மார்ஸில் !@#$%^&

Filed under , , by Prabhu on 12/17/2009 08:23:00 PM

12

எப்பவுமே மனுஷனுக்கு தன் வீட்டை விட பக்கத்து வீட்டு மேல கவனம் அதிகம். அறிவியலிலும் கூட நம்ம பூமியை பாதுகாக்க துப்பில்லாத நாம் அடுத்த கிரகங்களை நோக்குகிறோம். இப்பொழுதைக்கு செவ்வாய் மேல நமக்கு கண். செவ்வாயில் உயிராதாரங்களுக்கான தடயங்கள் இருக்கு என சொல்லும் நாம் விரைவில் அங்கு ஆராய்ச்சிக்கு ஆளனுப்பலாம். வழக்கம் போல ரஷ்யாவும் அமெரிக்காவும் முதலில் சென்று புது குடியிருப்பு அமைக்க முயலலாம். அங்கே..ஆச்சரியக் கேள்வி - கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கிறதா சொல்லுறாங்க. என்னோட கேள்வி என்னன்னா, அவர் என்ன மலையாளியா?

இதை வினோத், ஆதவன் மற்ற எல்லா அமீரக ’தமிழ்’ நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன். ஹி.. ஹி...இன்சைட் ஜோக்குங்கோ!

எல்லாருக்கும் தெரிஞ்ச ஜோக்தான் என்றாலும் முதல் காமிக் முயற்சி என்பதால் சிம்பிளாக கான்செப்ட் எடுத்தேன். பெயிண்டில் தான் வரைந்தேன். வரைவதற்கு வேறு ஏதாவது தரமான மென்பொருள் இருந்தால் தெரியப் படுத்தவும். மேற்கொண்டு இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வசதியாக இருக்கும். (என் வரையும் திறமையப் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. அமீபா வரையறதுக்குள்ளயே ஆறு தடவை அழிச்சும் வரையும் அருமையான படைப்பாளி).

Comments Posted (12)

ஜுப்பரு பப்பு ..

ungalukku ulla ippadi oru rk laxman ah? ;)

ஹா ஹா ஹா.... Racism மற்றும் வகைப்படுத்துதலுக்கு முற்றிலும் எதிரானவன் என்ற போதும் இது போன்ற நகைச்சுவைகளுக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த அமீபா மேட்டர் சூப்பர் தல...
அமீபா வரையுறதப் பத்தி, ஸ்கூல்ல ஏகப்பட்ட சண்டை போட்ருக்கேன்.

@கிஷோர்
ஹி.. ஹி... அதத் தான் நேர்ல சொன்னீங்களே ;)

@கார்த்திக்
இவரும் அதத் தான் சொல்லுறாருன்னு நெனைக்குறேன். ஹி. ஹி..

@பிரேம்
காமிக் என வரும் போது ரேசிசம் எல்லாம் கிடையாது. சார்காஸம் தான்.

@ராஜூ
அமீபா வுக்கு சண்டையா?

என்னைவிட நல்லாவே வரையுரீங்க.

நேற்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது. அதில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நம்முடைய ஆல் டைம் பேவரிட் காமெடியர் (ஒரு மரியாதை தான்) கவுண்டமணியும் அடக்கம். அந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனம்.


வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்

யாருப்பா அது... இன்னைக்கு நான் விமர்சனத்தில் எழுதினதை... இங்க படமா போட்டிருக்கறது?

என்னா தைரியம் இருந்தா.. மலையாளிகளை கிண்டல் பண்ணுவீங்க..! ஹா?

tux paint a software it would be useful for u in drawing i hope try it.

இதை வினோத், ஆதவன் மற்ற எல்லா அமீரக ’தமிழ்’ நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன். ஹி.. ஹி...இன்சைட் ஜோக்குங்கோ!//
இது வேறயா?

நான் எப்போதும் கோட்டாவியமாக வரைந்து ஸ்கேன் செய்து கலர் அடிப்பேன்.முயன்று பாருங்கள்

குட்! ஐ லைக் இட் பப்பு :)

வரைவதற்கு flash கொஞ்சம் நல்லா இருக்கும் பப்பு. அப்புறம் GoogleSketch பயன்படுத்தலாம். ட்ரை பண்ணு.

நானெல்லாம் எறும்பையே பல நூறு தடவை அழிச்சு அழிச்சு வரையிறவன். நீ பரவாயில்லை :)

நானும் பெயிண்ட்'ல தான் படம் வரைஞ்சு பழகினேன். நல்ல முயற்சி..
வாழ்க..

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!