சில பயணங்கள் - 4

Filed under , by Prabhu on 3/06/2010 09:37:00 AM

8

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
Forumல் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான் : உணவு, பெண்கள். இரண்டிற்குமான ஒற்றுமையை நான் சொன்னால் ஆபாசமாகிவிடுமென்பதால் விட்டுவிடுவோம். அங்கே எல்லோரும் மிகச் சுதந்திரமாக இருக்கிறார்கள். பொதுவாகவே சாலையில் பெண்கள் ஆண்கள் கைகளைப் பிடித்து செல்வது சகஜமாகவே இருக்கிறது. அங்கே ஷோகேசில் ஒரு பொம்மை இருந்தது. ஆனால் குட்டையாக, கொஞ்ச அதிகமான சதைப்பிடிப்புடன் யாரு ஷோகேஸ் பொம்மை செய்கிறார் என யோசிக்கும் நேரத்தில்தான் தெரிந்தது அது ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்று. ஏன் இப்படி கண்ணாடிகிட்ட நின்று குழப்புகிறாள்? இந்த ஊருக்கு எந்த எந்த ஊரில் இருந்தெல்லாம் வருகிறார்களென இங்கு தெரிகிறது. வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பது போல தெரிகிறது. அல்லது அவர்களுடைய ‘சங்கி மங்கி’ தன மூஞ்சி காட்டிக் கொடுக்கிறதோ என்னவோ.
மெக் டொனால்ட் - சீச்சீ புளிக்கும்...
PVR Cinemasன் 11 திரையரங்குகள் மூன்றாவது மாடியில் இருக்கிறன. அவற்றைப் பற்றி வேறு ஒரு பதிவில் எழுதி வைத்திருக்கிறேன். பிறகு வெளியிடுகிறேன். MCDonald burger(பாலாவின்Food Inc., பதிவு படித்திருந்தால் இது நடந்திருக்காது) உடன் கிளம்பும் நேரத்தில் Landmark நினைவிற்கு வந்தது. அங்கே சென்று புத்தகங்கள் இருக்கும் பகுதியில் ஒரு ஒரு மணிநேரம் செலவானது. ராமானுஜன் என்று ஒருத்தரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், தேடின பொழுது கைக்காசு இடித்ததால், தாகூர் ‘கீதாஞ்சலி’யில் அப்படி என்ன எழுதியிருக்கிறார் எனப் பார்க்க வாங்கினேன். ஆனாலும் ராமானுஜன் புத்தகத்தை அங்கேயே உட்கார்ந்து சிறிது தேய்த்துவிட்டுதான் வந்தேன். Sachin Garg என ஒருவர் எழுதிய ‘A sunny shady life' எடுத்தேன். சேத்தனின் FPS ரகத்தில் எழுதியிருப்பார் போல. படித்துவிட்டு சொல்கிறேன். 

K.R.Marketஅருகே ஒரு மசூதி
K.R.Market என்று ஒரு ஏரியா பெங்களூரில் இருக்கிறது. கோரமங்களாவில் இருந்து 340 வரிசையில் பல பஸ்கள் Forum வழியாக மார்க்கெட் செல்கிறது. மார்க்கெட் பகுதியை பார்க்கும் பொழுது இதுதான் பழைய பெங்களூரோ எனத் தோன்றுகிறது. அந்த வீதிகளைக் காணும் பொழுது இப்பொழுது பெங்களூரில் இருக்கும் அந்த வெளிநாட்டுத்தனம் சிறிதும் இல்லாத ஒரு சாதாரண இந்தியக் கடைத்தெரு போன்று இருக்கிறது. எனக்கு அந்தக் கடைத்தெருவைப் பார்த்ததும் மதுரை டவுன்ஹால் ரோடு போன்று இருந்தது. பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்து மதுரையை சிறிதே மறந்துவிட்டவனைக் கொண்டு வந்து நிறுத்தி டவுன்ஹால் ரோடு என்று சொன்னால் சிறிது நேரத்திற்கு நம்பியே விடுவான் போலிருந்தது எனக்கு. உள்ளே நடக்கும் பொழுது என் சொந்த ஊரில் நடப்பது போல உரிமையுடன் நடந்தேன். அங்கே இலியாஹூ.எம்.கோல்ட்ராட் எழுதிய, ' The Goal’ என்ற மேலாண்மை கோட்பாடுகள் கலந்த நாவல் வாங்கினேன்.  இது சில காலம் முன்பு ஆனந்த விகடனில் தமிழாக்கப்பெற்று தொடராக வெளிவந்தது. இதை வாங்கிய சில நாட்களில் படித்தாகிவிட்டது. இன்னும் சில விஷயங்கள் விளங்கவில்லை. மற்றபடி சுவாரஸ்யமான நாவல். தமிழாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல் இருப்பவைகளைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்கு தாவு தீர்ந்துவிடும் என்பதால் கூட இருக்கலாம்.  ஆங், சொல்ல மறந்துவிட்டேன், இந்த மார்க்கெட் அருகே பெங்களூர் கோட்டை என்று ஒன்று இருந்தது. அது திப்பு சுல்தான் கோட்டை என்று சொன்னாலும், ஆரம்பத்தில் அது கெம்ப கவுடா என்னும் விஜயநகர பிரதிநிதியால் கட்டப்பெற்றது என்பதும் பின்னால் பிரிட்டிஷார் வயிற்றுக்குள் போகும் முன் வரை ஹைதர் அலி-திப்புவின் கைகளில் இருந்தது என்பதும் விக்கிபீடியாவின் வாக்கு. அந்த கெம்ப கவுடா பெயரில் பெங்களூரில் ஒரு பகுதி கூட இருக்கிறது.



Qutub Minar
மேலே இருக்கும் இரண்டு படங்களும் லால் பாக்கில் எடுத்தது. நல்ல பெரிய பார்க் அது. எக்கசக்க மரங்கள். எங்கள் ஊரில் ஒத்த மரம் நிற்க வக்கில்லை. நகரத்திற்குள் இவ்வளவு பெரிய பார்க் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, தமிழகத்தில்.

 எல்லா வேலைகளும் முடித்துக் கிளம்பும் போது எண்ண ஓட்டங்கள் வேறு விதமாக இருந்தது. Introspection. வெளியூர் பயணங்கள் அதை உண்டாக்க வல்லது. பிற ஊர்களில் பயணம் செய்கையில் வெவ்வேறு மக்களைப் பார்க்கையில் எண்ண ஓட்டங்கள் சீராக ஓடுகின்றன; நம்மை சுய மதிப்பீடு செய்கின்றன. எனக்கு, இது எண்ண ஓட்டங்களுக்கான பயிற்சி என்பது போன்ற உணர்வு. இப்படி சென்ற எண்ண ஓட்டங்கள் என் பிரச்சனைகளை அலச உதவியாய் இருந்தது.

இன்னும் ஒரு பதிவு மிச்சம் இருக்கிறது. அதை இரண்டொரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். சென்னை போனதையும் சேர்த்து எழுதுவதற்குத் தான் சில பயணங்கள் என்று தலைப்பிட்டேன். ஆனால் இதற்கே ரொம்ப நாட்கள் எடுத்துக் கொண்டதால் நிறைய தகவல்கள் மறந்து விட்டன. சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அண்ணா ‘சாலை’ என்று சொல்கிறார்கள். ஆனால் அது, கோச்சடையில் ஆரம்பித்து விரகனூர் சுற்றுச்சாலையை தாண்டும் போலிருக்கிறது.(இவ்வளவு தான் மதுரையின் குறுக்களவு அளவு என்பதனை கொள்க!).  சென்னையில் இரவு நேரத்தில் பேருந்தில் ஏறினால் ஒரு தீர்த்தம் உண்டவரையாவது  (மோந்து) பார்க்காமல் இறங்க மாட்டீர்கள். இந்த இரவு நேரம் என்பது ஏழு மணியிலேயே தொடங்கிவிடுகிறது. நல்ல ஊருய்யா. என்ன தான் இருந்தாலும், நம்ம ஊரோட பிரதிநிதியா நம்மை நினைத்துக் கொண்டு அடுத்த ஊரை கிழிப்பதில் உள்ள சுகமே தனி.

Comments Posted (8)

//நம்ம ஊரோட பிரதிநிதியா நம்மை நினைத்துக் கொண்டு அடுத்த ஊரை கிழிப்பதில் உள்ள சுகமே தனி. //

தமிழன்யா நீர்! :) அப்ப அடுத்த பாகத்துல முடிஞ்சிருமா?

போரம்மில் ஒரு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்தால் கூட பொழுது போனது தெரியாது.. பெண்களூர்...

கேபிள் சங்கர்

@ஆதவன்

ஹி... ஹி... obviously தமிழன். கண்டிப்பா முடியுது. நான் என்ன மிக்ஸரா எழுதுறேன் :)

@கேபிள் ஷங்கர்
கண்டிப்பா ஃபோரம்கிட்ட இருக்கிற காலேஜ் கேம்பஸ் கெடைக்கலன்னு தான் ஃபீலிங். பெரிய ப்ளான்லா வச்சிருந்தேன் ;(

//பிற ஊர்களில் பயணம் செய்கையில் வெவ்வேறு மக்களைப் பார்க்கையில் எண்ண ஓட்டங்கள் சீராக ஓடுகின்றன; நம்மை சுய மதிப்பீடு செய்கின்றன. எனக்கு, இது எண்ண ஓட்டங்களுக்கான பயிற்சி என்பது போன்ற உணர்வு.//

ஒவ்வொரு பயணத்தின்போதும் நான் இதை உணர்வேன்.

ரொம்ப நல்லாருக்கு இந்த போஸ்ட். இந்த சீரிஸ்ல சில போஸ்ட் நான் மிஸ் பண்ணியிருக்கேன்னு நெனைக்கறேன். சீக்கிரம் படிக்கறேன். :)

கடைசி பஞ்ச் சூப்பர். சென்னை அனுபவங்களையும் கண்டிப்பா எழுதணும் மன்னா!!

எப்படி இருந்தாலும் கொஞ்ச நாள்ல அங்கதான் போகப்போற கொஞ்சம் ஏரியாவை மிச்சம் வை கண்ணா ..:)
எழுத்துநடை சொல்வதற்கு ஒன்றும் இல்லை..பின்னுற..:)

@கார்த்திக்
என்ன செய்வது சத்யபுதோ, மறதி சாஸ்தி. இதில் ஒன்றரை மாதமாகிவிட்டது....

@வினோத்
அய்ய, ரொம்ப எல்லாம் எழுதல. ஒன்றிரண்டுதான் எழுதிருக்கேன். என் வளவள கொழ கொழ நடை தான் நிறைய காட்டுது :)

நல்லாருக்கா? டாங்க்ஸ் :)

சொல்வதை ரசிக்கும்படி சொல்வது பப்புவிற்கு எளிதாக வருகிறது.. வெருமனெ இடங்கள் என்றில்லாமல் கொஞ்சம் அனுபவங்களையும் சேர்த்து சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்..:-)))

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!