டாப்பு அடிக்கலாம் - 6

Filed under , , by Prabhu on 12/15/2009 01:36:00 PM

20

இப்ப Copenhagen தான் ரொம்ப சூடா ஆயிருச்சு. என்ன முடிவு எடுத்தானுங்கன்னு தெரியலை. எல்லாத்துக்கு அப்புறமும் ஒண்ணும் மாறியிருக்காதுன்னு தான் நினைக்குறேன். இதுக்கு நடுவில் Climategate விவகாரம் வெளிய வந்து பிரச்சனை ஆயிடுச்சு. மெயில்களை திருடி வெளியிட்டவன் ஜிபி கணக்குல விட்டுருக்கான். இண்டர்நெட் கண்டுபிடிச்ச காலத்துல, ‘ஐ, நானும் மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டேன்’, என்ற மெயிலைக் கூட ரிலீஸ் பண்ணியிருப்பான் போல. இப்ப எதுக்கு இதப் பத்தி பேசுறோம்னு கேட்டீங்கன்னா, சந்தேகமே இல்லாம குத்தம் சொல்லத்தான்.  Copenhagen மீட்டிங்குக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உயரதிகாரிகளுக்காக 140 விமானங்கள், 2400 Limosine Cars(Air conditioned, of course) இயக்குறதா வெளியிட்டிருந்தாங்க அறிக்கையில். 

Eco-friendly, indeed. :)

---------------------------------------------------------------------------------------------------------------


Osloவில் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். சமீபத்தில் ஒரு கேலிச் சித்திரம் பார்த்தேன- நோபல் கமிட்டி சொல்லுகிறது, "Obama, We give you the Nobel peace Prize just for not being Bush" என்று. Funny!  கொஞசம் நிஜமாக கூட இருக்கலாம். காந்தி, கிங் ஆகியோரின் வழி இப்ப உலகத்துக்கு உதவாது. போரின் மூலம் அதே அமைதி உலகத்துக்கு போராடுவேன்னு சொல்லியிருக்கிறார். இது தேர்தல் பிரச்சாரத்தப்ப தெரியலையா? சமீபத்தில் 30000 வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய இந்த அமைதியின் சொரூபத்திற்கு உலகின் எல்லா அமைதி விருதும் கொடுங்க. இவரு அமெரிக்க அதிபரா இருக்குற ஒரு தகுதி போதாதா அதுக்கு. ஆனா, I think Obama is an overhyped president. அவருக்கு கிடைச்ச அட்டகாசமான ஆதரவு, கவரேஜ் எல்லாத்துக்கும் காரணம், அவர் கருப்பு. ஒரு கருப்பனும் அமெரிக்காவில் அதிபராகிறான் எனக் கூறும் போது அந்தக் ‘கருப்பனும்’ உங்களுக்கு இடிக்கல? எப்ப சம  உரிமை பத்தி தனியா குறிப்பிடறோமோ அப்ப அங்க ஏற்றத்தாழ்வு ஊர்ஜிதமாகுது. இதுக்குமேல பேசுனா எசகு பிசகாயிடும் அப்பீட்டாயிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------

பட அறிமுகம்

ஒரு படம் இன்று காலையில் கே டிவியில் பார்த்தேன். ‘மௌனம் சம்மதம்.  இப்படி ஒரு அருமையான துப்பறியும் ரகக் கதை பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. நல்ல subtle ஆன நிதானமான வேகத்தில் போகக் கூடிய கதை. மம்மூட்டியின் நடிப்பில் உள்ள க்ளாஸ்... சான்ஸே இல்லை. மனுஷன் இன்னைக்கு வரைக்கும் நிக்குறதுக்கு அர்த்தம் இருக்கு. தமிழ், மலையாள நடிகர்கள் கலந்து இருப்பது போல தெரிந்தது. நாகேஷ் நகைச்சுவையோடு கெட்ட கதாபாத்திரமாகவும் பின்னுகிறார். சரத் குமாருக்கு சின்ன ரோல். ஆள் அழகாக ஆஜானுபாகுவாக இருக்கிறார். ஹீரோ(சீரோ என தவறாக டைப் செய்தேன், முதலில்) ஆன பின் ஏன் இப்படி மொக்கை கதைகளை பண்ணி கொல்லுகிறார். இப்ப  முக்கியமான விஷயம், அமலா. அடடா, என்ன அழகு! சின்ன வயசிலயெ நான் அமலாவின் ஏசி(ஃபேனவிட காஸ்ட்லி!). கடைசி காட்சியில் சிரிப்பாங்க பாருங்க... அய்யோ, வாய்ப்பே இல்ல. ஹ்ம்ம்..
நல்ல படம். கே டிவியில் பாருங்கள். மாதமொருமுறையாவது பரப்புகிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------


ஓ, மறந்துட்டேன். லிட்டில் ஜான் பத்தி சொல்லாம டாப்பா?

லிட்டில் ஜான் : அம்மா, உன் வயசு என்ன?

அம்மா                :  பொம்பளைங்க கிட்ட இதெல்லாம் கேட்க கூடாதுடா.
லி.ஜான்             :  உன் எடை என்ன?
அம்மா                :   பொம்பளைங்க கிட்ட இதெல்லாம் கேட்க கூடாதுடா.
லி.ஜான்             :   உன்னை ஏம்மா அப்பா விட்டுட்டு போனாரு?
அம்மா                :   அம்மகிட்ட இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது
அம்மா லைசன்ஸ எடுத்து பாத்துட்டு ஓடி வந்த ஜான், “அம்மா,  எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. உன் வயசு  36, எடை 65 கிலோ. அப்புறம் ஏன் அப்பா உன்ன விட்டுட்டு போனருன்னா, நீ Sex ல ‘F' வாங்கிருக்க.


---------------------------------------------------------------------------------------------------------------


ஆதி கவிதை எழுத சொல்லிக் குடுத்தாரா... நானும் ஒரே நிமிஷத்துக்குள்ள  ஒரு கவிதை எழுதினேன். யாரும் மதிக்க மாட்டேங்குறாங்க. நானே விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இதோ....

டாவென அழைத்த அவள்
க்ளோரோஃபார்ம் குரலில்
மயங்கிய
என்னை,
எட்டிப் பார்க்கத் திமிரும்
லோகட் முலைகளைப்
போல சிறிதாக எட்டிச்
சிதறும் அவள் தோழியின்
சிரிப்பின் வெக்கம்
சிறிதாக கொல்ல...
இருவரின் ஒற்றுமை
திருமணத்திலும் தொடருமா எனக் கேட்க
சடுதியில் சென்றேன்.


:)

Comments Posted (20)

தல, கவிதை ஓ.கே தல.
கலக்குங்க.

copenhagenல ஒண்ணுத்தையும் உருப்படியா செய்ய மாட்டாங்கனு தெரியும். இதுல இது வேறயா?

ஒபாமாவோட ஹைப் ரொம்பவே ஓவர்தான். அட அவனுங்க நாடு. அவங்க பிரசிடென்ட். என்னமோ பேசுறாங்க. இந்த நோபல் கமிட்டி எப்போ ஜோக்கர்ஸ் ஆனாங்க?

ஹை, நானும் அமலாவோட ஏசிதாங்க (LOL.). :))

ஜோக் பரவால்ல. கவுஜ கொலைவெறி. :)

//140 விமானங்கள், 2400 Limosine Cars(Air conditioned, of course)//

:))) இந்த வளர்ந்த நாடுகளே இப்படி தான் முதலாளி.. குத்துங்க முதலாளி குத்துங்க :)

லிட்டில் ஜான் காமெடிய விட ஒபாமா நோபல் அவார்ட் காமெடி தான் டாப்பு :)

கவிதை-நோ கமெண்ட்ஸ்

டாப்பு எல்லாம் ஓகே...
ஆனா.. கவுஜயில கவுச்ச வாசனை அடிக்குது?

Intended for “A” caliber… :-)

லிட்டில் ஜான் ஜோக் சூப்பர்
மௌனம் சம்மதத்தில் "கல்யாண தேன்நிலா" பாட்டு எனக்குப் பிடிக்கும்

கவிதையும்,விஷயங்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

///ஆனா.. கவுஜயில கவுச்ச வாசனை அடிக்குது?///

ஏங்க.. மார்பு, மாங்கனிகள்னு எழுதியிருந்தா மட்டும் இதை இலக்கியம்னு ஒத்துக்குவீங்களா??? :)

என்ன பப்பு.. நான் சொல்லுறது?! :) :)

====

அடப்பாவி... மௌனம் சம்மதம்- படத்தை.. இந்த வாரம்தான் பார்க்கறீங்களா??? ஹும்ம். ஒரு தலைமுறையே... இப்படி 2டி படங்களை பார்க்காம வளர்ந்திருக்கு..!!

ஜோக் அருமை..
கவிதை கண்ணகட்டுது..

"உண்மை" படம் பார்த்து இருக்கியா..எனக்கு ரொம்ப புடிச்ச படம்..அதிலும் மம்மூட்டி ராஜ்யம் தான்..
ஹை.சரத்&மம்மூட்டி ரெண்டு பேரும் எப்பயோ சேர்ந்து நடிச்சிட்டங்க இல்ல.

//நீ Sex ல ‘F' வாங்கிருக்க.//

ஹாஹாஹா!

அவுங்க அப்பா M வாங்கியிருப்பாரே, அதனால துரத்திவிட்ருப்பாங்க!

கவிதை ரியல் டாப்பு!

@ராஜூ
நன்றி!

@கார்த்திக்
:)

@ஆதவன்
ஆமா எஜமான் குத்துங்க!

@கலை
அது எவ்வளவு சுத்தமான வார்த்தைனு அடுத்தப் பதிவு போடுற்றேன்.

@தர்ஷன்
நன்றி, வருகைக்கு!

@ஸ்ரீ
மிக்க நன்றி :)

@பாலா
அது சரிதான் :)

எத்தனையாவதோ தடவையா பாக்குறேன். :)

பாலா, நான் அமெரிக்கா காரங்க மேல கோபமா இருக்கேன்... இந்த வாரம் சிக்கிடாதீங்க ஹி.. ஹி..

@வினோத்
ஆகா, பாக்காத படமா இருக்கே!

ஆக்சுவலி.. அது The Truth -ன்னு ஒரு மலையாளப் படம். டப்பிங்ல ‘உண்மை’ன்னு வந்துச்சி.

அந்தப் படத்தை பார்த்துட்டு வந்து, ‘சூப்பர்’ன்னு சொல்லி... என் ஃப்ரெண்ட்ஸை தியேட்டருக்கு அனுப்பிட்டேன்.

திரும்பி.. க்ளாஸுக்கு வந்தவனுங்க... திடீர்ன்னு.. என் முகத்துல துண்டை போட்டு... மொத்து மொத்து மொத்திட்டானுங்க.

மறக்கவே முடியாத ‘சூப்பர்’ படம்! :) :) :) :)

இப்பல்லாம் அந்தப் படத்தை பார்த்தா ‘ஜோக்’ மாதிரி இருக்கு.

பப்பு,கலக்கல் பஞ்சாமிர்தம்.ஃபார்மாலிடி பண்ணியாச்சி

@வால்
நன்றி!

@பாலா
காமெடியா தெரியுதா? மம்முட்டி பத்தி தப்பா பேசாதீங்க. நான் அவரு ஏசி ஆயிட்டேன், இன்னும் ஒரு வாரத்துக்கு :D

@கார்த்திகேயன்
ஆகா, இத விட மாட்டீங்க போலயே!

பப்பு, நகைச்சுவை அருமை. கவிதை...?! ஏன் இந்த கொலவெறி?????

@பிரேம்குமார்
இந்தக் கவிதைக்கே நாளைக்கு ஒரு பதிவு போடனுமே!

பப்பு: இது நியூ வெர்ஷன். இதை.. உங்க டெம்ளேட்டில் கூட போட்டுக்கலாம்.

Edit HTML -ல் எக்ஸ்பேண்ட் க்ளிக் பண்ணி இப்படி தேடிப்பாருங்க.

< data:postCommentMsg/> (ஸ்பேஸை எடுத்துடுங்க).


அதுக்குக் கீழ் இந்த கமெண்டை பேஸ்ட் பண்ணுங்க. Blog ID மட்டும், முன்னாடி சொன்ன முறையில் கண்டு பிடிச்சிக்கங்க. அதை XXXXXX-ல் ரீப்ளேஸ் பண்ணிட்டா முடிஞ்சது.

< a expr:href='"https://www.blogger.com/comment.g?blogID=XXXXXXXXXXXXXXXXXX&postID=" + data:post.id + ""'> / கிஷோர் கமெண்ட் < /a>

(முன்னாடியே சொன்ன < a அப்புறம் < /a> ஸ்பேஸை எடுத்துட்டு)

======

BlogID -ஐ ப்லாகர், பப்ளிக்கா எடுக்க எந்த வேரியபிளும் தரலை. அதனால்.. இதுதான் இப்போதைக்கு பெஸ்ட்.

ஒவ்வொரு போஸ்டுக்கும்... நீங்க எதுவும் பண்ணத் தேவையில்லை. இந்த கோடை.. நீங்க எங்க வேணும்னாலும் பேஸ்ட் பண்ணிக்கலாம்.

தமிழிஷ்-க்கு கீழ வேணும்னா... tamilish-னு சர்ச் பண்ணி.. அதுக்கு கீழ போட்டாலும் வொர்க் ஆகும்.

கிஷோர், பாலா வழி என்னால முடியல. உங்களுக்காக எம்பட் பண்ணிருக்கேன். உங்களுக்கு சரி பண்ணிட்டு சொல்லுங்க. பொதுவா நான் எம்பட்ட விரும்புறதில்லை.. :)

//இப்ப Copenhagen தான் ரொம்ப சூடா ஆயிருச்சு. என்ன முடிவு எடுத்தானுங்கன்னு தெரியலை. எல்லாத்துக்கு அப்புறமும் ஒண்ணும் மாறியிருக்காதுன்னு தான் நினைக்குறேன்// - இது நச்...!!!

//ஒரு படம் இன்று காலையில் கே டிவியில் பார்த்தேன். ‘மௌனம் சம்மதம்// - அந்த படத்த நானும் பார்த்தேன்...நீங்களும் அப்ப வெட்டியாதான் இருந்தீங்களா.. ?

//ஃபேனவிட காஸ்ட்லி// - :)

கவித கலக்கல்....
குணா கமல் ஸ்டைல்ல "கவித கவித"....

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!