மைக்ரோ ப்ளாக்கிங் 2
Filed under Micro blogging , மைக்ரோ ப்ளாக்கிங் , by Prabhu on 11/28/2009 10:00:00 AM
11
நேரமின்மையால் நிறைய விஷயங்கள் எழுத முடியாமல் போகிறது. ஆனால் எழுத வேண்டாம் என முடிவு செய்த பிறகுதான் ஏதாவது உருப்படியாக தோன்றும். அல்லது ஏதாவது சின்ன விஷயமாக பேசலாம் எனத் தோன்றும். அதற்காகத்தான் இந்த மைக்ரோ ப்ளாக்கிங்.
ஏதோ மைக்ரோ ப்ளாக்கிங்கை கண்டுபிடித்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறேன். பொதுவா 'ட்விட்டரில்' நாம் பதிவு செய்யும் 'ட்வீட்'டுகளையும் மைக்ரோ ப்ளாக்கிங் என்றுதான் சொல்வார்கள். நானும் ட்விட்டரில் இருக்கிறேன் இப்ப. காலையில பல் விளக்குறதக் கூட அதுல போடுறாங்க. நாமளும் ஏன் போடக் கூடாது என முடிவு எடுத்து சேர்ந்துட்டேன். எல்லாரையும் அதுக்கு கூப்பிடறேன். வாங்க. ஏற்கனவே இருந்தா வலது பக்கத்தில் என் ட்விட்டர் பக்கத்துக்கு வழி கொடுத்திருக்கேன். வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
ஒரு எசகுபிசகான ஜோக்
ஒரு நாள் வகுப்பை முடித்துக் கிளம்பும்போது ஆசிரியர், "நாளைக்கு ஒழுங்கா பரிட்சை எழுத வந்துறனும். வீட்டுல யாராவது இறந்தாலோ, இல்ல உன் உடம்புக்கு வர முடியாத அளவு ஏதாவது ஆனாலோ ஒழிய எந்த விதமாக சாக்கும் ஏத்துக்க மாட்டேன்". ஒரு குறும்புக்கார பையன், "செக்ஸால் எழுத முடியாத அளவு ரொம்ப டயர்டா ஆயிருந்தா?" அப்படின்னு கேட்டான். க்ளாசே குபீர்னு சிரித்தது. சிரிப்பலை அடங்கிய பிறகு ஆசிரியர், "அதெல்லாம் செல்லாது, செல்லாது. இன்னொரு கை வச்சு எழுது'ன்னு சொன்னாங்களாம்.
இந்த பதிவை சனிக்கிழமை 10 மணிக்கு செட் செய்திருந்தேன், ஒரு சோதனை முயற்சியாக. சரியாக என் பரிட்சை ஆரம்பமாகும் நேரம். இதுவும் போஸ்ட் ஆகல. பரீட்சையும் நடக்கல. அவனுங்க தொழில்நுட்ப சிக்கலில் எனக்கு இப்ப தடைபட்டு போய் என்ன செய்யவெனத் தெரியாமல் முழிக்கிறேன். சென்னை போய் வந்ததில் மன உளைச்சலும் அலுப்பும் தான் மிச்சம். எழுதி முட்டை வாங்கியிருந்தால், இந்த மதிப்பெண் என் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படாமல் போயிருந்தால் வருத்தப் படாமல் மற்ற பரீட்சையை கவனிக்கப் போயிருப்பேன். ஒரு வருடம் படிப்பை விட்டதில் முக்கியமான பரீட்சை எழுதக் கூட முடியாததுதான் வருத்தம். பரீட்சை வைத்த புண்ணியவான்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு அடுத்த பரீட்சைக்கு தயாராகிறேன். யாரும் வருத்தப்பட்டு இரங்கல் தெரிவிக்க வேண்டாம். நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். :)
சரி கவலைப் படாதீங்க....மறுபடி கூப்பிடுவாங்களாமே!
//பரீட்சையும் நடக்கல. அவனுங்க தொழில்நுட்ப சிக்கலில் எனக்கு இப்ப தடைபட்டு போய் என்ன செய்யவெனத் தெரியாமல் முழிக்கிறேன்.//
Newsல பாக்குறப்பவே உன் நியபகம் தான் வந்துச்சு..சீக்கிரம் நடக்கும் நடக்கும்..
பரிட்சை கிடக்குது. நிஞ்சா பார்த்தீங்களா?
50 ஃபாலோயர்ஸ்! :) வாழ்த்துகள்.
சீக்கிரம் நடக்கும் பப்பு..
பாலா.. அடங்கமாட்டிங்க போல இருக்கு... அவன் எக்ஸாம் எழுத முடியாம போனது கூட அவனுக்கு வருத்தம் இல்ல.. சென்னைல ஒரு நல்ல "பிகர்" பார்க்க முடியலன்னு தான் இவ்ளோ பீலிங்...
நல்லா இருக்கு உங்கள் பதிவு....ஆமா மதுரைக்காரரா நீங்க?
ரொம்பவே எசகுபிசகுதான்யா எழுதுற ;-)
சந்தோசத்தோட வருத்தத்தை தெரிவிக்கிற உனக்கு வருத்தத்தோட என் கவலைய தெரிவிச்சுகிறேன் பப்பு. நிச்சயம் பெரிய ஆளா வருவ. அப்ப எங்களையெல்லாம் மறக்காம இருந்தா சரி :)
சரி சரி.. க்ராஷ் பண்ணதே நீங்கதான்னு யாருக்கும் தெரியாதே? ;))
@அன்புடன் அருணா
அன்புக்கும் வருகைக்கும் நன்றி. நடந்தாலும் போக கூடிய நிலைமை இருக்காவெனத் தெரியல.
@வினோத்
என்னத்த நடந்து.
@பாலா
நீங்க தான் நம்ம ஆளு. நல்ல கேள்வி கேட்டீங்க போங்க. அடுத்த பதிவுல விடை இருக்கு.:)
@கிஷோர்
நம்ம ஃபீலிங் புரிஞ்சா சரி! :)
@வெற்றி
நன்றி. ஆமா, மதுரையேதான்!
@பிரேம்குமார்
அதுக்குதான எழுத வந்திருக்கோம்.
@ஆதவன்
அயோ புல்லரிக்குது. அஞ்சு நிமிஷம் கொடுங்க சொறிஞ்சிட்டு வந்துடறேன்.
@கார்த்திக்
ஆமா, க்ராஷ் பண்ற துப்பு இருந்தா இந்நேரம் நாங்களும் அங்கிட் ஃபாடியா மாதிரி பெரிய ஆளாகிருக்க மாட்டோம்?