சில படங்களின் அறிமுகம் ( F- Special) 18+

Filed under , , , by Prabhu on 12/11/2009 01:51:00 PM

14

இந்தப் பதிவு கண்டிப்பா 18+ தான். அதுவும் profanity தாங்காதவங்க ஓடிப் போயிருங்க. கலாச்சாராத்தை காலையில் கழிவறையில் கண்டதாக கூவும் கலாச்சாரக் காவலர்களுக்குத் தடை.

South Park - Bigger, Longer & Uncut (1999)


எப்படியெல்லாம் கெட்ட வார்த்தையை சொல்லி திட்டலாம்னு சொல்லிக் குடுக்கவே எடுத்த படம். அமெரிக்காவின் சின்ன டவுன்ல நாலு பசங்க கனடா நாட்டு படம் ஒன்றை பார்ப்பதில் ஆரம்பிக்கிறது காமெடி.  படம் political satire வகை. Anti-candianism, anti-semitism, racism, stereotyping எல்லாத்தையும் செமயா ஓட்டிருப்பாங்க. அவனுங்க கலர் கலரா பேசுறதப் பார்த்து சிரிக்க முடியறவங்க மட்டும் பார்க்க வேண்டிய படம். Musical என்பதால் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் அதிலும் profanity மலிந்து கிடக்கிறது. Stan க்ளிட்டோரிஸ்னா என்ன என படம் முழுக்கத் தேடித் திரிவது, கனடாவை தாக்குறது, ‘என்னடா இது விண்டோஸு98, வேகமும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. விக்கும் போது என்னடா சொன்ன?’ என பில் கேட்ஸை துப்பாக்கியால் போட்டுத்தள்ளுவது, நரகத்தில் இருந்து சதாமும், சாத்தானும் கூட்டாளிகளாக வருவது, MPAA எனும் அமெரிக்க சென்ஸார் போர்டை ஓட்டுவது என பின்னுகிறார்கள். இது விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற படம். Rotten Tomatoesல் 80% இருக்குன்னா பாத்துக்கோங்களேன்.

132 ’f’கள், 77 ‘s'கள், 66 மற்றவைகள் எனப் போகிறது. படம் முழுக்க ஆறு செகண்டுக்கு ஒரு கெட்ட வார்த்தையாவது இருக்கும்ங்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தப் படம் பல காலமாக டிவியில் ஒளிபரபாகும் South Park அனிமேஷன் சீரிஸில் இருந்து எடுக்கப் பெற்ற அனிமேஷன் படம். Parody, Sarcasm, satire வகைகளை ரசிக்கத் தெரிந்தவர்கள் பார்க்க வேண்டிய படம்.

F*ck (2005)
இது ஒரு டாகுமெண்ட்ரி. இதைப் பற்றி ஹாலிவுட் பாலா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். ரொம்ப காலமா பார்க்க நினைத்து பார்த்த படம். ஆனால் எதிர்பார்ப்புக்கு புஸ்ஸு. ஒண்ணு ரெண்டு நிஜ சம்பவங்களின் சுவாரஸ்யம் தவிர மற்ற படி ஒன்றும் இல்லை. அட, அந்த வார்த்தையின் ஆரம்பம் எதுவெனக் கூடத் தெரியவில்லை எவருக்கும். ‘Fornication Under the Consent of King' என பார்வர்ட் மெஸேஜில் வருவதை நம்பாதீர்கள் போன்ற அரிதான் தகவல்கள் உண்டு. மற்றபடி எனக்கு விசேஷமாக எதுவும் படவில்லை.

Young People F**king(2007)
கனடா நாட்டுப் படமான இதன் பெயரை பார்த்தால் என்ன தோணும் என புரிகிறது. அதனால் இதைப் பற்றிய எதிலோ படித்த விமர்சனத்தில் இருந்து ஒரு வரி, “இந்தப் படப் பெயரை பார்த்து உள்ளே வருகிறாவர்கள் இந்தப் படம் ரசிக்கும் படியாக இருக்காது. ரசிப்பவர்கள், இந்தப் பெயரைப் பார்த்து உள்ளே வர மாட்டார்கள்’. இது போதும் இந்தப் படத்தினைப் பற்றிக் கூற. ஐந்து வெவ்வேறு ஜோடிகள். கணவன்-மனைவி, நண்பர்கள், விவாகரத்தானவர்கள், முதல் டேட் முடிந்தவர்கள், நண்பனும் தனது காதலியும் செய்வதை வேடிக்கை பார்க்கும் நண்பன். Quentin படங்களை போன்று Prelude, Foreplay, sex, Orgasm என பாகங்களாக இருக்கிறது. ஆனால் கதை நேராகத் தான் ஓடுகிறது. ஐந்து ஜோடிகளையும் மாற்றி மாற்றி காட்டுவதில் எடிட்டிங் நன்றாக இருக்கிறது. ஒவ்வொருஜோடியும் ஈடுபடுவது ஒரே வேலை,sex. ஆனால் வெவ்வேறான நோக்கங்கள், எண்ண ஓட்டங்களுடன் என்பதைக் காட்டுவதான படம். சுமாரான அளவு பொறூமை தேவைபடுகிறது. ஆகச் சிறந்த படைப்பு இல்லையானாலும் பார்க்கத் தகுதியானதே.
(’மேற்படி’ விஷயங்களை பற்றி கேட்பவர்களுக்கு, இதுவரை இல்லாத ஒன்றை எதுவும் இவர்கள் காட்டிவிட வில்லை)

Team America: World Police ஒரு படம் இருக்கு. அதுவும் எதுக்கும் குறைஞ்சதில்லை. அமெரிக்காவின் உலக போலீஸ் அடாவடியை கிண்டல் செய்து எடுத்த Satire. அதைப் பற்றி சொல்ல நேரமின்மையால் விட்டு விடுகிறேன். நேரமும் ஆர்வமும் இருப்பின்* பாலா அவர்கள் சொல்லுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

South Park விமர்சனம் எழுத முயற்சி செய்து முடியாத காரணத்தால் இப்படி ஒரு கலப்பட அறிமுகம்.

Comments Posted (14)

பப்பு...F**K தவிர மத்தது எல்லாமே இது வரை கேள்வி படாத படங்கள்....
எங்க இருந்து புடிச்சீங்க...??
நல்ல அறிமுகம்...!!!

நான் இங்க பின்னூட்டம் போடலாமா? என் பேரு டேமேஜ் ஆயிடாதே? மேலும், எனக்கு 18 வயசு ஆக இன்னும் 32 மணி நேரம் இருக்கு

//கலாச்சாராத்தை காலையில் கழிவறையில் கண்டதாக கூவும் கலாச்சாரக் காவலர்களுக்குத் தடை.//


ஹாஹாஹா

ஆரம்பமே டரியலா இருக்கே தல!

பாரதி ராஜா படமா ?

கக்கூசில் கலாசாரம் !
பாத்ரூமில் பண்பாடு !
வாஸ் பேசினில் வரலாறு !
செப்டிக் டேங்கில் செரிமானம் !

பயபுள்ள.." கேட் "எழுதாம போனதுல.. எப்படி எல்லாம் கெட்டு போது.. இருந்தாலும் .. நல்லா தான் இருக்கு.. இன்னும் சில படங்கள் இருந்தா சொல்லு பப்பு..

உங்களுக்கு அந்த பொண்ணோட நம்பர் கண்டிப்பா வாங்கி தரேன்.. அருமையா எழுதியிருக்கீங்க.. :)

நானும் உள்ளே வரலாமா ?

http://www.hollywoodbala.com/2009/11/z-18-34.html

இந்தப் பதிவில்.. ரெண்டு கமெண்ட் போட்டிருக்கீங்க. இத்தனைக்கும்... நான் அந்த பாராவை இப்படி ஆரம்பிச்சிருக்கேன்.

“காமெடி சென்ட்ரல் டிவியில்.. பதிமூன்று சீசன்களாக வந்துகொண்டிருக்கும் South Park கார்ட்டூனின் விசிறி நான். இதை யாரிடமாவது சொன்னால்... “you must be sick” என்று, எதிர்திசையில் இருந்து பதில் வரும். ”

===========

அப்புறம்... Precious பதிவில்......

//////////////////////////
south park பாத்திருக்கீங்களா? செம படம். அவனுங்க ஸ்டைலில் சொல்லனும்னா F***ing sweet. யப்பா காது புளிக்க திட்டுறானுங்க. பட், ஃபன். அதுவும் அவுங்க போற R rating படத்துல வர்ற பாட்டிருக்கே! ஹா. ஹா...

அதுல பில்கேட்ஸை கூப்பிட்டுடு, ‘டேய், விண்டோஸ் 98 இன்னும் ஃபாஸ்டா வேலை செய்யும், நெட்டெல்லாம் அமோகமா வேலை செய்யும்னு சொன்னேல்லடா?” கேட்டுட்டு அவன் “5 மில்லியன்னு என்னவோ உளற வரும் போது, ‘டுமீல்’னு சுட்டுக் கொன்னுட்டு அடுத்த வேலை பாக்க போயிருவானுங்க. செம காமெடி!
//////////////////////////

இப்படி ஒரு கமெண்ட்!!!!!!! :) :) :)

அப்ப..... பதிவை.. படிக்காமலேயே கமெண்ட்டுக்கு.. போய்டுறது... இன்னைக்கு ஃப்ரூவ் ஆய்டுச்சி! :) :) :)

========

////அதனால் இதைப் பற்றிய எதிலோ படித்த விமர்சனத்தில் இருந்து ஒரு வரி,///

- அது மயூரேசன் பதிவு.

@சிவன்
ஒரு காலத்துல ஒரு தேடலோட அப்புறம் நெட் பேக்கேஜ் மாறிப் போயிடுச்சு!

@கார்க்கி
தொழிலதிபர் நீங்க!(கவுண்டம்ணியை நினைவிற் கொள்க) உங்களுக்கு யார் தடை சொல்லப் போறா?

@வால்
ஒரு படத்துல சொல்வானுங்க. Culture? ya, i wipe my a** every morning with that.

@raajan
ஏன் இந்த வித்தியாசமான கேள்வி! உங்கள் கலாச்சார விளக்கமும் நல்லா இருக்கு!

@கிஷோர்
உங்களுக்கு இல்லாததா... நாலு மாசமா படம் அவ்வளவா கிடையாது. ஜனவரி முடியட்டும்.. ஒரு வழி ஆக்கிறனும்.

@கார்த்திக்
வாழ்க்கையில இப்பதான் உருப்படியான காரியம் பண்ணுற. முதல்ல அதச் செய்

@நசரேயன்
உத்தரவின்றி உள்ளே வா.... ஆஅ..ஆஅ .. ட்யூனிங்!

@பாலா
இந்த லினக்ஸ் விண்டோஸ் மேட்டருக்கு சம்பந்தமா இருக்கும்ங்கிறதுக்காக போட்ட கமெண்ட்ட இப்படியா அரசியல்வாதி மாதிரி தப்பா யூஸ் பண்ணுவீங்க?

அப்புறம் நான் மயூரேசன் பதிவுல படிக்கல. ஏதோ ஆங்கில சைட்ல படிச்சேன்

ஹா......!!!! :( :(

மை பேட்..! :( :( பார்த்திருக்கீங்களா-ன்னு கேட்டதும்... லினக்ஸை விட்டு.... படத்துக்கு புத்தி போய்டுச்சி....!!

மன்னிப்பு கேட்கறவன் மனுசன். மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுசன்.

நான் மனுசன். நீங்க பெரிய மனுசனா????? :) :)

லிஸ்ட்ல இன்னும் நிறையா படம் எதிர்ப்பார்க்கிறோம்..

@பாலா
எங்களுக்கேவா? நாங்க யூத்து. நீங்கதான் எரிய மனுஷன்.

@வினோத்
விரைவில்...

இது போல படம் போட்டீன்னா லின்ங்கையும் கொடுத்திரு பப்பு. வேலை எங்களுக்கு சுலுவா முடியும்ல :)

@ஹாலிவுட் பாலா. அவ்வ்வ்வ் அண்ணே பப்புகிட்டவே வா :)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!