ஹாரி பாட்டரும் மாயாபஜாரும்

Filed under , , , by Prabhu on 12/06/2009 12:33:00 AM

24




ஒரு தடவ சென்னை வந்திருந்தாங்க J.KRowling. அப்போ அவங்களுக்கு ஒரு கதை எழுதுற ஐடியா வந்திருந்ததே தவிர பேரு கூட முடிவு செய்யல. பொழுது போகாமல் ஹோட்டல் டிவி ரிமோட்டுக்கு உடல் நோவோ என்னவோ அந்த அமுக்கு அமுக்கி விட்டு கொண்டியிருந்தார்.  அந்த யோசனையுடன் சும்மா சானல் விட்டு சானல் ரிமோட் குரங்கு தாவும் பொழுது ஒரு காட்சி கவர்ந்துவிட்டது அவரை. அதன் கிராஃபிக்ஸால் பிரமித்து போன அவர் அதைத் தழுவி ஒரு கதை எழுதுனாங்க. அதில் அந்தப் படத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை சுட்டு  வச்சுகிட்டாங்க. கண்ணாடி ஒன்று Harry Potter ல்  'The Mirror of Erised' (desire பின்னாலிருந்து erised)  என்று ஒரு முக்கியமான, சுவாரஸ்யமான விஷயமாக கதையில் (முதல் பாகம்) காட்டப்பட்டிருக்கும். நாம் ஆசைபட்டதைக் காட்டும். இந்த கண்ணாடியை 60 வருடங்களுக்கு முன்னால் நம்ம ஊரு படத்தில் காட்டியிருக்கிறார்கள்.



‘மாயா பஜார்’ என்ற படமொன்று 1957ல் கருப்பு வெள்ளையில் வந்தது. தெலுங்கர்கள் எடுத்த இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப் பட்டு அடுத்த மாதம் தமிழ் நாட்டில் வெளிவந்து சக்கை போடு போட்டது வரலாறு.  அதுவே ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டராக’ உரு பெற்றிருக்கிறது. அந்தப் படத்தில் இந்த கண்ணாடி போன்ற ஒரு விஷயத்தை பயன்படுத்தியிருப்பார்கள்.

அப்புறம் அந்த கடோத்கஜன் சாப்பிடும் காட்சியெல்லாம் நாம் மறக்க கூடிய விஷயமா? எல்லாம் அந்த காலத்திலே அதிகப்படியான கிராஃபிக்ஸ் காட்சிகள், State of the art என்று சொல்வார்களே, அது போல. அந்த கண்ணாடி மேடர சுட்டது போதாதுன்னு ரங்காராவ் ‘கல்யாண சமையல் சாதம்’ சாப்பிடும் முறைய காப்பி அடிச்சு அவங்க மொழிக்கு மாற்றும் போது அடையாளம் தெரியாமல் இருக்க லத்தின் மொழியில் 'Wingardium Leviosa', 'Liberocorpus' எனக் கூறி பொருட்களைப் பறக்கவிட்ட போது லவட்டினது நம்ம கோவணத்த தான் என்பது கூட தெரியாமல் வாயில் ஈ முட்டை போட இடம் கொடுத்து உட்கார்ந்துகிட்டு கை தட்டிகிட்டு இருக்கோம்.

(தெலுங்குப் பதிப்பே கிடைத்தது. தமிழில் கிடைக்கவில்லை. கிடைத்தால் சொல்லுங்க. எனக்கு பிடித்த பாட்டு. ஃபுல் மீல்ஸ் எஃபக்ட்.)


நம்ம கதையில் கிருஷ்ணர்தான் எல்லாமே தெரிந்தவர். என்னவெல்லாம் நடக்கும்னு  தெரிஞ்சுகிட்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களை இயங்க வைப்பார். ஒரு சில சமயங்களில் ஏன் இப்படி பண்றாருன்னு கூட இருக்கவங்களே வெறுத்தாலும் நம்பிக்கைக்குரியவர். கிருஷ்ணருக்கு இன்னொரு பேரு தாமோதர்னு தெரிஞ்சா ’Albus Dumbledore’ பத்தி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.

கம்ஸன் பொதுவா நல்லவன்தான். ஆனால் தங்கையோட மகனால சாவு என அசரீரியால் தெரிந்த பிறகு அதை தடுக்கிற முயற்சியில் கெட்டவனாகிப் போய் அவர் கையால் சாகிறான். மூடிகிட்டு அவன் பாட்டுக்கு இருந்திருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அரைகுறையாக கேட்ட தீர்க்கதரிசனத்த வச்சு தனக்கு சாவு ஹாரி கையால எனக் குருட்டுத்தனமாக முடிவு செஞ்சு செத்தத படிச்சவங்க மறந்திருக்க முடியாது. இப்படியெல்லாம் இங்கிருந்து கொண்டு போன சரக்கை மறைக்க அவங்க கலாச்சாரத்த கொண்டு மழுங்கடிச்சது மட்டுமில்லாமல் இந்திய கதாபாத்திரங்கள் இரண்டை கேவலமாகப் படைத்திருக்கிறார்.

இதற்கு மேலும் என்னால் பல விஷயங்கள் கூற இயலும். ஆனால் அதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன்  விரைவில் சுப்பிரமணிய சுவாமியை சந்திக்க உள்ளேன்.





பின்குறிப்பு - அடுத்து நமது குழந்தைகள் படமான ‘கந்தசாமி’யை உல்டா செய்து அவர்கள் ஊர் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல வெளியிட்டு நம்மையும் ஏமாற்றிட உள்ளதாக நாம் அறிகிறோம். இது போன்ற காரியங்களை இதற்கு மேலும் நடக்காமல் தடுக்க தாக்கரே, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., ராமதாஸ் போன்ற நம் கலாச்சாரத்தை கழிவறையில் சுருட்டி வைத்து காப்பாற்றும் (பயன்படுத்தும்) காவலர்களை அழைக்கிறேன். இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறைகூவல்!

Comments Posted (24)

யாருப்பா இது.??? எங்க ஏரியாவுல கை வைக்கறது??

அதுலயும் அரசியல் வேறயா??? மைனஸ் ஓட்டுதான்..!! :) :)

எங்க தமிழ்மணத்தை காணாம்? மைனஸ் குத்தலாம்னு பார்த்தேன்.

இதுக்கே இப்படீங்கறீங்களே, பாதாள பைரவி படம் பாத்துட்டு அப்புறமா பேசுங்க!

ஜெய் பாதாள பைரவி!

தலைவர்,
அ.கொ.தீ.க.

அடப்பாவிமக்கா! எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. நீ சொல்றபடியே இருந்ததுன்னா மாயாபஜார்ல பண்ணின அதே கிராபிக்ஸ் குவாலிட்டி தான் இப்பவும் தமிழ் சினிமாவுல இருக்குது (கொஞ்சம் மாறியிருக்கலாம்). ஆனா ரசிகனின் ரசனை எக்குதப்பா எகிறியிருக்கே?

அதுக்காக நம்ம கதையை சுட்டு போட்டாலும் பரவாயில்லை. நல்ல படம் வந்தா சரி தான்.

Albus Dumbledore கிருஷ்ணன்னா இன்னும் இவர் சாகலையா? :)
ஹாரி பாட்டர் அடுத்த பார்ட் எப்ப?

:)

நீங்களுமா.. நல்லது!

அடுத்தது என்ன பப்பு..? "ஆயா நிலவுல வடை சுட்ட" கதையை அப்படியே சுட்டு Knowing படத்தை எடுத்தானே அதை பத்தியா?

எப்படி இப்படி எல்லாம்?

உங்கிட்ட இருந்து ஏன் இன்னும் நான் அதிகமா எதிர்பார்க்க கூடாது ?

@பாலா
எல்லாம் உங்களைப் போன்ற முன்னோடிகளின் நிழலில் வளர்ந்த தைரியம் தான். ஹி... ஹி... (வரும்போது ஆப்பிள் ஐ பாட் ஒண்ணு வாங்கிட்டு வரச் சொல்லனும். ட்யூட்டி ஃப்ரீ)

@பயங்கரவாதி
பேரே பயங்கரமா இருக்கே. பாதாள பைரவி பேருதான் கேளி பட்டிருக்கேன். அதுல இருந்தும் சுட்டுட்டானுங்களா?

@ஆதவன்
எந்த ஹாரி பாட்டரக் கேக்குறீங்க? இல்ல, இதை மேற் கொண்டு எழுதச் சொல்லி ஒரு கலையார்வத்துல கேக்குறீங்களோன்னு நெனசுட்டேன்.

@சென்ஷி
:) ஏதோ முடிஞ்சது.

@கலை
அப்படியா. பாத்துட்டு அதையும் எழுதுவோம். :) காசா பணமா?

@கிஷோர்
அது காசா இல்லாதவரைக்கும் எவ்வளவு வேணும்னாலும் எதிர்பார்க்கலாம்...:D

nan nan adhavan pakam.. namalala pana mudiyadha graphicsa nama kadhaiya vachu avanga panranga .. pathutu povome... mahabhartham indian copyrightskulla irundha dhan pirachana...

ஹா... ஹா... ஆனா இது அந்த 'Motherfuckin pterodactyl'னு ஒரு காமிக் காண்பிச்சேன்ல அது மாதிரிடா.

யா.. அவனுங்க நல்லா காண்பிச்சா சந்தோஷம் தான். ஆனா இது ரிவர்ஸ்ல இருந்தா ஓட்டுறோம்ல? :)

என்னாமோ தஸ் புஸ்ன்னு சொல்றீங்க..!
ஓ.கே.

மேல ஒரு அக்கா இருக்கே அது தான் J.K rowling ஆஆஆஆஆ...

@ராஜு
மாயாபஜார்ல என்னங்க தஸ்ஸு புஸ்ஸு?

@வினோத்
அந்தக் கெழவிதான்!

ஓகே .. ரைட்

mudiala
book padichu pathuruken ana evlo research pani ussssssssssss appa ipove kana katuthe

also namala avanga paduthula irunthu eduthu remixnu soldrum athu mathriyum vachikalamla

அடுத்து நமது குழந்தைகள் படமான ‘கந்தசாமி’யை உல்டா செய்து அவர்கள் ஊர் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல வெளியிட்டு நம்மையும் ஏமாற்றிட உள்ளதாக நாம் அறிகிறோம்.

nama matum than kashta padanumah? avangalum kashta padatum ana intha line than thanga mudiala அவர்கள் ஊர் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல

ஜாரி லேட்.. நடத்துங்க..:) :)

எனக்கு பழைய Dumbledore தான் பிடிக்கும்.

@நசரேயன்
அட்டண்டெண்ஸ் போட்டாச்சு! ரைட்!

@angel into the heaven
கந்தசாமி பத்தி போட்டாதான் மேலஎழுதினது காமெடியா தெரியட்டும்மேன்னுதான். இல்லேன்னா சீரியஸ்னு நெனச்சு, என்னய காமெடி ஆக்கிருவாங்க!

@கார்த்திக்
மன்னிக்கப்பட்டாய்!

Epdi saga unnala mattum?? :D Snape Karnan role thaane?? :D Krishnarkku kodutha vaakkal uyira vitadu??

இத படிச்ச உடனே....எனக்கு ஹாரி பாட்டர் கதையே மறந்து போச்சு...

ஹாரி பாட்டர் அண்ட் சட்டி full of சாதம். : )
நம்மூர்ல ஹாரி பாட்டர் படம் எடுத்தா இப்படிதான் பேர் வப்பாங்கன்னு நெனக்கிறேன்...

இதுவும் கலக்கல்பா
ஓட்டு போட்டாச்சி

ithula sangh parivari eethu anavasimaka vambuku koopitrainge? Sari vootu boss, Konjam nal munne nama paiyen, appa our super animation padam DVD pakkalama ennran(finding nemo) saripa ennru padam patha, appadiyo Ramayana kathiye, set by set urrivitange! hollywood karange bada killatiinga than

பயங்கரம்...

நல்ல வேளை ஜே.கே.ரவுலிங்க்குக்கு தமிழ் தெரியாது. இல்லைன்னா பிரிட்டனோட பெரிய பணக்காரி தற்கொலைக்கு நீங்க காரணமாயிருப்பிங்க.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!