மைக்ரோ ப்ளாக்கிங் 3

Filed under , , , by Prabhu on 12/20/2009 09:39:00 PM

23

சமீபத்தில் எத்தனையோவாவது தடவையாக அன்பே சிவம் பார்க்க நேர்ந்தது. It gets better every time. ஒவ்வொரு தடவையும் ஏதோ இன்னும் மெருகேருவது போல, யாரோ  மேலும் மேலும் ‘டச் அப்’ செய்வது போல இருக்கிறது. முதல் தடவை நல்ல கதை மட்டுமே தோன்றியது. போகப் போக technical perfectionம் இருப்பதாக புரிகிறது. சுந்தர்.சி யின் திரை வாழ்க்கையில் சொல்லக் கூடிய படம். எத்தனை தடவை பார்த்தாலும் கடைசி காட்சியில் கடிதம் படிக்கப்படும் காட்சியும், கமல் கேமராவிலிருந்து தொலைவில் சென்று மறையும் காட்சியும் சில நிமிடங்கள் என்னை அப்படியே சீட்டில் உட்கார வைத்துவிடும்.எல்லோருக்கும் பிடித்த இந்தப் படம் சரியாக ஓடாதது இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

‘ஹேராம்’ - நான் ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன் தான் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. நன்றாக இருந்ததாகத் தோன்றியது. Chronicles என சொல்லக் கூடிய வகையில் ஒருத்தனின் கடந்த வாழ்க்கையின் ஒரு தொகுப்பாக எடுக்கபட்ட படம்(எ.கா-Forrest gump, வாரணம் ஆயிரம்). ஷாரூக் கமலை எதிர்கொள்ளும் சமயங்களில் வரும்வசனம் செம ஷார்ப். ஷாரூக்கை (முஸ்லிம் என்பதால்) பார்த்து கமல், ‘கைபர் கணவாய் வழியா வந்தவந்தான?” எனக் கேட்கும் போது ஷாரூக், ‘உங்க ராமசாமியே கைபர் வழியா வந்தவரு தான்னு சொல்றாங்க?’ எனக் கேட்பார். இந்த சந்தேகம் உண்மையில் சரித்திர ஆராய்ச்சியாளர்களில் உண்டு என எதிலோ படித்த ஞாபகம்.
எனக்கு ’மாறு’ கண் இல்லாததால் என் ’பார்வையில்’ எசகு பிசகான அர்த்தங்கள் தோன்றவில்லை.

ஒரு வேளை இப்பொழுது வெளியாயிருந்தால் நன்றாக ஓடியிருக்குமொ என்னவோ?

BTW, இந்த ப்ளாகில் இது 51வது பதிவு. 50 வந்தப்ப நான் கவனிக்கல. வேறு யாரும் கவனிச்சு சொல்லாததால் நான் இன்னும் ’பெரிய ஆள்’ ஆகலைன்னு தெரிகிறது. இன்னும் ஐநூறு பேரைக் கொன்றாவது அரை ப்ளாக்கன் ஆக முயற்சிக்கிறேன்.

Comments Posted (23)

try the best


//இன்னும் ஐநூறு பேரைக் கொன்றாவது அரை ப்ளாக்கன் ஆக முயற்சிக்கிறேன்.

பப்பு,

ஹேராம் இன்னைக்கு வந்தாலும்.. படம் ஓடாது.

1. அத்தனை வேற்று மொழிகள் பேசியும், பிடிவாதமா கமல் அதுக்கு சப்டைட்டில் போடக் கூடாதுன்னு முடிவு பண்ணினது.

2. கமலே ஒரு பேட்டியில் சொன்னது என்னன்னா.......

இப்படியொரு சரித்திரப் படம் வரும்போது... அதுக்காக படம் பார்ப்பவர்களை கமல் ’தயார்’ செய்யாமல் போனது.

எத்தனை பேருக்கு, கல்கத்தா கலவரம் நம்மூரில் தெரிஞ்சிருக்கும் சொல்லுங்க? இதெல்லாம் சேம்பிள்தான்.

இந்தப் படத்தில் கமல் கற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய. இப்ப எடுத்திருந்தாலும்... மேலே சொன்ன பாடங்களைத்தான் கத்துகிட்டு இருந்திருப்பார்.

@Tech shankar
Gee, thanx.

@பாலா
அவ்வளவு வேற்று மொழியா இருந்தது? ஆனாலும் தேவையான விஷயங்கள் தமிழில் இருந்ததெனத் தோன்றியதே?

ஆனால், நீங்கள் சொன்ன இந்தக் காரணங்கள் சரியாக இருக்கலாம்.

//அதுக்காக படம் பார்ப்பவர்களை கமல் ’தயார்’ செய்யாமல் போனது.//

தன்னோட அறிவாளிதனத்தை அதிகமா காண்பிச்சதுகூட இருக்கலாம்.

50க்கு வாழ்த்துகள் பப்பு :) ஏதோ வரலாறு பதிவு போடப்போறதா சொன்ன ஞாபகம். சரியா?

அன்பே சிவம் நல்ல படம் தான். Forrest gumpம் நல்ல படம். ஆனா இந்த இரண்டு படங்ககிட்ட வாரணம் ஆயிரம் வரவே முடியாது. ரொம்ப சுமார் தான்.

//ஹேராம் இன்னைக்கு வந்தாலும்.. படம் ஓடாது.//

முதலில் நடந்த கலவரங்களை உண்மையாக சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் பதிய வேண்டும். அதை அனைத்து மக்களுக்கும் அறிய கொடுக்க வேண்டும். குறும்படமாக கூட எடுக்கலாம். பின்பு ஹேராம் போல் பெரிய பொருட்செலவில் படம் எடுக்க முயற்சிக்கலாம்.

ஆனால் இங்கே பள்ளிக்கூட பாடம் முதற்கொண்டு தினசரி செய்திதாள் வரை பூசி மெழுகும் வேலை தான் நடக்கிறது :(

அதைத்தாங்க.. கமலும் செஞ்சிருக்கனும்னு அவரே சொன்னார்.

ஆனா... நம்ம ஊர்ல இந்த சென்சார் கம்மனாட்டிங்க இருக்கும் வரைக்கும்... பூசி மெழுகத்தான் முடியும்.

யாராலும் உண்மையை சொல்ல முடியாது.

///
எத்தனை பேருக்கு, கல்கத்தா கலவரம் நம்மூரில் தெரிஞ்சிருக்கும் சொல்லுங்க? இதெல்லாம் சேம்பிள்தான்.
//
///ஆனால் இங்கே பள்ளிக்கூட பாடம் முதற்கொண்டு தினசரி செய்திதாள் வரை பூசி மெழுகும் வேலை தான் நடக்கிறது :(////
@ஆதவன், பாலா
செக்யூலரிஸம் என்கிற பேரில் ரெண்டு தரப்பு தவறுகளையும் மறைத்துக் கொண்டும், உண்மைகளையும் இன்னும் புரியாமலும் வச்சிருக்காங்கன்னு சொல்லுறீங்க. நியாயம்தான். நமக்கே நம்ம நாட்டோட பொடன்ஷியல் ப்ராப்ளம்ஸ் புரியலை. உண்மைதான், எத்தனை பேருக்கு கல்கத்தா பற்றி தெரியுது? எனக்கு கல்கியோட நாவல் ஒண்ணு தேவைப்பட்டிருக்கு அதை தெரிஞ்சிக்க. எல்லாத்தையும் அசோகர் மரம் நட்டார் என்ற ரீதியில் சொல்லித் தர்றாங்க. கொஞ்சம் கூடவா பாலிடிக்ஸ் சொல்லிக் குடுக்கக் கூடாது?

@ஆதவன்
கரெக்டா நியாபகம் வச்சிருக்கீங்க. அதைப் போடத்தான் போறேன். அதைத் தான் யோசிச்சிட்டிருக்கேன். :)

51 க்கு வாழ்த்துக்கள் பப்பு.. ஓவர் கான்பிடென்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு கமலுக்கு ஏன் புரிய மாட்டுதுன்னு தெரியல

முதலில் ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் பப்பு.

அடுத்து கமல் நடித்த மிக சிறந்த படங்களில் முதல் வரிசையில் 'அன்பே சிவம்' இருக்கும்.நீங்கள் சொல்வது போல இன்று பார்த்தாலும் சலிக்காது.

இந்த நம்பரையெல்லாம் நான் பார்க்கறது இல்லை. நீங்க சொன்னாதான் உண்டு. நூறாவது பதிவையும், 200 ஃபாலோயர்ஸ் எல்லாம்.. விஜய், நீங்க எல்லாம் சொல்லும் போதுதான் கவனிச்சேன். ஹிட் கவுண்டர் எல்லாம்... டெமொக்ராஃபியும்... எங்கயிருந்து ரெஃபர் ஆகறாங்கன்னு கண்டுபிடிக்கவும்தான்.

இதெல்லாம் ஒரு மேட்டருங்களா?

ஆனா உங்களுக்கு 50 ஃபாலோயர்ஸ் வந்தப்ப சொன்னதா நியாபம இருக்கு.

சரி இம்புட்டு பேசியாச்சி..! புள்ள ஆசப் படுது.

வாழ்த்துகள்! :) :)

@கிஷோர்
அதுசரி. நம்ம பயலுகல நம்பி எடுக்குறாரு. நான் அந்த ரெண்டையும் தியேட்டரில் பார்க்கலைங்கிறப்போ நான் மேற்கொண்டு பேசக்கூடாது.:)

@பூங்குன்றன்
கண்டிப்பாக. நன்றி.

@பாலா
ஐயோ, இந்தப் பணிவுதான்யா பாலாவோட ஸ்பெஷல். ஹி.. ஹி.. (வரும்போது நிறைய டிவிடி வாங்கிட்டு வாங்க)

வாழ்த்துக்கள் பப்பு..

சொன்னமாதிரி ஹேராம் இப்ப வந்து இருந்தா கூட அரோகதி தான்..காரணம் ரொம்ப ஒன்றினால் ஒழிய புரிஞ்சக்கவே முடியாத கதையோட்டம்..

'அன்பே சிவம் ' எல்லோருக்கும் புரிந்தும் ஓடாதது துரதிர்ஷ்தம்..:(

அப்புறம் மிக முக்கியமா.."பப்பு நீ கொஞ்சம் இல்ல ரொம்பவே நல்ல பய.."..சந்தோஷமா..;)

வாழ்த்துக்கள் பப்பு..
எல்லாம் நல்ல படம் தான், கமல் அடுத்த ஜெனெரேஷனுக்கு நிறைய படம் எடுத்துள்ளார்,அதில் அதுவும் ஒண்ணு.அதன் இன்ஸ்பிரேஷனான
ட்ரெய்ன் ப்லேன் ஏரோப்ளேன்ஸ் நிச்சயம் பாருங்கள்.சரியான காமெடி படம்.

ஹேராம் போன்ற படம் ஓடனும்னு எடுக்கப்பட்டதை விட கமலின் போர்ட்ஃபோலியோவுக்கு எடுக்கப்பட்டதுன்னு சொல்லலாம்

முதல்ல, வாழ்த்துக்கள்

//எனக்கு ’மாறு’ கண் இல்லாததால் என் ’பார்வையில்’ எசகு பிசகான அர்த்தங்கள் தோன்றவில்லை.
//

ஏதோ எழுத்து பிழை மாதிரி இருக்கே :))

what a co-incidence..?
நானும் நேத்து “அன்பே சிவம்” பார்த்தேன்.
அப்பறம், பொன்விழாவுக்கு வாழ்த்துக்கள்.
:-)

ஹே ராம் & அன்பே சிவம் எனக்கும் இதே வகையான பாதிப்புகளை தான் உருவாக்கியது..., ஒரே வயது என்பதால் கூட இருக்கலாம்....

சுருக்கமா சொன்னா...
கமல் படம் சென்ஷி கவித மாதிரி..
ஒன்னியும் பிரியாது!!

எனக்கு பிடிச்ச கமலின் ஒரே படம் அன்பே சிவம்!!

@வினோத்
வாழ்த்தா? இனிமேலாவது உருப்படியா எழுதுறதுக்காக உங்க வாழ்த்தை ஏத்துக்கிறேன்.

@கார்த்திகேயன்
ரொம்ப சரியா சொன்னீங்க!

@சங்கர்
ஹி.. ஹி...
நன்றி

@ராஜு
நன்றி

@பேநாமூடி
ஒரே வயது? சியர்ஸ்!

@கலையரசன்
உங்க நேர்மை பிடிச்சிருக்கு!

அய், நானும் அன்பே சிவம் பார்த்தேன். எனக்கு மாதவன் தான் ரொம்ப பிடிச்சிருந்தது. அதகளம் பண்ணியிருப்பார் மனுஷன். ஹேராம் பார்த்ததில்லை. செக்குலரிசம்? நோ கமெண்ட்ஸ்..:)

50க்கு வாழ்த்துக்கள்! :)

50க்கு வாழ்த்துகள்.நீங்களும் பிரபல பதிவர்தான்.

ஹேராமின் தவறு - அது எத்தனை தடவ பாத்தாலும் சரியா புரியாது என்னை மாதிரி மரமண்டைகளுக்கு....

50 பதிவுகள் - கொண்டாடுங்கள்.. :)

@karthik
மாதவனா? இண்டரஸ்டிங்...சிறந்த துணை நடிகர் விருது வாங்கினார்.

@ஸ்ரீ
ஹி.. ஹி. நன்றி

@வெற்றி
எல்லாரும் இதைத் தான் சொல்றாங்க. சரிதான். கொண்டாட என்ன இருக்கு. 50 தான?

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!