பெயரிலி

Filed under , by Prabhu on 12/26/2009 01:16:00 AM

20

புயலுக்கு முந்தைய ஒரு வெயில் நாளில் அவள் சந்திப்பு. எத்தனையோ பெண்களைப் பார்த்து இருந்தாலும், இவள் உலகத்தை மிஞ்சியவள் இல்லை என்றாலும் நான் அவளை நினைவில் வைத்திருந்த காரணத்தை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். வேலை விட்டாலும் சுரப்பிகள் அவளை விடமாட்டாமல் மூளையின் ஏதோ ஒரு மூலையில் மடித்து வைத்துக் கொண்டது. பிறகு சுழல்களில் சிக்கிவிட்ட வாழ்க்கையில் எதிர்பாரா ஒரு வெயில் நாளில் அவளைக் கண்ட பொழுது  ஏதோ துளிர்விட்டது. வயதின் சுரப்பிகளிற்கு வேலையில்லை. முகத்தின் வெடிப்புகள் வர வைத்து அவற்றை உடைக்கவும் யோசிக்கும். கண்ணாடியின் முன் காலங்கள் கழிந்தன. பார்ப்பதிலென்ன என்ற சின்ன ஆர்வமேற, அவளுக்கு இரு கண்கள் குத்தியிருப்பது தெரிந்தேயிருக்கவேண்டும். சில நாட்களில் நான் அவள் அட்டவணைப்படி என் வகுப்புகளுக்குச் சென்றேன். வெட்டியான வேளைகளில் பின்தொடர்வது ஒரு தொடர்ந்த அனுபவமாகிப் போனது. பிடித்திருந்தால் பேச வேண்டிய அவசியமின்மையை விவாதித்து மூளையுள்ளுள்ளவர்கள் மாநாடாகிக் கொண்டிருந்தார்கள். முடிவின் அருகாமை உந்த இலையும் கலையுமிழந்த அந்த மரத்தின் அடியில் அவளிடம் பேசிய போது பரிட்சை. அருகில் பார்க்க சிரித்து, ’நான் ..... நீ *** தானே.’ அவளைப் பற்றி கூறிய போது ஆச்சரியித்து, அவள் கேமரா இல்லாமல் புகைப்படக் கலை கற்கும் கதையை பேசிப் பிரியும் போது பிறகு சந்திப்போமெனக் கூறிய நான் அடுத்து பேசிய போது அவள் வயது 3 மாதம் அதிகம் ஆகியிருந்தது. அருகிலிருந்து சிரித்த அவள்’ஹாய்’க்கு பின்னாக எழுவாயை மறந்தே போயிருந்தாள். தன்னம்பிக்கை தெறிக்கும் சிரிப்பினூடே ஆச்சரியக் குரலில் மறு அறிமுகம் செய்து கொள்ள, மீண்டும் நான் அண்டார்டிகாவில் கிடைத்தால் படிக்கத் தயாராக இருக்கும் விவரத்தை உதட்டில் பூண்ட நகையுடன் கேட்டவளை நினைவிருக்கிறது.  சில நிமிடங்களுள்ளான இந்த கிளர்ச்சியை நோக்கி நாட்கள் மிதந்தன.  அடுத்து அந்தக் கார் கம்பெனிக்காரன் மருமகளுடன் பிரின்ஸ்பல் அலுவலகம் அருகில் அவள் படித்துக் கொண்டிருந்த போது அருகில் சென்ற பொழுது தோழி இடிக்க இவள் திரும்பிய பொழுது விழிகளின் மேல் வில்லாக இரு கேள்விக் குறிகள். சிரிக்காமல் கேட்டாள், ‘நீ யார்’ என்று. சிரித்த நான் மறு அறிமுகம் செய்ய தேடிய பொழுது பெயர் சிக்கவில்லை. பெயரிலியாகிவிட்டிருந்தேன்.

Comments Posted (20)

சூப்பர்..ஆனா இதே மாதிரி ஏற்கனவே நீ எதோ எழுதிய நியாபகம்..
சில வாக்கியங்கள் கொஞ்சம் பெருசா இருக்குற மாதிரி இருக்கு..இருந்தாலும் அருமை..:)

நன்றி!

இதே மாதிரியா... இருக்காதே... இருக்கலாம். :)

இப்ப நிம்மதியா தூங்கப் போகலாம்!

:)

அட கதையுமா?
பலே பலே

நல்லா இருக்கு டா.. வினோத் சொல்ற மாதிரி.. பாரா பாரா வா பிரிச்சி எழுதி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்..

@கார்திகேயன்
நன்றி!

@கிஷோர்
போட்டிருக்கலாம்தான். பட் இந்த கதை எழுதும் போது இடைவிடாத வரிகளின் மேல் ஒரு மோகம். அதான் இப்படி.

நான் எழுதினதுலயே சின்ன கதை....

அட்ரா சக்கைன்னானா...!! :)

முத்தமிழ் வளர்த்த இடத்துல இருந்து தமிழ் வெளையாடுது சாரே! :) :)

பாரா போட்டு எழுதியிருந்தா.. படிக்க வசதியா இருந்திருக்கும். இருந்தாலும் பின்னவீனத்துவத்துல இதெல்லாம் சகஜமாமே! :) :)

பின்னவீனத்துவத்துல இதெல்லாம் சகஜமாமே! :) :)///

ஹி.. ஹி... நான் சைடுவாக்க நவீனமா எழுத முயற்சி பண்ணினேன். பின்னாடி வந்திருச்சா என்ன?

நல்லாத்தான் இருக்கு.ஆனா பாவம் எப்படி,இப்படி ஒரு அதிர்ச்சிய தாங்கிக்கிட்டீங்க?

@ஸ்ரீ
பெட்டரா ஒரு ஃபிகர் கிடைக்குங்கிற நம்பிக்கைதான். கான்ஃபிடன்ஸ் பாஸ்!

unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIENCE".. oru ponnu ivanuku alwa koduthuruchu.. adhuvum peyariladha alwa ..

:-)))))))))

// ajay said...

unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIENCE".. oru ponnu ivanuku alwa koduthuruchu.. adhuvum peyariladha alwa ..//

அதான் தெரியுமே யாரு அனுவா!! (பெயர் இருக்கே)

unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIENCE".. oru ponnu ivanuku alwa koduthuruchu.. adhuvum peyariladha alwa ..///
மச்சி, உனக்கு ரிசல்டு சொன்ன நன்றி கூட கிடையாதா? நீ கமெண்டு போடுவன்னு நினைச்சேன். ஆனா இப்படி புரளியை கிளப்பிவிடுவன்னு எதிர்பார்க்கல.


@கார்த்திகை பாண்டியன்
:-)))))))))
///

நல்லா சிரிக்கிறீங்க பாஸ்!

@வினோத்
யப்பா, எதுசாயிருந்தாலும் சேட்டுக்க வாங்கப்பா! இப்படி சபையில அசிங்கப்படுத்த வேண்டாம்.

so sad...

// pappu said...
@ஸ்ரீ
பெட்டரா ஒரு ஃபிகர் கிடைக்குங்கிற நம்பிக்கைதான். கான்ஃபிடன்ஸ் பாஸ்!//

i like this approach :)

@பாலகுமார்
பின்ன யூத்தா இருக்குறதோட அர்த்தம் என்ன பாஸ்!

அது என்ன சஞ்சய் ராமிசாமிக்கு சொந்தக்கார பொண்ணா?

@பிரேம்
இந்த பொண்ணுகளே இப்படிதான் பாஸ்! :)

அருமை...பப்பு

இருந்தாலும் வரிகள் ஜனரஞ்சகத்திற்கும், இலக்கியத்திற்கும் நடுவில் மாட்டிக் கொண்டதை போல் ஓர் உணர்வு.

@கண்ணா
நன்றி! ஆமால்ல? ஏதோ நான் எழுதாத மாதிரி முயற்சி பண்ணினேன். ஒரு வகையா வெளி வந்திருக்கு!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!