Ninja Assassin - Movie

Filed under , , by Prabhu on 12/02/2009 12:54:00 AM

10

சென்னையில் இருந்த போது உடம்பு(ம்) சரியில்லாமல் போனதால் பாலா சொன்ன 'Ninja Assassin' பார்ப்பது இயலாம போனது. எஸ்.எம்.எஸ் அனுப்பின கார்த்திக்  உடன் கொஞ்ச அதிக நேரம் பேச கூட முடியவில்லை. ரெண்டு நாள் ஆகியும் அலுப்புடைய hang over தீராமல் போக, இனிமேல் வீட்டில் ஓய்வெடுத்தால் வேலைக்காகாது என அஜய்க்கு டிக்கெட் எடுக்கும் படி குறுந்தகவல் அனுப்பி விட்டு கிளம்பிவிட்டேன் பிக் சினிமாசின் கணேஷ் திரையரங்கிற்கு.

------------------------------------------------------------------------------------------------------------------


படத்தின் பெயரே ரத்தத்தில் தெறித்த எழுத்துக்களாகத்தான் திரையில் விழுந்தன. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இந்தப் படம் என்ன வகையென்று.

படத்தின் ஹீரோ Rainன் வேகத்தை 'Speed Racer'ல் முன்னோட்டமாக பார்த்த  Wachowski Brothers, இந்தப் பையன வச்சு ஒரு கதை பண்ணலாமே என யோசித்து ஒரு கதை பண்ணி சரியாக வராமல் சொதப்ப, இந்தப் படத்தின் திரைகதையாளரை(J.Michael Straczynski) போனில் கூப்பிட்டு சொல்ல, அவரும் நண்பர்களுக்காக 60 மணியில்(தூங்கிய 7 மணி நேரமும் சேர்த்து) திரைக்கதையை எழுதி முடித்தாராம். அதனால் தானோ என்னவோ பெரியதாய் கதை எதுவும் இல்லை.

தியேட்டர் நல்ல வகையில் ஏசி செய்யப்பட்டிருந்தது. அதுவும் போதாதென்பவர்களுக்கு ஜில்லிட வைக்கும் சண்டை காட்சிகள் படத்தில் இருந்தது. படம் அங்கே  R rating கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படிபட்ட படத்திற்கு 4 வயது பையனுடன் வந்த தமபதியினரை நினைத்து ஆச்சரியப் பட்டதை விட, இந்த வயதில் இப்படி படங்களை சாதாரணமாக பார்ப்பவன் பின்னால் என்னென்ன அடுழியம் செய்வானோ? அப்புறம் கார்த்திக் சொன்னா மாதிரி இப்படி விஷயங்கள் நடக்காமல் என்ன செய்யும்.

ஆயிரம் வருடங்களாக 50 பவுண்ட் தங்கத்துக்காகக் கொல்லும் ஒரு கொலைகாரக் 'குடும்பம்' தான் Ozunu. சிறுவர்களைக் கடத்தி கொண்டு போய் மகனென்ற ஸ்தானம் அளித்து அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து கொலை கருவிகளாக மாற்றுவதுதான் அந்த குழுவின் வேலை. வழக்கம் போல் குருவிற்கு அடுத்ததாக வரும்ளவு சிறந்து வருகின்ற நாயகன், வழக்கம் போல காதலியின் சாவினால் மனம் மாறி அந்த கூட்டத்தை வேரறுத்த பின் தான் விடும் மூச்சுதான் முதல் மூச்சு என உறுதி பூணுகிறான். மீதியெல்லாம் சண்டை, சண்டை, சண்டை. இந்த ரக்சிய குழுவைப் பற்றி விசாரணை செய்பவராக வரும் Naomie Harris அழகாக இருப்பதாக தோன்றியது. பாலா, தங்கள் கருத்து? அந்தப் பெண் தடயவியல் ஆராய்ச்சியாளர் என்ற பொழுது , 'அப்போ தடவிட்டே இருப்பீங்களா?' என்று குரல் கேட்டது.

பாலா சொன்னாரே என்று அனல் பறக்கும் சண்டைகாட்சிகளை எதிர் பார்த்து போனால்  இருளில் புதைந்த சண்டை காட்சிகள் க்ளைமாக்ஸைத் தவிர(நிஜமாகவே அனல் அவர்களைச் சுற்றி பறக்கிறது). இருளிலேயே சண்டை போடும் கும்பல்தான் கதையே. இருளில் இவர்களைத் தடுக்க சக்தி கிடையாது. படம் ஓடும் போது ஒருவன் கதவைத் திறந்து உள்ளே வந்தபின் வெளிச்சம் வந்து அடங்கியதைப் பார்த்த ஒருவன், 'யாருடா அவன் நிஞ்சா மாதிரி வர்றான்' என்றான்.

மூன்றே வகை ஆயுதங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி கொல்ல முடியுமோ, மனித உடலில் எங்கெல்லாம் கத்தி பாய முடியுமோ அதெல்லாம் சாத்தியப் பட்டிருக்கிறது. தீபாவளி ராக்கெட் போல 360 டிகிரியிலும் ரத்தத்தை சிதற விட்டு வேடிக்கை காண்பித்திருக்கிறார்கள். சளக் சளகென்ற கத்தி பாய்ச்சல்கள் Gore! Gore! Gore! [Not enough for me personally :) ]

சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் அதிகபட்ச உழைப்பின் அடையாளம். நாயகனின் திறமை அவன் தனியாக பயிற்சி செய்யும் காட்சியில் அந்த சங்கிலியை சுற்றுவதில் தெரிந்தது. ஒரு துண்டை சுற்றும் போதே எனக்கு கண்ட இடங்களில் பட்டு வலிக்கிறது. அவர் சங்கிலியை வைத்து விளையாடியிருக்கிறார். Norman Harris  டார்ச் அடிக்கும் வெளிச்சத்தில் நாயகனும் இன்னொருவனும் போடும் சண்டை, யப்பா... சான்ஸே இல்ல. படத்திலே சிறந்த சண்டை காட்சியாகப் பட்டது எனக்கு. சண்டைக் காட்சிகளுக்கு முட்டு கொடுக்கும் விதமாக மிக அருமையான பிண்ணனி இசை. கடைசியில் வில்லனைக் கொல்லும் அரை நிமிடம் மட்டும் தெலுங்கு படம் க்ளைமாக்ஸ் போன்று ஸ்லோமோஷனில் 'ஜங் சக்கு சக்கு' என ஒரு ம்யூஸிக் கொடுத்த மாதிரி ஃபீலிங் :). ஹி.. ஹி... உங்களுக்கு என்ன தோணியது எனக் கூறுங்கள், பார்த்துவிட்டு.

ஆங்... சொல்ல மறந்துவிட்டேனே! இந்தப் படத்தில் தமிழாக்கம் நன்றாக இருந்தது. நல்ல தமிழில் பேசினார்கள். படத்தில் ஆங்கில உவமைகளையும் தமிழில் நன்றாகவே கையாண்டிருந்தார்கள்.

இந்த படம் பார்ப்பதன் முக்கிய காரணமே Gore  என்பதால் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அடுத்தக் காட்சியை சொல்லும் அளவுக்கு உலகலாவிய பழைய கதை. திரைக்கதை கொஞ்சம் கூட நோகாமல் எழுதியிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் அதிக நேரம் அதில் செலவழித்திருக்கலாம். சண்டைக் காட்சிகளை மட்டுமே நம்பி வந்த படம் கதை இல்லாத திரைகதையால் தொய்வாக இருக்கிறது. அஜய் கொட்டாவி விட்டுகிட்டு இருந்தான்.  நகராத கதையால் சிலர் புலம்பினார்கள். இருட்டிலே தொடர்ந்த சண்டை காட்சிகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதுவும் நொடிக்கு ஆயிரம் ஆக்ஷன் காட்டும் ஹீரோ, கேமராவுடன் இருளில் தொடர்ச்சியான நிகழ்வுகள் கண்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமென்று கூற இயலாது. பார்க்கலாம்.


இதையும் மீறி  இந்தப் படம் பார்க்கலாம்னா அது ஹீரோவுக்காகத் தான். மனுஷன் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார். இவர் ப்ரூஸ் லியின்
படமான 'Enter the Dragon'  ரீமேக்கில நடிக்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இவர் ஒரு பாப் ஸ்டாரும் கூட. இந்தப் படத்திற்காக இவரின் சிக்ஸ் பேக் உடல்.


Ninja Assassin - Bloody....
நிஞ்சா இங்கே... கதை எங்கே?

சும்மா பறந்து பறந்து சண்டை போடுகிறார் நிஞ்சா. ஆனால் இங்கே 2012 காட்டுத்தனமாக ஓடிக் கொண்டிருப்பதால் சீண்ட ஆள் இல்லை. 2012க்கு என்னய்யா இன்னும் இப்படி திருவிழாக் கூட்டமாவே இருக்குது.

Behind the scenes

Comments Posted (10)

//2012க்கு என்னய்யா இன்னும் இப்படி திருவிழாக் கூட்டமாவே இருக்குது//

அதான் ஆச்சர்யமா இருக்கு. இங்கே அதிக பேர் வாங்கவில்லை அந்தப் படம். ஆனால் வேட்டைக்காரன் போன்ற படங்களிலிருந்து காப்பாற்ற இது போன்ற படங்கள் தமிழில் சுடச்சுட வெளியிடுவது நல்லதுதான்.

நீங்க சொன்ன மாதிரி.. இருட்டில் 2 சண்டைகள் வருவதும், காதல் காட்சிகளை காட்டுறேன் பேர்வழின்னு.. கதையை ஸ்லோவாக்கியது உண்மை.

இந்தியாவில்.. தியேட்டரிலாவது.. இந்த லவ் சீனையெல்லாம் கட் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்.

படம்.. இங்கயும்.. நல்லாதான் பிக்கப் ஆச்சி. ஆனா.. நியூ மூன் வந்து எல்லாத்தையும்.. கெடாசிடுச்சி.

நல்லா போகும்னு எதிர்பார்த்தேன். கொடுமையான படமெல்லாம்... முன்னாடி போய்டுச்சி.

நல்ல வேளை... நான் சொல்லித்தான்... வினியோக உரிமையை எடுத்து கையை சுட்டுகிட்டேன்னு யாரும் கம்ப்ளெய்ண்ட் பண்ண முடியாது! :) :)

======

நியூ மூன் தான் இந்த வாரமும் முதலிடம்.

டெம்ப்ளேட்டில் எதோ பிரச்சனை. ஓவர்லேப் ஆகுது பாருங்க.

ம்ம்ம்... பார்த்துடுவோம்..

//2012க்கு என்னய்யா இன்னும் இப்படி திருவிழாக் கூட்டமாவே இருக்குது.//
இந்த படத்த ராமா.நாராயணன் வாங்கி இருந்தா அப்டி தான் ஓடி இருக்கும்ம்....

roma nalla irunthathu

செம ரைட்டப். இன்னொரு வாட்டி படிக்கலாமோ? :)

நம்ம பதிவையும் சேத்தி விட்டீங்க. நன்றி. :)

@sridhar narayanan
ஆமா, இப்பவே சன் தொல்லைக்காட்சிகளில் ட்ரைலர் கொடுமை தொடங்கிவிட்டது.

@பாலா
ந்யூ மூன் மேல கொல வெறியில இருக்கீங்களே!

@கிஷோர்
பாத்துட்டு சொல்லுங்க உங்க கருத்த.

@பேநா மூடி
:)

@livingSton baba
நன்றி!

@கார்த்திக்
இன்னொரு வாட்டியா? புல்லரிக்க வைக்குறியே!

நமக்குள்ள நன்றியெல்லாம் எதுக்கு. எல்லாம்

ரெரரரரரரரரரரரரரரரரரரராம்ப போர் அடிக்குதோ?

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!