கிட்டு வாங்க.

பப்பு சார்,
அருமை சார்.நீங்க எப்போ வேணும்னாலும் சித்தூர் வந்து என்கிட்ட ஜோசியம் கேக்கலாம்,போகும்போது 2கிலோ சித்தூர் பால்கோவாவும் சேவுமுறுக்கும் குடுப்பேன்,அதையும் வாங்கிட்டு போலாம்.பதிவுலகத்தில் கோவி கண்ணனுக்கு அடுத்து அந்த டெப்த் ஆன எழுத்தை உங்க கிட்ட பாக்கறேன் சார்.கீப் இட் அப்.என் அனுபவம் தான் சார் உங்க வயசு,ஆனா அபார வீச்சு உங்களிடம்.

உங்க ப்ளாகோட ஜாதகம்
அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு உங்க ப்ளாகோட ஜாதகம்ங்கற இந்த பதிவோட‌ நான் கனவு காணும் ஒரு ஜோதிட நிகழ்ச்சி பற்றிய பதிவையும் , பகவத்கீதை ஒரு உட்டாலக்கட்டி தொடர்பதிவோட 7 ஆம் அத்யாயத்தையும் கூட போட்டிருக்கேன் அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா

மனுஷ ஜாதகத்தை கணிக்க அனேக வெப்சைட்ஸ் இருக்கிறாப்ல நம்ம சைட்/ப்ளாகோட ஜாதகத்தை கணிச்சு சொல்லவும் அனேக வெப்சைட்ஸ் இருக்குங்கண்ணா. அதுல சில சைட்ஸோட யு ஆர் எல்

http://www.websiteoutlook.com
http://www.websiteaccountant.com
http://www.alexa.com
http://www.trafficestimate.com

இன்னம் மஸ்தா கீதுங்கண்ணா. கூகுல்ல போயி value of a site, site ranking இப்படி மாத்தி மாத்தி அடிச்சு தேடுங்கண்ணா

இந்த சைட்ஸ்ல லாகின் பண்ணி உங்க சைட்/ப்ளாக் பேரை டைப்படிச்சாலே போதும் உங்க ப்ளாகோட ஜாதகத்தை சொல்லிருதுங்க. எத்தனை பேர் பார்த்தாங்க, எத்தனை சைட்ஸ் உங்க சைட்டை லிங்க் பண்ணுது மாதிரி சமாசாரங்களையெல்லாம் அள்ளி வீசுங்கண்ணா.

நேத்து கூகுல்ல சர்ஃப் பண்ணிக்கிட்டிருந்தப்ப ட்ராஃபிக் எஸ்டிமேட் டாட்காம்னு ஒரு வெப்சைட் மாட்டிக்கிச்சு. சரி நம்ம ப்ளாகோட ஜாதகம்தான் என்னனு தட்டினேன். அந்த சைட் கொடுத்த டேட்டாவின் படி நம்ம கவிதை07 க்கு கடந்த 30 நாட்கள்ள 85ஆயிரத்து 700 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு. ( ஹிட் கவுண்டர்ஸுக்கும் இதுக்கும் ஏன் இவ்ள வித்யாசம்? யார்னா விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லாருக்கும்.

(சில நாள் நான் நாலணா ரிப்போர்ட்டரா வேலை பார்த்த தினத்தந்திக்கு 18லட்சத்து 52 ஆயிரத்து 500 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு.ரெண்டுத்துக்கும் வித்யாசம் ஜஸ்ட் 17லட்சத்து 66 ஆயிரத்து 800 தான். என்னைக்கோ ஒரு நாள் பீட் பண்ணிருவமில்லை. சொம்மா காமெடிண்ணே )

வழக்கமா நாம ப்ளாக்ல வைக்கிற ஹிட் கவுண்டர் கணக்குப்படி பார்த்தா கூட ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை நெருங்கி கிட்டிருக்கோம், இதுலயும் நல்ல வளர்ச்சி தான் தலைவா!.

கடந்த மே மாசத்துல இருந்து 10மாசத்துல ஒரு லட்சம் அடிச்சோம். இந்த ரெண்டரை மாசத்துலயே 50 ஆயிரத்தை நோக்கி இரைக்க இரைக்க ஓடிக்கிட்டிருக்கோம்.

சனம் கண்டுக்கறதில்லை. கமெண்ட் போடறதில்லைனு ஒரு கூட்டம் கூவுது.ஆனால் பாருங்க நம்ம மெயில் பாக்ஸ் எப்பவும் ஹவுஸ் ஃபுல்லாவே கீது. விஷயம் என்னடான்னா நான் பதிவுகள்ள சொல்ற சமாசாரங்களை பகிரங்கமா ஒத்துக்கற தகிரியம் அவிகளுக்கு இல்லியே தவிர கு.ப தனிப்பட்ட மெயில்லயாவது தங்கள் கருத்தை தெரிவிக்கிற நியாய உணர்ச்சி இருக்கு. அவிக எனக்கே எனக்குனு எழுதற மெயில்ஸ் பகிரங்கப்படுத்தக்கூடாதுங்கற பொறுப்புணர்ச்சி எனக்கு இருக்கு.

இந்த சந்தோசகரமான சிச்சுவேசன்ல நம்ம வலைப்பூவோட பேரை கொஞ்சமா அனலைஸ் பண்ணி பார்ப்போம்.

"கவி"ங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் ஒன்னு கவிஞர் அடுத்தது குரங்கு.
( நமக்கு ஆஞ்சனேயருக்கு சூ.........ப்பர் கெமிஸ்டரிண்ணே) "தை"பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு ? தை பிறந்தா வழி பிறக்கும். சரி "க" வுக்கு "கா" விட்டுட்டு பார்த்தா "விதை" மூட நம்பிக்கைக்கு டாட்டா சொல்லி அக்மார்க் இறை நம்பிக்கைக்கு மட்டும் பிர்லா (டாட்டாவுக்கு எதிர்பதம் பிர்லா இல்லிங்களா அப்போ ஹலோனு வச்சிக்குவம்) சொல்லற புது நடைமுறைக்கு விதை போட்டிருக்கோம்.

இன்னும் என்னென்ன பண்ணலாம்னு ஆர்னா ஐடியா கொடுத்தா இன்னும் தூளா இருக்குமுங்கண்ணா !

// பொதுவாக ரஹ்மான் ஆல்பம் வெளியானால் எந்நேரமும் அதே பாடலே கணிணியில் ஓடிக் கொண்டிருக்கும். இந்த தடவை அப்படியில்லை. //

அதுக்குள்ள இப்படி சொல்லிட்டீங்களே பப்பு.. இன்னும் கொஞ்சம் கேட்டுட்டு சொல்லுங்க..

இந்திய திரை இசையைப் பொருத்தவரை, இதையே எதிர்பார்க்கின்றனர்.
1. கேட்டவுடன் ஹிட் ஆகும் பாடலாக இருக்கவேண்டும்.
2. கேட்க இனிமையாக இருக்க வேண்டும்.
3. மெலடி, ஃபாஸ்ட் பீட் என வகை வகையாக இருக்க வேண்டும்.

ரோஜா, பம்பாய், உயிரே, முதல்வன், அலைபாயுதே போன்ற பாடல்கள் இந்தவகை.. மிக எளிமையானவை.. கேட்ட முதல்முறையே பிடிக்கும் வகை.. பாடல்கள் கேட்க எப்போதும் இனிமையாக இருக்கும்... (இவை அனைத்தும் எனக்கும் பிடித்தவை)

ஆனால், ரஹ்மான் இசைத்த, Taal, Bombay Dreams, லகான், ஸ்வதேஷ், ஜோதா அக்பர், குரு, Slumdog Millionaire, ADA, Connections, Couples Retreat, ராவணன் போன்றவை வேறு வகை...
1. முதல்முறை கேட்டவுடன் பிடிக்காது.. (இங்கேயே பலபேர் கேட்பதை நிறுத்திவிட்டு பாட்டு சரியில்லை என புலம்புகின்றனர்)
2. முதலில் ரொம்ப பிடிக்கும் ஃபாஸ்ட் பீட் பாடல்கள் பின்னர் அவ்வளவாக பிடிக்காது.. இவை விள்ம்பரத்திறக்காக உபயோகப் படித்தப்படுகின்றன. (உதா. Shakalakka Baby from Mudhalavan, (Now most people like Kurukku siruththavale more than shakalaka baby, or recently, Veera in Raavanan)
3. பலநாள் கேட்டபின் பிடிக்கும் பிடிக்கும் பாடல்கள், காலத்திற்கும் நெஞ்சில் நிற்கும்.

இன்னும் கொஞ்சம் கேட்டுட்டு சொல்லுங்க..

//தமிழ் கலாசாரம் எங்கே போனது? //

:)

ஐயா ஜோசியக்காரரே,
நீங்க ஏன் உங்க விளம்பர பலகையை எல்லா இடத்திலயும் மாட்டுறீங்க?
யாருங்க அது கோவிகண்ணன்,பக்கத்து இலைக்கு பாயசமா?நீங்க என்ன எழுத்து கலைக்கு நடுவரா?இல்ல நீதிபதியா?கொடுமை,எங்க போனாலும் உம்ம போர்டு தான்.

ஐயா இத மற்ந்துட்டேன்
அது என்ன 2கிலோ பால்கோவா?அது என்ன சேவு முறுக்கு,எல்லாம் காஞ்சி கிடக்கோமா?ஏன் மதுரைல கிடைக்காதா?

@ஜெய்
பாஸ், Connections ஆல்பம் என் mp3 playerல எப்பவுமே இருக்கு பாஸ். ஆனாலும் அதையும் ராவணன் கிரேட் எல்லாம் இல்லை. நல்ல பாட்டுகள் தான். ஹிந்தில பெட்டர். அவ்வளவுதான்.

பப்பு.. :)
அஞ்சு வருஷமா தினமும் ஆஃபீஸ் போறப்போ பஸ்ல ரெண்டு மணி நேரம் ரஹ்மான் பாட்டு மட்டுமே கேக்கறேன்.. Connections-ல இருக்கற Mosquito and Mann Chandre என்னோட all time favorite list-ல இருக்கும்.. mosquito is probably the best ever.. கொஞ்ச நாள் கேட்டு பாருங்க.. முதல் முறை பிடிக்காம இருக்கலாம்..

//அபார வீச்சு உங்களிடம்.//

மதுரயில்லையா ? 'வீச்சு' இருக்கத்தான் செய்யும்... :)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!