டாப்பு அடிக்கலாம் - 9

Filed under , , by Prabhu on 5/01/2010 02:22:00 PM

6

ரொம்ப காலமாக எதுவும் எழுதவில்லை. அதிகம் ப்ளாக் பக்கம் வரவில்லை. எதுவும் எழுத படிக்க விருப்பமில்லை. ஒரே வறட்சி! என்னுடைய இலவச இண்டெர்நெட் அளவை தாண்டிவிட்டது கூட காரணமாக இருக்கலாம். என்னவோ, இணைய சண்டைகளில் இருந்து ஒரு பத்து நாட்களுக்கு விடுதலை :).

-------------------------------------------------------------------------------------------------------------------
முதல் நாள் சுறா ரிலீஸ். மறுநாள் அஜித் பிறந்தநாள். என் நண்பர்களில் இரண்டு பேருக்கும் ரசிகர்கள் உண்டு. இரண்டு நாளும் மெசேஜ் அனுப்பி சாவடித்துவிட்டானுங்க. ரெண்டு நடிகர்களுமே ஆளுக்கு அவங்க அவங்க பங்குக்கு மொக்க படமா எடுத்து விடுறாங்க. இந்த லட்சணத்தில் யாரு படம் நல்லாருக்கு , எது மோசம் என இரண்டு குழுவும் அடிச்சிக்கிறது. கஷ்டம்!

-----------------------------------------------------------------------------------------------------------------
பொழுது போகாமல் படம் வரைய கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். போர்ட்ரைட் அளவு இல்லைன்னாலும்  caricature  அளவுக்காவது கற்றுவிட ஆசை இருக்குறது. அமீபா வரையத் தெரியாதவனுக்கு அது மாஸ்டர்பீஸ். இதை சொல்லித் தரும் pdf அல்லது வெப்சைட் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------
Guy de Maupassant எழுதிய சிறுகதைகளின் தொக்குப்பு ஒன்று படிக்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸில் வாழ்ந்த இருந்த மனிதர். அப்பொழுதே அங்கு நம் நாட்டைக் கம்பேர் செய்யும் பொழுது கொஞ்சம் ‘free society' ஆகத் தான் இருந்திருக்கிறது. மனுஷன் சாகும் போது கிறுக்கு பிடிச்சு போயிருச்சாம். அதே சமயத்தில் வாழ்ந்த பல வித்தியாச எழுத்தாளர் ஆசாமிகள் இப்படித்தான் கிறுக்கு பிடித்து, கையில் அஞ்சு பைசா இல்லாமல் இறந்திருக்கிறார்கள். 

O'Henry யின் சிறுகதை தொகுப்பு தயாராக இருக்கிறது. அவர் நம் ப்ளாக்கர் சிறுகதைகளின் தந்தை. கேஷுவலாக கொண்டு போய் டொக்குத்தனமாக முடிக்க கூச்சப்படாதவராக தெரிகிறார். இவரும் வெற்றியான இலக்கிய வாழ்விற்குப் பிறகும் அஞ்சு பைசா இல்லாமல் இறந்திருக்கிறார். சிறுகதை எழுதும் போது நினைவில் வைத்துக்கோங்க!

-----------------------------------------------------------------------------------------------------------------
’ராவண்’ பாடல்கள் வெளியாகிவிட்டது. நல்ல ஆல்பம். அதைப் பற்றி எழுதியதை நாளை வெளியிடுகிறேன். ஸ்டில்கள் பரபரப்பைக் கிளப்புகிறது. ‘பீரா பீரா’ பாடல் பட்டையை கிளப்புகிறது. அதை தமிழில் ரஹ்மான் பாடுவாதாக கேள்வி. காட்டுப் பிண்ணனியில் படம் நகருகிறது போல. தமிழில் ஆல்பம் இன்னும் வரவில்லை. விரைவில் வர வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------

போன வருடத்தில் இருந்து காமிக் படிக்கிற வழக்கம் வைத்திருக்கேன். Batman, Supermanல் தொடங்கி Wanted, Sin city என கிராஃபிக் நாவல் வரை டவுண்லோட் செய்து படித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ‘கருந்தேள் கண்ணாயிரம்’ கொடுத்த ப்ளூபெர்ரி சீரீஸ் படித்தேன். இப்பொழுது XIII ரெகமெண்ட் செய்கிறார்.  காமிக் ஆர்வம் இருக்கிறவர்கள் ட்ரை செய்யலாம். சின்ன வயதில் வெளியூர் பயணம் செய்கையில் மட்டும் லயன் காமிக்ஸ் வாங்கி கொடுப்பார்கள். அந்த பழக்கமும் இப்பொழுது எனக்கு காமிக்ஸ் மேல் இருக்கும் ஆர்வத்திற்கு காரணமாக இருக்கலாம். அப்பொழுது தமிழில் படித்தேன், இப்பொழுது ஆங்கிலத்தில் படிக்கிறேன். சிறிதே வித்தியாசம். இப்பொழுது தமிழில் காமிக்கே வருவதில்லையோ?

-----------------------------------------------------------------------------------------------------------------
எங்க ஊரில் இப்பொழுதுதான் சித்திரைத் திருவிழா. திருவிழா என்றால் இது திருவிழா. ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகிக் கொண்டேயிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒட்டகம், ரோஸ் மிட்டாய், மக்கள், மாசி வீதிகள், பெண்கள், பெரிய தேர் என திருவிழா என்றதும் பல விஷயங்கள் ப்ளாக் லேபிள்கள் போல ஞாபகம் வருகிறது. இதைப் பற்றி ஒரு தனி பதிவே காத்திருக்கிறது. அப்போ கவனிச்சுக்கலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------

டச் விட்டுப் போனதால் லிட்டில் ஜானையே மறந்துவிட்டேன். அவனில்லாம் எப்படி டாப்பு?

லிட்டில் ஜான்
ஜான் வகுப்பில் டீச்சர் கேள்வி கேட்கிறார், ”ஒரு மரத்தில் 100 பறவைகள். வேடன் ஒண்ண சுட்டா மிச்சம் எத்தனை?”
ஜான், “ஒண்ணுமிருக்காது. சத்தம் கேட்ட மிச்சதெல்லாம் பறந்திருக்கும்.”
அதற்கு டீச்சர், “கணக்கின் விடை 99. இருந்தாலும் இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு”
பதிலுக்கு ஜான் ஒரு கேள்வி கேக்குறேன்னு சொன்னான். டீச்சர் ஒத்துக் கொண்டதால் கேட்டான். “மூணு பெண்கள் ஒரு கடையில் கோன் ஐஸ்  சாப்பிடுறாங்க. ஒரு பெண் கடிச்சு சாப்பிடுறாள். ஒருத்தி நக்கி சாப்பிடுறாள். ஒருத்தி சப்பி சாப்பிடுறா. இதுல யாருக்கு கல்யாணம் ஆயிருக்கும்?”
டீச்சர் தயக்கமாக, “ம்ம்ம்.... சப்பி சாப்பிடுற பெண்? என்கிறார்.
அதற்கு ஜான் “இல்ல. கையில் கல்யாண மோதிரம் போட்டிருக்கும் பெண். பட், உங்களோட அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு”

Comments Posted (6)

அட.... உங்க அப்ரோச்சும் எனக்கு பிடிச்சிருக்கு.....!!!

வாங்க.. எழுதாதவங்க சங்கத்துல சேர்ந்துடுங்க.

வாங்க வாங்க . . :-) லிட்டில் ஜான்றது ஸ்கூல்ல உங்க பேரு தானே . . ஹீ ஹீ :-)

XIII உறுதியா உங்க கவனத்த கவரும்ன்றதுல சந்தேகமில்ல. . படிச்சிட்டு சொல்லுங்க. . உங்களுக்கு ஒரு மெயிலும் போட்டதா நினைவு . . எல்லா XIII காமிக்ஸ் லின்க்கும் அதுல கீது. . எஞ்சாய் !!

Good ones! Little john joke - very funny!

@பாலா
ஆமா, பாலா அந்த சங்கத்துல தான் 2 மாசமா உறுப்பினரா இருக்கேன். ஆனால் உங்க பதிவு படிக்காம போரடிக்குது. ஏதாவது எழுதுங்களேன்.

@கருந்தேள்
படிச்சிடறேன். காலையில் சீக்கிரம் எழுந்துதான் டவுண்லோட் பண்ணனும். அதான் கஷ்டமா இருக்கு.

@சித்ரா
:)

இவ்ளோ நாள் என் ஊர்க்காரன் ஒருத்தன மிஸ் பண்ணிடனா?நானும் மதுர பக்கம் தான்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி.

//இப்பொழுது தமிழில் காமிக்கே வருவதில்லையோ?//

வருது.சிவகாசியில் இருந்து வெளியிடப் படும் லயன்,முத்து வருது.ஆனா,வருசத்துக்கு ஒண்ணோ,ரெண்டோ வரும்.இல்ல,வராம கூட போகலாம்.... விஜயனுக்கே(எடிட்டர்) வெளிச்சம்.

//வாங்க.. எழுதாதவங்க சங்கத்துல சேர்ந்துடுங்க.//

அடப்பாவி மனுசா....நீரு எழுதுவீருன்னு அங்க பூராப் பயலும் காத்துகிட்டு இருக்கான்.இங்க வந்து கூட்டணிக்கு ஆள் சேக்கீரே...

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!