தனிமை (அ) விடியலின் வெளுப்பு

Filed under , by Prabhu on 12/23/2009 11:03:00 AM

20

விழிகளைச் சிறையிட்ட வளையங்கள்
புத்தக வெள்ளையில் உதிர்ந்த முடிகள்
உலர்ந்த தோலின் வறட்சி
தனிமையின் காய்ந்த உதடுகள்

பென்சில் சிகரட்டில் இழுத்த
காற்று நிகோடின்
குளிர் காலத்தில் புகையாய் பரவ

தட்டில் வைத்த சோறு
வயிற்றிடம்  செலவு கணக்கு கேட்டு
வெளியேறும்

புவியீர்ப்பில்லா பொழுதுகளில்
அவள் முகத்தில் முன்பு தோன்றிய
புன்னகையின் எச்சம்
என் உதடுகளில்

விரக்தியில், விட்டத்தின்
சிலந்தி வலை
வழித்துப் போட வலுவில்லை


வாழ்க்கையின் நகலெடுக் கருவி
நாளைய பிரதிக்காக
சூடாகிறது

நாளைய விடியலின்
வெளுப்பின் சந்தேகத்தின் நிழலில்
இன்றைய பொழுது.

 -புலவர் பிரபுகுமார் (ராகமா இருக்குல்ல.. ஹி.. ஹி..)

பி.கு- காதல் கவிதை இல்லை. எனக்கு அந்த ரசனை இல்லைன்னு நினைக்குறேன். அப்படி எழுதப்போனா, ஏற்கனவே எழுதின இந்த ரகத்தில் தான் வரும். யாருக்காவது புரியலைன்னா எனக்கு வெற்றி. புரியாத கவிதை எழுதுறவங்க பெரிய ஆளாமே. புரியாத மாதிரி என்பதை விட எதையும் விளக்க முற்படாமை என சூரத் பல்கலைகழகத்தின் ஆங்கிலத் துறையில் வேலை பார்க்கும் கவிஞர் E.V.Ramakrishnan  சொல்லிக் குடுத்தார். அது போல, இதனால போன்ற விஷயங்கள் கவிதைக்கு தேவையில்லை என்பதை ஆங்கிலத்தில் வழியுறுத்தினார்.

வெட்டியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்குக் கவிதை என்னவாகத் தோன்றியது என கூசாமல் எழுதுங்கள். நான் வருத்தபட மாட்டேன். :)

Comments Posted (20)

அங்கங்க புரிஞ்சா மாதிரி இருந்துச்சு புலவரே..!

நீ புலவர் என்பதை விட.. நீ பெரிய ஆளுன்னு ஒத்துக்குறேன் ..

புலவர்தான், கன்ஃபார்ம்டு

@ ராஜு கிஷோர் கார்க்கி

என்ன இது? மூணு பேரும் மர்மமான முறையில் தாக்குறீங்களா புகழ்றீங்களான்னு தெரியாத வகையில் கமெண்டுறீங்க!
நல்லாருக்கா இல்லையான்னே புரியலையே!

//பென்சில் சிகரட்டில் இழுத்த
காற்று நிகோடின்
குளிர் காலத்தில் புகையாய் பரவ//

//வாழ்க்கையின் நகலெடுக் கருவி
நாளைய பிரதிக்காக
சூடாகிறது//

//புவியீர்ப்பில்லா பொழுதுகளில்//

கவிதை தெரிகிறது, பப்பு.. (உண்மையிலேயே) வாழ்த்துகள்.

நல்லாத்தான பாஸ் எழுதியிருக்கீங்க.பாராட்டுக்கள்.

தனிமையில் காய்ந்த... விரக்தியில் வெந்ந்ந்த...
புலவர் பிரபுகுமாரேஏஏஏஏ...

உன்னை புரிந்து கொண்டேன், உண்மை தெரிந்து கொண்டேன்...
இந்த கலக்கல் கலையரசனேஏஏஏஏ...

@பாலகுமார்
கவிதை தெரியுதா? சந்தோஷம். நன்றி

@ஸ்ரீ
நன்றி தலைவா... :)

@கலை
யப்பா, அப்படியெல்லாம் ஆனது நானில்லையப்பனே! விவகாரமாக எதுவும் தெரிந்து கொள்ளாதீர்!

This comment has been removed by the author.
This comment has been removed by the author.

யாருக்கும் புரியாத மாதிரி எழுதுனா அதான் கவிதையா..
ரைட்டு..மைன்ட்ல வச்சிக்கிறேன்..

@nvkmr
அப்படி குழப்புற அளவு எழுதலீங்களே!
விளக்கலாம். ஆனா கவிதைய விளக்க கூடாதாமே! தலைப்ப பாத்துட்டு யோசிச்சீங்கன்னா க்ளிக் ஆகிடும்!

@வினோத்
ஏன்? நீங்களும் ட்ரை பண்ண போறீங்களா?

அது சரி,கன்ஃபார்ம் தான்

நீயும் சேர்ந்துட்டியாபா இந்தக் கூட்டத்துல? இனிமேல வானத்த வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டே கவிதை எழுதுவியா? ஐயோ..

@கார்திகேயன்
என்னங்கய்யா இது தமிழ் படத்தில் லவ் லூசுப் பிடிச்ச ஹீரோவப் பாத்து சொல்லுற மாதிரி... அவ்வ்வ்வ்...

@கார்த்திகை பாண்டியன்
அய்யோ.. அது எதுவும் வியாதியின் அறிகுறியா? இதக் கூட அப்படிதான் எழுதினேன் :(

ஸாரிப்பா அட்ரஸ் மாறி வந்துட்டேன்.

அவ்வ்வ் நீதானா பப்பு இது? நான் கூட வேற ஒருத்தர் பதிவுன்னு நினைச்சேன்.

பை த வே கவிதை “எனக்கு புரியல புரியல புரியல...” :)

ஓஹோ..அதான் நான் எழுதின எந்த கவிதையும் யாருக்கும் புரியலையா? அப்ப இதுவும் கவிதை தான் நண்பா :)

@ஆதவன்
என்னங்க எல்லாரும் இப்படி காசு வாங்குன மாதிரி அதையே சொல்லுறீங்க!

@பூங்குன்றன்
ஹி... ஹி.... ஒரு கவிஞர் மனசு இன்னொரு கவிஞருக்குதான் புரியும்!

புலவர் பப்பு...

வாழ்க

வாழ்க

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!