நிலவு கரையும் முன்...

Filed under , , by Prabhu on 3/01/2010 10:55:00 AM

14

பூமியின் நிழலில் நிலா ஒளிந்த
அந்த வேளையின் இருளில்
தொலைத்த உன்னை,
ஒவ்வொரு தேய்பிறையிலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
மெல்ல கரைந்து இருளில் கலக்கும் முன்
மங்கிய ஒளியில் உன் கை பிடித்து
சூரியன் உறையும் உலகை நோக்கி செல்வேன்.


கொஞ்சம் அறிவியல் பிண்ணனி - இது சந்திர கிரகணம் வைத்து எழுதியது. பூமியின் நிழலுக்குள் முழுதாக எப்போதாவது வரும் வேளையில் மட்டுமே முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. உபயம் - விக்கி

Comments Posted (14)

ரொம்ப நாள் கழிச்சி.. ஏரியா பக்கம் வந்தா... அப்பவும் கவிதையா?????

இந்த லவ்வை விட்டா.. வேற எழுதவே மாட்டீங்களா..???

புரிஞ்சிருந்தாலும் பரவாயில்லை!! இந்தக் கவிஞர்கள் எல்லாம் கூடவே கோனார் நோட்ஸையும் போடுங்கப்பா...

யேய்.... பாலா கிட்ட இருந்து பின்னூட்டம்! பாஸ் எம்பூட்டு நாள் ஆச்சு!

ஐயா, லவ் கதை மாதிரி ஈஸி எதுவும் இல்லை... மெட்டீரியலிஸ்டிக்கா எழுதும் போது மத்த தீம்லாம் கொஞ்சம் கச்டமா போகுது. நிறைய யோசிக்கனும். இது பொங்குது.

என்னையும் தொடர்பதிவெல்லாம் எழுத வச்சுட்டாங்க பாத்தீங்களா?

இதுக்கு முன்னாடி வேற ஸ்டஃப்லாம் எழுதிருக்கேன். போய் பாருங்க.

அது !! ஆனா கொஞ்ஜம் யோசிச்சி பார்த்தா, ரொமாண்டிக்காத்தேன் இருக்கு . . :-)

வெரிகுட்...

பாராட்டு கவிதைக்கு மட்டும் இல்ல...இந்த மாதிரி ஒவ்வொருத்தரும் கவிதைக்கான விளக்கத்தை போட்டா நாடு எவ்ளோ சுபிக்‌ஷமா இருக்கும்?

@ஆதவன்
கொஞ்சோண்டு அறிவியல் இருப்பதால் மட்டுமே விளக்கமெல்லாம்.. மத்தபடி....
எனக்கும் கவிதையெல்லாம் ஒரு நாலு பேருக்காவது புரியாதான்னு ஆசைதான் :)

என்னனு சொல்லுறது.. வாயடைத்து போய் நிற்கிறேன் !!

//ஒவ்வொரு தேய்பிறையிலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.//
வெளிச்சத்துல try பண்ணிப் பாருங்க.

@வினோத்
.....

@ஸ்ரீ
பாஸ், அவள் அப்சரஸ் போல... இரவுகளில் நிலா வெளிச்சத்தில் உலவும் தேவதை.

ரசித்தேன்

ஒரு பொண்ணை எதுக்குய்யா வெளிச்சமான இடத்துக்கு கூட்டிட்டு போற? நீர் இன்னும் குழந்தைதான் :)

@நீச்சல்
என்ன பேருங்க இது?

@வெற்றீ
ஐயா ஏற்கனவே சொல்லிருக்கேனே... அவள் அப்சரஸ்.. இரவில் தான்

SUPPER...........

இதுக்குப் போயி இவ்வளவு மெனக்கெட வேணாம் :-)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!