டாப்பு அடிக்கலாம் - 7

Filed under , , by Prabhu on 1/06/2010 09:58:00 AM

30

இளையராஜா விஷயம் ஒன்றை கொஞ்ச பழைய சமீபத்தில் ட்விட்டரில் கண்டு ரீட்விட் செய்த விவரங்களை சொல்லுகிறேன். இந்தப் பாடல் ரஜினியின் 100வது படமான 'ஸ்ரீராகவேந்திரா' வில் இளையராஜாவின் இசையில் ஜானகியின் குரலில் இடம்பெற்றது 1985. ஆனால் இதே பாடல் 2003 ல் நமக்கே தெரியாமல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதை ட்விட்டரில் சொல்லியவர் nchokkan. 'உனக்கும் எனக்கும் ஆனந்தம்' என்ற பாடலின் இந்த ரீமிக்ஸை கேளுங்க. Black eyed Peas குழுவின் The elephunk ஆல்பத்தில் the elephunk theme என்ற பெயரில் bonus track ஆக ரிலீஸ் செய்யப் பட்டிருக்கிறது.


ஆனால் இந்தப் பொக்கிஷம் தொலைந்து விடக் கூடாதென்ற 'நல்ல எண்ணத்துடன்' இந்தப் இசையை இதே ராப் மிக்ஸுடன் 'திரு திரு துறு துறு' மூலம் தமிழுக்கு வேறு பாடலில் எடுத்து வந்திருக்கிறார் மணி சர்மா. காப்பி என்றெல்லாம் சொல்லாதீங்க. பின்ன, ஜெர்மனி சிடி ல மட்டும் இருக்கும் போனஸ் ட்ராக்கை சுட்டிருக்கிறாரே. அதுக்கு ஒரு தேடல் வேண்டாமா? நம் இசையை மீட்டு கொடுத்திருக்கிறார். நீங்களும் அந்த Black eyed peas சரக்கை தேடுங்கள். சரளமாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
என்னடா, ப்ளாக்கரில் அடுத்த பிரச்சனை வரவில்லயே என நினைத்து முடிக்கல, வந்துடுச்சு. ஆனால், போன தடவை அளவு பெருசா இல்லையே? என்னவோ, நமக்கு எதுக்கு? இங்க எழுத வரும் பலர், சும்மா பொழுது போக்கா தான் எழுத வர்றோம். சில மொக்கைகள், சில் கதைகள், நண்பர்கள் என போய்கிட்டு இருக்கிறதல, ’எனக்குதான் நல்லது தெரியும். நான் உங்களுக்கு மோட்சத்துக்கு வழிகாட்டுறேன்’ ரக ‘alternative POV' கேசுகள் பண்ணும் தொல்லை தாங்கலப்பா! (இதை தட்டச்சி சிலபல நாட்கள் ஆகிவிட்டது.)
------------------------------------------------------------------------------------------------------------------
திவாரி- 85 வயசுல 3 பொண்ணுங்க! வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கய்யா! நமக்கு 20 வயசுதான் ஆகுது! அதை விடுங்க. இப்ப அந்த பையன்(!) 3 பொண்ணுகளோட இருந்தால் என்ன? 4 பொண்ணுங்களோட இருந்தால் என்ன? யாரையும் கட்டாயப்படுத்தியிருந்தா, அவங்க கேசு போட்டிருந்தால் பிரச்சனை. இல்லையே, அப்புறம் என்ன? அவங்களுள் ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் அவரோட சொந்த விஷயத்தில் மூக்க நுழைக்கிறதுக்கு அரசியல் தான் காரணம். யப்பா, 85 வயசுல இப்படி இளமையா இருக்கிறாரே ஆச்சரியப்படுவாங்களா, அதை விட்டுட்டு...
-----------------------------------------------------------------------------------------------------------------
’கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்’ - தெலுகு படம் பார்த்தேன். ஃபீல் குட் ரகம். ரொம்ப புதுமையான கதையெல்லாம் இல்லையென்றாலும் நல்லா இருந்தது. என்னைப் போல ஸ்மார்ட் சித்தார்த்தின் ஃபேனாக இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம். 30 வயசு ஆள் என்று சொன்னால் நம்பவா முடிகிறது. காலேஜ் பையன் தான். தம்ஸ் தான் கதாநாயகி. ரம்யா கிருஷ்ணன் சித்தார்த் அம்மாவாக(!). விமர்சனம் வேண்டுமென்றால் கேபிள் சங்கர் தளத்தில் தேடவும்.
----------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
லிட்டில் ஜானின் அம்மாவை ஒரு சமயம் பள்ளிக்கு கூப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். அங்கே, ‘உங்க பையனால் வகுப்பில் பிரச்சனை. முதலில் அவனுக்கு ஆண் பெண் வித்தியாசமே தெரியலை. புரியவைங்க’ எனக் கூறி அனுப்புகிறார்கள். நேராக வீட்டிற்கு போனதும் அவனை படுக்கயறைக்கு அழைத்து சென்று, ‘முதலில் வந்து அம்மாவின் ப்ளவுஸை கழட்டு’ என்றாள். பையன் செய்தான். ‘இப்பொழுது இடுப்பிலிருக்கும் என் துணியை கழட்டு.’ அதையும் செய்தான். இப்படியாக தன் ப்ரா, பேண்டீஸையும் கழட்டச் சொன்னாள் அம்மா. பிறகு ஜானிடம், “கண்ணா, இனிமேல் இப்படி அம்மாவோட டிரஸ போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போகக் கூடாது, சரியா?”.
-----------------------------------------------------------------------------------------------------------------

’இணைய’க் காதல்

அது பெண்ணாவென்பதின் அறியாமை
ஆனாலும் அளவலாவும் ஆர்வம்
சிறு அரட்டைகளில் ஸ்மைலி இடைச்செறுகல்கள்
கல்லூரியின்  விட்டதும் கடமையுடன்
வீடு திரும்பி கணினியில் கடலையிடல்
கணங்களில் காதலித்து
தவிர்ப்பில் வெறுத்து
வெறுப்பில் இறைஞ்சி
இரவில் போர்வையடியில்
திருட்டு குறுஞ்செய்திகளின் குறுகுறுப்பு
தொலைபேசியில் காதலித்து
அடைகாத்திருந்த அந்த நாள்
முத்தமிட்டு பத்திரமாக பதிவு செய்தேன்

-----------------------------------------------------------------------------------------------------------------

Comments Posted (30)

லிட்டில் ஜான்.......... யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அரசாங்க வேலையில் முக்கியமாக மக்கள் சேவையில் இருக்கும் எவருக்கும் தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம் பப்பு.

\\லிட்டில் ஜானின் அம்மாவை ஒரு சமயம் பள்ளிக்கு கூப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். \\

எதுக்குண்ணே, கூப்பிட்டுட்டு உடனே அனுப்பீட்டாங்க..?
அப்பறம் எதுக்கு கூப்புட்டாங்க..?

@ஆதவன்
உங்கள் காரணம் சரிதான், ஒரு வகையில்.

@ராஜு
ஆமால்ல. அமெரிக்கா காரனுவளுக்கு மூளை கிடையாது. மன்னிச்சிடுங்க!

''டாப்பு '' டாப் கியர்ல போகுது..கவிதை ரொம்ப நல்லா இருக்கு பாஸ்.

//இரவில் போர்வையடியில்

திருட்டு குறுஞ்செய்திகளின் குறுகுறுப்பு

தொலைபேசியில் காதலித்து

அடைகாத்திருந்த அந்த நாள்

முத்தமிட்டு பத்திரமாக பதிவு செய்தேன்//

அருமையான வரிகள்

ரசித்தேன்

:)

ஆதவன்...

இது நல்ல கதையா இருக்கே! எல்லோரும் மனுசந்தானே? முக்கிய பொறுப்புங்கறதுக்காக எல்லாம்... என்னோட பர்சனல் வாழ்க்கையை நான் தியாகம் பண்ணனுமா என்ன?

இருக்கப்பட்டவன் என்ஜாய் பண்ணுறான்.

இது பொதுபுத்தி!! (நாமும் பிரச்சனையை ஆரம்பிக்க வேண்டியதுதான்).

@பூங்குன்றன்
டாங்க்ஸ் பாஸ்!

@கண்ணா
நன்றி!

@பாலா
ஆமாண்ணே! பாத்தீங்களா.. எங்க அண்ணன் சப்போர்டுக்கு உண்டு. நாங்களும் ரவுடிதான்!

லிட்டில்ஜான் கதை செம டரியல்!

பப்பு.. டாப்பு தான். இருந்தாலும் லிட்டில் ஜான்.. என்னத்த சொல்ல?

//அவங்களுள் ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் அவரோட சொந்த விஷயத்தில் மூக்க நுழைக்கிறதுக்கு அரசியல் தான் காரணம்.//

ஹலோ பாஸூ.. சொந்த விஷயம்னா வீட்டுல இருந்திருக்கனும்.. மக்கள் வரி பணத்துல கட்டுன கவர்னர் மாளிகையில் வச்சி நடந்திருக்க கூடாதுடி!! இதுல மாண்பு மட்டும் குழிதோண்டிப் புதைக்கப்படல.. இந்தியாவோட கலாச்சாரமும்தான்!!

அந்த வீடியேவுல அய்யா ஒன்னும் பண்ணல.. சும்மா படுத்து மட்டும்தான் கிடந்தாருன்னு சொல்லிகொள்ள கடமைப்பட்டுயிரக்கிறேன் ஹி.. ஹி..

@வால்ஸ்
பையன் கொஞ்சம் பழுத்த கேசு :)

@கிஷோர்
அண்ணனத் தான் தேடிகிட்டு இருந்தேன்.

@கலை
///இந்தியாவோட கலாச்சாரமும்தான்!! ///

வரவர இந்த வார்த்தைய கேட்டா ஒரு மாதிரி இருக்கு. ‘சதி’ வழக்கத்தை ஒழிச்சப்போ கூட இதத்தான் சொன்னாங்க!

அப்படி பார்த்தா கிளின்டன்-மோனிக்கா மேட்டர் அவங்க பர்சனல் தான்..அதையே அமெரிக்ககாரங்க உண்டு இல்லைன்னு நோண்டி நொங்கு எடுத்தாங்க. அமெரிக்காவிலேயே அந்த நிலை என்றால் இந்தியால சொல்லனுமா..
கலை சொல்லறத பார்த்த அவர் வெளியே ரூம் போட்டு தன்னுடுய சொந்த செலவில் இதை எல்லாம் பண்ணி இருந்து மாட்டி இருந்தாருனா மட்டும் சும்மாவா விட்டுர்ப்பங்க..
பொது வாழ்க்கைக்கு வந்துட்டாலே 'வேஷம்' போட்டு தான் ஆகனும் ..ரொம்ப கஷ்டம்பா.(ஆமாம் அந்த வீடியோ லிங்க் கிடைக்குமா)..:)

//அந்த வீடியேவுல அய்யா ஒன்னும் பண்ணல.. சும்மா படுத்து மட்டும்தான் கிடந்தாருன்னு சொல்லிகொள்ள கடமைப்பட்டுயிரக்கிறேன் ஹி.. ஹி..//

அடப்பாவி பார்த்துட்டயா? எனக்கு லின்ங் அனுப்புடா

@பாலா

//மக்கள் வரி பணத்துல கட்டுன கவர்னர் மாளிகையில் வச்சி நடந்திருக்க கூடாதுடி!!//

இது முக்கியகாரணம் பாலா

ஆதவன் & கலை,

மக்கள் பணமெல்லாம் சரி. ஆனா.. அவரு கவர்னரா இருக்கற வரைக்கும் அதுதானே.. அவரோடு வீடு.

எதுப் பிரச்சனைனாலும்... நேரா மக்கள் பணத்துல நிறுத்திடுறோம். :) :)
--

அப்ப ஏன்.. மக்கள் பணத்துல.. அந்த வீட்டை கட்டினீங்க.. மக்கள் பணத்துல.. அதுக்கு கரண்ட் பில் கட்டுறீங்க. பெட்ரோல் போடுறீங்க.. அத்தனை கார், ச்சாப்பர்ன்னு செலவு பண்ணுறீங்கன்னு எல்லாம் கேள்வி கேட்க மாட்டோம்.

செக்ஸுன்னு ஒன்னு வந்துட்டா மட்டும்தான்... நமக்கு எல்லா மேட்டரும் நினைவு வருது.

இப்ப அதே மாதிரி ஒரு த்ரீசம் (இதுல கேங்பேங் ரூல்ஸ் ஃபாலோ பண்ணினாங்களான்னு தெரியலை) வாய்ப்பு... கலைக்கு கிடைச்சதுன்னு வைங்க (சரி உங்களுக்கும்தான்)...

பொறுப்பான அரசாங்க வேலையில இருக்கேன்னு சொல்லிட்டு... ஏரியால இருந்து எஸ்கேப் ஆய்டுவீங்களா என்ன?????

இது பொது புத்தி...!!

(விடுறதா இல்லை). :) :) :)

அது எல்லாம் சான்ஸ் கிடைச்சா பதவியாச்சும், ம...ரச்சும்ம்..எல்லோரும் புகுந்து விளையாடுவாங்க..
ஆனா கலை & சூர்யா ரெண்டு பேரும் அப்படி இல்லை..எனக்கு நல்லவே தெரியும்..:)

ஹலோ பாஸூ.. சொந்த விஷயம்னா வீட்டுல இருந்திருக்கனும்.. மக்கள் வரி பணத்துல கட்டுன கவர்னர் மாளிகையில் வச்சி நடந்திருக்க கூடாதுடி!! இதுல மாண்பு மட்டும் குழிதோண்டிப் புதைக்கப்படல.. இந்தியாவோட கலாச்சாரமும்தான்!!//
சரியா சொன்னான் பாரு .
இவன் தான் நம்ம சிட்டிசன்

அந்த வீடியேவுல அய்யா ஒன்னும் பண்ணல.. சும்மா படுத்து மட்டும்தான் கிடந்தாருன்னு சொல்லிகொள்ள கடமைப்பட்டுயிரக்கிறேன் ஹி.. ஹி..//
அதெல்லாம் சரியா தரவிறக்கிப்பார்ப்பான் இந்த கலை பய.
==========
80வயசிலயும் ஜெமினிகனேசன் போல இருந்திருக்கான்யா.
=========
இந்த வாரம் டாப்பு - டாப்புதான்
ஓட்டு போட்டுட்டேன் பா.

@வினோத்

அமெரிக்காக்காரனை ஏன் பார்க்கனும். அங்கயும் அரசியல்தான் காரணம். இல்லையென்றால் சப்ப மேட்டர். தனி மனித ஒழுக்கம் என்பது கேள்விக்குரிய விஷயம். யோவ், 80 வயசு கெழவன் வீடியோ எதுக்கய்யா? போய் நல்ல போர்னா பாருங்க!

@ஆதவன்
சரியா ஆஜர் ஆவுறீங்களே பாஸ்!
இதுக்காக மக்கள் பணத்த இழுக்காதீங்க! பாதிக்கப் பட்டவங்க கதறலாம். அந்த பொண்ணுங்க ஏமாத்தினதா கூவிருக்கலாம். அவர் பொண்டாட்டி வஞ்சிக்கப் பட்டதா சொல்லிருக்கலாம். மற்றபடி இவனுங்க அரசியலுக்காக கூவுறாங்க. இந்தியாவின் இறையாண்மைக்காகவா கூவுறானுக?

@பாலா
அய்யோ, தலைவா பின்னுங்க!ஆமாண்ணே, எனக்கும் இப்ப வேற கலர்ல தெரிய ஆரம்பிச்சுடிச்சு!

@கார்த்திகேயன்
ஜெமினி//

அட,ஆமா :)

@பாலா

கிர்ர்ர்ர்ர் என்னது கவர்னரா இருக்குற வரைக்கும் அது அவர் வீடா? அப்ப அரசியல்வாதிங்ககிட்ட இருக்குற மக்கள் பணம் அவங்க கையில வரைக்கும் அவங்களோடதுன்னு எடுத்து செலவு செய்யலாமா?(இப்ப அப்படி தான் செய்யுறானுவ)

சட்டதிட்டங்களை மதிச்சு நமக்கு முன்னோடியா இருந்தா தானே நாமலும் சட்டதிட்டங்களை மதிப்போம்?

என்னமோ ஆயிரம் ரூபா கொடுத்து மேட்டர்கிட்ட போன மாதிரி சொல்றீங்க? அந்த பொண்ணுங்களுக்காக நிறைய பணம், உ.பியில அந்த புரோக்கருக்கு நிறைய வேலைக்கான ஆர்டர், அதிகாரம் எல்லாம் கொடுத்திருக்காரே, அதெல்லாம் யார் பணம்? யார் கொடுத்த அதிகாரம்?

@ஆதவன்
//சட்ட திட்டம்//

ஒரு வயதுக்கு வந்த ஆண்-பெண் உடன்பட்டு உறவு கொள்ளுவதை சட்டம் தடுக்கலையே?

//மக்கள் பணத்தில்//
இந்த அக்கறை அவன் பண்ணுற மத்த வெட்டி செலவு மேலயும் வரனும். செக்ஸ் என்பது ஒரு தனி கம்பார்ட்மெண்டா வச்சு பார்ப்பதில் தான் பிரச்சனை இல்லையா?

//தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம் பப்பு.///
இது ரொம்ப கேள்விக்குரிய விஷயம். நூறு வருஷம் முன்னாடி ஆண்-பெண் பேசிக்கிறது கூட தனி மனித ஒழுக்கக் கேடு. கணவன் செத்தபின் திருமணம் ஒழுக்கக் கேடு. டிவோர்ஸ் மகா பாவம்.

இன்னிக்கு ட்ரெய்ன்ல யாரோ பர்தா போட்டு வந்தாங்க. எனக்கு இதான் ஞாபகம் வந்துச்சு. எகொசா இது? :)

லிட்டில் ஜான் ச்சான்ஸே இல்ல. ROFL. :))))))

இன்னிக்கு ட்ரெய்ன்ல யாரோ பர்தா போட்டு வந்தாங்க. எனக்கு இதான் ஞாபகம் வந்துச்சு. எகொசா இது? :)///

என்னே ஒற்றுமை!

@ஆதவன்,

நிச்சயம்.. அது அவர் வீடுதான்!!!! சந்தேகமே கிடையாது. அரசாங்கமே நினைச்சாலும் அதை திரும்ப வாங்க முடியாது. அவர் கவர்னரா இருக்கற வரைக்கும்... !!!!!!!!!!!!!

அதுக்குள்ள இருக்கும்.. ஃபர்னிச்சரை கூட.. அவர் மாத்திக்க முடியும்னுதான் நினைக்கிறேன். இதுக்குக் கூடத்தான்.. நம்ம வரிப்பணம் போகுது.

---

எதை சட்டதிட்டம்னு சொல்லுறீங்க? உங்க மனைவி/கணவன் தவிர வேற யாரு கூடவும் உடலுறவு வச்சிக்கக் கூடாதுன்னு எந்த சட்டமும் சொல்லலை. அதனால் அது பிரச்சனையில்லை.

செக்ஸிற்கு பணம்/பொருள் கொடுத்தா.. அல்லது இரண்டில் ஒருவருக்கு விருப்பம் இல்லைன்னாதான் பிரச்சனை.

இதில் கூட.. அந்த பணத்தை ‘கிஃப்ட்’-ன்னு சொன்னீங்கன்னா.... அங்கயும்.. சட்டம் எதுவும் செய்ய முடியாமல் போகலாம் (அமெரிக்காவில் லஞ்சம்.. இந்த ‘கிஃப்ட்’ முறையில்தான்).

இதையே இவர் மும்பையிலோ, கொல்கத்தாவிலோ பண்ணியிருந்தா... அந்த ‘சட்டமும்’ அடிபட்டுடும் (எல்லா இடத்திலும் அலவ்டா.. இல்ல.. அந்த குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும்தானா???).

--

மத்தவங்களை பாய்ண்ட் பண்ணுறது சரி!! நாம அந்த சட்டத்தை மதிக்க எத்தனை முயற்சி பண்ணியிருப்போம்? 45 மைல் ஸ்பீட் லிமிட் ரோடில். 46 போனாக் கூட சட்டத்தை நாம மதிக்கலைன்னுதான் அர்த்தம். நான் டெய்லி சட்டத்தை மீறிகிட்டுதான் இருக்கேன்.

இப்ப ஒரு பேச்சுக்கு.. ஒபாமா காரை 45 மைல் ஸ்பீடிலேயே ஓட்டிகிட்டு போறாருன்னு வச்சிக்கங்க. ஒட்டு மொத்த அமெரிக்காவும் திருந்திடுமா என்ன??

திருந்த வேண்டியது... தனி மனிதந்தானே தவிர... வழிகாட்டுததில் இல்லை. யாரு என்ன பண்ணினாலும்... நமக்கு தோணியதை நாம செஞ்சிகிட்டேதான் இருக்கப் போறோம். ஸோ டோண்ட் ப்ளேம்... பொலிடீஷ்யன்ஸ் ஃபார் எவ்ரிதிங்.

இதை எப்படி எடுத்துக்கறோம்னுதான் இருக்கு. கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் போது நமக்கு வராத கோபம்.... ஒரு 1-2 நிமிஷம் (அந்த ஆளு.. அவ்ளோ நேரம் தாக்குபிடிச்சாரா கலை??) ஒரு சில ஆயிரம் பணத்தில் செக்ஸ் வச்சிகிட்டதில் நமக்கு வந்திருக்கேன்னுதான் புரியலை.

--

இதுல என்ன ஜோக்னா... இவர் செக்ஸ் பிரச்சனையில் மாட்டிகிட்டு வீடியோவோட ஆதாரம் வந்தனால்தான்.. சட்ட ஒழுங்கை பத்தியெல்லாம் பேசுறோம்.

100% அரசியல்வாதிகள் இந்த சட்ட மீறலையும்..., 100% பொதுமக்களும்.. எதாவது ஒரு வகையில் சட்ட மீறலை செஞ்சிகிட்டுதான் இருக்கோம்.

ஆஃப்டர் ஆல் ஹி ஜஸ்ட் ஹேட் செக்ஸ்!!!

இது ஒரு மேட்டரா??? நமக்கு கவலைப் பட வேற பிரச்சனையே இல்லைங்களா???

இது பொது புத்தி!!!!!!!! :) :) (நோ வே ஹுஸே)

@பாலா
‘புரட்சி’ பாலா வாழ்க!

@பாலா
‘புரட்சி’ பாலா வாழ்க!

லிட்டில் ஜான் புத்தகம் வருமா?

@கார்க்கி
நான் ஈபுக் வச்சுருக்கேன், பாவா. ஆனா அது தொழில் ரகசியம்!

guide4mba.blogspot.com

Inda vayasulayum thaata sema form la irukkaru.. :D

Little John padichen padichen padichen.. Aana puriyala.. :(

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!